Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Social Science Solutions Term 1 Chapter 3 ஊராட்சி மன்றம்
மதிப்பீடு
I. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
கேள்வி 1.
ஊராட்சி என்பது ________________________ அரசில் அடங்கும்.
அ) மாவட்டம்
ஆ) மாநிலம்
இ) கிராமம்
விடை:
இ) கிராமம்
கேள்வி 2.
கிராம சுயராஜ்’ என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் ________________________.
அ) காமராசர்
ஆ) மகாத்மா காந்தி
இ) நேரு
விடை:
ஆ) மகாத்மா காந்தி
கேள்வி 3.
மூன்றடுக்கு முறையின் அடிப்படை ________________________ ஊராட்சி.
அ) மாவட்டம்
ஆ) வட்டாரம்
இ) கிராமம்
விடை:
இ) கிராமம்
கேள்வி 4.
ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் யாரால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?
அ) மக்கள்
ஆ) வார்டு உறுப்பினர்
இ) மாவட்ட ஆட்சியர்
விடை:
ஆ) வார்டு உறுப்பினர்
கேள்வி 5.
கிராம சபை உறுப்பினர் பணிக்காலம் ________________________ .
அ) 15 ஆண்டுகள்
ஆ) 10 ஆண்டுகள்
இ) 5 ஆண்டுகள்
விடை:
இ) 5 ஆண்டுகள் பயம்
II. பொருத்துக.
1. குடவோலை | வளர்ச்சித்திட்டம் |
2. ஊராட்சி மன்றம் | கட்டாயப்பணி |
3. மரம் நடுதல் | பாரம்பரிய தேர்தல் முறை |
4. தெருவிளக்கு | தன்னார்வ பணி |
5. கிராம சபை | 500க்கு மேற்பட்ட மக்கள் தொகை |
விடை:
1. குடவோலை | பாரம்பரிய தேர்தல் முறை |
2. ஊராட்சி மன்றம் | 500க்கு மேற்பட்ட மக்கள் தொகை |
3. மரம் நடுதல் | தன்னார்வ பணி |
4. தெருவிளக்கு | கட்டாயப்பணி |
5. கிராம சபை | வளர்ச்சித்திட்டம் |
III. விடையளி.
கேள்வி 1.
ஊராட்சி மன்றம் என்றால் என்ன?
விடை:
500 மற்றும் 500க்கு மேற்பட்ட மக்களைக் கொண்டிருக்கும். கிராம ஊராட்சியானது ஊராட்சி மன்றம் என அழைக்கப்படுகிறது.
கேள்வி 2.
குறிப்பு வரைக : மூன்றடுக்குப் பஞ்சாயத்து முறை’.
விடை:
பஞ்சாயத்து ராஜ்ஜியம் என்பது மூன்றடுக்கு பஞ்சாயத்து முறையாகும். இதில் கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி ஆகியவை அடங்கும்.
கேள்வி 3.
ஊராட்சியின் கட்டாயப் பணிகளில் மூன்றினை எழுதுக.
விடை:
- மின்சாரம் வழங்குவது மற்றும் தெருவிளக்குகளைப் பராமரித்தல்.
- பொது கிணறு பராமரித்தல்.
- குடிநீர் வழங்குவது.
- சாலைகள் போடுவது மற்றும் பராமரித்தல்.
- கழிவுநீர் கால்வாய்களை ஏற்படுத்துதல்.
கேள்வி 4.
ஊராட்சியின் தன்னார்வப் பணிகளில் மூன்றினை எழுதுக.
விடை:
- சாலைகளின் ஓரங்களில் மரம் நடுதல்.
- பொது அங்காடிகளை அமைத்தல்.
- பூங்காக்கள் ஏற்படுத்துதல்.
- தங்கும் விடுதிகள் உருவாக்குதல்.
- விளையாட்டு மைதானங்களை உருவாக்குதல்.
கேள்வி 5.
கிராம சபைக் கூட்டம் எப்பொழுது நடைபெறும்?
விடை:
கிராம சபை கூட்டம் வருடத்திற்கு நான்கு முறை கூட்டவேண்டும்.
கிராம சபை கூட்டம் நடைபெறும் நாட்கள் :
ஜனவரி 26 ஆகஸ்ட் 15
மே 1 அக்டோபர் 2