Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 3rd Tamil Guide Pdf Term 3 Chapter 6 நல்வழி Textbook Questions and Answers, Notes.
TN Board 3rd Tamil Solutions Term 3 Chapter 6 நல்வழி
பாடலின் கருத்து:
ஆற்றுப் பெருக்கற்று அடிசுடும் அந் நாளும் அவ்வா(று)
ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் – ஏற்றவர்க்கு
நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்
இல்லைஎன மாட்டார் இசைந்து
– ஔவையார்
ஆற்றில் நீர் வற்றி விடும்போது அங்கு நீர் ஓடுவதில்லை. மணல் மட்டும் அங்கே வறண்டு காணப்படுகிறது. அதில் நடந்து செல்லும் போது மணலின் வெப்பம் காலைச் சுடுகிறது. இவ்வளவு வறண்ட நிலையிலும் அந்த வறண்ட மணலைத் தோண்டினால் ஊற்று நீர் வெளி வரும். இந்த ஊற்று நீர் உலகத்து உயிர்களை வாழ வைக்கக் கூடியது. உயர்குடி மக்களும் இப்படிப்பட்டவர்கள் தான். தாங்கள் வறுமை நிலை அடைந்தாலும், தங்களை நாடி வந்து இரப்பவர்களிடம் இல்லை என்று கூறாமல் இருப்பதைக் கொடுத்து மகிழ்வர்.
அருஞ்சொற் பொருள்:
ஆற்றுப் பெருக்கு – ஆற்று வெள்ளம்
அற்று – இல்லாமல்
அடி சுடும் – பாதங்கள் வெப்பம் அடைகின்றன
அவ்வாறு – அந்த ஆறானானது
உலகூட்டும் – உலகிற்கு நீர் வழங்கும்
ஏற்றவர்க்கு – யாசிப்பவர்களுக்கு
நல்ல குடிப் பிறந்தார் – மேன் மக்கள்
நல் கூர்ந்தார் – வறியவர்
மாட்டார் – கூற மாட்டார்
இசைந்து – மனம் விரும்பி
பக்கம் 37
படிப்போம்! சிந்திப்போம்! எழுதுவோம்!
சரியான விடையைத் தெரிவு செய்வோமா?
கேள்வி 1.
உலகூட்டும் – இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) உல + கூட்டும்
(இ) உலகு + ஊட்டும்
(ஆ) உலகு + கூட்டும்
(ஈ) உலகூட்டு + உம்
விடை:
(இ) உலகு + ஊட்டும்
கேள்வி 2.
அந்நாளும்- இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது
(அ) அந் + நாளும்
(இ) அந்நா + ளும்
(ஆ) அ + நாளும்
(ஈ) அந்த + நாளும்
விடை:
(ஆ) அ + நாளும்
கேள்வி 3.
இசைந்து இச்சொல்லின் பொருள்
(அ) மறுத்து
(ஆ) பாடி
(இ) ஒப்புக்கொண்டு
(ஈ) உதவி
விடை:
(இ) ஒப்புக்கொண்டு
இரண்டாம் எழுத்து ஒன்றுபோல் வரும் சொற்களைப் பாடலிலிருந்து எழுதுக
1. ஆற்று – ஊற்று
2. _____________________
3. _____________________
விடை:
1. ஆற்று – ஊற்று
2. நல்ல – இல்லை
3. நல்லகுடிப் – நல்கூர்ந்தார்
பக்கம் 38
வினாக்களுக்கு விடையளிக்க.
கேள்வி 1.
நல்வழி என்னும் நூலை எழுதியவர் யார்?
விடை:
நல்வழி என்னும் நூலை எழுதியவர் ஔவையார்.
கேள்வி 2.
ஊற்று நீரைக் கொடுப்பது எது?
விடை:
ஊற்று நீரைக் கொடுப்பது ஆறு ஆகும்.
கேள்வி 3.
நல்ல குடிப்பிறந்தாரின் இயல்பு எத்தகையது?
விடை:
நல்ல குடிப்பிறந்தார் தாங்கள் வறுமை நிலை அடைந்தாலும் பிறருக்கு இல்லை என்று ஒருபோதும் கூற மாட்டார்கள்.
பாடலை நிறைவு செய்க.
ஆற்று நீரில் துள்ளியே
அழகாய் நீந்தும் மீன்களே!
______________ ______________ ______________
______________ ______________ ______________
______________ ______________ ______________
______________ ______________ ______________
விடை:
ஆற்று நீரில் துள்ளியே
அழகாய் நீந்தும் மீன்களே!
ஊற்று நீரைப் பருகியே
உள்ளம் மகிழும நாரையே!
காற்றில் சிறகை வீசியே
களித்துப் பறக்கும் குருவியே!
பொருத்துக:
நல்ல மனம்
ஆற்று குணம்
மணல் நீர்
உதவும் வீடு
விடை:
நல்ல குணம்
ஆற்று நீர்
மணல் வீடு
உதவும் மனம்
மொழி விளையாட்டு
இரண்டாம் எழுத்தை மாற்றிப் புதிய சொல் உருவாக்கலாமா?
கேள்வி 1.
படம் – ____________, ____________, ____________
விடை:
படம் – பழம், பணம், பதம்
கேள்வி 2.
நலம் – ____________, ____________, ____________
விடை:
நலம் – நகம், நடம், நயம்
கேள்வி 3.
உதவு – ____________, ____________, ____________
விடை:
உதவு – உலவு, உறவு, உணவு
கேள்வி 4.
பத்து – ____________, ____________, ____________
விடை:
பத்து – பந்து, பழுது
கேள்வி 5.
குயில் – ____________, ____________, ____________
விடை:
குயில் – குரல், குடில், குழல்
பக்கம் 40
எதிர்ச்சொல் எழுதுவோம்
கேள்வி 1.
பனிக்கட்டி குளிர்ச்சியாய் இருக்கும்.
நெருப்பு _________________ இருக்கும்.
விடை:
பனிக்கட்டி குளிர்ச்சியாய் இருக்கும்.
நெருப்பு சூடாய் இருக்கும்.
கேள்வி 2.
பூனை மேசையின் மேல் இருந்தது.
எலி, மேசையின் _________________ இருந்தது
விடை:
பூனை மேசையின் மேல் இருந்தது.
எலி, மேசையின் அடியில் இருந்தது.
கேள்வி 3.
தங்கை _________________ சென்றாள்.
அண்ணன் உள்ளே வந்தான்.
விடை:
தங்கை வெளியே சென்றாள்.
அண்ணன் உள்ளே வந்தான்.
கேள்வி 4.
தங்கை வெளியே _________________.
அண்ணன் உள்ளே வந்தான்.
விடை:
சிறுவன் பேருந்தில் ஏறினான் .
சிறுமி பேருந்திலிருந்து இறங்கினாள்.
பொருத்தமான சொல்லைத் தேர்ந்தெடுப்போமா?
கேள்வி 1.
ஆற்றின் ஓரம் __________________. ஆடையில் இருப்பது __________________. (கறை, கரை)
விடை:
ஆற்றின் ஓரம் கரை . ஆடையில் இருப்பது கறை .
கேள்வி 2.
காட்டில் வாழ்வது __________________. கடையில் விற்பது __________________. (புலி, புளி)
விடை:
காட்டில் வாழ்வது புலி . கடையில் விற்பது புளி .
கேள்வி 3.
மனிதர் செய்வது __________________. மரத்தை அறுப்பது __________________.(அறம், அரம்)
விடை:
மனிதர் செய்வது அறம் . மரத்தை அறுப்பது அரம் .
கேள்வி 4.
மீனைப் பிடிப்பது __________________. கையில் அணிவது __________________. (வளை, வலை)
விடை:
மீனைப் பிடிப்பது வலை . கையில் அணிவது வளை .
கேள்வி 5.
பொழுதைக் குறிப்பது __________________. பொறுப்பாய்ச் செய்வது __________________. (வேலை, வேளை)
விடை:
பொழுதைக் குறிப்பது வேளை . பொறுப்பாய்ச் செய்வது வேலை .
கேள்வி 6.
ஒழுக்கத்தைக் குறிப்பது __________________. உணவுப் பயிரைக் குறிப்பது __________________. (தினை, திணை)
விடை:
ஒழுக்கத்தைக் குறிப்பது திணை . உணவுப் பயிரைக் குறிப்பது தினை .
கேள்வி 7.
உயர்ந்து நிற்பது __________________. உனக்குப் பிடிக்கும் __________________. (மழை, மலை)
விடை:
உயர்ந்து நிற்பது மலை . உனக்குப் பிடிக்கும் மழை .
கேள்வி 8.
வீரத்தைக் குறிப்பது __________________. விறகைத் தருவது __________________. (மரம், மறம்)
விடை:
வீரத்தைக் குறிப்பது மறம் . விறகைத் தருவது மரம் .
கேள்வி 9.
விடிந்த பின் வருவது __________________. வீரத்தால் அடங்குவது __________________. (காளை, காலை)
விடை:
விடிந்த பின் வருவது காலை . வீரத்தால் அடங்குவது காளை .
கேள்வி 10.
சான்றோர் வெறுப்பது __________________. சாலையில் கிடப்பது __________________. (கல், கள்)
விடை:
சான்றோர் வெறுப்பது கள் . சாலையில் கிடப்பது கல் .
வேறுபட்ட வண்ணத்தில் உள்ள எழுத்துகளைச் சேர்த்தால் கிடைக்கும் ஆடை வகைகளை எழுதுக.
பள்ளம் அரும்பு பார்த்திபன் ஆர்த்தி __________________
விடை:
பள்ளம் அரும்பு பார்த்திபன் ஆர்த்தி பருந்து
பருத்தி வட்டம் கசடு __________________
விடை:
பருத்தி வட்டம் கசடு பட்டு
கம்பு பம்பரம் அப்பம் தக்காளி __________________
விடை:
கம்பு பம்பரம் அப்பம் தக்காளி கம்பளி