Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 4 வீம்பால் வந்த விளைவு Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 4 மழைநீர்
பக்கம் 25:
வாங்க பேசலாம்:
மழை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று உம் சொந்த நடையில் பேசுக.
மழை! மழை! மழை ! இந்த மழைக்குத்தான் ஏது விலை. மண்ணகம் குளிர மழை சோவெனப் பெய்யும் போது மனம் ஆனந்தக் கூத்தாடுகிறது.
கடகடவென இடியோசை முழங்க வானம் பொழிகிறது. மழை நீரில் நனைந்த மரங்கள், செடி கொடிகள் ஆனந்தக் கூத்தாடுகின்றன. அவை நீரில் குளித்து மாசுகள் நீங்கிப் பளிச்சென்று காணப்படுகின்றன. மழை நீர் கழுவிய இலைகள் – பார்க்கப் பார்க்கப் பரவசம் ஊட்டுகின்றன.
மழை பெய்யும் போது தெருக்களில் மக்கள் இங்கும் அங்கும் ஓடுகின்றனர். கண்ணுக் கெட்டிய தூரம் வரை கருப்புக் குடைகள் தலை தூக்குகின்றன. கூரைகளும் தெருக்களும் சுத்தம் செய்யப்பட்டு பளிச்சென மிளிர்கின்றன.
மழை பெய்யும் போது சிறுவர்கள் அடையும் மகிழ்ச்சிக்கு அளவில்லை. நாங்கள் மழையில் துள்ளிக் குதித்து ஓடுகிறோம். அம்மா அழைப்பது என் காதில் விழவில்லை. சொட்டச் சொட்ட நனைந்து ஓடி வருகிறோம்.
கூரையில் விழும் நீரைக் கைகளால் ஏந்திப் பிடிக்கிறோம். வீட்டின் முன்னால் காய்ந்து கிடந்த கழிவு நீர்க் கால்வாய் மழை நீரால் நிறைகிறது. அங்கே ஓடும் நீர் அத்தனை பொருட்களையும் இழுத்துக் கொண்டு ஓடுகிறது.
ஓடும் நீரில் சிக்கிக் கொண்ட சின்னஞ் சிறிய பூச்சிகளை நான் குச்சியால் நகர்த்திக் காப்பாற்றுகிறேன். காகித படகுகளை ஓடும் நீரில் மிதக்க விடுகிறேன். அதன் மேல் ஒரு கட்டெறும்பு பயணிக்கிறது. படகு ஓடும் அழகைப் பார்த்து மனம் பரவசமடைகிறது.
மழை! மழை! மழை !மனதிற்கு மகிழ்ச்சி தரும் வானத்தின் கொடை. இடி, மின்னல், தண்ணீர், வெள்ளம் – தெருவெல்லாம் தண்ணீ ர் மயம். எங்கள் மனமெல்லாம் மகிழ்ச்சி மயம்.
ஒரே ஓசையில் முடியும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக.
விடை :
முதலெழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக.
விடை :
இரண்டாவது எழுத்து ஒன்றி வரும் சொற்களை எழுதுக.
விடை :
அகரமுதலியைப் பார்த்துப் பொருள் எழுதுக.
கேள்வி 1.
பொழியும் – ___________
விடை :
பெய்யும்
கேள்வி 2.
செம்மை – ___________
விடை :
சிறப்பு
கேள்வி 3.
ஓங்குதல் – ___________
விடை :
உயர்தல்
கேள்வி 4.
இல்லம் – ___________
விடை :
வீடு
பக்கம் 26:
படிப்போம். சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
தேக்குதல்- என்ற சொல்லின் எதிர்ச்சொல் _____________
(அ) நீக்குதல்
(ஆ) தெளிதல்
(இ) சேமித்தல்
(ஈ) பாதுகாத்தல்
விடை :
(அ) நீக்குதல்
கேள்வி 2.
வானின் அமுதம் – இச்சொல் குறிப்பது __________
(அ) அமிழ்தம்
(ஆ) அமிர்தம்
(இ) சோறு
(ஈ) மழைநீர்
விடை :
(ஈ) மழைநீர்
கேள்வி 3.
மழையாகுமே – இச்சொல்லைப் பிரிக்கக் கிடைப்பது 1
(அ) மழை + யாகுமே
(ஆ) மழையாய் + யாகுமே
(இ) மழை + ஆகுமே
(ஈ) மழையாய் + ஆகுமே
விடை :
(இ) மழை + ஆகுமே
கேள்வி 4.
நினைத்தல்- இச்சொல்லுக்குரிய எதிர்ச்சொல்.
(அ) கூறுதல்
(ஆ) எண்ணுதல்
(இ) மறத்த ல்
(ஈ) நனைத்தல்
விடை :
(இ) மறத்த ல்
கேள்வி 1:
“பொன்னும் பொருளும்” இது போன்று “உம்” சேர்ந்துவரும் சொற்கைளைப் பாடலிலிருந்து எடுத்து எழுதுக.
விடை :
பொழியும் நீரும்
உழவும் தொழிலும்
நாடும் வீடும்
வளமும் நலமும்
(இணைந்து செய்வோம்)
பொருத்துவோமா?
விடை :
இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் படித்துப் பார்ப்போம். விடுபட்ட இடத்தை நிரப்பி மகிழ்வோம்.
விடை :