Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 2 Chapter 3 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் Ex 3.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 2 Chapter 3 பட்டியல், இலாபம் மற்றும் நட்டம் Ex 3.2
பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்
Question 1.
ஒரு விற்பனையாளர் மூன்று பொருட்களை ₹ 325, ₹ 450 மற்றும் ₹ 510என வாங்குகிறார். அவற்றை முறையே ₹ 350, ₹ 425 மற்றும் ₹ 525 என விற்பனை செய்கிறார். அவருடைய மொத்த இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை :
மூன்று பொருட்களின் மொத்த அடக்க விலை
= ரூ 325 + ரூ 450 + ரூ510 = ரூ 1285
மூன்று பொருட்களின் மொத்த விற்பனை விலை
= ரூ 350 + ரூ 425 + ரூ 525 = ரூ 1,300
அடக்க விலை < விற்பனை விலை
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
= ரூ 1,300 – ரூ 1,285 = ரூ 15
Question 2.
ஒரு பல்பொருள் அங்காடி விற்பனையாளர் ₹ 750 க்கு ஒரு கணிப்பானை வாங்கினார். அதனுள் ₹ 100மதிப்புள்ள மின்கலம் பொருத்தினார். இதன் வெளி உறைக்காக ₹ 50 செலவிட்டார். அதை ₹ 850 க்கு அவரால் விற்பனை செய்ய முடிந்தது எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை :
அடக்க விலை = ரூ750 + ரூ 100 + ரூ50 = ரூ 900
விற்பனை விலை = ரூ 850
விற்பனை விலை < அடக்க விலை
நட்டம் = அடக்க விலை – விற்பனை விலை
= ரூ 900 – ரூ 850
நட்டம் = ரூ 50
Question 3.
நாதன் ஒரு கிராமத்து விற்பனையாளரிடமிருந்து ₹ 800 க்கு 10 குடுவைகள் தேன் வாங்கினார். அவற்றை ஒரு நகரத்தில் ஒரு குடுவை ₹ 100 வீதம் விற்பனை செய்தார். அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை :
10 குடுவைகள் தேனின் அடக்கவிலை = ரூ 800
அடக்க விலை = ரூ 800
10 குடுவைகள் தேனின் விற்பனை விலை = ரூ 100 × 10
விற்பனை விலை = ரூ 1000
விற்பனை விலை > அடக்க விலை
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
= ரூ 1,000 – ரூ 800 = ரூ 200
Question 4.
ஒருவர் 400 மீட்டர் நீளமுள்ள துணியை ₹ 60,000 க்கு வாங்கி, ஒரு மீட்டர் ₹ 400 வீதம் விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை :
400 மீ நீளமுள்ள துணியின் அடக்க விலை = ரூ 60,000
அடக்க விலை = ரூ 60,000
400 மீ துணியின் விற்பனை விலை = 400 × ரூ
400 விற்பனை விலை = ரூ 1,60,000
விற்பனை விலை > அடக்க விலை
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
= ரூ 1,60,000 – ரூ 60,000
= ரூ 1,00,000
மேற்சிந்தனைக் கணக்குகள்
Question 5.
ஒரு வியாபாரி ஒரு டசன் ரூ 20 வீதம் 2 டசன் வாழைப்பழங்கள் வாங்கினார். ஒரு வாழைப்பழம் ரூ 30 வீதம் அவற்றை விற்பனை செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை :
2 டசன் வாழைப்பழங்களின்
அடக்கவிலை = 2 × ரூ 20
அடக்க விலை = ரூ 40
2 டசன் = 24 வாழைப்பழங்கள்
2 டசன் வாழைப்பழங்களின்
விற்பனை விலை = ரூ 3 × 24
விற்பனை விலை = ரூ 72
விற்பனை விலை > அடக்க விலை
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
= ரூ72 – ரூ 40 = ரூ 32
Question 6.
ஒரு விற்பனை நிலையம் ஒரு டசன் பேனாக்களை ரூ. 216 க்கு வாங்கியது. மேலும் சில்லரை செலவாக ரூ.58 செலவு செய்தது. பின்பு ஒரு பேனாவிற்கு ரூ.2 குறைத்து விற்பனை செய்ததில் இலாபம் ரூ. 50 கிடைத்தது எனில் ஒரு பேனாவின் குறித்த விலை எவ்வளவு?
விடை :
1 டசன் பேனாக்களின் அடக்க விலை = ரூ 216 + ரூ 58
அடக்க விலை = ரூ 274
ஒவ்வொரு பேனாவுக்கும் தள்ளுபடி = ரூ 2
ஒட்டு மொத்த இலாபம் = ரூ 50
12 பேனாக்களுக்கும் மொத்த தள்ளுபடி = ரூ 2 × 12 = ரூ 24
12 பேனாக்களின் விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
விற்பனை விலை = குறித்த விலை – ரூ24
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
ரூ50 = குறித்த விலை – ரூ 24 – ரூ274
குறித்த விலை = ரூ 50 + ரூ 24 + ரூ 274 = ரூ 348 (1 டசன்)
ஒரு பேனாவின் குறித்த விலை = ரூ \(\frac{348}{12}\)
= ரூ \(\frac{174}{6}\) = ரூ 29
Question 7.
ஒரு காய்கறி விற்பனையாளர் ஒரு வாரத்தின் முதல் மூன்று நாட்களில் ஒரு நாளுக்குக் கிலோ ஒன்றுக்கு ₹ 10 வீதம் 10 கி.கி தக்காளி வாங்கினார். இந்த 3 நாட்களில் நாள் ஒன்றுக்கு 1 கி.கி தக்காளி நசுங்கிவிட்டது. வாரத்தின் மீதமுள்ள 4 நாட்களில் தினமும் கிலோ ரூ 8 ஒன்றுக்கு வீதம் 15 கி.கி தக்காளி வாங்கினார். வாரம் முழுவதிலுமே ஒரு கி. கிதக்காளி ₹ 20 வீதம் விற்பனை செய்கிறார் எனில் அந்த வாரத்தின் அவரது இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை :
முதல் 3 நாட்கள்
முதல் நாளில் வாங்கிய தக்காளியின் எடை= 10 கிகி
3 நாட்களில் வாங்கிய தக்காளியின்
மொத்த எடை = 3 × 10 கிகி = 30 கிகி
30 கிகி தக்காளியின் அடக்க விலை = ரூ 10 × 30 = ரூ 300
அடுத்த 4 நாட்கள்
முதல் நாளில் வாங்கிய தக்காளியின் எடை= 15 கிகி
4 நாட்களில் வாங்கிய தக்காளியின் எடை = 4 × 15 கிகி = 60 கிகி
60 கிகி தக்காளியின் அடக்க விலை = ரூ8 × 60 = ரூ 480
மொத்த அடக்க விலை = ரூ 300 + ரூ 480 = ரூ 780
முதல் 3 நாட்களில் நசுங்கிய தக்காளியின் எடை = 3 × 1 கிகி = 3 கிகி
மீதமுள்ள தக்காளியின் எடை = (30 – 3) கிகி = 27 கிகி
அந்த வாரத்தில் மீதம் இருக்கின்ற
தக்காளியின் எடை = (27 + 60) கிகி = 87 கிகி
1 கிகி தக்காளியின் விற்பனை விலை = ரூ 20
87 கிகி தக்காளியின் விற்பனை விலை = ரூ 20 × 87
விற்பனை விலை = ரூ 1,740
விற்பனை விலை > அடக்க விலை
இலாபம் = விற்பனை விலை – அடக்கவிலை = ரூ 1,740 – ரூ 780 = ரூ 960
Question 8.
ஒரு எலக்ட்ரீசியன் பயன்படுத்தப்பட்ட தொலைக் காட்சிப் பெட்டி ஒன்றையும், குளிர்சாதனப் பெட்டி ஒன்றையும் முறையே ₹ 12,000 க்கும், ₹11,000க்கும் வாங்கினார். தொலைக்காட்சிப் பெட்டியைச் சரி செய்ய ₹ 1000 உம், குளிர்சாதனப் பெட்டிக்கு வண்ணம் செய்ய ₹1500 உம் செலவு செய்த பின் தொலைக்காட்சி பெட்டிக்கு ₹ 15,000 மற்றும் குளிர் சாதனப் பெட்டிக்கு ₹ 15,500 என விலை நிர்ணயம் செய்தார். இவை ஒவ்வொன்றுக்கும் ரூ. ₹ 1000 தள்ளுபடி செய்தார் எனில் அவருடைய இலாபம் அல்லது நட்டம் காண்க.
விடை :
தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குளிர்சாதனப்
பெட்டியின் மொத்த அடக்க விலை = ரூ 12,000 + ரூ 11,000 + ரூ 1,000 + ரூ 1,500 = ரூ 25,500
தொலைக்காட்சிப் பெட்டியின் விற்பனை விலை = குறித்த விலை – தள்ளுபடி
= ரூ 15,000 – ரூ1,000 = ரூ 14,000
குளிர்சாதனப் பெட்டியின் விற்பனை விலை
= குறித்த விலை – தள்ளுபடி
= ரூ 15,500 – ரூ 1,000 = ரூ 14,500
தொலைக்காட்சிப் பெட்டி மற்றும் குளிர்சாதனப் பெட்டியின் மொத்த விற்பனை விலை
= ரூ 14,000 + ரூ 14,500 = ரூ28,500
விற்பனை விலை > அடக்க விலை
இலாபம் = விற்பனை விலை – அடக்க விலை
= ரூ28,500 – ரூ 25,500 = ரூ 3,000