Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.3 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 1 Chapter 5 புள்ளியியல் Ex 5.3
கேள்வி 1.
பிருந்தா வெவ்வேறு பாடங்களின் அடைவுத்தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்களின் விழுக்காடு பட்டை வரைபடமாகத் தரப்பட்டுள்ளது.
பட்டை வரைபடத்தை உற்றுநோக்கிப் பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) செங்குத்துக்கோட்டில் 1 அலகு = _____________ % மதிப்பெண்கள்.
விடை:
10
(ii) பிருந்தா _____________ பாடத்தில் மிகவும் அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள்.
விடை:
கணக்கு
(iii) பிருந்தா _____________ பாடத்தில் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளாள்.
விடை:
மொழிப்பாடம்
(iv) அறிவியல் பாடத்தில் பிருந்தா பெற்ற மதிப்பெண் விழுக்காடு __________.
விடை:
65%
(v) __________ பாடத்தில் பிருந்தா 60% மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
விடை:
ஆங்கிலம்
(vi) பிருந்தா _____________ பாடத்தை விட _____________ பாடத்தில் 20% அதிக மதிப்பெண் பெற்றுள்ளாள்.
விடை:
கணக்கு, அறிவியல்
கேள்வி 2.
சித்ரா லட்டுகள் வாங்கிக் கீழ்க்கண்டவாறு வகுப்பு வாரியாகத் தன் நண்பர்களுக்கு வழங்குகிறாள்.
இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரைபடம் வரைக.
விடை:
சித்ரா தன் நண்பர்களுக்கு வாங்கிக் கொடுத்த லட்டுகள்
அளவுத்திட்டம் : 1 அலகு = 10 லட்டுகள்
கேள்வி 3.
ஒரு வகுப்பில் உள்ள மாணவர்கள் விரும்பும் பழ வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்த தரவுகளுக்குப் பட்டை வரைபடம் வரைக.
விடை:
வகுப்பு வாரியாக மாணவர்கள் விரும்பும் பழ வகைகள்
அளவுத்திட்டம் 1 அலகு = 2 பழங்கள்
கேள்வி 4.
பின்வரும் பட விளக்கப்படத்தில் ஒரு வாரத்தில் வெவ்வேறு நாட்களில் ஆறாம் வகுப்பு மாணவர்களில் பள்ளிக்கு வருகை புரியாதவர்களின் எண்ணிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தரவுகளுக்குப் பட்டை வரைபடம் அமைக்க.
விடை:
ஆறாம் வகுப்பு மாணவர்களில் பள்ளிக்கு வருகை புரியாதவர்களின் எண்ணிக்கை.
அளவுத்திட்டம் : 1 அலகு = 2 மாணவர்கள்
கேள்வி 5.
ஒரு பட்டை வரைபடமானது பின்வருவனவற்றுள் எதனைக் கொண்டிருக்கும்?
அ) கிடைமட்டப் பட்டைகள் மட்டும் உடையது
ஆ) செங்குத்துப் பட்டைகள் மட்டும் உடையது
இ) கிடைமட்ட மற்றும் செங்குத்துப்பட்டைகள் எனும் இரண்டையும் உடையது
ஈ) கிடைமட்ட அல்லது செங்குத்துப்பட்டைகள் இரண்டில் எதேனும் ஒன்றை உடையது
விடை:
(ஈ) கிடைமட்ட அல்லது செங்குத்துப்பட்டைகள் இரண்டில் எதேனும் ஒன்றை உடையது
கேள்வி 6.
பட்டை வரைபடத்தில் உள்ள பட்டைகளின் இடைவெளியானது _____________ .
அ) வெவ்வேறாக இருக்கும்
ஆ) சமமாக இருக்கும்
இ) சமமாக இருக்காது
ஈ) இவை அனைத்தும்
விடை:
ஆ) சமமாக இருக்கும்