Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 1 Chapter 3 விசை Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Science Solutions Term 1 Chapter 3 விசை
பக்கம் 114
மேலே உள்ள படங்களில் எது நகர்கிறது?
விடை:
பந்து, மிதிவண்டி
என்ன வேலை நடைபெறுகிறது?
விடை:
தள்ளுதல், இழுத்தல்
பக்கம் 116
கீழே உள்ள படங்களில் இயக்கம் இருந்தால் ✓ குறியிடுக.
விடை:
கொடுக்கப்பட்டுள்ள செயல்களில் எவை இழுத்தல் அல்லது தள்ளுதல் என வகைப்படுத்துக.
வ.எண் | செயல்கள் | |
1. | மிதிவண்டியை இயக்குதல் | |
2. | மேசையை உன்னை நோக்கி | |
3. | நாற்காலியை இழுத்தல் | |
4. | மகிழுந்தை தள்ளுதல் | |
5. | சன்னலைத் திறத்தல் | |
6. | ரப்பர் சுருளை இழுத்தல் | |
7. | ஷுவின் நாடாவைக் கழற்றுதல் இழுத்தல் |
விடை:
வ.எண் | செயல்கள் | இழுத்தல் தள்ளுதல் |
1. | மிதிவண்டியை இயக்குதல் | தள்ளுதல் |
2. | மேசையை உன்னை நோக்கி | இழுத்தல் |
3. | நாற்காலியை இழுத்தல் | இழுத்தல் |
4. | மகிழுந்தை தள்ளுதல் | தள்ளுதல் |
5. | சன்னலைத் திறத்தல் | தள்ளுதல் |
6. | ரப்பர் சுருளை இழுத்தல் | இழுத்தல் |
7. | ஷுவின் நாடாவைக் கழற்றுதல் இழுத்தல் | இழுத்தல் |
பக்கம் 118
பொருத்துக.
விடை:
படத்தைப் பார்த்து, அதன் மீது எவ்வகை விசை செயல்படுகிறது என எழுதுக.
விடை:
தசைநார் விசை செயல்படும் படங்களுக்கு ✓ குறியிடுக.
விடை:
பக்கம் 121
உராய்வு விசை
சிந்திக்க சுண்டாட்டம் விளையாடுவதற்கு முன் சுண்டாட்டப் பலகையின்மீது மென்பொடியைத் தூவுவது ஏன்?
விடை:
பலகையின் மீது மென்பொடியைத் தூ வு வதால் பலகையின் பரப்பு வழவழப்பாகிறது. உராய்வு குறைகிறது. இதனால் சுண்டாட்ட வில்லைகள் எளிதாகப் பலகையின் மீது நகர்கின்றன. பலகை மீது உராய்வைக் குறைக்க மென்பொடி தூவப்படுகிறது.
பக்கம் 121
கேள்வி 1.
தள்ளுதல் செயல்கள்
விடை:
கால்பந்து விளையாட்டு
ஊஞ்சலாட்டம்
குழந்தை ஸ்கூட்டர்
சாய்ந்தாடி
மிதிவண்டி இயக்குதல்
மண்ணில் விளையாடுதல்
கேள்வி 2.
இழுத்தல் செயல்கள்
விடை:
வண்டி இழுத்தல்
பட்டம் விடுதல்
மரக்கட்டையை இழுத்தல்
கேள்வி 3.
உராய்வு செயல்கள்
விடை:
சறுக்குதல்
மதிப்பீடு
அ. கோடிட்ட இடங்களை நிரப்புக.
(தள்ளுதல், விசை, இழுத்தல், வேகம், புவியீர்ப்பு விசை, திசை, தசைநார் விசை)
கேள்வி 1.
ஓய்வு நிலையில் உள்ள பொருளை நகர்த்த உதவுவது ________________________.
விடை:
விசை
கேள்வி 2.
உடல் உறுப்புகளின் இயக்கத்தால் நடைபெறும் விசை ________________________.
விடை:
தசை நார் விசை
கேள்வி 3.
________________________ மற்றும் ________________________ விசைகள் ஆகும்.
விடை:
தள்ளுதல், இழுத்தல்
கேள்வி 4.
மரத்திலிருந்து பழம் கீழே விழக் காரணம் ________________________ .
விடை:
புவியீர்ப்பு விசை
கேள்வி 5.
விசை ________________________ ஐயும் ________________________ ஐயும் மாற்றும்.
விடை:
திசை, வேகம்
ஆ. சொற்களை சரியான படத்துடன் பொருத்துக.
விடை:
உராய்வு வினாக்களுக்கு விடையளி.
கேள்வி 1.
கதவைத் திறக்க எவ்வகை விசை பயன்படுகிறது?
விடை:
கதவைத் திறக்க இழுத்தல் விசை பயன்படுகிறது.
கேள்வி 2.
விசைகளின் வகைகள் யாவை?
விடை:
தொடு விசை, தொடா விசை.
கேள்வி 3.
கிணற்றில் நீர் இறைக்கும் போது எவ்வகை விசை பயன்படுகிறது?
விடை:
கிணற்றில் நீர் இறைக்கும் போது இழுத்தல் விசை பயன்படுகிறது.
கேள்வி 4.
இயக்கம் என்றால் என்ன?
விடை:
ஒரு பொருளானது ஓர் இடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு நகர்வதை இயக்கம் என்கிறோம்.
கேள்வி 5.
மண்பாண்டம் செய்ய எவ்வகை விசை பயன்படுகிறது?
விடை:
மண்பாண்டம் செய்ய தசைநார் விசை பயன்படுகிறது.
ஈ கீழ்க்காணும் பொருள்களின் அருகில் சுஜாதா காந்தத்தை கொண்டு வருகிறாள். அவற்றில் . எவையெவை காந்தத்தில் ஒட்டிக் கொள்ளும்?
புத்தகம், ஊசி, நாணயம், அழிப்பான், சட்டை, சீப்பு, குவளை, ஆணி.
விடை:
ஊசி, நாணயம், ஆணி
உ. சிந்தித்து விடையளிக்க.
பந்து, கல், காகிதத்தாள், இலை ஆகியவற்றை ராஜா மேல்நோக்கி எறிகிறான். அவற்றிற்கு என்ன நிகழும்? இங்கு எவ்வகை விசை செயல்படுகிறது?
விடை:
மேலே எறியப்பட்ட இப்பொருள்கள் தரையில் வந்து விழுகின்றன. புவியீர்ப்பு விசை காரணமாக மேலே எறியப்பட்ட பொருள்கள் பூமியில் வந்து விழுகின்றன. இங்கு செயல்படும் விசை புவியீர்ப்பு விசையாகும்.