Students can Download Tamil Chapter 3.1 புலி தங்கிய குகை Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 3.1 புலி தங்கிய குகை
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
‘யாண்டு’ என்னும் சொல்லின் பொருள்
அ) எனது
ஆ) எங்கு
இ) எவ்வளவு
ஈ) எது (விடை:
ஆ) எங்கு
Answer:
ஆ) எங்கு
Question2.
‘யாண்டுளனோ?’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………
அ) யாண்டு + உளனோ?
ஆ) யாண் + உளனோ ?
இ) யா + உளனோ?
ஈ) யாண்டு + உனோ?
Answer:
அ) யாண்டு + உளனோ?
Question3.
‘கல் + அளை’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல்…….
அ) கல்லளை
ஆ) கல்அளை
இ) கலலளை
ஈ) கல்லுளை
Answer:
அ) கல்லளை
குறுவினா
தம் வயிற்றுக்குத் தாய் எதனை உவமையாகக் கூறுகிறார்?
Answer:
தாய் தம் வயிற்றுக்குப் ‘புலி தங்கிச் சென்ற குகையை உவமையாகக் கூறுகிறார்.
சிறுவினா
தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
தம் மகன் குறித்துத் தாய் கூறிய செய்திகள் :
‘சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக்கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே?” என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று புலவர் பதிலளித்தார்.
சிந்தனை வினா
தாய் தன் வயிற்றைப் புலி தங்கிச்சென்ற குகையோடு ஒப்பிடுவது ஏன்?
Answer:
புறநானூற்றில் கூறப்பட்ட பெண்கள் வீரத்தில் சிறந்திருந்தனர். நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர். அப்பண்பாட்டில் வளர்ந்த தாய் தன் மகனுடைய வீரத்தை உணர்த்தும் விதமாகத் தன் வயிற்றைப் புலி தங்கிச் சென்ற குகையோடு ஒப்பிடுகிறாள்.
கற்பவை கற்றபின்
Question 1.
சங்க காலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை அறிந்து எழுதுக.
Answer:
சங்க காலப் பெண்பாற் புலவர்கள் :
ஒளவையார், காவற்பெண்டு, வெள்ளிவீதியார், அள்ளூர் நன்முல்லையார், ஒக்கூர் மாசாத்தியார், ஆதிமந்தியார், வெண்ணிக்குயத்தியார், பொன்முடியார், நக்கண்ணையார், காக்கைப் பாடினியார், நப்பசலையார்.
Question 2.
பண்டைக்காலப் போர்க்கருவிகள் சிலவற்றைப் படம் வரைந்து அவற்றின் பெயர்களை
எழுதுக.
Answer:
முதன்மைக் கருவிகளாகப் பயன்பட்டவை : வாள், வில், வேல் பயன்பாட்டில் இருந்த மற்ற கருவிகள் : அடார், அரம், அரிவாள், ஆயுதக்காம்பு, எஃகு, கண்ணாடி தைத்த கேடகம், வளரி, சூலம் சுருள்பட்டை, கணிச்சிப்படை, கலப்பை, கழிப்பிணிப் பலகை, காழெஃகம், கிளிகடிகருவி, குந்தாலி, குறடு, கோடாலி , சக்கரம், சிறியிலை, எஃகம், சேறுகுத்தி, தறிகை, துடுப்பு, நவியம், படைவாள், பூண்கட்டிய தண்டு,
மழு, வேலுறை. படங்களை மாணவர்கள் தாங்களாகவே வரைந்து பார்க்க வேண்டும்.
கூடுதல் வினாக்கள்
சொல்லும் பொருளும் :
1. சிற்றில் – சிறு வீடு
2. யாண்டு – எங்கே
3. கல் அளை – கற்குகை
4. ஈன்ற வயிறு – பெற்றெடுத்த வயிறு
நிரப்புக :
Question 1.
கல் அளை என்பதன் பொருள் ……………….
Answer:
கற்குகை
Question 2.
சோழ மன்னன் போரவைக் ……… யின் செவிலித்தாயாக விளங்கியவர் என்பர்
Answer:
கோப்பெரு நற்கிள்ளி
Question 3.
………………… எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
Answer:
புறநானூறு
பாடலின் பொருள்
(சால்புடைய பெண் ஒருத்தி புலவரின் வீட்டிற்குச் சென்று, ‘அன்னையே! உன் மகன் எங்கு உள்ளான்?’ என்று கேட்டாள்.)
‘சிறு அளவிலான எம் வீட்டின் தூணைப் பற்றிக் கொண்டு, ஏதும் அறியாதவள் போல நீ “உன் மகன் எங்கே?” என என்னைக் கேட்கிறாய். அவன் எங்குள்ளான் என்று எனக்குத் தெரியவில்லை. ஆயினும் புலி தங்கிச் சென்ற குகை போல அவனைப் பெற்றெடுத்த வயிறு என்னிடம் உள்ளது. அவன் இங்கில்லை எனில் போர்க்களத்தில் இருக்கக்கூடும். போய்க் காண்பாயாக’ என்று புலவர் பதிலளித்தார்.