Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Social Science Guide Pdf Term 2 Chapter 2 சரணாலயங்கள் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Social Science Solutions Term 2 Chapter 2 சரணாலயங்கள்
பக்கம் 89:
செயல்பாடு:
நாம் எழுதுவோம்
கேள்வி 1.
பின்வருவனவற்றிற்கிடையே உள்ள வேறுபாடுகளை எழுதுக.
விடை :
கேள்வி 2.
உனக்கு வங்காளப் புலிகளைப் பார்க்க வேண்டுமெனில் எந்த தேசியப் பூங்காவிற்குச் செல்வாய்? அப்பூங்காவின் பெயரையும் அதன் அமைவிடத்தையும் எழுதுக.
விடை :
கார்பெட் தேசிய பூங்காவிற்குச் செல்வேன். இது உத்தரகாண்டில் உள்ளது.
பக்கம் 94:
செயல்பாடு:
நாம் விவாதித்து எழுதுவோம்
விலங்குகள் அல்லது பறவைகள் பெயரை எழுதுக.
விடை :
செயல்பாடு:
I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
கேள்வி 1.
கார்பெட் தேசியப் பூங்கா _____________ இல் உள்ளது.
அ) உத்தரகாண்ட்
ஆ) பெங்களூரு
இ) சென்னை
விடை :
அ) உத்தரகாண்ட்
கேள்வி 2.
மேற்கு வங்காளத்தில் உள்ள தேசியப் பூங்கா ____________
அ) சுந்தரவனம் தேசியப் பூங்கா
ஆ) கிர் தேசியப் பூங்கா
இ) அண்ணா தேசியப் பூங்கா
விடை :
அ) சுந்தரவனம் தேசியப் பூங்கா
கேள்வி 3.
____________ சரணாலயம் வேடந்தாங்கலில் உள்ளது.
அ) சிங்கங்கள்
ஆ) பறவைகள்
இ) புலிகள்
விடை :
ஆ) பறவைகள்
கேள்வி 4.
தமிழ்நாட்டில் ___________ உயிர்க்கோளக் காப்பகங்கள் உள்ளன.
அ) மூன்று
ஆ) நான்கு
இ) ஐந்து
விடை :
அ) மூன்று
கேள்வி 5.
கிர் தேசியப் பூங்கா _______________ இல் உள்ளது.
அ) குஜராத்
ஆ) அசாம்
இ) ஹைதராபாத்
விடை :
அ) குஜராத்
II. பொருத்துக.
கேள்வி 1.
விடை :
- புலி – மேற்கு வங்காளம்
- சிங்கம் – குஜராத்
- யானை – நீலகிரி
- பறவைகள் – வேடந்தாங்கல்
- ஒற்றைக்கொம்பு – அசாம் காண்டாமிருகங்கள்
III. பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க.
கேள்வி 1.
சரணாலயம் என்றால் என்ன?
விடை :
சரணாலயம் என்பது விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுவதில் இருந்தும் மற்ற மனித செயல்பாடுகளிலிருந்தும் பாதுகாத்து வைக்கும் இடமாகும்.
கேள்வி 2.
கார்பெட் தேசியப் பூங்காவில் என்னென்ன விலங்குகள் பாதுகாக்கப்படுகின்றன?
விடை :
கம்பீரமான வங்காளப் புலிகள் கார்பெட் தேசியப் பூங்காவில் பாதுகாக்கப்படுகின்றன.
கேள்வி 3.
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் உள்ள விலங்களின் பெயர்களை எழுதுக.
விடை :
நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தில் யானைகள் மட்டுமல்லாமல் இந்தியச் சிறுத்தைப்புலி, கருஞ்சிறுத்தை மற்றும் வரையாடு போன்ற விலங்குகளும் பாதுகாக்கப்படுகின்றன.
கேள்வி 4.
ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் எங்குப் – பாதுகாக்கப்படுகின்றன?
விடை :
காண்டா மிருகங்கள் மிகவும் அரிதான விலங்கு வகையாகும். இவை அசாமில் உள்ள காசிரங்கா தேசியப் பூங்காவில் பாதுகாக்கப்படுகின்றன.
கேள்வி 5.
விலங்குகளிடம் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?
விடை :
- விலங்குகளிடம் நாம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
- அவற்றைத் துன்புறுத்தக் கூடாது.
- விலங்குகளின் வாழ்விடங்களாகிய காடுகளை அழிக்கக் கூடாது.
- வேட்டையாடுதல், விலங்குகளைக் கொல்லுதல் ஆகிய தீய செயல்களில் ஈடுபடக் கூடாது.
- நாம் நாட்டில் சுதந்திரமாக வாழ்வது போல் விலங்குகளை காட்டில் சுதந்திரமாக வாழவிட வேண்டும்.
பக்கம் 98:
செயல்பாடு:
செயல் திட்டம்:
பின்வரும் சரணாலயம் / தேசியப் பூங்கா / உயிர்க்கோளக் காப்பகம் அமைந்துள்ள மாநிலங்களின் பெயர்களை எழுதுக.
கேள்வி 1.
- வேடந்தாங்கல் பறவை சரணாலயம்
- கிர் தேசியப் பூங்கா
- நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம்
- காசிரங்கா தேசியப் பூங்கா
- கார்பெட் தேசியப் பூங்கா
விடை :
- வேடந்தாங்கல் பறவை சரணாலயம் – தமிழ்நாடு
- கிர் தேசியப் பூங்கா – குஜராத்
- நீலகிரி உயிர்க்கோளக் காப்பகம் – தமிழ்நாடு
- காசிரங்கா தேசியப் பூங்கா – அசாம்
- கார்பெட் தேசியப் பூங்கா – உத்தரகாண்ட்