Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 3 கல்வி கண் போன்றது
பக்கம் 14:
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
‘துன்பம்’ இச்சொல்லின் எதிர்ச்சொல் ___________
(அ) இன்பம்
(ஆ) துயரம்
(இ) வருத்தம்
(ஈ) கவலை
விடை:
(அ) இன்பம்
கேள்வி 2.
‘உதவித் தொகை’ இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ____________
(அ) உதவ + தொகை
(ஆ) உதவிய + தொகை
(இ) உதவு + தொகை
(ஈ) உதவி + தொகை
விடை :
(ஈ) உதவி + தொகை
கேள்வி 3.
‘யாருக்கு + எல்லாம்’ இச்சொற்களைச் சேர்த்து எழுதக்
கிடைப்பது –
(அ) யாருக்கு எலாம்
(ஆ) யாருக்குல்லாம்
(இ) யாருக்கல்லாம்
(ஈ) யாருக்கெல்லாம்
விடை :
(ஈ) யாருக்கெல்லாம்
கேள்வி 4.
வாழ்க்கையை நெறிப்படுத்த உதவுவது
(அ) பணம்
(ஆ) பொய்
(இ) தீமை
(ஈ) கல்வி
விடை :
(ஈ) கல்வி
கேள்வி 5.
‘தண்டோரா’ என்பதன் பொருள் தராத சொல்
(அ) முரசு அறிவித்தல்
(ஆ) தெரிவித்தல்
(இ) கூறுதல்
(ஈ) எழுதுதல்
விடை :
(ஈ) எழுதுதல்
வினாக்களுக்கு விடையளி:
கேள்வி 1.
‘தண்டோரா’ மூலம் என்ன செய்தி அறிவிக்கப்பட்டது?
விடை :
இன்று கிராமசபைக் கூட்டம் நடைபெறுகிறது. வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று ‘தண்டோரா’ மூலம் செய்தி அறிவிக்கப்பட்டது.
கேள்வி 2.
பஞ்சாயத்துத் தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் எதனைக் குறித்துப் பேசினார்?
விடை :
அரசின் சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித் தொகை வழங்கும் திட்டம் குறித்து பஞ்சாயத்துத் தலைவர் கிராமசபைக் கூட்டத்தில் பேசினார்.
கேள்வி 3.
பொன் வண்ணனுக்கு உதவித் தொகை ஏன் கிடைக்கவில்லை?
விடை :
பண உதவி தேவைப்படுவோருக்கான கூட்டத்தில் பொன்வண்ணன் கலந்து கொள்ள வில்லை. எனவே அவருக்கு உதவித்தொகை கிடைக்கவில்லை.
அகர முதலியைப் பார்த்து பொருள் எழுதுக.
கேள்வி 1.
ஆவல் – ____________
விடை :
ஆசை
கேள்வி 2.
தபால் – ____________
விடை :
அஞ்சல்
கேள்வி 3.
தண்டோரா – ____________
விடை :
முரசறைந்து செய்தி தெரிவித்தல்
கேள்வி 4.
நெறிப்படுத்துதல் – ____________
விடை :
வழிகாட்டுதல்
பக்கம் 15 :
சரியான சொல்லால் நிரப்புக.
கேள்வி 1.
மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் _____________ (களந்து / கலந்து) கொள்ள வேண்டும்.
விடை :
கலந்து
கேள்வி 2.
கல்வி ______________ (கன் / கண்) போன்றது.
விடை :
கண்
கேள்வி 3.
நான் மிதிவண்டி _____________ (பளுதுபார்க்கும் / பழுதுபார்க்கும்) கடை வைத்திருக்கிறேன்.
விடை :
பழுதுபார்க்கும்
கேள்வி 4.
ஆசிரியர், மாணவனை பள்ளிக்குப் தொடர்ந்து அனுப்புமாறு ____________ (அரிவுரை / அறிவுரை) கூறினார்.
விடை :
அறிவுரை
எதனை, எங்கே செய்வோம்?
விடை :
சொல் விளையாட்டு:
மயில் தோகையில் உள்ள எழுத்துகளைக் கொண்டு சொற்களை உருவாக்குக.
விடை :
1. சுற்றம்
2. மாற்றம்
3. ஏற்றம்
4. முற்றம்
5. தோல்வி
6. ஆற்றல்
உனக்குச் சரியானவற்றை எடுத்துக்கொண்டு உயர்ந்து செல்:
விடை :
சிந்திக்கலாமா?
கேள்வி 1.
வளர்மதியும், பொன்மணியும் நல்ல தோழிகள். பொன்மணி சொற்களைத் தெளிவாகவும், அழகாகவும் எழுதுவாள். வளர்மதி சொற்களைத் தெளிவில்லாமல் எழுதுவாள். இதனைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
விடை :
சொற்களைத் தெளிவாக எழுதினால் அதை வாசிப்பவர்களுக்கு எளிதில் புரியும். இதனால் தேர்வில் அதிக மதிப்பெண் பெற முடியும். எனவே பொன்மணி எழுதுவது போல் சொற்களை அழகாகவும், தெளிவாகவும் எழுத வேண்டும். வளர்மதி போல் தெளிவின்றி எழுதினால் அதைப் பிறர் எளிதில் புரிந்துக்கொள்ள முடியாது.
தேர்வில் குறைந்த மதிப்பெண்களே கிடைக்கும். எனவே வளர்மதியும் பொன்மணி போல் தெளிவாக எழுதக் கற்றுக் கொள்ள வேண்டும்.