Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Science Guide Pdf Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Science Solutions Term 1 Chapter 4 அன்றாட வாழ்வில் அறிவியல்
பக்கம் 126
சிந்திப்போமா!
நீங்கள் நோயுற்று இருக்கும்போது மருத்துவர் இட்டலி அல்லது இடியாப்பம் எடுத்துக் கொள்ளச் சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? அது ஏனென்று உங்களால் சிந்திக்க முடிகிறதா?
விடை:
இட்டலியும் இடியாப்பமும் நீராவியில் சமைக்கப்படுகின்றன. இவற்றில் எண்ணெய் கிடையாது. இவை எளிதில் செரிமானம் அடையக் கூடியவை. எனவே நோயுற்று இருக்கும்போது இவற்றை உண்ணும்படி சொல்லப்படுகிறது.
உங்கள் சமையலறையில் உள்ள பொருள்களுக்கு ✓ குறியிடுக.
விடை:
நீராவி முறையில் சமைக்கப்படும் உணவுப்பொருள்களுக்கு ✓ குறியிடுக.
விடை:
பக்கம் 127
இட்டலி தயாரிக்கும் படிநிலைகளை வரிசைப்படுத்துக.
விடை:
கீழ்க்காணும் பொருள்கள் நம் வாழ்க்கையில் இல்லையெனில் எப்படி இருக்கும்.
கேள்வி 1.
மின்விளக்கு : _____________________________________
விடை:
இரவு நேரத்தில் வெளிச்சம் இன்றி வீடு இருண்டு கிடக்கும்.
கேள்வி 2.
மின் விசிறி : _____________________________________
விடை:
காற்றோட்டம் இன்றி வெப்பமும் வியர்வையுமாக இருக்கும்.
பக்கம் 128
கலந்துரையாடுவோமா?
கேள்வி 1.
பயறுகளை வேகவைக்க எது மிகக் குறைவான நேரத்தை எடுத்துக்கொள்ளும்?
அ. அழுத்த சமையற்கலன்
ஆ. மண்பாண்டம்
விடை:
அ. அழுத்த சமையற்கலன்
பக்கம் 129
அ’ வரிசையை `ஆ’ வரிசையுடன் பொருத்துக.
விடை:
பக்கம் 130
பொருள்களுக்கு வண்ணம் தீட்டி எண்ணி எழுதுக.
விடை:
பக்கம் 133
குவளையில் பின்வருவனவற்றைச் சேர்க்கும்போது என்ன நடக்கிறது?
நீரில் எண்ணெய் சேர்க்கும்போது | |
உணவில் வண்ணம் சேர்க்கும்போது | |
உப்பைச் சேர்க்கும்போது |
விடை:
நீரில் எண்ணெய் சேர்க்கும்போது | எண்ணெய் மிதக்கிறது. |
உணவில் வண்ணம் சேர்க்கும்போது | உணவு நிறம் பெறுகிறது. |
உப்பைச் சேர்க்கும்போது | உப்பு கரைந்து விடுகிறது. |
மதிப்பீடு
அ. பின்வரும் சொற்றொடரில் எது சரி அல்லது தவறு எனக் குறிப்பிடுக.
கேள்வி 1.
நீரைக் கொதிக்க வைக்கும் போது பாக்டீரியங்கள் நீக்கப்படுகின்றன.
விடை:
சரி
கேள்வி 2.
இட்டலி நீராவி மூலம் சமைக்கப்படுகிறது.
விடை:
சரி
கேள்வி 3.
வெப்பமானி அழுத்தத்தை அளக்க உதவுகிறது.
விடை:
தவறு
கேள்வி 4.
பொருள்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க குளிர்சாதனப் பெட்டி பயன்படுகிறது.
விடை:
சரி
கேள்வி 5.
குமட்டல் மற்றும் விக்கலை சரிசெய்ய பூண்டு பயன்படுகிறது.
விடை:
தவறு
கேள்வி 6.
நீரின் கொதிநிலை 100° செல்சியஸ் ஆகும்.
விடை:
சரி
ஆ. இட்டலி உருவாக்கத் தேவையான பொருள்களை வட்டமிடுக.
விடை:
இ. வீட்டு உபயோக சாதனங்களை அவற்றின் பயன்களுடன் பொருத்துக.
விடை:
ஈ) வீட்டில் செய்யும் பாதுகாப்பான செயலுக்கு (✓) குறியும் பாதுகாப்பற்ற செயலுக்கு (X) குறியும் இடுக.
கேள்வி 1.
மின்சாதனப் பொருள்களைத் தொடுதல்.
விடை:
X
கேள்வி 2.
கூர்மையான பொருள்களுடன் விளையாடுதல்.
விடை:
X
கேள்வி 3.
சமையலறையில் விளையாடுதல்.
விடை:
X
கேள்வி 4.
எரிவாயு அடுப்பு மற்றும் எரிவாயுக் கலன் ஆகியவற்றை பாதுகாப்பான இடைவெளியில் வைத்திருத்தல்.
விடை:
✓
உ. ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தில் விடையளி.
கேள்வி 1.
நீரின் கொதிநிலை என்ன?
விடை:
100°C
கேள்வி 2.
பழங்கள் மற்றும் காய்கறிகள் எப்படி அதிக நாள்களுக்கு சேமித்து வைக்கப்படுகின்றன?
விடை:
குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்படுவதன் மூலம் பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிக நாள்கள் சேமித்து வைக்கப்படுகின்றன.
கேள்வி 3.
வெப்பநிலையை அளக்க உதவும் கருவியின் பெயர் என்ன ?
விடை:
வெப்பமானி.
கேள்வி 4.
இட்டலி எம்முறையில் தயாரிக்கப்படுகிறது?
விடை:
நீராவியால் சமைத்தல் முறை.
கேள்வி 5.
கருப்பு மிளகின் பயன் என்ன?
விடை:
சளி மற்றும் இருமலுக்கு இது மிகச்சிறந்த நிவாரணி ஆகும்.
கேள்வி 6.
சமையலறையில் உள்ள எந்த பொருள் ஏழைகளின் நோய் எதிர்ப்புப் பொருள் என அழைக்கப்படுகிறது?
விடை:
பூண்டு.
ஊ. பின்வரும் வினாக்களுக்கு விடையளி.
கேள்வி 1.
அழுத்த சமையற்கலனின் நன்மைகளை எழுதுக.
விடை:
- உணவுத் தயாரிக்கும் நேரத்தைக் குறைக்கிறது.
- எரிபொருள் பயன்பாட்டைக் குறைத்து ஆற்றலைச் சேமிக்கிறது.
- பெரும்பாலான ஊட்டச்சத்துக்களை உணவில் தக்க வைக்கிறது.
- உணவின் தோற்றம் மற்றும் சுவையினைப் பாதுகாக்கிறது.
- அழுத்த சமையற்கலன் சாதாரண பாத்திரங்கள் சமைப்பதை விட 4 மடங்கு வேகமாக சமைக்கிறது.
கேள்வி 2.
நீரைக் கொதிக்க வைத்தலின் பயன்களை எழுதுக.
விடை:
- கிருமிகளை நீக்குகிறது.
- செரிமானத்தை அதிகரிக்கிறது.
- நீரின் மூலம் பரவும் நோய்களிடமிருந்து நம்மைக் காக்கிறது.