Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.2

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.2 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.2

Question 1.
AB = 7 செ.மீ. அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைந்து கோட்டுத்துண்டின் மீது P என்ற புள்ளியைக் குறிக்கவும். P வழியே AB கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.2 1

படி 1 :
AB = 7 செ.மீ என்ற கோடு வரைந்து, கோட்டின் மீது P என்ற புள்ளியைக் குறிக்க

படி 2 :
மூலைமட்டத்தின் செங்கோணம் உருவாக்கும் முனையானது P என்ற புள்ளியிலும் மற்றும் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் AB என்ற கோட்டின் மீதும் பொருத்துக.

படி 3 :
மூலைமட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் மற்றொரு பக்கத்தின் விளிம்பை ஒட்டி P என்ற புள்ளியிலிருந்து PQ என்ற கோடு வரைக.

படி 4 :
கோடு PQ ஆனது AB-க்குச் செங்குத்துக் கோடாகும். அதாவது PQ ⊥ AB மற்றும் ∠APQ = ∠BPQ = 90°.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.2

Question 2.
LM = 6.5 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டின் மீது அமையாதவாறு (மேலே/கீழே) X என்ற புள்ளியைக் குறிக்க. மூலைமட்டத்தைப் பயன்படுத்தி X வழியே LM கோட்டுத்துண்டிற்குச் செங்குத்துக்கோடு வரைக.
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.2 2

படி 1 :
LM = 6.5 செ.மீ என்ற கோடு வரைக. கோடு – LM விற்கு மேலே X என்ற புள்ளியைக் குறிக்க.

படி 2 :
மூலைமட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் LM கோட்டின் மீதும் மற்றொரு பக்கம் X என்ற புள்ளியைத் தொடுமாறும் படத்தில் காட்டியுள்ளவாறு அமைக்க.

படி 3 :
மூலைமட்டத்தின் மற்றொரு விளிம்பை ஒட்டி X இன் வழியே கோடு LM ஐ Y இல் சந்திக்குமாறு ஒரு கோடு வரைக.

படி 4 :
கோடு XY ஆனது LM க்குச் செங்குத்துக் கோடாகும். அதாவது XY ⊥ LM.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.2

Question 3.
கொடுக்கப்பட்ட ஒவ்வொரு சோடி கோடுகளுக்கும் இடையேயான தொலைவை இரு வேறு புள்ளிகளில் மூலைமட்டத்தைப் பயன்படுத்திக் கண்டறிக. அவை இணைகோடுகளா? என்பதைச் சோதித்தறிக.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.2 3

விடை:
ஆம். இணைகோடுகள் –

Question 4.
7.8 செ.மீ அளவில் ஒரு கோட்டுத்துண்டு வரைக. கோட்டுத்துண்டிற்கு மேலே 5 செ.மீ தூரத்தில் B என்ற புள்ளியைக் குறிக்க. B வழியே கோட்டுத் துண்டிற்கு இணைகோடு வரைக ‘
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.2 4

படி 1 :
MN = 7.8செ.மீ அளவுள்ள ஒரு கோட்டுத்துண்டு வரைந்து MN க்கு மேலே B என்ற புள்ளியைக் குறிக்க..

படி 2 :
கோட்டுத்துண்டு MN இன் கீழாக மூலை மட்டத்தைப் பொருத்துக. மூலைமட்டத்தின் மற்றொரு விளிம்பை ஒட்டி அளவுகோலைப் பொருத்துக.

படி 3 :
அளவுகோலை நகர்த்தாமல் மூலைமட்டத்தை B என்ற புள்ளி வரை நகர்த்துக. மூலைமட்டத்தின் விளிம்பை ஒட்டி B வழியாக AB என்ற கோடு வரைக.

படி 4 :
கோடு MN ஆனது AB-க்கு இணைக் கோடாகும். அதாவது MN || AB.

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.2

Question 5.
ஒரு கோடு வரைக. கோட்டிற்கு மேலே 5.4 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க. R வழியே அக்கோட்டிற்கு இணைகோடு வரைக.
விடை :

Samacheer Kalvi 6th Maths Guide Term 2 Chapter 4 வடிவியல் Ex 4.2 5

படி 1 :
அளவுகோலைப் பயன்படுத்தி AB என்ற கோடு வரைக. கோட்டின் மீது Q என்ற புள்ளியைக் குறிக்க.

படி 2:
மூலை மட்டத்தின் செங்கோணத்தை உருவாக்கும் ஒரு பக்கம் AB என்ற கோட்டின் மீதும், செங்கோணத்தை உருவாக்கும் முனை Q என்ற புள்ளியிலும் படத்தில் காட்டியுள்ளவாறு அமைக்க. Qவிலிருந்து 5.4 செ.மீ தூரத்தில் R என்ற புள்ளியைக் குறிக்க.

படி 3:
அளவுகோல் மற்றும் மூலைமட்டத்தைப் படத்தில் காட்டியவாறு பொருத்துக.

படி 4 :
அளவுகோலை நகர்த்தாமல் மூலைமட்டத்தை R என்ற புள்ளி வரை நகர்த்துக. மூலைமட்டத்தின் விளிம்பை ஒட்டி R வழியே RS என்ற கோடு வரைக.

படி 5 :
RS ஆனது AB என்ற கோட்டிற்கு இணைகோடாகும். RS ||AB.