Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 1 எண்கள் Ex 1.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 1 எண்கள் Ex 1.3

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) அருள் மொழி ஒரு நாளில் ₹ 12 சேமித்தால் 30 நாட்களில் ₹. சேமிப்பாள்
விடை:
360

(ii) A என்பவர் 12 நாட்களில் ₹1800 வருமானம் பெறுகிறார், எனில் ஒரு நாளில் ₹ ஐப் பெறுவார்.
விடை:
₹ 150

(iii) 45 – (7 + 8) – 2 =
விடை:
1

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.3

கேள்வி 2.
‘சரியா’? ‘தவறா’? எனக் கூறுக.
(i) 3 + 9 × 8 = 96
விடை:
தவறு

(ii) 7 × 20 – 4 = 136
விடை:
சரி

(iii) 40 + (56 – 6) + 2 = 45
விடை:
தவறு

கேள்வி 3.
கடந்த ஐந்து மாதங்களில் ஒரு குறிப்பிட்ட பொது நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை முறையே 1200, 2000, 2450, 3060 மற்றும் 3200 . ஐந்து மாதங்களில் அந்த நூலகத்திற்கு வருகை புரிந்தவர்கள் மொத்தம் எத்தனை பேர்?
விடை:
5 மாதங்களில் நூலகத்திற்கு வருகை புரிந்தவர்களின் எண்ணிக்கை
= 1200 + 2000 + 2450 + 3060 + 3200
= 11910

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.3

கேள்வி 4.
சேரன் வங்கியில் சேமிப்பாக ₹. 7,50,250 ஐ வைத்திருந்தார். கல்விச் செலவிற்காக ₹.5,34,500 ஐத் திரும்ப எடுத்தார். அவரின் கணக்கிலுள்ள மீதித் தொகையைக் காண்க?
விடை:
சேமிப்பு = ரூ7,50,250
திரும்ப எடுத்தது =ரூ 5,34,500
மீதித் தொகை = ரூ7,50,250 – ரூ5,34,500 – = ரூ2,15,750

கேள்வி 5.
ஒரு மிதிவண்டித் தொழிற்சாலையில், ஒரு நாளைக்கு 1560 மிதிவண்டிகள் உற்பத்தி செய்யப்பட்டன எனில், 25 நாட்களில் எத்தனை மிதி வண்டிகள் உற்பத்தி செய்யப் பட்ட ன.
விடை:
ஒரு நாளில் உற்பத்தி செய்யப்பட்ட மிதிவண்டிகள் = 1560
25 நாட்களில் உற்பத்தி செய்யப்பட்ட மிதிவண்டிகள் = 1560 × 25
= 39,000 மிதிவண்டிகள்

கேள்வி 6.
ஒரு நிறுவனம் புது ஆண்டிற்கான வெகுமதித் தொகையாக (போனஸ்) ₹. 62500 ஐ 25 ஊழியர்களுக்குச் சமமாகப் பங்கிட்டு வழங்கியது. ஒவ்வொருவரும் பெற்ற தொகை எவ்வளவு?
விடை:
மொத்த தொகை = ரூ 62500
ஊழியர்களின் எண்ணிக்கை = 25
ஒவ்வொருவரும் பெற்ற தொகை
= ரூ 62500 ÷ 25
= ரூ \(\frac{62500}{25}\) = ரூ 2500

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.3

கேள்வி 7.
சுருக்குக:
(i) (10 + 17) ÷ 3
(ii) 12 – [3 – {6 – (5 – 1)}]
(iii) 100 + 8 ÷ 2 + {(3 × 2) – 6 ÷ 2}
விடை:
(i) (10 + 17) ÷ 3
= 27 ÷ 3
= \(\frac{27}{3}\)
= 9

(ii) 12 – [3 – {6 – (5 – 1}}]
= 12 – [3 – {6 – 4)})
= 12 – [3 – 2]
= 12 – 1
= 11

(iii) 100 + 8 ÷ 2 + {{3 × 2) – 6 ÷ 2}
= 100 + 8 + 2 + {6 – 3}
= 100 + 8 ÷ 2 + 3
= 100 + 4 + 3
= 107

புறவய வினாக்கள்

கேள்வி 8.
3 + 5 – 7 × 1 இன் மதிப்பு
அ) 5
ஆ) 7
இ 8
ஈ)1
விடை:
ஈ) 1

கேள்வி 9.
24 – {8 – (3 × 2)} இன் மதிப்பு
அ) 0
ஆ) 12
இ 3
ஈ) 4
விடை:
ஆ) 12

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.3

கேள்வி 10.
BIDMAS ஐப் பயன்படுத்திச், சரியான குறியீட்டைக் கட்டத்தில் நிரப்புக 2 ______ 6 – 12 – (4 + 2) = 10
அ) +
ஆ) –
இ ×
ஈ) +
விடை:
இ)