Samacheer Kalvi 3rd Tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு Textbook Questions and Answers, Notes.

TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

வாங்க பேசலாம்:

கேள்வி 1.
மரங்கள் விலங்குகளுக்கு மட்டுமல்ல, நமக்கும் பயன் தருகின்றன. எப்படி? உம் கருத்தை வெளிப்படுத்துக.
விடை :

  1. மரங்கள் நமக்கு காய், கனிகளைத் தருகின்றன.
  2. மரங்கள் நமக்கு நிழல் கொடுக்கின்றன.
  3. காய்ந்த மரக்கிளைகள் விறகாகப் பயன்படுகின்றன.
  4. பற்பல மரங்களின் இலைகள், வேர்கள், விதைகள், பட்டைகள் நமக்கு மருந்தாகப் பயன்படுகின்றன.
  5. மரங்களின் வேர்கள் மண் அரிப்பைத் தடுக்கின்றன.

(படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!)

பக்கம் 7:

சரியான விடையைத் தெரிவு செய்வோமா?

கேள்வி 1.
ஒத்துக்கொள்கிறோம் – இச்சொல்லின் பொருள் ____________
அ) விலகிக் கொள்கிறோம்
ஆ) ஏற்றுக் கொள்கிறோம்
இ) காத்துக் கொள்கிறோம்
ஈ) நடந்து கொள்கிறோம்,
விடை:
ஆ) ஏற்றுக் கொள்கிறோம்

கேள்வி 2.
வேட்டை + – ஆட – இச்சொல்லைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
அ) வேட்டையட
ஆ) வேட்டையாட
இ) வேட்டை ஆடு
ஈ) வெட்டையாட
விடை:
ஆ) வேட்டையாட

கேள்வி 3.
மரங்களிடையே – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) மரம் + இடையே
ஆ) மரங்கள் + இடையே
இ) மரங்கள் + கிடையே
ஈ) மரங்கல் + இடையே
விடை:
ஆ) மரங்கள் + இடையே

கேள்வி 4.
அங்குமிங்கும் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
அ) அங்கு + மிங்கும்
ஆ) அங்கும் + இங்கும்
இ) அங்கு + இங்கும்
ஈ) அங்கும் + இங்கு
விடை:
ஆ) அங்கும் + இங்கும்

கேள்வி 5.
‘மரங்களுடன் இருந்தால் தப்பித்திருக்கலாம்’ என்று கூறியது
அ) சிங்கம்
ஆ) புலி
இ) முயல்
ஈ) மான்
விடை:
(ஈ) மான்

வினாக்களுக்கு விடையளி :

கேள்வி 1.
மரங்கள் எவற்றுடன் சண்டையிட்டன?
விடை:
மரங்கள் விலங்குகளுடன் சண்டையிட்டன.

கேள்வி 2.
காட்டைவிட்டு எவை வெளியேறின?
விடை:
காட்டைவிட்டு விலங்குகள் வெளியேறின.

கேள்வி 3.
விலங்குகளுக்கும், மரங்களுக்கும் போட்டிவரக் காரணம் யாது?
விடை:
தங்களில் உயர்ந்தவர் யார் என்பதே போட்டி வரக் காரணம் ஆகும்.

கேள்வி 4.
கதையின் மூலம் நீ அறிந்து கொண்டதை எழுதுக.
விடை:
உலகில் அனைவரும் சமம் யாரும் உயர்ந்தவர்கள் அல்லது தாழ்ந்தவர்கள் கிடையாது. அனைவரும் ஒற்றுமையாக இருப்பதால் நமக்கு வலிமை கிடைக்கும்.

புதிர்களைப் படித்து, விடையைக் கண்டறிக.

கேள்வி 1.
காட்டின் அரசன் ஆவான்; நெருப்பு போன்ற கண்கள் உடையவன்; முழக்கமிடுவான் – அவன் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 1

விடை:
சிங்கம்

கேள்வி 2.
என் உடலில் புள்ளிகள் உண்டு. நான் துள்ளித் துள்ளி ஓடுவேன் – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 2

விடை:
மான்

கேள்வி 3.
வேர்பிடித்து வளர்ந்திடுவேன்; தண்ணீரை உறிஞ்சிடுவேன்; மழைபெற உதவிடுவேன். – நான் யார்?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 3

விடை:
மரம்

பக்கம் 9:

எந்த மரத்திலி ருந்து என்ன பொருள்? – பொருத்துவோமா?

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 4

விடை:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 5

குழுவில் சேராததை வட்டமிடுக.

கேள்வி 1.
மயில், கிளி, புறா, புலி, கோழி
விடை:
புலி

கேள்வி 2.
ஆறு, ஏரி, குளம், மலை, குட்டை
விடை:
மலை

கேள்வி 3.
தாயம், பல்லாங்குழி, ஐந்தாங்கல், சதுரங்கம், மட்டைப்பந்து
விடை:
மட்டைப்பந்து

கேள்வி 4.
வெண்மை, கருமை, மென்மை, பசுமை, செம்மை
விடை:
மென்மை

கேள்வி 5.
கத்தரி, வெண்டை, தக்காளி, தென்னை, மிளகாய்
விடை:
பாசம்

சொல் விளையாட்டு:

Samacheer Kalvi 3rd tamil Guide Term 2 Chapter 2 ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 6

விடை:

  1. பாலம்
  2. பாரம்
  3. பாடம்
  4. பாதம்
  5. பாசம்

பக்கம் 10:

சிந்திக்கலாமா?

கேள்வி 1.
விலங்குகளின் இருப்பிடம் காடுகள். காடுகளை அழித்து, அடுக்குமாடிகளும், தொழிற்சாலைகளும் கட்டினால், விலங்குகள் எங்குச் செல்லும்? உணவுக்கு என்ன செய்யும்? இதற்கென்ன தீர்வு?
விடை:
காடுகளை அழித்தால் பற்பல உயிரினங்கள் அழிந்துவிடும். காட்டு விலங்குகள் நீரையும், உணவையும் தேடி ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும். இதனைத் தடுக்க மரக் கன்றுகளை ஊன்றிப் பாதுகாக்க வேண்டும். பூமியைப் பசுமை நிறைந்ததாக மாற்ற வேண்டும்.