Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 3 வீம்பால் வந்த விளைவு
பக்கம் 17 :
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
வணிகன் எதில் சென்று வணிகம் செய்தான்?
விடை :
வணிகன் குதிரையில் சென்று வணிகம் செய்தான்.
கேள்வி 2.
வணிகன் வீரனிடம் என்ன கூறினான்?
விடை :
தனது குதிரை முரட்டுத்தனமானது. எனவே வீரன் தன் குதிரையைத் தள்ளிக் கட்டவேண்டும் என வணிகன் கூறினான்.
கேள்வி 3.
வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை என்ன செய்தது?
விடை :
வணிகனின் குதிரை வீரனின் குதிரையை எட்டி உதைத்துத் தள்ளி விட்டது. இதனால் வீரனின் குதிரைக்கு கால் உடைந்து விட்டது.
கேள்வி 4.
“வீம்பால் வந்த விளைவு” இகக்தையிலிருந்து நீ உணர்ந்து கொண்ட கருத்து யாது?
விடை :
வீம்பு செய்தால் துன்பம் உண்டாகும்.
புதிருக்குள் பொருத்தமான படத்தைப் பொருத்துக.
கேள்வி 1.
எதிரிகளை வீழ்த்துவான்; நாட்டைக் காப்பான். – அவன் யார்?
விடை :
போர்வீரன்
கேள்வி 2.
பந்தயத்தில் வேகமாய் ஓடிடுவான்; பரிசுகள் பல வென்றிடுவான் – அவன் யார்?
விடை :
குதிரை
கேள்வி 3.
நான் இல்லையென்றால், நீங்கள் யாரையும் பார்க்க முடியாது நான் யார்?
விடை :
கண்
கேள்வி 4.
பெரிய தேரைத் தாங்கும், ஒரு சிறிய பையன்
விடை :
அச்சாணி
பக்கம் 18:
மொடு விளையாட்டு:
கட்டங்களில் உள்ள சொற்களைக் கண்டுபிடித்து, வட்டமிட்டுப் பழங்களுக்குள் எழுதுக.
விடை :
விடுபட்ட சொற்களைப் படத்திலுள்ள எழுத்துகளைக் கொண்டு நிரப்புக.
கேள்வி 1.
வணிகன் ___________ அயர்ந்துவிட்டான்.
விடை :
கண்
கேள்வி 2.
___________ குணம் படைத்த உனக்கு நஷ்ட ஈடு தரத் தேவையில்லை.
விடை :
வீம்பு
கேள்வி 3.
வணிகனின் குதிரை, வீரனின் குதிரையை ___________ உதைத்துத் தள்ளிவிட்டது.
விடை :
எட்டி
கேள்வி 4.
வணிகன், வாணிகம் செய்துவிட்டு எடுக்க நினைத்தான்.
விடை :
ஓய்வு
கேள்வி 5.
வீரனுடைய குதிரையின் ___________ உடைந்துவிட்டது.
விடை :
கால்
பக்கம் 19:
கட்டத்தில் உள்ள மூலிகைச் செடிகளின் பெயர்களை வட்டமிட்டு எடுத்து எழுதுக.
விடை :
எதிலிருந்து எதைப் பெறுவோம் என்பதை விடுபட்ட இடத்தில் நிரப்புக.
விடை :
பக்கம் 22:
(உயர்திணையும் அஃறிணையும்)
எது உயர்திணை? எது அஃறிணை
பிரித்து அறிவோமா?
பக்கம் 23:
விடை :
மனிதன்
கண்ணன்
செல்வி
அம்மா
கோபி
விடை :
ஆடு
மாடு
கல்
மண்
மரம்
மயில்
நீர்
நீலம்
பூனை
யானை
கழுதை
குதிரை
புலி
எலி