Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.1
கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) ₹. 3 இக்கும் 1.5 இக்கும் உள்ள விகிதம்
விடை:
3: 5
(ii) 3 மீ இக்கும் 200 செமீ இக்கும் உள்ள விகிதம்
விடை:
3: 2
(iii) 5 கிமீ இக்கும் 400 மீ இக்கும் உள்ள விகிதம்
விடை:
9: 10
(iv) 75 பைசாவுக்கும் 1.2 இக்கும் உள்ள விகிதம்
விடை:
3: 8
கேள்வி 2.
கீழ்க்காணும் கூற்றுகள் சரியா? தவறா? எனக் கூறுக.
(i) 130 செமீ இக்கும் 1 மீ இக்கும் உள்ள விகிதம் 13:10.
விடை:
சரி
(ii) விகிதத்தின் ஏதேனும் ஓர் உறுப்பின் மதிப்பு 1 ஆக இருக்காது.
விடை:
தவறு
கேள்வி 3.
கீழ்க்காணும் விகிதங்களுக்கு எளிய வடிவம் காண்க.
(i) 15: 20
விடை:
15: 20 = \(\frac{15}{20}=\frac{3}{4}\) = 3: 4
(ii) 32: 24
விடை:
32: 24 = \(\frac{32}{24}=\frac{4}{3}\) = 4: 3
(iii) 7: 15
விடை:
7: 15
(iv) 12: 27
விடை:
12: 27 = \(\frac{12}{27}=\frac{4}{9}\) = 4: 9
(v) 75: 100
விடை:
75: 100 = \(\frac{75}{100}=\frac{3}{4}\) = 3: 4
கேள்வி 4.
அகிலன் 1 மணி நேரத்தில் 10 கிமீ) நடக்கிறான். செல்வி 1 மணி நேரத்தில் 6 கிமீ நடக்கிறாள் எனில், அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதத்தைச் சுருக்கிய வடிவில் காண்க.
விடை:
அகிலன் மற்றும் செல்வி நடந்த தொலைவுகளுக்கு உள்ள விகிதம் = 10: 6
= \(\frac{10}{6}=\frac{5}{3}\) = 5: 3
கேள்வி 5.
ஒரு மிதிவண்டியின் நிறுத்தக் கட்டணம் ₹5. மேலும், ஓர் இரு சக்கர வாகனத்தின் நிறுத்தக் கட்டணம் ₹15. மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகன நிறுத்தக் கட்டணங்களுக்கு இடையே உள்ள விகிதம் = ரூ.5; ரூ. 15
விடை:
மிதிவண்டி மற்றும் இருசக்கர வாகன நிறுத்தக் கட்டணங்களுக்கு இடையே உள்ள விகிதம் = ரூ.5: ரூ.15
= \(\frac{5}{15}=\frac{1}{3}\) = 1: 3
கேள்வி 6.
ஒரு வகுப்பில் உள்ள 50 மாணாக்கர்களில் 30 பேர் மாணவர்கள் எனில்,
(i) மாணவர்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணவிகளின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க.
விடை:
30: 50 = \(\frac{30}{50}\) = 3: 5
(ii) மாணவிகளின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க.
விடை:
20 : 50 = \(\frac{20}{50}\) = 2: 5
(iii) மாணவர்களின் எண்ணிக்கைக்கும் மொத்த மாணாக்கர்களின் எண்ணிக்கைக்கும் இடையேயுள்ள விகிதம் காண்க.
விடை:
30 : 20 = \(\frac{30}{20}\) = 3: 2
கேள்வி 7.
₹.1 இக்கும் 20 பைசாவுக்கும் உள்ள விகிதம் ……….
அ) 1:5
ஆ) 1:2
இ) 2:1
ஈ) 5:1
விடை:
ஈ) 5:1
கேள்வி 8.
1 மீ இக்கும் 50 செமீ இக்கும் உள்ள விகிதம் ………
அ) 1 : 50
ஆ) 50 : 1
இ) 2 :1
ஈ) 1 : 2
விடை:
இ) 2: 1
கேள்வி 9.
ஒரு சன்னலின் நீள அகலங்கள் முறையே 1 மீ மற்றும் 70 செமீ எனில் நீளத்திற்கும் அகலத்திற்கும் உள்ள விகிதம் ………
அ) 1: 7
ஆ) 7: 1
இ) 7: 10
ஈ) 10: 7
விடை:
ஈ) 10: 7
கேள்வி 10.
முக்கோணம் மற்றும் செவ்வகத்தின் பக்கங்களின் எண்ணிக்கைகளுக்கு இடையே உள்ள விகிதம் ……
அ) 4: 3
ஆ) 3: 4
இ) 3: 5
ஈ) 3: 2
விடை:
ஆ) 3: 4
கேள்வி 11.
அழகனின் வயது 50 மற்றும் அவரது மகனின் வயது 10 எனில் அழகன் மற்றும் அவரது மகனின் வயதுக்கான விகிதத்தின் எளிய வடிவம்
அ) 10: 50
ஆ) 50: 10
இ) 5: 1
ஈ) 1: 5
விடை:
இ) 5: 1