Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 5 காகமும் நாகமும் Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 5 காகமும் நாகமும்
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
காகம் வாழும்.
(அ) கூட்டில்
(ஆ) வீட்டில்
(இ) புற்றில்
(ஈ) மண்ணில்
விடை:
(அ) கூட்டில்
கேள்வி 2.
நண்பர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல்.
(அ) அன்பானவர்கள்
(ஆ) உறவினர்கள்
(இ) பகைவர்கள்
(ஈ) நெருங்கியவர்கள்
விடை:
(இ) பகைவர்கள்
கேள்வி 3.
முத்துமாலை இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது.
(அ) முத்து + மாலை
(ஆ) முத்தும் + மாலை
(இ) முத்தும் + ஆலை
(ஈ) முத்து + மலை
விடை:
(அ) முத்து + மாலை
கேள்வி 4.
மரம் + பொந்து இதனைச் சேர்த்து எழுதக் கிடைப்பது.
(அ) மரம்பொந்து
(ஆ) மரப்பொந்து
(இ) மரப்பந்து
(ஈ) மரபொந்து
விடை:
(ஆ) மரப்பொந்து
பக்கம் 33
வினாக்களுக்கு விடையளிக்க.
கேள்வி 1.
காகத்தின் முட்டைகளைப் பாம்பு என்ன செய்தது?
விடை:
காகத்தின் முட்டைகளைப் பாம்பு உடைத்து விட்டது.
கேள்வி 2.
பாம்பை அழிப்பதற்காகக் காகம் யாரிடம் ஆலோசனை கேட்டது?
விடை:
பாம்பை அழிப்பதற்காகக் காகம் நரியிடம் ஆலோசனை கேட்டது.
கேள்வி 3.
“காகமும் நாகமும்” கதை உணர்த்தும் நீதி என்ன?
விடை:
நாம் பிறருக்குத் தீங்கு செய்யாமல் வாழ வேண்டும்.
புதிருக்குப் பொருத்தமான படத்தைப் பொருத்துக.
கேள்வி 1.
நான் ஒரு வீட்டு விலங்கு;
இலை, தழைகளை உண்பேன். நான் யார்?
விடை:
ஆடு
கேள்வி 2.
மரத்திற்கு மரம் தாவுவேன்;
வாழைப்பழம் விரும்பி உண்பேன். நான் யார்?
விடை:
குரங்கு
கேள்வி 3.
கரும்பே எனக்கு உணவாகும்
கருமை எனது நிறமாகும் – நான் யார்?
விடை:
யானை
முறைமாறியுள்ள சொற்களை முறைப்படுத்தித் தொடர் உருவாக்குக.
கேள்வி 1.
ஒன்று கொக்கு இருந்தது குளக்கரையில்
________________________________
விடை:
குளக்கரையில் கொக்கு ஒன்று இருந்தது.
கேள்வி 2.
எண்ணியது சாப்பிட மீன்களைச்
________________________________
விடை:
மீன்களைச் சாப்பிட எண்ணியது.
கேள்வி 3.
அனைத்தும் சென்றன விளையாடிச்
________________________________
விடை:
அனைத்தும் விளையாடிச் சென்றன.
பக்கம் 34
எந்த உயிரினத்திற்கு என்ன பண்பு?
விடை:
மொழி விளையாட்டு
ஒவ்வோர் எழுத்தாகச் சேர்ப்போமா?
விடை:
பெயர் எது? செயல் எது?
விடை: