Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 2 தாக்கணாங்குருவியம் ஒட்டகச்சிவிங்கியும்
பக்கம் 7 :
பாடலின் கருத்து :
காட்டில் உள்ள ஒரு பெரிய மரத்தில் தூக்கணாங் குருவி ஒன்று கூடுகட்டியிருந்தது. அது தன் குஞ்சுகளுடன் அங்கே வசித்து வந்தது. ஒரு நாள் அங்கே வந்த ஒட்டகச்சிவிங்கி குஞ்சுகளின் சத்தம் கேட்டுக் கோபம் அடைந்தது. அது மரக்கிளையைக் கோபத்துடன் உலுக்கியது. தூக்கணாங்குருவியின் குஞ்சுகள் மிகவும் பயந்து நடுங்கின. அங்கே வந்த தேனீ ஒன்று அதற்கு அறிவுரை கூறியது.
மரமானது அனைவருக்கும் பொதுவானது. பறவைகள் அங்கு கூடுகட்டுகின்றன. தேனீக்கள் பூக்களில் தேன் சேகரிக்கின்றன. மரம் விலங்குகளுக்கு நிழல் தருகிறது. எனவே அனைவருடனும் நட்புடன் இருக்க வேண்டுமென்று தேனீ கூறியது. ஆனால் அதை ஒட்டகச்சிவிங்கி கேட்கவில்லை. எனவே தேனீ அருகில் உள்ள – குளத்தை அடைந்தது. அங்குள்ள தவளையிடம் நடந்ததைக் கூறி உதவி கேட்டது. தவளையும் உதவி செய்வதாகக் கூறியது.
மறுநாள் ஒட்டகச்சிவிங்கி மீண்டும் அந்த மரத்தின் அருகே வந்தது. அங்கிருந்த தேனீக்களின் ஓசையைக் கேட்டு அது கோபம் கொண்டது. தேன்கூட்டைக் கலைக்க முயன்று தன் தலையை ஆட்டியது. உடனே தேனீக்கள் அனைத்தும் ஓடிவந்து ஒட்டகச் – சிவிங்கியைக் கடிக்க ஆரம்பித்தன. வலி பொறுக்க முடியாமல் ஒட்டகச்சிவிங்கி குளத்தில் இறங்கியது.
ஆனால் தேனீக்கள் விடாமல் கொட்டிக் கொண்டிருந்தன. தவளைகள் அதன் உடல் மீது) ஏறின. ஒட்டகச்சிவிங்கி தன் தவற்றை உணர்ந்து தன்னை ) மன்னித்துக் கொள்ளும்படி வேண்டியது. இனிமேல் தான் யாருக்கும் துன்பம் தரமாட்டேன் என உறுதி அளித்தது. அதன்பின் அது அனைவரோடும் இணைந்து மகிழ்ச்சியாக வாழ்ந்தது.
பக்கம் 10:
படிப்போம். சிந்திப்போம்!
எழுதுவோம் சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
மரக்கிளையை உலுக்கியது
(அ) தேனீ
(ஆ) ஒட்டகச்சிவிங்கி
(இ) தவளை
(ஈ) சிட்டுக்குருவி
விடை :
(ஆ) ஒட்டகச்சிவிங்கி
கேள்வி 2.
மரத்தூள் என்ற சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மரம் + தூள்
(ஆ) மர + தூள்
(இ) மரத்து + தூள்
(ஈ) மரத் + தூள்
விடை :
(அ) மரம் + தூள்
கேள்வி 3.
திட்டம் + படி – இச்சொல்லைப் சேர்த்து எழுதக் கிடைப்பது
(அ) திட்டபடி
(ஆ) திட்டப்படி
(இ) திட்டம்படி
(ஈ) திட்டுபடி
விடை :
(ஆ) திட்டப்படி
கேள்வி 4.
மிதிபட்டு – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) மிதி + பட்டு
(ஆ) மிதிப் + பட்டு
(இ) மீதி + பட்டு
(ஈ) மீதிப் + பட்டு
விடை :
(அ) மிதி + பட்டு
கேள்வி 5.
இணைந்து என்ற சொல்லின் எதிர்ச்சொல்
(அ) மகிழ்ந்து
(ஆ) பிரிந்து
(இ) சேர்ந்து
(ஈ) சிறந்து
விடை :
(ஆ) பிரிந்து
வினாக்களுக்கு விடையளிக்க:
கேள்வி 1.
தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ஏன் கத்தின?
விடை :
ஒட்டகச்சிவிங்கி மரக்கிளையைப் பிடித்து உலுக்கியது எனவே தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் பயந்து போய்க் கத்தின.
கேள்வி 2.
தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் யார் யார்?
விடை :
தேனீக்களும் தவளைகளும் தூக்கணாங்குருவிக்கு உதவி செய்தவர்கள் ஆவர்.
கேள்வி 3.
தேனீ எதன் காதருகே சென்று கடித்தது?
விடை :
தேனீ, ஒட்டகச்சிவிங்கியின் காதருகே சென்று கடித்தது.
கேள்வி 4.
இக்கதையின் மூலம் நீ அறியும் நீதிக்கருத்து யாது?
விடை :
நல்லதே நினைப்போம்! நன்மை பெறுவோம்.
அகர முதலியைப் பார்த்து பொருள் அறிக.
கேள்வி 1.
புத்திசாலி –
விடை :
அறிவாளி
கேள்வி 2.
அடாத செயல் –
விடை :
தகாத செயல்
குருவிக்கேற்ற கூட்டைத் தேர்ந்தெடுப்போமா?
விடை :
சரியான சொல்லை நிரப்பிப் படித்துக் காட்டுக.
கேள்வி 1.
தூக்கணாங்குருவிக் குஞ்சுகள் ____________ என ஒலியெழுப்பி மகிழ்ச்சியாக இருந்தன.
(கீச்… கீச்… / கூக்கு… கூக்கு )
விடை :
கீச்… கீச்….
கேள்வி 2.
மரத்தியின் அடியில் ______________ ஒதுங்கியது. (ஒட்டகம் / ஒட்டகச்சிவிங்கி)
விடை :
ஒட்டகச்சிவிங்கி
கேள்வி 3.
தூக்கணாங்குருவிக்கு முதலில் ___________ வந்தது. (மரங்கொத்தி /மீன்கொத்தி)
விடை :
தேனீ
கேள்வி 4.
ஒட்டகச்சிவிங்கி அருகில் இருந்த _____________ தொப்பென்று விழுந்தது. (ஆற்றில் / குளத்தில்)
விடை :
குளத்தில்
பக்கம் 12:
வினைமரபினை அறிந்துகொள்வோமா? பொருத்தமானதை உரிய கோட்டில் எழுதுக.
விடை :
பக்கம் 13:
சொல் விளையாட்டு:
ஒன்றை மாற்றினால் மற்றொன்று கிடைக்குமே!
கேள்வி 1.
‘வெயில்’ – இச்சொல்லில் ‘வெ’ வை மாற்றி ம’ வை நிரப்பு.
ஆடும் பறவை வரும் அழகாய் இருக்கும். – ___________
விடை :
மயில்
கேள்வி 2.
‘மரம்’ இச்சொல்லில் ‘ம’ வை மாற்றி அவை நிரப்பு.
அறுக்க உதவும் கருவியைப் பெறுவாய் ___________
விடை :
அரம்
கேள்வி 3.
கூச்சம்’ இச்சொல்லில் கூ’ வை மாற்றி ம’ வை நிரப்பு.
உன் அடையாளங்களில் ஒன்றைப் பெறுவாய் _________
விடை :
மச்சம்
கேள்வி 4.
‘குருவி’ இச்சொல்லில் ‘கு’ வை மாற்றி ‘அ’ வை நிரப்பு.
குளித்து மகிழ்ந்து குளிர்ச்சி அடைவாய் ____________
விடை :
அருவி
கேள்வி 5.
‘பணம்’ இச்சொல்லில் ப வை மாற்றி ‘ம’ வை நிரப்பு.
மூக்கின் வழியே நுகர்ந்து மகிழ்வாய் ___________
விடை :
மணம்