Students can Download Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3 Pdf, Samacheer Kalvi 10th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
Tamil Nadu Samacheer Kalvi 10th Tamil Model Question Paper 3
நேரம்: 3.00 மணி
மதிப்பெண்கள் : 100
(குறிப்புகள்:
- இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க – வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. காக
- பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்குத் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
- வினா எண். 1 முதல் 15 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்து குறியீட்டுடன் எழுதவும்.
- வினா எண் 16 முதல் 28 வரை பகுதி-IIல் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன: ஏதேனும் 9 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
- வினா எண் 29 முதல் 37 வரை பகுதி-IIIல் மூன்று மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
ஏதேனும் 6 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும். - வினா எண் 38 முதல் 42 வரை பகுதி-IVல் ஐந்து மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. ஏதேனும் 5 வினாக்களுக்கு மட்டும் விடையளிக்கவும்.
- வினா எண் 43 முதல் 45 வரை பகுதி-Vல் எட்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
பகுதி – 1 (மதிப்பெண்கள் : 15)
(i) அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்.
(ii) கொடுக்கப்பட்ட நான்கு விடைகளில் சரியான விடையினைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதுக. [15 x 1 = 15]
(குறிப்பு: விடைகள் தடித்த எழுத்தில் உள்ளன.)
Question 1.
வேர்க்கடலை, மிளகாய் விதை. மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை …………………
(அ) குலை வகை
(ஆ) மணி வகை
(இ) கொழுந்து வகை
(ஈ) இலை வகை
Answer:
(ஆ) மணி வகை
Question 2.
“வண்டொடு புக்க மணவாய்த் தென்றல்” எனக் கூறும் நூல் எது?
(அ) தென்றல் விடு தூது
(ஆ) சிலப்பதிகாரம்
(இ) மணிமேகலை
(ஈ) புறநானூறு
Answer:
(ஆ) சிலப்பதிகாரம்
Question 3.
ஒரு வினையடி பல……………. ஏற்கும்
(அ) பகுதிகளை
(ஆ) விகுதிகளை
(இ) சந்திகளை
(ஈ) சாரியைகளை
Answer:
(ஆ) விகுதிகளை
Question 4.
சந்தத்துடன் உள்ள பாடலில் ……… . இருக்கும்.
(அ) எதுகை
(ஆ) இசை
(இ) உயிர்ப்பு
(ஈ) தொடை
Answer:
(ஆ) இசை
Question 5.
சாகித்திய அகாதெமி விருது பெற்ற கண்ணதாசன் நூல் …….
(அ) காலக்கணிதம்
(ஆ) கலங்காதிரு மனமே
(இ) எழுந்திரு மனமே
(ஈ) சேரமான் காதலி
Answer:
(ஈ) சேரமான் காதலி
Question 6.
காசிக்காண்டத்தில் பாடுப்பொருள்களாக அமைந்தவை…………….
(i) துறவு
(ii) இல்லறம் பெண்களுக்குரிய பண்புகள்
(iii) வாழ்வியல் நெறிகள்
(iv) மறுவாழ்வில் அடையும் நன்மைகள்
(அ), (ii) சரி
(ஆ) (iii) (iv) சரி
(இ) முதல் மூன்றும் சரி
(ஈ) நான்கும் சரி
Answer:
(ஈ) நான்கும் சரி
Question 7.
செய்யுளில் பெயர்ச்சொல் எச்சச் சொல்லாகத் திரிந்து அளபெடுப்பது …………….. அளபெடையானது.
(அ) இன்னிசை
(ஆ) இசைநிறை
(இ) சொல்லிசை
(ஈ) ஒற்று
Answer:
(இ) சொல்லிசை
Question 8.
முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழை இயற்றியவர்……….
(அ) இராமலிங்க
(அடி) களார்
(இ) தாயுமானவர்
(ஈ) செயங்கொண்டார்
Answer:
(அடி) களார்
Question 9.
தனிமொழிக்கும், தொடர்மொழிக்கும் பொதுவாய் அமைவது. …….. ஆகும்.
(அ) புதுமொழி
(ஆ) பழமொழி
(இ) பிறமொழி
(ஈ) பொதுமொழி
Answer:
(ஈ) பொதுமொழி
Question 10.
விகுதி பெறாமல் வினைப்பகுதியே தொழிற்பெயராதல் …………………. தொழிற்பெயராகும்.
(அ) முதனிலைத்
(ஆ) முதனிலைத் திரிந்த
(இ) மாற்றுத்
(ஈ) துறை சார்ந்த
Answer:
(அ) முதனிலைத்
Question 11.
தமிழர்கள் ………… வாழ்வைக் கொண்டிருந்தனர்.
(அ) செயற்கை
(ஆ) இயற்கை
(இ) சமரச
(ஈ) சமாதான
Answer:
(ஆ) இயற்கை
பாடலைப் படித்துப் பின்வரும் வினாக்களுக்கு (12, 13, 14, 15) விடை தருக.
”பகர்வனர் திரிதிரு நகரவீதியும்;
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டு நுண்வினைக் காருகர் இருக்கையும்;
தூசும் துகிரும் ஆரமும் அகிலும்”
Question 12.
எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.
(அ) பருத்தி, பகர்
(ஆ) நூல், இருக்கை
(இ) கட்டு, பட்டு
(ஈ) பகர், படம்
Answer:
(இ) கட்டு, பட்டு
Question 13.
காருகர் – பொருள் தருக
(அ) நெய்பவர்
(ஆ) உழுபவர்
(இ) படிப்பவர்
(ஈ) ஓடுபவர்
Answer:
(அ) நெய்பவர்
Question 14.
இப்பாடலில் காணப்படும் நறுமணப் பொருள்கள் யாவை?
(அ) மல்லிகை, முல்லை
(ஆ) அகில், சந்தனம்
(இ) பட்டு, கட்டு
(ஈ) நகரம், வீதி
Answer:
(ஆ) அகில், சந்தனம்
Question 15.
இப்பாடல் இடம்பெற்ற நூல் எது?
(அ) சிலப்பதிகாரம்
(ஆ) தேம்பாவணி
(இ) காசிக்காண்டம்
(ஈ) கம்பராமாயணம்
Answer:
(அ) சிலப்பதிகாரம்
பகுதி – II (மதிப்பெண்க ள் : 18)
பிரிவு – 1
எவையேனும் நான்கு வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க.
21 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [4×2 = 8]
Question 16.
விடைக்கேற்ற வினா அமைக்க.
(அ) கம்பர் எழுதிய நூல்கள் சரசுவதி அந்தாதி, சடகோபர் அந்தாதி, திருக்கை வழக்கம், ஏரெழுபது, சிலை எழுபது முதலியன.
(ஆ) சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக்காப்பியங்கள் என வழங்குவர்.
Answer:
(அ) கம்பன் எழுதிய நூல்களை பட்டியலிடுக.
(ஆ) இரட்டைக் காப்பியங்கள் என வழங்கப்படும் நூல் எவை?
Question 17.
பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள் யாவை?
Answer:
- உலகியல் நூறு
- பாவியக்கொத்து
- நூறாசிரியம்
- கனிச்சாறு
- எண்சுவை எண்பது,
- மகபுகுவஞ்சி
- பள்ளிப்பறவைகள் முதலியனவாகும்
Question 18.
பாரதியார் எழுதிய நூல்களை எழுதுக.
Answer:
பாரதியார் குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, பாப்பா பாட்டு, புதிய ஆத்திச்சூடி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.
Question 19.
இளங்குமரனாரின் தமிழ்ப்பணியைத் தரமுயர்த்திய நூல்கள் யாவை?
Answer:
இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம், பாவாணர் வரலாறு, குண்டலகேசி உரை, யாப்பருங்கலம் உரை, புறத்திரட்டு உரை, திருக்குறள் தமிழ் மரபுரை, காக்கைப் பாடினிய உரை, தேவநேயம் முதலியனவாகும்.
Question 20.
காற்று மாசடைவதனால் ஏற்படும் நோய்களை எழுதுக.
Answer:
காற்று மாசடைவதால் கண் எரிச்சல், தலைவலி, தொண்டைக்கட்டு, காய்ச்சல், நுரையீரல் புற்றுநோய், இளைப்பு நோய் போன்ற நோய்கள் ஏற்படுகின்றன.
Question 21.
‘அருமை’ எனத் தொடங்கும் குறள் எழுதுக.
Answer:
அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்
பிரிவு – 2
எவையேனும் ஐந்து வினாக்களுக்கு மட்டும் குறுகிய விடையளிக்க. [5 x 2 = 10]
Question 22.
சொற்களைப் பிரித்துப் பார்த்துப் பொருள் தருக.
Answer:
பலகையொலி
பலகை + ஒலி (பலகையின் ஒலி)
பல + கை + ஒலி (பல கைகளால் எழுப்புகின்ற ஓசை)
Question 23.
பொருத்தமானவற்றைச் சொற்பெட்டியில் கண்டெழுதுக. (அவிழம், தங்கும், கவிழம், தயங்கும்)
Answer:
விடை:
(அ) காலை ஒளியினில் மலரிதழ் அவிழும்.
சோலைப் பூவினில் வண்டினம் கவிழும்.
(ஆ) மலை முகட்டில் மேகம் தங்கும். அதைப் பார்க்கும் மனங்கள் செல்லத் தயங்கும்.
Question 24.
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
Answer:
விடு – வீடு
இன்பத்தை விடுவித்தால் வீடுபேறு கிட்டும்.
Question 25.
கலைச்சொற்கள் தருக.
Answer:
(1) Land Breeze – நிலக்காற்று
(2) Tempest – பெருங்காற்று
Question 26.
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கினார். கூடியிருந்த மக்கள் அமைதியாயினர். (கலவைச் சொற்றொடராக மாற்றுக)
Answer:
கூத்துக் கலைஞர் பாடத் தொடங்கியதால், கூடியிருந்த மக்கள் அமைதியாயினர்.
Question 27.
மரபுத் தொடர்களுக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுக.
Answer:
(அ) மனக்கோட்டை
(ஆ) கண்ணும் கருத்துமாக
(அ) மனக்கோட்டை : தாய் தன் மகன் படித்து பெரியாளாக வருவான் என்று மனக்கோட்டை கட்டுவாள்.
(ஆ) கண்ணும் கருத்துமாக : பெற்ற குழந்தையைத் தாய், கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொள்வாள்.
Question 28.
தணிந்தான் – பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
தணிந்தான் = தணி + த் ந் + த் + ஆன்
தணி – பகுதி
த் – சந்தி
ந் – ஆனது விகாரம்
த் – இறந்தகால இடைநிலை
ஆன் – ஆண்பால் வினைமுற்று விகுதி
பகுதி – III (மதிப்பெண்க ள்: 18)
பிரிவு – 1
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2×3 = 6]
Question 29.
மொழிபெயர்ப்பு கல்வி பற்றி எழுதுக.
Answer:
- மொழிபெயர்ப்பைக் கல்வியாக ஆக்குவதன் மூலம் அனைத்துலக அறிவையும் நாம் எளிதாகப் பெறமுடியும்
- பல அறிவுத்துறைகளுக்கும் தொழில் துறைகளுக்கும் வெளிநாட்டாரை எதிர்பார்க்காமல் நாமே.
- நமக்கு வேண்டிய அனைத்தையும் உருவாக்கிக்கொள்ள முடியும்; மனித வளத்தை முழுமையாகப் பயன்படுத்தமுடியும். வேலைவாய்ப்புத் தளத்தை விரிவாக்க முடியும்.
- நாடு, விடுதலை பெற்ற பிறகு பல நாட்டுத் தூதரகங்கள் நம்நாட்டில் நிறுவப்பட்டன.
Question 30.
ஜெயகாந்தன் தம் கதைமாந்தர்களின் சிறந்த கூறுகளைக் குறிப்பிடத் தவறுவதில்லை என்று அசோகமித்திரன் கூறுகிறார். இக்கூற்றை மெய்ப்பிக்கும் செயல் ஒன்றைத் ‘தர்க்கத்திற்கு அப்பால் ‘ கதை மாந்தர் வாயிலாக விளக்குக.
Answer:
- தோல்வி நிச்சயம் என்ற மனப்பான்மையுடன் போன நான் வழக்கத்திற்கு மாறாக அன்று தோற்றுப்போனேன்.
- தோல்வி நிச்சயம் என்ற என் மனப்போக்கு தோற்றது. என் வாழ்க்கையே நிர்ணயிக்கப்பட்டது.
- பிச்சைக்காரனுக்கு பிச்சை போட்டதில் நாலணாவில் அந்த நல்லநாளைக் கொண்டாடிவிட்ட நிறைவு பிறந்தது.
- காலணாதான் கடன் தரலாம் தருமத்தைத் தரமுடியுமா? தருமத்தை யாசித்துத் தந்தால் தான் பெற முடியும்.
- ஒருவனுக்கு என்ன கிடைக்க வேண்டுமோ அதுதான் கிடைக்கும். நாம் எப்படி முயற்சி செய்தாலும் நமக்குக் கிடைப்பதுதான் கிடைக்கும்.
Question 31.
உரைப்பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடை தருக.
Answer:
திருவள்ளுவர் இல்லறவியலில் ‘விருந்தோம்பலை வலியுறுத்த ஓர் அதிகாரத்தையே’ அமைத்திருக்கிறார்; இல்லறம் புரிவது விருந்தோம்பல் செய்யும் பொருட்டே என்கிறார்; முகம் வேறுபடாமல் முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும் என்பதை ” மோப்பக் குழையும் அனிச்சம்” என்ற குறளில் எடுத்துரைக்கிறார். விருந்தினரைப் போற்றுதல் இல்லறக் கடமையாக இருந்தது.
(அ) விருந்தோம்பல் பற்றி ஓர் இயலை எழுதியவர் யார்?
Answer:
திருவள்ளுவர்.
(ஆ) திருவள்ளுவர் விருந்தோம்பலை கூறிய இயலின் பெயர் என்ன?
Answer:
இல்லறவியல்
(இ) ‘முகமலர்ச்சியோடு விருந்தினரை வரவேற்க வேண்டும்’ என்பதனை உணர்த்தும் குறள் எது?
Answer:
“மோப்பக் குழையும் அனிச்சம்”
பிரிவு – 2
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க.
34 ஆவது வினாவிற்குக் கட்டாயமாக விடையளிக்க வேண்டும். [2×3 = 6]
Question 32.
பூவைத் தொடுக்கும் பெண்ணின் மனநிலை என்ன?
Answer:
- இந்தப் பூவை நான் எப்படித் தொடுப்பேன் மிகவும் மென்மையாக இருக்கிறதே.
- இறுக்கி முடிச்சிட்டால் காம்பு அறுத்து முறியும் தளர்ந்து பிணைத்தால் மலர்கள் தரையில் நழுவும்.
- தொடுக்காமல் இருந்தால் யாருக்கும் பயனில்லை.
- அதனால் என் மனமே நாறாக அது அறுந்து போகாத அளவிற்கு பூவைத் தொடுத்து என் தலையில் நான் சூடிக் கொள்வேன்.
Question 33.
”சித்தாளின் மனச்சுமைகள்
Answer:
செங்கற்கள் அறியாது” – இடஞ்சுட்டிப் பொருள் தருக.
இடம் :
செய்யுள் வரிகள் கவிஞர் நாகூர்ரூமியால் எழுதப்பட்ட சித்தாளு’ கவிதைப் பேழையில் காணப்படுகிறது.
விளக்கம்:
அடுக்குமாடி அலுவலகம் எதுவாயினும் அடுத்தவர் கனவுக்காக அலுக்காமல் இவள் சுமக்கும் கற்களெல்லாம் அடுத்தவேளை உணவுக்காக மட்டுமே இவள் செத்தாலும் சிறிதளவே சலனங்கள் ஏற்படுத்தும். சித்தாளின் மனச்சுமைகள் செங்கற்கள் அறியாது என்று ஏழையின் நிலையை எடுத்துக்காட்டுகிறார்.
Question 34.
அடிபிறழாமல் எழுதுக.
Answer:
”சிறுதாம்பு” எனத் தொடங்கும் ‘முல்லைப்பாட்டு’ பாடல்.
சிறுதாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறுதுயர் அலமரல் நோக்கி, ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள், “கைய
கொடுங்கோற் கோவலர் பின்நின்று உய்த்தர
இன்னே வருகுவர், தாயர்” என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம்
– நப்பூதனார்.
(அல்லது)
”விருந்தினனாக ஒருவன்” எனத் தொடங்கும் ‘காசிக்காண்டம்’ பாடல்.
விருந்தினனாக ஒருவன் வந்து எதிரின்
வியத்தல் நன்மொழி இனிது உரைத்தல்
திருந்துற நோக்கல் வருக என உரைத்தல்
எழுதல் முன் மகிழ்வன செப்பல்
பொருந்து மற்று அவன் தன் அருகுற இருத்தல்
போமெனில் பின் செல்வதாதல்
பரிந்துநன் முகமன் வழங்கல் இவ்வொன்பான்
ஒழுக்கமும் வழிபடும் பண்பே
– அதிவீரராம பாண்டியர்
பிரிவு – 3
எவையேனும் இரண்டு வினாக்களுக்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. [2 x 3 = 6]
Question 35.
தும்பை , வாகை விளக்குக.
Answer:
தும்பைத்திணை: பகைவேந்தர் இருவரும் வலிமையே பெரிது என்பதை நிலைநாட்ட, தம் வீரர்களுடன் தும்பைப் பூவைச்சூடிப் போர்க்களத்தில் ஒருவரோடு ஒருவர் போரிடுவது தும்பைத்திணை. போரிடுகின்ற அரசர்கள் இருவரும் தும்பைப் பூ மாலையையே சூடியிருப்பார்கள். போர்த்திணைகள் படிப்படியாக வளர்ந்த நிலையில், போரைத் தொடங்கும் நிகழ்வாக ஆநிரை கவர்தல் மேற்கொள்ளப்பட்டது. அதிரப் பொருவது தும்பை.
வாகைத்திணை : போரிலே வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூவைச் சூடி மகிழ்வது, வாகைத்திணை. செரு வென்றது வாகை
Question 36.
ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர் தாக்கற்குப் பேருந் தகைத்து – இக்குறட்பாவினை அலகிட்டு வாய்பாடு தருக.
Answer:
இக்குறட்பா பிறப்பு என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.
Question 37.
சொற்பொருள்பின்வருநிலையணி
Answer:
அணி விளக்கம்:
ஒரு சொல் மீண்டும் மீண்டும் வந்து ஒரே பொருளில் வந்தால் சொற்பொருள் பின்வரு நிலையணி.
(எ.கா) ” இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
இன்மையே இன்னா தது”
விளக்கம்:
இன்மை என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து வறுமை என்ற ஒரே பொருளை தருவதால் இது சொற்பொருள் பின்வரு நிலையணி ஆகும்.
பொருள்:
வறுமையை விடக் கொடியது எது என்றால் வறுமையை விட வறுமையே கொடியது.
பகுதி – IV (மதிப்பெண்கள் : 25)
அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்க. [5 x 5 = 25]
Question 38.
அ முல்லைப் பாட்டில் உள்ள கார்காலச் செய்திகளை விவரித்து எழுதுக.
Answer:
முன்னுரை:
தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வைக் கொண்டிருந்தனர் மழைக்காலத்தில் அவர்கள் வாழ்வை எதிர்கொள்கிற இயல்பு இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
மழைபொழியும் காட்சி :
வலம்புரிச்சங்கு பொறித்த கைகளையுடைய திருமால், குறுகிய வடிவம் கொண்டு மாவலி மன்னன் நீர் வார்த்துத் தரும்பொழுது, மண்ணுக்கும் விண்ணுக்குமாகப் பேருருவம் எடுத்து உயர்ந்து நிற்பது போன்றுள்ளது மழைமேகம். அம்மேகம், ஒலிக்கும் கடலின் குளிர்நீரைப் பருகிப் பெருந்தோற்றம் கொண்டு, வலமாய் எழுந்து, மலையைச் சூழ்ந்து, விரைந்த வேகத்துடன் பெருமழையைப் பொழிகிறது.
முதிய பெண்கள் நற்சொல் கேட்டு நின்ற காட்சி :
முதிய பெண்கள் மிகுந்த காவலையுடைய ஊர்ப்பக்கம் சென்றனர். யாழிசை போன்று ஒலிக்கும் வண்டுகள் சூழ்ந்து ஆரவாரிக்கும் நறுமணம் கொண்ட அரும்புகள், அந்த மலர்ந்த முல்லைப் பூக்களோடு நாழியில் கொண்டு வந்த நெல்லையும் சேர்த்துத் தெய்வத்தின் முன் தூவினர். பிறகு தெய்வத்தைத் தொழுது தலைவிக்காக நற்சொல் கேட்டு நின்றனர்.
முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்ற காட்சி :
சிறு தாம்புக் கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்று பசியால் வாடிக்கொண்டிருந்தது. அதன் வருத்தத்தை ஓர் இடைமகள் கண்டாள். குளிர்தாங்காமல் கைகளைக் கட்டியபடி நின்ற அவள். புல்லை மேய்ந்து உன் தாய்மார் வளைந்த கத்தியை உடைய கம்பைக் கொண்ட எம் இடையர் ஓட்டிவர இப்போது வந்துவிடுவர், வருந்தாதே என்றாள். இது நல்ல சொல் எனக்கொண்டு முதுபெண்கள் தலைவியிடம் நற்சொல்லை நாங்கள் கேட்டோம் என்று கூறினர். இவ்வாறு தலைவன் வருகை குறித்து முதுபெண்டிர் விரிச்சி கேட்டு நின்றனர்.
முடிவுரை:
முல்லை நிலத்தின் மழைப்பொழிவையும், முல்லை மலரும் நெல்லும் தூவி முதுபெண்டிர் தெய்வத்தை வழிபட்டதையும், விரிச்சி கேட்டதையும் முல்லைப்பாட்டில் நப்பூதனார் படம் பிடித்துக் காட்டியுள்ளார்.
(அல்லது)
(ஆ) கூத்தனைக் கூத்தன் ஆற்றுப்படுத்தலைக் கூத்தராற்றுப்படை எவ்வாறு காட்டுகிறது?
Answer:
- நன்னனைப் புகழ்ந்து பாடிப் பரிசில் பெற்ற கூத்தர், பரிசில் பெறப்போகும் கூத்தரைக் கானவர்களின் வளம் நிறைந்த புதுவருவாயை உடைய சிறிய ஊர்களில் தங்கி உணவு பெறுவதற்கு வழிப்படுத்துதல்.
- பகலில் இளைப்பாறிச் செல்லுங்கள்; இரவில் சேர்ந்து தங்குங்கள்.
- எரியும் நெருப்பைப் போல ஒளிரும் பூங்கொத்துகளைச் சுற்றத்தோடு அணிந்துகொள்ளுங்கள்.
- சிவந்த பூக்கள் கொண்ட அசோக மரங்களை உடைய பொருத்தமான பாதையில் செல்லுங்கள்.
- அசையும் மூங்கில்கள் ஓசை எழுப்பும் கடினப்பாதையில் சென்று மலைச்சரிவில் உள்ள சிற்றூரை அடையுங்கள்.
- அங்குள்ளவர்களிடம், பகைவரைப் பொறாமல் போர் செய்யும் வலிய முயற்சியும் மானமும் வெற்றியும் உடைய நன்னனின் கூத்தர்கள்’ என்று சொல்லுங்கள்.
- பிறகு நீங்கள் உங்கள் வீட்டிற்குள் போவது போலவே அவர்களுடைய வீட்டுக்குள் உரிமையுடன் நுழையுங்கள். உறவினர் போலவே அவர்கள் உங்களுடன் பழகுவர்..
- நீண்ட வழியைக் கடந்து வந்த உங்களின் துன்பம் தீர இனிய சொற்களைக் கூறுவர்.
- அங்கே, நெய்யில் வெந்த மாமிசத்தின் பொரியலையும் தினைச் சோற்றையும் உணவாகப் பெறுவீர்கள்.
Question 39.
(அ) உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அனுப்புநர்
கபிலன்,
பாரதியார் தெரு,
மதுரை- 08.
பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
மதுரை-08.
ஐயா,
பொருள் : உணவு தரமில்லை , விலை கூடுதல் புகார் அளித்தல் – சார்பு. வணக்கம்.
நான் காலையில் சுந்தர பவன் உணவு விடுதிக்குச் சாப்பிடச் சென்று இருந்தேன். நான்கு இட்லிகள் மட்டும்தான் சாப்பிட்டேன். அதற்கு ரூ.50/- விலை போட்டார்கள். அந்த அளவிற்கு இட்லியின் தரமும் இல்லை. இட்லிக்குச் சாம்பார் மட்டும் தான் கொடுத்தார்கள். சட்னி கொடுக்கவில்லை. கேட்டால் பொறுப்பற்ற முறையில் பதில் கூறுகின்றனர். அதனால், ஐயா அவர்கள் அந்த உணவு விடுதியின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இடம் : மதுரை
தேதி : 18.05.2019
இங்ஙனம்,
தங்கள் உண்மையுள்ள,
கபிலன்.
குறிப்பு
- உணவு விடுதியின் பில்
- அவர்கள் பேசிய ஆடியோ
- புகைப்படம்
- உறைமேல் முகவரி
பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு அலுவலகம்,
மதுரை – 625008.
(அல்லது)
(ஆ) உனது பாட்டியின் உடல் நலம் குறித்தும், நீ விரைவில் அவர்களை சந்திக்க இருப்பதாகவும் கடிதம் ஒன்று வரைக.
Answer:
எண்.82, மீனாட்சி நகர்,
சென்னை .
10.04.2019
அன்புள்ள பாட்டிக்கு,
நான் இங்கு நலம். அதுபோல் அங்கு இருக்கும் அனைவரின் நலனையும் அறிய ஆவலாக இருக்கிறேன் பாட்டி, நான் நடந்து முடிந்த தேர்வில் முதல் வகுப்பில் தேர்ச்சி அடைந்து இருக்கிறேன். சென்ற வாரம் உங்கள் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தீர்கள் என்று சித்தப்பா கூறியிருந்தார். கவலைப்படாதீர்கள் மருத்துவர் கொடுத்த மருந்து மாத்திரைகளைச் சரியான நேரத்திற்கு மறக்காமல் சாப்பிடுங்கள். உங்கள் உடல்நிலையை மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ளுங்கள். அடுத்த மாதம் எனக்குத் தொடர் விடுமுறை வருகிறது. அப்போது நான், அம்மா, அப்பா அனைவரும் வந்து உங்களைப் பார்க்கிறோம். வீட்டில் இருக்கும் அனைவரையும் கேட்டதாகக் கூறவும்.
இங்ஙனம்,
உங்கள் அன்பு பேத்தி,
சுதா.
உறைமேல் முகவரி
பெறுநர், சிவகாமி பாட்டி,
35 முதல் மாடவீதி,
மதுரை 625 008.
Question 40.
படம் உணர்த்தும் கருத்தை நயமுற ஐந்து தொடர்களில் எழுதுக.
Answer:
உருமி மேளம் இசைத்திடவே
ஒய்யார ஆட்டம் நடக்குதையா!
முண்டாசு கட்டிய ஆடவர்கள்
முன்பின் சுழற்றி ஆடிடவே
நாட்டுப்புறத்தின் வடிவாக
நயமுடன் பிறந்ததே ஒயிலாட்டம் !
Question 41.
வங்கிக் கணக்கில் பணம் செலுத்தும் படிவம் நிரப்புதல்.
Answer:
Question 42.
(அ) பள்ளியிலும், வீட்டிலும் நீங்கள் கடைப்பிடிப்பனவற்றை வரிசைப்படுத்தி எழுதுக.
Answer:
(அல்லது)
மொழிபெயர்க்க :
(ஆ) Among the five geographical divisions of the Tamil country in Sangam literature, the Marutam region was the fit for cultivation, as it had the most fertile lands. The property of a farmer depended on getting the necessary sunlight, seasonal rains and the fertility of the soil. Among these elements of nature, sunlight was considered indispensable by the ancient Tamils.
சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற தமிழ்நாட்டின் 5 புவியியல் பாகுபாட்டின்படி, மருத நிலப் பகுதியே பயிரிடுவதற்குச் செழுமையான பகுதியாகக் கருதப்பட்டது. விவசாயியின் சொத்து அங்கு கிடைக்கும் வெயில், பருவ மழை மற்றும் நிலத்தின் செழுமையைச் சார்ந்திருந்தது. இயற்கையில் கிடைக்கும் மூலக்கூறுகளில் சூரிய ஒளியே இன்றியமையாததாகப் பழந்தமிழர்களால் கருதப்பட்டது.
பகுதி – V (மதிப்பெண்கள்: 24)
அனைத்து வினாக்களுக்கும் விரிவாக விடையளிக்க. [3 x 8 = 24]
Question 43.
(அ) மொழிபெயர்ப்பின் செம்மை பற்றி விவரி.
Answer:
- Hundred railsleepers were washed away என்பதை, தொடர்வண்டியில் உறங்கிக் கொண்டிருந்த நூறுபேர்.
- வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்கள் என்று ஒரு செய்தித்தாள் வெளியிட்டது.
- Railsleeper என்பது தொடர்வண்டியின் போக்குவரத்துப் பாதையான தண்டவாளத்தில் உள்ள குறுக்குக் கட்டைகளைக் குறிக்கும்.
- அதனை உறங்கிக் கொண்டிருந்தோர் என மொழிபெயர்த்தது பெரும்பிழையே.
- Camel என்பதற்கு வடம் (கயிறு, ஒட்டகம் என இருபொருள் உண்டு.
- ஊசி காதில் வடம் நுழையாது என்னும் வேற்றுமொழித் தொடரை ஊசி காதில் ஒட்டகம் நுழையாது என்று மொழிபெயர்த்துப் பயன்படுத்துகிறோம்.
- இத்தொடரில் வடம் என்பதே பொருத்தமான சொல்லாக அமையும். அதாவது ஊசி காதில் நூல் நுழையுமே அன்றிக் கயிறு நுழையாது என்பதே.
- மொழிபெயர்ப்புகள் கழிவின்றி, சிதறலின்றி மூல மொழியின் கருத்துகளை வெளிப்படுத்துவதாக அமைய வேண்டும்.
- Underground drainage என்ற தொடரை மொழிபெயர்ப்ப தில் தடுமாற்றம் வந்தது.
- பாதாளச் சாக்கடை என்பது போன்றெல்லாம் மொழிபெயர்த்தனர்.
- தமிழோடு தொடர்புடைய மலையாள மொழியில் பயன்படுத்திய புதைசாக்கடை என்ற சொல் பொருத்தமாக இருப்பதைக் கண்டனர்.
- அதையே பயன்படுத்தவும் தொடங்கினர்.
- Tele என்பது தொலை என்பதைக் குறிக்கிறது. ஆகவே Telegraph/ Television.
- Telephone, Telescope, Telemetry முதலிய சொற்கள் மொழிபெயர்க்கப்படுகிறபோது தொலைவரி, தொலைக்காட்சி.
- தொலைபேசி, தொலைநோக்கி, தொலை அளவியல் என்றவாறு முன் ஒட்டுகளுடன் மொழிபெயர்க்கப்பட்டன.
- இதற்கு மாறாக, Transcribe, Transfer, Transform, Transact ஆகியவற்றை மொழிபெயர்க்கும் போது படியெடுத்தல், மாறுதல்.
- உருமாற்றுதல், செயல்படுத்துதல் என்றவாறு மொழிபெயர்க்கப்படுகின்றன.
- Trans என்ற முன் ஓட்டை வைத்து மொழிபெயர்க்கவில்லை.
- இவ்வாறு இடம்பார்த்து மொழிபெயர்ப்பு, முறையாகச் செய்யப்பட வேண்டும்.
(அல்லது)
(ஆ) நெகிழிப் பைகளின் தீமையைக் கூறும் பொம்மலாட்டம் உங்கள் பள்ளியின் ஆண்டு விழாவில் நிகழ்த்தப்படுகிறது. அதற்குப் பாராட்டுரை ஒன்றினை எழுதுக.
- அனைவருக்கும் வணக்கம். பொம்மலாட்டம் என்பது மக்கள் விரும்பி பார்க்கும் ஒரு வகை கூத்துக் கலையாகும்.
- பார்ப்பவரின் கண்ணையும் கருத்தையும் மனதையும் ஒரே நேரத்தில் ஆட்கொள்ளக் கூடியதாக இருக்கிறது.
- நெகிழிப்பைகளின் வரவால் மக்கள் எவ்வாறு அவதிப்படுகின்றனர் என்பதை இந்த பொம்மலாட்டம்.
- மூலம் மாணவர்களுக்குப் புரியும் வகையில் மிக எளிமையாக விளக்கினார்கள். பொம்மலாட்டத்தைத் தோற்பாவைக் கூத்து என்றும் அழைப்பர்.
- தோலில் செய்த வெட்டு வரைபடங்களை விளக்கின் ஒளி ஊடுருவும் திரைச்சீலையில் பொருத்தி, கதைக்கேற்ப மேலும் கீழும் பக்கவாட்டிலும் அசைத்துக்காட்டி உரையாடியும் பாடியும் காட்டுவது தோற்பாவைக் கூத்து.
- தோலால் ஆன பாவையைக் கொண்டு நிகழ்த்தும் கலையாதலால் தோற்பாவை என்னும் பெயர் பெற்றது.
- இசை, ஓவியம், நடனம், நாடகம், பலகுரலில் பேசுதல் ஆகியவை இணைந்துள்ளன.
- கூத்து நிகழ்த்தும் திரைச் சீலையின் நீளம், அகலம் ஆகியன பாவையின் அமைப்பையும் எண்ணிக்கையையும் பொறுத்து வேறுபடுகின்றன.
- இந்நிகழ்ச்சியில் பாவையின் அசைவு உரையாடல் இசை ஆகியனவற்றோடு ஒளியும் முதன்மை பெறுகின்றது.
- பாவை குறித்த செய்திகள் சங்ககாலம் முதல் பதினெட்டாம் நூற்றாண்டுவரையான தமிழ் இலக்கியங்களில் காணப்படுகின்றன.
- திருக்குறளில் பரப்பாவையைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. திருவாசகத்திலும் பட்டினத்தார் பாடலிலும் தோற்பாவைக் கூத்து விளங்குகிறது.
- தோற்பாவைக் கூத்து கையுறைப் பாவைக் கூத்து. பொம்மலாட்டம் என்பனவாகவும் மாற்றம் பெற்றுள்ளது.
- நெகிழி அல்லது பிளாஸ்டிக் என்பது ஒரு பொருள்.
- ஏதாவது ஒரு நிலையில் இளகிய நிலையில் இருந்து பின்னர் இறுதி திட நிலையை அடைவதைக் குறிக்கும் சொல் ஆகும். மலைகாக வகை
- பொருள் மண்ணுக்குள் சென்றால் சீக்கிரம் மக்காமல் அப்படியே இருந்து விடுகிறது.
- அதனால் மரங்களில் வேர்களுக்கு ஆக்கிஜன் கிடைக்கக் கடினமாக இருக்கிறது.
- எந்த ஒரு பொருள் பூமியில் மக்கவில்லையோ அது மனித இனத்திற்கே பேராபத்து என்பதை இந்தப்.
- பொம்மலாட்டம் மூலமாக மாணவர்களுக்கு மிக எளிதாகச் சென்று சேர்ந்தது.
- பொம்மலாட்டம் கலைஞர் அனைவருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Question 44.
(அ) ஒரு பக்க அளவில் உரையாடல் எழுதுக.
Answer:
சூழல் – வெளிநாட்டிலிருந்து உங்கள் இல்லத்திற்கு வந்திருக்கும் உறவினரின் மகளுக்குத் தமிழ் மொழியைப் பேச மட்டுமே தெரியும். ஆங்கில இலக்கியம் படித்த அவரிடம் தமிழ் உரைநடையின் சிறப்புப் பற்றி உரையாடுதல்.
மாலா : வணக்கம். கரீனா தமிழ்நாட்டிற்கு உன்னை வரவேற்கிறேன். எப்படியுள்ளது நம் தமிழ்நாடு.
கரீனா : வணக்கம். சற்று வித்தியாசமாகவே உள்ளது. ஆனாலும் ஏற்றுக்கொள்கிறேன்.
மாலா : உன்னை கண்டதும் எனக்கு அளவில்லாத மகிழ்ச்சி. நீ தமிழில் பேசுகிறாயே!
கரீனா : ஆமாம் தமிழ் பேச மட்டும் தெரியும். தமிழ் திரைப்படங்களும் பார்ப்பேன்.
மாலா : தமிழ் உரைநடை சிறுகதை, புதுக்கவிதை வடிவங்கள் சிறப்பான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. நீ விரும்பினால் எளிமையாகக் கற்றுக்கொள்ளலாம்.
கரீனா : வீரபாண்டிய கட்டபொம்மன் வசனம் பார்த்து இருக்கிறேன். எனக்கு மிகவும் பிடிக்கும்.
மாலா : அறிஞர் அண்ணாவின் உரைநடை தமிழில் மிகவும் சிறப்பாக அமைந்து இருக்கும்.
கரீனா : உரைநடை என்றால் என்ன? நீயும் நானும் பேசுகிறோமே அதுதான் உரைநடை பேசினால் உரையாடல் எழுதினால் உரைநடை.
கரீனா : ஓ … உரைநடையைக் கற்பது மிகவும் எளிமைதான்.
மாலா : ஆம். எங்கள் தமிழ் மொழியில் சொல்லையோ கருத்தையோ அளவாகப் பயன்படுத்தி உரைநடையை மிகவும் அழகுபடுத்தியுள்ளனர்.
கரீனா : மிக்க மகிழ்ச்சி நீ உரைநடையின் சிறப்பைப் பற்றிக் கூறக் கூற அவற்றைப் படித்து இன்புற ஆவலாக உள்ளேன். நன்றி
(அல்லது)
(ஆ) அழகிரிசாமியின் ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தர் குறித்து எழுதுக.
காஞ்சிப்புரத்துக்காரன்:
- சட்டைப் பையிலிருந்து கடிதத்தையும் மூன்று ரூபாயையும் எடுத்து , ” குப்புசாமிகிட்டே குடுத்துடுங்க.
- இல்லே, தங்கவேலு கிட்ட வேணும்னாலும் குடுத்துடுங்க. இன்னொரு சமயம் பட்டணம் வந்தா ஆசுபத்ரிலே போயி பார்க்கிறேன்” என்று சொல்லிவிட்டுக்.
- கடிதத்தையும் ரூபாயையும் என்னிடம் கொடுத்தான், அப்புறம் ஒரு நிமிஷம் எதையோ யோசித்துப் பார்த்தேன்.
- மனசுக்குள் கணக்கு போடுகிறவன் போல் அவனுடைய முகபாவனையும் தலையசைப்பும் இருந்தன.
- மறு நிமிஷத்திலேயே, “இந்தாருங்க, இதையும் குப்புசாமிக்குக் குடுக்கச் சொல்லுங்க” என்று சொல்லித் தன்.
- இடது கையில் தொங்கிய துணிப்பையிலிருந்து இரண்டு சாத்துக்குடிப் பழங்களை எடுத்துக்கொடுத்தான்.
- “என் பசங்களுக்கு நாலு பழம் வாங்கினேன்.
- போகட்டும். இவரு ஆசுபத்திரிலே இருக்கிறாரு. நாம்ப வேறு என்னத்தைச் செய்யப் போறோம்?”
- இத்துடனும் அவன் நிறுத்தவில்லை! தன் உபயமாக ஒரு ரூபாய் நோட்டு ஒன்றை எடுத்து என்னிடம் கொடுத்து.
- குப்புசாமியிடமோ தங்கவேலுவிடமோ சேர்க்கச் சொன்னான்.
- அவன் குப்புசாமிக்காகத்தான் கொடுத்தானோ, குப்புசாமிக்காகக் காஞ்சிபுரத்தில் இருந்து கொண்டு கண்ணீர் வடிக்கும் அந்த வீரப்பன்.
- குப்புசாமியின் உயிருக்குக் கொடுக்கும் மதிப்பைக் கண்டு தான் கொடுத்தானோ? என்று அழகிரிசாமியின்.
- ஒருவன் இருக்கிறான்’ சிறுகதையில் மனிதத்தை வெளிப்படுத்தும் கதை மாந்தரான – காஞ்சிபுரத்துக்காரனை ஆசிரியர் காட்டுகின்றார்.
Question 45.
(அ) உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.
Answer:
பொருட்காட்சி
முன்னுரை:
விடுமுறை தினத்தைச் சிறந்த முறையில் செலவழிப்பதற்கான நடைபெறும் பொருட்காட்சிகள் மக்களின் மனதையும் கருத்தினையும் கவரும் வகையில் அமைதல் வேண்டும். 14.1.2019 அன்று தமிழக முதல்வர் சுற்றுலா வர்த்தகப் பொருட்காட்சியைத் திறந்து வைத்தார்கள். அனைவரும் சென்று கண்டுகளித்தோம்.
கண்ணைக் கவரும் மாதிரிகள்:
பிற்காலச் சோழ மன்னர்களில் சிறந்து விளங்கிய இராசராச சோழன் தஞ்சையில் எழுப்பிய வியத்தகு பெரிய கோயிலின் மாதிரி பொருட்காட்சியின் வாயிலில் அமைத்திருந்தார்கள். அது காண்போர் கண்ணைக் கவர்ந்து இழுத்தது.
கலை பண்பாட்டு அரங்குகள் :
பொருட்காட்சியின் உள்ளே இந்திய மாநிலங்கள் ஒவ்வொன்றும் தங்கள் மாநிலத்தின் கலை, பண்பாடு, நாகரிகம் முதலியவைப் பற்றி விளக்கும் அரங்கங்கள் நம்மை வரவேற்கின்றன. குழந்தைகளுக்காகச் சிறுவர் உலகம் வரவேற்கிறது. அதன் உள்ளே ரயில் வண்டி மிகப்பெரிய இராட்டினம் ஆகியவை உள்ளன.
குழந்தைகளுக்கான அரங்குகள் :
விளையாட்டுப் போட்டிகளும், மாயாஜாலங்களும், இழுவைப் பாலமும், துப்பறியும் நாய்களின் வியத்தகு செயல்களும், கோளரங்கமும் அறிவியல் வளர்ச்சியை விளக்கும்.
அறிவியல் கூடங்கள்:
அறிவியல் வேளாண்மையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் அதில் இடம் பெற்றுள்ள காய்கனி வகைகளும் இழுவைப்பாலமும் போக்குவரத்துத் துறையில் நமது முன்னேற்றத்தை விளக்கும் மாதிரிகள் அடங்கிய அரங்கமும் விடுதலைக்குப் பிறகு நம் நாட்டின் முன்னேற்றத்தை விளக்கும் அரங்கமும் செயல்படுகிறது.
அங்காடி வீதிகள் :
வீட்டின் அன்றாடத் தேவைகளுக்கும் உதவக்கூடிய பொருள்களை விற்கும் அங்காடிகளும் சிற்றுண்டி விடுதிகளும் நிறைந்து நம்மை மெய்மறக்கச் செய்கின்றன.
முடிவுரை:
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயன்படும் வகையில் பொருட்காட்சி அமைந்திருந்தது.
(அல்லது)
(ஆ) குறிப்புகளைப் பயன்படுத்திக் கட்டுரை ஒன்று தருக.
முன்னுரை – இராணுவ அமைப்பு – பீல்டு மார்சல் – குறிக்கோள்கள் – முதன்மைக் குறிக்கோள் – இதரக் குறிக்கோள் – முடிவுரை.
முன்னுரை:
இந்தியத் தரைப்படை இந்தியப் படைத்துறையின் மிகப்பெரிய பிரிவாகும். இது இந்தியாவின் எல்லைக் கண்காணிப்பு , உள்நாட்டு பாதுகாப்பு அமைதி நிலை நாட்டல், பயங்கரவாத எதிர்ப்புப் பணிகளில் பெரும் பங்கு வகிக்கிறது. இயற்கைச் சீற்றங்களின் போது மீட்புப்பணி, நலப் பணிகளிலும் ஈடுபடுகின்றது. இந்திய தரைப்படை இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.
இராணுவ அமைப்பு:
ஏறத்தாழ 11,30,000 படையினர் இப்படைப் பிரிவில் செயலார்ந்த தீவிரப் பணியாற்றுகின்றனர். மேலும் ஏறத்தாழ 18,00,000 படையினர் இருப்புப் படையாக தயார் நிலையில் உள்ளனர். இந்திய தரைப்படை உலகின் இரண்டாவது மிகப்பெரிய தரைப்படையாகும். வீரர்கள் தன்னார்வத்தின் மூலமே படையில் சேர்க்கப்படுகின்றனர். இருப்பினும் இந்திய அரசியலமைப்பில் அவசர காலத்தில் கட்டாயத்தின் பேரிலும் வீரர்களை படையில் சேர்க்க வழிவகை உண்டு. அது ஒருபோதும் நடைமுறை படுத்தப்படவில்லை. இந்தியத் தரைப்படை எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
பீல்டு மார்சல்:
இந்தியா விடுதலை அடைந்த 1947ஆம் ஆண்டில் இந்தியத் தரைப்படை உருவாக்கப்பட்டு ஆங்கிலேய இந்தியாவின் தரைப்படை இந்திய தரைப்படையுடன் இணைக்கப்பட்டது. இந்திய தரைப்படை உலகின் பல சச்சரவுப் பகுதிகளில் ஐக்கிய நாடுகள் அவையின் அமைதி காக்கும் படையாகப் பணியாற்றியுள்ளது. இப்படை தரைப்படையின் தலைமைப் பதவி பீல்டு மார்சல். இது இந்திய குடியரசுத் தலைவரால் வழங்கப்படுகிறது. இந்நாள் வரை இரண்டு தரைப்படை பட்டாளர்கள் மட்டுமே இந்த உயர் பதவியை அடைந்திருக்கின்றனர். அவ்விருவருள் பீல்டு மார்சல் , மானக்கா 1973 ஓய்வு பெற்ற பின் 30 ஆண்டுகள் கழித்து 1986இல் பீல்டு மார்சல் கரியப்பா ஆவார்.
குறிக்கோள்கள்:
இந்திய தரைப்படையின் கோட்பாடுகள் இந்திய இராணுவத்தின் மற்ற படைப் பிரிவுகளை போன்றே இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் அமையப்பட்டன.
முதன்மைக் குறிக்கோள்:
நாட்டின் பாதுகாப்பு நலன் அரசுரிமையைப் பாதுகாத்தல், மாநில ஒருங்கிணைப்பைப் பாதுகாத்தல், வேற்று நாடுகளின் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்தல்.
இதர குறிக்கோள்கள் :
பிற மறைமுகப் போர்களில் அரசு முகமைகளுக்கு உதவுதல் மற்றும் பிற உள்நாட்டு அச்சுறுத்தல்களைக் களைதல், குடிமக்களுக்கு அவசர காலத் தேவையின் போது உதவியளித்தல்.
விடுதலையின் போது நாட்டின் எல்லைகளைக் காப்பதே இந்தியத் தரைப்படையின் தலையாயக் கடமையாகக் கருதப்பட்டது. ஆயினும், தற்காலத்தில் உள்நாட்டு பாதுகாப்பிலும் குறிப்பாக காஷ்மீர், அசாம் ஆகிய மாநிலங்களில் தரைப்படை பெரிதும் பயன்படுத்தப்படுகிறது. இந்தியத் தரைப்படையில் சுமார் 10 லட்சம் படைவீரர்கள் 34 பிரிவுகளில் பணியாற்றுகின்றனர். தலைமையகம் புதுடெல்லியில் அமைந்துள்ளது.
முடிவுரை:
இந்திய இராணுவத்தைப் பற்றி அப்துல் கலாம் கருத்து இந்த உலகமே இந்தியாவை எதிர்த்தாலும், 15 நாட்கள் அவர்களை எதிர்த்து சண்டையிடும் வல்லமை பெற்றது இந்திய நாடு என்று கூறியுள்ளார். கலாம் அவர்கள் இந்தியர்களைப் பார்த்து கனவு காணுங்கள்’ என்று கூறினார். அது நம் வாழ்க்கையைப் பற்றி மட்டுமல்ல. நம் எதிர்கால இந்தியாவின் பாதுகாப்பை பலப்படுத்தும்.