Students can Download Tamil Chapter 3.5 ஆகுபெயர் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.5 ஆகுபெயர்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பொருளின் பெயர் அதன் உறுப்புக்கு ஆகி வருவது ……………..
அ) பொருளாகு பெயர்
ஆ) சினையாகு பெயர்
இ) பண்பாகு பெயர்
ஈ) இடவாகு பெயர்
Answer:
அ) பொருளாகு பெயர்
Question 2.
இந்த வேலையை முடிக்க ஒரு கை குறைகிறது என்பது …………
அ) முதலாகு பெயர்
ஆ) சினையாகு பெயர்
இ) தொழிலாகு பெயர்
ஈ) பண்பாகு பெயர்
Answer:
ஆ) சினையாகு பெயர்
Question 3.
மழை சடசடவெனப் பெய்தது. இத்தெடரில் அமைந்துள்ளது …………..
அ) அடுக்குத்தொடர்
ஆ) இரட்டைக்கிளவி
இ) தொழிலாகு பெயர்
ஈ) பண்பாகுபெயர்
Answer:
ஆ) இரட்டைக் கிளவி
Question 4.
அடுக்குத் தொடரில் ஒரே சொல் …………………… முறை வரை அடுக்கி வரும்.
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
Answer:
இ) நான்கு
குறுவினா
Question 1.
ஒரு பெயர்ச்சொல் எப்போது ஆகுபெயர் ஆகும்?
Answer:
ஒரு பெயர்ச்சொல் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வரும்போது அது ஆகுபெயர் ஆகிறது.
Question 2.
இரட்டைக் கிளவி என்பது யாது? சான்று தருக.
Answer:
சொற்கள் இரட்டையாக இணைந்து வந்து, பிரித்தால் தனிப்பொருள் தராத சொற்கள் இரட்டைக் கிளவி எனப்படும். சான்று : விறுவிறு , கலகல, மளமள மாலா கலகலவெனச் சிரித்தாள்.
சிறுவினா
Question 1.
பொருளாகு பெயரையும் சினையாகு பெயரையும் வேறுபடுத்துக.
Answer:
Question 2.
இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர் – ஒப்பிடுக.
Answer:
கற்பவை கற்றபின்
Question 1.
பள்ளி நூலகத்திலிருந்து நூல் ஒன்றை எடுத்துவந்து அந்நூலில் ஆகுபெயர்களாக இடம் பெற்றுள்ள பெயர்ச்சொற்களைத் தொகுக்க.
Answer:
முகிலன் தன் பெற்றோருடன் தீபாவளிக்குப் புதிய ஆடை வாங்குவதற்குக் கடைக்குச் சென்றான். முகிலனின் அப்பா அவன் அம்மாவிடம் “காஞ்சி வேணுமா? ஆரணி வேணுமா?” என்று கேட்டார். முகிலனின் அம்மா, எனக்கு காஞ்சிதான் வேணும்” என்று கூறினார். பார்த்தவுடனேயே தேர்ந்தெடுத்துவிட்டார். பிறகு முகிலனுக்கு முழுக்கால் சட்டைக்கும் மேல் சட்டைக்கும் துணி எடுக்க ஆண்கள் பிரிவுக்குச் சென்றனர். கடைக்காரரிடம் ‘2 மீட்டர் கொடு’ என்று கேட்டார். தனக்கும் எடுத்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறினர். முகிலன் தன் தந்தையிடம் பசிக்கிறது என்று கூறியதால் உணவகம் சென்றனர்.
மூவரும் பொங்கல் உண்டனர். முகிலனின் அம்மா முருங்கை சாம்பார் நன்றாக உள்ளது என்று கூறினார். அங்கு முகிலனின் மாமாவைப் பார்த்தனர். அவருடன் பேசிக் கொண்டே பேருந்து நிலையம் சென்றனர். முகிலனின் அப்பா மாமாவிடம், “வயலில் என்ன பயிர் வைத்துள்ளாய்?” என்று கேட்டார். மாமா , “கீரை விதைத்துள்ளேன்” என்றார். மேலும், “செவலைக்குக் காலில் அடிப்பட்டு விட்டது. கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். ஒரே அலைச்சலாக இருக்கிறது” என்று கூறினார். விவசாயம் செய்வதிலும் பல துன்பங்கள் இருக்கத்தான் செய்கிறது. என்ன செய்வது? சரி பேருந்து வந்து விட்டது. நாங்கள் புறப்படுகிறோம்” என்று கூறிவிட்டுப் புறப்பட்டனர்.
Question 2.
அன்றாடப் பேச்சு வழக்கில் இடம்பெறும் அடுக்குத்தொடர், இரட்டைக் கிளவி ஆகியவற்றைத் தொகுக்க.
Answer:
அடுக்குத் தொடர் :
1. ஓட்டப்பந்தயத்தில் ஓடிய நண்பனை நான் ஓடு ஓடு என்று உற்சாகப்படுத்தினேன்.
2. எழுத எழுத கையெழுத்து அழகாக இருக்கும்.
3. இவ்விழாவிற்கு வருகை தந்துள்ள அனைவரையும் வருக வருக என வரவேற்றார் பள்ளி முதல்வர்.
4. கந்தன் பாம்பு பாம்பு என்று அலறினான்.
5. பேச்சுப்போட்டியில் பேசிய மாணவனை அனைவரும் அருமை அருமை என்று பாராட்டினார்.
இரட்டைக் கிளவி :
1. முல்லை மலர் கமகம என் மணம் வீசுகிறது.
2. மரக்கிளை மடமட என முறிந்தது.
3. வெளியில் சென்று வந்தாலே கசகச என வியர்வை வந்து விடும்.
4. கொடைக்கானல் சென்ற போது கிடுகிடு பள்ளத்தைப் பார்த்தேன்.
5. வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க குடுகுடு கிழவர் வந்தார்.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக.
1. ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும்.
2. பொருளின் பெயர் அதன் சினையாகிய உறுப்புக்கு ஆகி வருவது பொருளாகு பெயர்.
3. சினையின் (உறுப்பின்) பெயர் முதலாகிய பொருளுக்கு ஆகிவருவது சினையாகு பெயர்.
4. இந்தியா வென்றது – இடவாகுபெயர்.
5. திசம்பர் சூடினாள் – காலவாகுபெயர்.
6. இனிப்பு தின்றான் – பண்பாகு பெயர்
7. சுண்டல் தின்றான் – தொழிலாகு பெயர்
8. இரட்டைச் சொற்களாகவே வரும் சொற்கள் இரட்டைக்கிளவி.
9. ஒரே சொல் இரண்டு முதல் நான்கு முறை வரை வரும் சொல் அடுக்குத்தொடர்.
மொழியை ஆள்வோம்
கேட்க.
மனித நேயம் பற்றித் தலைவர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டு மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே மனித நேயம் பற்றித் தலைவர்கள் ஆற்றிய உரைகளைக் கேட்டு மகிழ வேண்டும்.
கீழ்க்காணும் தலைப்புகளுள் ஒன்றைப் பற்றி இரண்டு நிமிடம் பேசுக.
அ) உண்மை
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
உண்மை – வாய்மை என்றும் மெய் என்றும் கூறப்படும். இவ்வாய்மையை வள்ளுவர்
“வாய்மை எனப்படுவதுயாதெனின் யாதொன்றும்
தீமை இலாத சொலல்.”
– என்று கூறுகிறார். வாய்மை என்றால் பிறர் மனம் புண்படாதபடி பேசுதல் என்கிறார்.
ஒருவரைப் பெரியவர் சிறியவர் என்று இனம் காண்பது அவர்கள் செய்யும் செயல்களை வைத்துதான். எல்லோருக்கும் உண்மையாக இருங்கள். பொய் கூறாதீர்கள். ஆயிரம் நன்மைகள் கிடைத்தாலும் பொய்மையை அகற்றி உண்மையைக் கடைப்பிடிக்க வேண்டும்.
உண்மை என்றவுடன் நம் நினைவிற்கு வருபவர்கள் இரண்டு பேர். ஒருவர் அரிச்சந்திரன். மற்றொருவர் காந்தியடிகள். அரிச்சந்திரன் பல துன்பங்களுக்கு ஆளாக்கப்பட்டாலும் உண்மையை மட்டுமே பேசியவன். அந்த உறுதிப்பாட்டினால் என்றென்றும் மக்கள் மனதில் நிற்கிறான்.
அரிச்சந்திரன் நாடகத்தைப் பார்த்துதான் காந்தியடிகள் தாம் உண்மையைப் பேச வேண்டும் என்று முடிவெடுத்தவர்.
உண்மை என்பது நாம் கடைப்பிடிக்க வேண்டிய அறங்களில் முதன்மையானதாகும். நேர்மை என்றால் நேர்த்தியான வழியில் செல்லுதல், நியாயம் பார்த்து நடத்தல், குறுக்கு வழியில் சாதிக்க நினைக்காமல், உண்மைப் பாதையை விட்டு நீங்காது இருத்தலும் ஆகும்.
எச்செயல் செய்தாலும் உண்மையை மறவாமல் அதன் நினைவைத் துறவாமல் செய்வது அவசியம் என்பது நம் முன்னோர்களின் கருத்து. அப்படிச் செய்யும் செயல்கள் நமக்கு நன்மையைத் தரும்.
உள்ளதை உள்ளவாறே கூறுதல் பற்றி, மகாவீரர், “நீ உண்மை பேசுவதினால், ஒருவர் மனம் நோகும் என்றாலோ, உன் பேச்சு ஒருவருக்கும் பிடிக்காது என்றாலோ, பிற உயிர்களுக்குத் துன்பம் நேரும் என்றாலோ, அதைப் பேசாதிருத்தல் நலம். அது உண்மையாக இருந்தாலும் உனக்குப் பாவமே நல்கும்” என்று கூறுகிறார்.
வாய்மையைப் பேசுவோம். எந்தச் சொல்லிலும் பொருளை மட்டும் நாடாமல் வாய்மையை நாடுவோம். நமக்கும் பிறருக்கும் ஒரு தீங்கும் இல்லாத நலம் தரும் சொற்களைக் கூறுவோம் என்று கூறி வாய்ப்பளித்தமைக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
ஆ) மனித நேயம்
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
மனித நேயம் என்பது பிறர்மீது நாம் காட்டும் அக்கறை, ஆறுதல், நேர்மறை உணர்வு, கருணை உள்ளம், இரக்க குணம், எல்லோருடனும் காட்டும் அன்பு போன்றவற்றின் தொகுப்பே ஆகும். இவற்றை ஒவ்வொருவரும் பெற்றிருத்தல் அவசியம். மனிதநேயம் தன்னலம் அற்ற சேவையாகும்.
நம் உறவினர்களுடன், நண்பர்களுடன் காட்டும் அன்பு, பாசம், கருணை போன்றவை மனிதநேயமாகாது. எந்தத் தொடர்பும் இல்லாதவரின் துன்பத்தைப் பொறுக்காமல் இரக்கப்படுகிறோமே அதுவே மனித நேயம்.
அன்னை தெரசாவைக் கொண்டாடுகிறோம். எதற்காக? அவர் சுயநலமற்றவராய் வாழ்ந்ததால் தான். அவர் வாழ்க்கையில் கண்டவை, தியாகம், அறம், மனிதநேயம், ஏழை எளியவர்மீது அக்கறை, கருணை, மதநல்லிணக்கம், விட்டுக்கொடுத்தல் ஆகிய ஒட்டுமொத்த உயர்பண்புகள்தாம்.
மனிதநேயம் என்பது மனிதன், மனிதன் மேல் மட்டும் கொள்ளும் நேயம் என்றல்லாமல் – சற்றே விரிந்த பார்வையோடு இயற்கையின் மாபெரும் படைப்பான மனிதன், தன்னைப் படைத்த இயற்கை முதல் தான் படைத்த விஞ்ஞானம் ஈறாக அனைத்தினிடமும் காட்டுவதே மனிதநேயம் ஆகும் என்பதை உணர வேண்டும். அதற்கு உதாரணமாகத் திகழ்ந்தவர் இராமலிங்க அடிகள் ஆவார்.
மனித நேயத்திற்கு இவரைவிட வேறு யாரையும் எடுத்துக்காட்டாகக் காட்ட இயலாது. – ஏனெனில் இவர் “வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் என்று ஓரறிவு * உயிரிடமும் இரக்கம் காட்டியவர். இவர் சாதி, மதம், மொழி, தேசம் போன்ற அனைத்து வேற்றுமைகளுக்கும் அப்பாற்பட்டு அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ்க! கொல்லா நெறியே குருவருள் நெறி என்றார். அனைத்து உயிர்களும் இறைவனின் குழந்தைகள், அவற்றைச் சமமாக பாவிப்பதும் கருணையால் உபசரிப்பதும் மட்டுமே திருவருளுக்கு உகந்தது என்றார்.
ஒருநாளில் இருபது மணி நேரம் பிறருக்காகவே வாழ்ந்தவர் புளோரன்ஸ் நைட்டிங்கேல். இவர் கை விளக்கேந்திய காரிகை’ என்று அழைக்கப்படுபவர். இவர் தமது 31 ஆவது வயதில் தனது குடும்பத்தின் செல்வத்தையும் சுகபோகங்களையும் துறந்து, நோயாளிகளையும் போரில் காயமடைந்தவர்களையும் கவனித்துக் கொள்ளும் தமது நீண்ட நாள் விருப்பதை நிறைவேற்றிக்கொள்ள புறப்பட்டவர். இவர்களெல்லாம் மனித நேயத்தைத் தம்முடையதாக்கிக் கொண்டவர்கள். நாமும் இவர்களைப் போல் மனித நேயத்துடன் வாழ்ந்து மனிதம் காப்போம்.
இ) உதவி செய்து வாழ்தல்
Answer:
அனைவருக்கும் வணக்கம்!
நான் உதவி செய்து வாழ்தல் பற்றிப் பேச வந்துள்ளேன். உலகில் தோன்றும் அனைத்து உயிர்களும் ஒன்றையொன்று சார்ந்து வாழ்கின்றன. மரம், செடி, கொடிகள், பறவைகள், விலங்குகள் எல்லாம் அவ்வாறே வளர்கின்றன. இவை நமக்கு உதவி செய்து வாழ்தலை உணர்த்துகிறது.
பிறருடைய உதவி தமக்குத் தேவையில்லை என்று யாராலும் தனித்து வாழ இயலாது. ஏதாவது ஒரு காலக்கட்டத்தில் பிறரது உதவியை மனிதன் நாடித்தான் ஆகவேண்டும். இவ்வாறு உதவி செய்வதை நன்றி என்கிறோம்.
பிறரிடம் உதவியைப் பெற்றுக் கொண்டு நாம் யாருக்கும் உதவாமல் இருக்கக்கூடாது. நாம் நம்மால் இயன்றவரை பிறருக்கு உதவி செய்ய வேண்டும். நாம் கார்மேகம் போல கைம்மாறு கருதாமல் உதவி செய்ய வேண்டும். தோண்டத் தோண்ட சுரக்கும் நீர் போல, நாம் பிறருக்கு உதவி செய்யச் செய்ய நமக்கு உதவிகள் கிட்டும். இதனை உணர்த்தும் பழமொழி “முன்கை நீண்டால் முழங்கை நீளும்”.
நாம் மரம், செடி, கொடிகளை நீர் ஊற்றி உரமிட்டு வளர்க்கிறோம். அது வளர்ந்து நமக்குப் பல பயன்களைத் தரும். பிறரால் நமக்கு நன்மைகள் கிடைக்கிறதோ இல்லையோ நாம் உதவி செய்தலை வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கை கொண்டு வாழ வேண்டும்.
அது மட்டுமின்றி நாம் எவருக்காவது உதவி செய்தால் அதனை மறந்துவிட வேண்டும். தான் செய்த உதவியைப் பலரிடம் கூறிப் பெருமை தேடிக் கொள்ளக் கூடாது. வலது கை கொடுப்பது இடது கைக்குத் தெரியக்கூடாது.
செல்வத்துப் பயனே ஈதல்’ என்பதை உணர வேண்டும். நாம் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுப்பதால் குறைந்து விடுமே என எண்ணாமல் கொடுத்து உதவ வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் துன்பப்படுவர் என்று புறநானூறு கூறுகிறது.
ஒரு சிலர் தானும் யாருக்கும் உதவி செய்ய மாட்டார்கள். உதவி செய்பவரையும் செய்யவிடாமல் தடுத்து விடுவார்கள். இவ்வாறு இருக்காமல் நாம் நம்மால் இயன்றவரை உதவி செய்து வாழ்வில் உயர்வோம்.
சொல்லக் கேட்டு எழுதுக
1. மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை.
2. குயில் குளிரில் நடுங்கியது; மழையில் ஒடுங்கியது; வெயிலில் காய்ந்தது.
3. இரக்கம் உடையோர் அருள்பெற்றவர் ஆவர்.
4. காயிதே மில்லத் என்னும் சொல்லுக்குச் “சமுதாய வழிகாட்டி” என்று பொருள்.
5. விடியும் போது குளிரத் தொடங்கிவிட்டது.
கீழ்க்காணும் தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கவிதை எழுதுக
சரியான இணைப்புச் சொல்லால் நிரப்புக.
(எனவே, ஏனெனில், அதனால், ஆகையால், அதுபோல, இல்லையென்றால், மேலும் ) (எ.கா) காயிதே மில்லத் அவர்கள் மகிழுந்தில் பயணம் செய்வதை விரும்பாதவர்.
ஏனெனில் அவர் எளிமையை விரும்பியவர்.
Question 1.
நாம் இனிய சொற்களைப் பேச வேண்டும்………………. துன்பப்பட நேரிடும்.
Answer:
இல்லையென்றால்
Question 2.
குயிலுக்குக் கூடு கட்டத் தெரியாது ………………… காக்கையின் கூட்டில் முட்டையிடும்.
Answer:
அதனால்/ஆகையால்
Question 3.
அதிக அளவில் மரங்களை வளர்ப்போம்……………. மரங்கள்தான் மழைக்கு அடிப்படை.
Answer:
ஏனெனில்
Question 4.
பிறருக்குக் கொடுத்தலே செல்வத்தின் பயன் ………….. பிறருக்குக் கொடுத்து மகிழ்வோம்.
Answer:
எனவே
Question 5.
தமிழகத்தில் மழை பெய்துவருகிறது ………………. இரண்டு நாட்கள் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு.
Answer:
மேலும்
கடிதம் எழுதுக.
உங்கள் ஊரில் நடைபெறும் திருவிழாவைக் காணவருமாறு அழைப்பு விடுத்து உறவினர் ஒருவருக்குக் கடிதம் எழுதுக.
Answer:
அஸ்தம்பட்டி, சேலம்
20-12-2019
அன்புள்ள மாமா,
இங்கு நாங்கள் அனைவரும் நலமாக இருக்கிறோம். அங்கு உங்கள் நலத்தையும் அத்தையின் நலத்தையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.
நம் ஊரில் வருகின்ற மாட்டுப் பொங்கலன்று ஏறுதழுவுதல்’ என்ற நம் பண்பாட்டு – நிகழ்வான காளையை அடக்குதல் விழா வெகு சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு – செய்யப்பட்டுள்ளது. தென்மாவட்டங்களில் நடைபெறுவதைப் போன்றே இங்கும் இவ்விழா தி ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதை நீங்கள் அறிவீர்கள். நீங்கள், அத்தையுடன் அடுத்த மாதம் இவ்விழாவைக் காண இங்கு வரவேண்டும் என்று விரும்புகிறேன். அப்பாவும், அம்மாவும் உங்கள் வருகையை ஆவலுடன் எதிர்நோக்குகிறார்கள். ஆகவே மற்றவை நேரில் .
இங்ஙனம்,
உங்கள் அன்புள்ள ,
ம. இளங்குமரன்.
மொழியோடு விளையாடு
குறிப்புகளைப் பயன்படுத்தி இடமிருந்து வலமாகக் கட்டங்களை நிரப்புக.
1. நூலகத்தில் இருப்பவை…………………………. நூல்கள். நூல்கள் நிறைந்துள்ள இடம் ……………………
2. உலகப்பொதுமறை ………………………. புரட்சிக்கவிஞர் ……………………………..
3. முனைப்பாடியார் இயற்றியது …………………. நீதிநெறி விளக்கம் பாடியவர் குமரகுருபரர்.
4. குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் ………………………………………………. சுரதா என்பதன் விரிவாக்கம் ………………….
5. குற்றாலக் குறவஞ்சி பாடியவர் ………………….
Answer:
1. நூலகத்தில் இருப்பவை. நூல்கள். நூல்கள் நிறைந்துள்ள இடம் நூலகம்.
2. உலகப்பொதுமறை திருக்குறள். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
3. முனைப்பாடியார் இயற்றியது அறநெறிச்சாரம். நீதிநெறி விளக்கம் பாடியவர் குமரகுருபரர்.
4. குற்றால மலைவளத்தைக் கூறும் நூல் குற்றாலக் குறவஞ்சி. சுரதா என்பதன் விரிவாக்கம் சுப்பிரமணியதாசன்.
5. குற்றாலக் குறவஞ்சி பாடியவர் திரிகூடராசப்பக் கவிராயர்.
கீழ்க்காணும் படங்களைப் பார்த்து இரட்டைக்கிளவி அமையுமாறு தொடர்
உருவாக்குக.
Answer:
எ.கா : மழை சட சடவெனப் பெய்தது.
1. பறவைகள் படபட என பறந்தன.
2. ரயில் தடதட என ஓடியது.
3. மரக்கிளை மடமட என முறிந்தது
தீ விபத்தும் பாதுகாப்பு முறைகளும்
வினாக்கள் :
Question 1.
தீ விபத்தினால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் இருப்பதற்கு, செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் யாவை?
Answer:
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் :
- வீடுகளிலும் பொது இடங்களிலும் தீ பாதுகாப்புக் கருவிகள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
- பொது இடங்களில் தீத்தடுப்பு எச்சரிக்கை ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.
- எச்சரிக்கை ஒலி எவ்வாறு இருக்கும் என்பதைப் பணியாளர்கள் அறிந்திருக்க வேண்டும்.
- தரமான மின் சாதனங்களையே பயன்படுத்த வேண்டும்.
- சமையல் செய்யும் போது இறுக்கமான ஆடைகளை உடுத்திக் கொள்ள வேண்டும்.
- பட்டாசுகளைப் பாதுகாப்பான இடங்களில், பெரியவர்களின் மேற்பார்வையில் தான் வெடிக்க வேண்டும்.
- நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும்.
- பொதுமக்கள் கூடும் இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாக வெளியேறும் வகையில் அவசரகால வழிகள் அமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
Question 2.
தீ விபத்து ஏற்பட்டால் உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் யாவை?
Answer:
- உடனடியாகத் தீயணைப்பு மீட்புப் பணித் துறைக்குத் தொலைபேசி வழியாகத் தகவல் தெரிவிக்க வேண்டும்.
- அவ்வாறு தகவல் தெரிவிக்கும் பொழுது தீ விபத்து ஏற்பட்டுள்ள இடத்தினைத் தெளிவாகத் தெரிவிக்க வேண்டும்.
- தீ விபத்து ஏற்பட்டு இருக்கும் பகுதியில் உடனடியாக மின் இணைப்பைத் துண்டிக்க வேண்டும்.
- தீ விபத்து ஏற்பட்ட உடனே அங்குள்ள தீயணைப்பான்களைக் கொண்டு ஆரம்பக் கட்டத்திலேயே தீயை அணைக்க முயற்சி செய்ய வேண்டும்.
- உடுத்தியிருக்கும் ஆடையில் தீப்பிடித்தால் உடனே தரையில் படுத்து உருள வேண்டும் தீக்காயம் பட்ட இடத்தை உடனடியாகத் தண்ணீரைக் கொண்டு குளிர வைக்க வேண்டும்.
- பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமடைந்து ஓடாமல், அவசரகால வழியில் வெளியேற வேண்டும்.
- அருகில் இருக்கும் கட்டடங்களுக்குத் தீ பரவாமல் இருக்கும் வகையில் முன்னெச்சரிக்கை செய்ய வேண்டும்.
Question 3.
பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் முறையைக் கூறுக.
Answer:
பொது இடங்களில் தீ விபத்து ஏற்பட்டால் பதற்றமடைந்து ஓடாமல், அவசரகால வழியில் வெளியேற வேண்டும்.
Question 4.
தீ விபத்து ஏற்பட்டால் செய்யக்கூடாதவை யாவை?
Answer:
- தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தின் மின் தூக்கியைப் பயன்படுத்தக்கூடாது.
- எண்ணெய் உள்ள இடத்தில் ஏற்பட்ட தீயை அணைக்கத் தண்ணீரைப் பயன்படுத்தக் கூடாது.
- தீக்காயம் பட்ட இடத்தில் எண்ணெய், பேனா மை போன்றவற்றைத் தடவக் கூடாது.
Question 5.
உடலில் தீப்பற்றினால் செய்ய வேண்டிய முதலுதவி யாது?
Answer:
- உடலில் தீப்பற்றினால் தண்ணீரை ஊற்றி அணைக்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த இடம் குளிர்ச்சி அடையும்.
- பிறகு துணியைக் கொண்டு தீக்காயம் அடைந்த இடத்தை மூடவேண்டும்.
- தண்ணீர் இல்லாவிட்டால் கம்பளி, கோணி போன்றவற்றால் மூடி தீயை அணைக்க வேண்டும். தீக்காயம் அடைந்தவருக்குத் தாகம் இருந்தால் தண்ணீர் கொடுக்கலாம்.
- பதற்றம் அடையாமல் உடனடியாக கீழே விழுந்து புரள வேண்டும். (மண் தரையாக இருந்தால் சிறப்பு)
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள்…
- நான் எப்போதும் எளிமையைக் கடைப்பிடிப்பேன்
- அனைவரிடமும் அன்புடன் நடந்து கொள்வேன்.
- என் பணிகளை நேர்மையாகச் செய்வேன்.
- நான் என்றும் பொறுமையுடன் இருப்பேன்.
கலைச்சொல் அறிவோம்