Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 2 Chapter 8 நட்பே உயர்வு Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 2 Chapter 8 நட்பே உயர்வு
பக்கம் 50:
வாங்க பேசலாம் :
அன்பை மறவா முயல் கதையை உமது சொந்தநடையில் கூறுக.
பாடச்சுருக்கம் :
ஒரு காட்டில் முயலும், மானும் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. மானை எப்படியாவது வேட்டையாடிட வேண்டும் என ஒரு நரி நினைத்தது. மான் தனியாக இருக்கும் போது நரி அதனிடம் சென்று பேசியது. முயலிடம் நட்புக் கொள்ளக் கூடாதென்றும் முயலானது அந்த மானை அங்கே தூரத்தில் உள்ள குகையில் வாழும் சிங்கத்திற்கு இரையாக்கிவிடும் என்றும் கூறியது. மானும் நரியின் பேச்சைக் கேட்டு, நடுக்காட்டிற்குள் சென்றுவிட்டது.
தன் நண்பன் மானைத் தேடி முயல் அலைந்தது. நரியின் சூழ்ச்சி அதற்குப் புரிந்துவிட்டது. தன் நண்பன் மானை விட்டு விடும்படி நரியிடம் கேட்டுக் கொண்டது. அதற்கு நரி மூன்று புதிர்களைக் கூறி, அவற்றிற்கு சரியான விடை சொன்னால் மானை விட்டுவிடுவதாகக் கூறி அந்தப் புதிர்களைக் கூறியது.
- கீழேவரும், ஆனால் மேலே போகாது. அது என்ன?
- கைகள் இருக்கும் ஆனால் கைதட்ட முடியாது. அது என்ன?
- தொடக்கத்தில் உயரம், எரிந்து முடிந்தவுடன் குட்டை. அது என்ன ?
இதற்கு முயல்
- மழை
- கடிகாரம்
- மெழுகுவர்த்தி எனச் சரியான பதில்களைக் கூறியது. நரி வேறு வழியின்றி மானை விடுவித்தது. மானும், முயலும் மகிழ்ச்சியுடன் காட்டில் தொடர்ந்து வசித்தன.
பக்கம் 50:
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
‘இரை’ என்ற சொல்லின் பொருள்
(அ) உணவு
(ஆ) இருப்பிடம்
(இ) மலை
(ஈ) இறைவன்
விடை:
(அ) உணவு
கேள்வி 2.
‘மகிழ்ச்சியுடன்’ – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மகிழ்ச்சி + யுடன்
(ஆ) மகிழ்ச்சி + உடன்
(இ) மகிழ் + உடன்
(ஈ) மகிழ்ச் + சியுடன்
விடை:
(ஆ) மகிழ்ச்சி + உடன்
கேள்வி 3.
சொல்லி + கொண்டு – இச்சொற்களைச் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) சொல்லிக்கொண்டு
(ஆ) சொல்கொண்டு
(இ)சொல்லக்கொண்டு
(ஈ) சொல்லிகொண்டு
விடை:
(அ) சொல்லிக் கொண்டு
கேள்வி 4.
‘முதுமை’ – என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) தீமை
(ஆ) சிறுமை
(இ) பெருமை
(ஈ) இளமை
விடை:
(ஈ) இளமை
கேள்வி 5.
‘சூழ்ச்சி’ – என்ற சொல்லுக்குக் கதையின்படி தொடர்புடைய விலங்கு
(அ) மான்
(ஆ) முயல்
(இ) நரி
(ஈ) சிங்கம்
விடை:
(இ) நரி
வினாக்களுக்கு விடையளி:
கேள்வி 1.
முயல் எந்த விலங்குடன் நண்பனாகப் பழகியது?
விடை:
முயல், மான் ஒன்றுடன் நண்பனர்கப் பழகியது.
கேள்வி 2.
மானை விட்டுவிடுவதற்காக நரி என்ன செய்தது?
விடை:
மானை விட்டுவிட நரி மூன்று புதிர்களைக் கூறி, அவற்றிற்கான விடையைக் கேட்டது.
கேள்வி 3.
மான் எதனால் மாட்டிக்கொண்டது?
விடை:
நரியின் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளத்தால் மான் மாட்டிக் கொண்டது.
கேள்வி 4.
மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதை ஏன் தவிர்த்த ன?
விடை:
நரி சூழ்ச்சி மிக்கது. எனவே மற்ற விலங்குகள் நரியிடம் நட்பு கொள்வதைத் தவிர்த்தன.
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.
கேள்வி 1.
உணவை எடுத்திடுவாள்
உண்ணாமல் வைத்திடுவாள்
உடல் மெலிந்த பெண் – அவள் யார்?
விடை:
கேள்வி 2.
வெள்ளையாம் வெள்ளைக்குடம்
விழுந்தால் சல்லிக்குடம் – அது என்ன?
விடை:
கேள்வி 3.
கொடிகொடியாம் பூங்கொடியாம்
கிளிதின்னும் பழம் இதுவாம் – அது என்ன?
விடை:
கேள்வி 4.
தட்டு தங்கத் தட்டு
தகதகக்கும் வெள்ளித்தட்டு
தலைக்குமேல் உலாவரும் – அது என்ன?
விடை:
கேள்வி 5.
ஆயிரம் அறை கொண்ட
மிகப்பெரிய மிட்டாய் கடை – அது என்ன?
விடை: