Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.4

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.4 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.4

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) 3 எழுதுகோல்களின் விலை 18 எனில், 5 எழுதுகோல்களின் விலை . விடை:
ரூ 30

(ii) 15 நாள்களில் கார்குழலி 1800 ஐ வருமானமாகப் பெறுகிறார் எனில், ₹3000 ஐ – நாள்களில் வருமானமாகப் பெறுவார்.
விடை:
25

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.4

கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) 40 நூல்களின் எடை 8கிகி எனில், 15 நூல்களின் 2 எடை 3 கிகி.
விடை:
சரி

(ii) சீரான வேகத்தில், ஒரு மகிழுந்து 3 மணி நேரத்தில் 90 கிமீ எனப் பயணிக்கிறது. அதே வேகத்தில், 5 மணி நேரத்தில் அது 140 கி.மீ தொலைவைப் பயணிக்கும்.
விடை:
தவறு

கேள்வி 3.
ஒரு நபர் 2 மணி நேரத்தில் 20 பக்கங்களைப் படிக்கிறார் எனில் அதே வேகத்தில் 8 மணி நேரத்தில் அவரால் எத்தனை பக்கங்கள் படிக்க
விடை:
2 மணி நேரத்தில் படிக்கக்கூடிய பக்கங்கள் = 20
8 மணி நேரத்தில் படிக்கக்கூடிய பக்கங்கள் =
2 : 8 = 20 : x
2 × x = 8 × 20
x = \(\frac{8 \times 20}{2}\)
x = 80

கேள்வி 4.
15 நாற்காலிகளின் விலை 7500. இதுபோன்று 12,000 க்கு எத்தனை நாற்காலிகள் வாங்க இயலும் எனக் காண்க.
விடை:
ஒரு நாற்காலியின் விலை = ரூ \(\frac{7500}{15}\) = ரூ. 500
எனவே, ரூ. 12000க்கு வாங்கக்கூடிய நாற்காலிகளின் எண்ணிக்கை
= \(\frac{12000}{500}\) = 24

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.4

கேள்வி 5.
ஒரு மகிழுந்து 5 கிகி எரிபொருள் (LPG) வாயுவைப் பயன்படுத்தி 125 கிமீ தொலைவு கடக்கிறது. 3 கிகி எரிபொருள் பயன்படுத்தினால் எவ்வளவு தொலைவு கடக்கும்?
விடை:
5 கிகி எரிபொருளில், கடந்த தூரம் = 125 கிமீ
1 கிகி எரிபொருளில். கடந்த தூரம் = \(\frac{125}{5}\) = 25கிமீ
3 கிகி எரிபொருளில் கடந்த தூரம் = 3 × 25 கிமீ = 75 கிமீ

கேள்வி 6.
சோழன் சீரான வேகத்தில் நடந்து 6 கிமீ தொலைவை 1 மணி நேரத்தில் கடக்கிறார். அதே வேகத்தில் அவர் 20 நிமிடங்களில் நடந்து கடக்கும் தொலைவு எவ்வளவு?
விடை:
1 மணி நேரத்தில் (60 நிமிடங்கள்) கடந்த தூரம் = 6கிமீ
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.4 1
20 நிமிடங்களில், கடந்த தூரம் = 20 × 100 மீ = 2000 மீ = 2 கிமீ

கேள்வி 7.
ஒரு வினாடி வினா போட்டியில் கார்முகிலன் மற்றும் கவிதா வழங்கிய சரியான விடைகளின் எண்ணிக்கையின் விகிதம் 10 : 11. அப்போட்டியில் அவர்கள் மொத்தமாக 84 புள்ளிகள் பெற்றனர் எனில், கவிதா பெற்ற புள்ளிகள் எத்தனை?
விடை:
பெற்ற மொத்தப் புள்ளிகள் = 84
விகிதம் = 10 : 11
விகிதங்களின் கூடுதல் = 10 + 11 = 21
21 பங்குகள் = 84 புள்ளிகள்
1 பங்கு = \(\frac{84}{21}\) = 4 புள்ளிகள்
கவிதா = 11 பங்குகள், கார்முகிலன் = 10 பங்குகள்
கவிதா பெற்ற புள்ளிகள் = 11 × 4
= 44 புள்ளிகள்

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.4

கேள்வி 8.
கார்மேகன் 9 ஓவர்களில் 54 ஓட்டங்களையும், ஆசி∴ப் 11 ஒவர்களில் 77 ஓட்டங்களையும் எடுத்தார்கள் எனில், யாருடைய ஒட்ட விகிதம் சிறப்பானது? (ஒட்ட விகிதம் = ஒட்டம் ÷ ஓவர்)
விடை:
கார்மேகம்
9 ஓவர்களில் எடுத்த ஓட்டங்கள் = 54
1 ஓவரில் எடுத்த ஓட்டங்கள் = \(\frac{54}{9}\) = 6 ஓபடங்கள் ஆசி∴ப்
11 ஓவர்களில் எடுத்த ஓட்டங்கள் = 77
1 ஓவரில் எடுத்த ஓட்டங்கள் = \(\frac{77}{11}\) = 7 ஓட்டங்கள்
∴ ஆசி∴ப்பின் ஓட்ட விகிதம் சிறப்பானது.

கேள்வி 9.
உன் நண்பன் 5 ஆப்பிள்களை 70) இக்கும், நீ 6 ஆப்பிள்களை 90 இக்கும் வாங்கினால் யார் வாங்கியது சிறப்பு ?
விடை:
நான் வாங்கியது
6 ஆப்பிள்களின் விலை = ரூ 90
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.4 2
நண்பன் வாங்கியது
5 ஆப்பிள்களின் விலை = ரூ70
Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.4 3
∴ நண்பன் வாங்கியது சிறப்பு.

புறவய வினாக்கள்

கேள்வி 10.
ஒரு மரப்பாச்சிப் பொம்மையின் விலை ₹ 90 அதே போன்று 3 பொம்மைகளின் விலை ……..
அ) ₹. 260
ஆ) ₹.270
இ) ₹. 30
ஈ) ₹. 93
விடை:
ஆ) ₹.270

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 3 விகிதம் மற்றும் விகித சமம் Ex 3.4

கேள்வி 11.
8 ஆரஞ்சுகளின் விலை ரூ. 56 எனில், 5 புள்ளிகள் ஆரஞ்சுகளின் விலை …………
அ) 42
ஆ) 48
இ 35
ஈ) 24
விடை:
இ 35

கேள்வி 12.
ஒரு நபர் 15 நிமிடங்களில் 2 கி.மீ நடக்கிறார் எனில், 45 நிமிடங்களில் அவர்.
அ) 10 கி.மீ
ஆ) 8 கி.மீ
இ) 6 கி.மீ
ஈ) 12கி.மீ
விடை:
இ 6 கி.மீ