Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 6 எழில் கொஞ்சும் அருவி
பக்கம் 34:
படிப்போம். சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
ஒகேனக்கல் அருவியில் நீர் வீழ்வது _____________ உருக்கி ஊற்றுவது போல் இருந்தது.
(அ) தங்கத்தை
(ஆ) வெள்ளியை
(இ) இரும்பை
(ஈ) கற்பாறையை
விடை :
(ஆ) வெள்ளியை
கேள்வி 2.
‘ஒகேனக்கல்’ – என்ற சொல்லின் பொருள் _____________
(அ) பவளப்பாறை
(ஆ) வழுக்குப்பாறை
(இ) பனிப்பாறை
(ஈ) புகைப்பாறை
விடை :
(ஈ) புகைப்பாறை
கேள்வி 3.
‘வெண்புகை’ – என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______________
(அ) வெண் + புகை
(ஆ) வெ + புகை
(இ) வெண்மை + புகை
(ஈ) வெம்மை + புகை
விடை :
(இ) வெண்மை + புகை
கேள்வி 4.
பாதை + அமைத்து — இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது _______________
(அ) பாதை அமைத்து
(ஆ) பாதையமைத்து
(இ) பாதம் அமைத்து
(ஈ) பாதயமைத்து
விடை :
(ஆ) பாதையமைத்து
கேள்வி 5.
தோற்றம் – இச்சொல்லின் எதிர்ச் சொல் ________________
(அ) தொடக்கம்
(ஆ) மறைவு
(இ) முதல்
(ஈ) ஆரம்பம்
விடை :
(ஆ) மறைவு
வினாக்களுக்கு விடையளி:
கேள்வி 1.
ஒகேனக்கல் பகுதியில் நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் கூறுக.
விடை :
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி, மான் பூங்கா, முதலைப் பண்ணை .
கேள்வி 2.
ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சி, பார்ப்பதற்கு எப்படி இருந்தது?
விடை :
ஒகேனக்கல் அருவியில் நீர் விழும் காட்சி, வெள்ளியை உருக்கி ஊற்றியது போல் காணப்படும்.
கேள்வி 3.
சங்கவை பார்த்த மிகப்பழைமையான கோவிலின் பெயர் என்ன ?
விடை :
தேசநாதீஸ்வரர் கோயில்.
கேள்வி 4.
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி எங்கே அமைந்துள்ளது?
விடை :
ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி தருமபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்திலிருந்து 16 கி.மீ. தூரத்தில் உள்ளது.
சரியான தொடரை ✓ எனவும் தவறான தொடரை ✗ எனவும் குறியிடுக:
கேள்வி 1.
ஒகேனக்கல் திருச்சி மாவட்டத்தில் உள்ளது.
விடை :
✗
கேள்வி 2.
அருவியிலிருந்து விழும் நீர், பாறையில் பட்டு, வெண்புகை போலத் தோன்றும்.
விடை :
✓
கேள்வி 3.
கடல் மட்டத்திலிருந்து ஒகேனக்கல் 1500 அடி உயரத்தில் உள்ளது.
விடை :
✓
அகர முதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக:
கேள்வி 1.
எழில் – ____________
விடை :
அழகு
கேள்வி 2.
களிப்பு – ____________
விடை :
மகிழ்ச்சி
கேள்வி 3.
நீராடலாம் – _____________
விடை :
குளிக்கலாம்
கேள்வி 4.
பரவசம் – _____________
விடை :
மகிழ்ச்சி
பொருத்தமான சொல்லால் நிரப்புக:
கேள்வி 1.
கடற்கரையில் _____________ (மனல் / மணல்) வீடு, கட்டி விளையாடலாம்.
விடை :
மணல்
கேள்வி 2.
மரத்தின் பழங்கள் _____________ (குரைவாக / குறைவாக)உள்ளன.
விடை :
குறைவாக
கேள்வி 3.
வலப்பக்க சுவரின் மேல் ____________ (பல்லி / பள்ளி ) இருக்கிறது.
விடை :
பல்லி
கேள்வி 4.
ஆதிரைக்கு நல்ல _____________ (வேலை / வேளை) கிடைத்துள்ளது.
விடை :
வேலை
படங்களை இணைத்துச் சொற்களைக் கண்டுபிடிப்போமா?
விடை :
சிந்திக்கலாமா?
படம் 1 படம் 2
படங்களை உற்றுநோக்கித் தூய்மையான காற்று எங்கே கிடைக்கிறது? உன் கருத்துகளை வெளிபடுத்துக.
விடை :
1. மரங்கள் நிறைந்த இப்பகுதியில் தூய்மையான காற்று கிடைக்கிறது. மரங்கள் ஒளிச் சேர்க்கையின் போது ஆக்சிஜனை வெளிவிடுகின்றன. இதனால் நாம் சுவாசிப்பதற்கு தேவையான தூய்மையான காற்று கிடைக்கிறது.
2. தொழிற்சாலைகளும், வாகனப் போக்குவரத்தும் உள்ளபகுதிகளில் இந்தக் கரும்புகை வெளிப்படுகிறது. இது சுற்றுப்புறத்தை மாசுபடுத்துகிறது. இந்தக் காற்றை நாம் சுவாசிப்பதால் சுவாச மண்டலம் சார்ந்த உடல்நலக் கேடுகள் – ஏற்படுகின்றன.
விடை :
இன எழுத்துகள்:
பக்கம் 39:
உங்கள் நண்பர்களின் பெயர்களிலுள்ள இன எழுத்துகளைக் கண்டுபிடியுங்கள்.
மங்கை, கங்கா, இராமலிங்கம், மஞ்சுளா, அஞ்சலி, காஞ்சனா, அஞ்சனா, பாண்டியன், தண்டபாணி, காந்தி, சாந்தி, ஜெயந்தி, கந்தன், நந்தா, நந்தினி, வந்தனா, அம்பிகா, அம்பு, இளமாறன், மணிமாறன்.
விடுபட்ட இடங்களில் சரியான இன எழுத்துகளை நிரப்பலாமா?
கேள்வி 1.
விடை :
செம்பருத்தி
கேள்வி 2.
விடை :
குன்று
கேள்வி 3.
விடை :
சுண்டல்
கேள்வி 4.
விடை :
தொங்குபாலம்
கேள்வி 5.
விடை :
இஞ்சி
கேள்வி 6.
விடை :
ஆந்தை
செயல் திட்டம்:
உங்கள் வீட்டில் நீங்கள் காணும் பொருள்களுள் இன எழுத்துகள் இடம்பெற்ற சொற்கள் 20 எழுதி வருக.
விடை :