Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 3 Chapter 2 முழுக்கள் Ex 2.2 Textbook Questions and Answers, Notes.
TN Board 6th Maths Solutions Term 3 Chapter 2 முழுக்கள் Ex 2.2
பல்வகைத் திறனறிப் பயிற்சிக் கணக்குகள்
கேள்வி 1.
-3 என்ற முழுவைக் குறிப்பிடும் இரு வேறு அன்றாடச் சூழல்களை எழுதுக.
விடை:
i) 3மீ ஆழத்தில் மரக்கன்று நடப்பட்டுள்ளது.
ii) 3 மீ ஆழமுள்ள ஒரு பள்ளம்
கேள்வி 2.
பின்வரும் எண்களை எண்கோட்டில் குறிக்கவும்.
(i) -7 ஐ விடப் பெரியதும் 7 ஐ விடக் குறைவானதுமான முழுக்கள்.
விடை:
(ii) 3 என்ற முழுவின் எதிரெண்.
விடை:
(iii) -1 இன் இடதுபுறம் 5 அலகுகள் தொலைவில் உள்ள ஓர் எண்.
விடை:
கேள்வி 3.
தரைமட்டத்திலிருந்து 10அடி ஆழத்தையும் அதன் எதிரெண்ணையும் குறிக்குமாறு ஓர் எண்கோட்டினை வரைக.
விடை:
கேள்வி 4.
-6 இலிருந்து, 8 அலகுகள் தொலைவில் இருக்கும் முழுக்களை அடையாளம் கண்டு, எண்கோட்டில்குறிக்கவும்.
விடை:
கேள்வி 5.
கீழேயுள்ள எண்கோட்டிலிருந்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) எது பெரிய முழு : G அல்லது K? ஏன்?
விடை:
K (-1)
(ii) C ஐக் குறிக்கும் முழு எது?
விடை:
-4
(iii) G மற்றும் H இக்கு இடையே எத்தனை முழுக்கள் உள்ளன?
விடை:
6
(iv) எதிரெண் முழுக்களுடைய சோடி எழுத்துக்களைக் காண்க.
விடை:
2 சோடிகள்
(v) D இன் இடதுபுறம் 6 அலகுகளில் உள்ள எண் -6 சரியா? தவறா? விடை:
தவறு
கேள்வி 6.
G ஆனது எண் 3ஐயும், C ஆனது எண் – 1 ஐயும் குறிக்கும் எனில், பின்வரும் எண்கோட்டில் A மற்றும் Kஆனது எந்த முழுக்களைக் குறிக்கும்?
விடை:
A (-3), K (7)
கேள்வி 7.
எண்கோட்டில் இன் இடதுபுறம் 4 அலகுகளும்,-3 இன் வலதுபுறம் 2 அலகுகளும் உள்ள முழுக்களைக் காண்க.
விடை:
-4, -1
மேற்சிந்தனைக் கணக்குகள்
கேள்வி 8.
முழுக்கள் தொகுப்பில் மிகச்சிறிய எண் மற்றும் மிகப்பெரிய எண் உள்ளதா? காரணம் கூறுக.
விடை:
இல்லை. எண் கோட்டினை இருபுறமும் முடிவின்றி விரிவாக்கம் செய்யலாம். எனவே, மிகச்சிறிய எண்ணையும் மிகப்பெரிய எண்ணையும் காண இயலாது.
கேள்வி 9.
செல்சியஸ் தெர்மோமீட்டரைப் பார்த்து, பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்கவும்.
(i) வெப்பமானி காட்டும் வெப்பநிலை அளவு என்ன?
விடை:
– 10°C
(ii) வெப்பமானியில் 0°C இக்குக் கீழே 5 C ஐ எங்கு குறிப்பாய்?
விடை:
– 5°C
(iii) வெப்பமானியில் உள்ள வெப்பநிலையை 10°C குறைத்தால் வெப்பமானி காட்டும் வெப்பநிலை என்ன?
விடை:
-20°C
(iv) வெப்பமானியில் 15°C இக்கு எதிரெண்ணைக் குறிக்கவும்.
விடை:
– 15°C
கேள்வி 10.
P, Q, R மற்றும் S ஆகியன ஒர் எண்கோட்டில் உள்ள நான்கு வெவ்வேறு முழுக்களைக் குறிக்கும். பின்வரும் குறிப்புகளைப் பயன்படுத்தி
இந்த முழுக்களைக் கண்டு, அவற்றை ஏறுவரிசையில் எழுதவும்.
(i) S ஆனது கொடுக்கப்பட்ட முழுக்களில் மிகச் சிறியதாகும்.
(ii)R ஆனது மிகச்சிறிய மிகை முழு ஆகும்.
(iii) முழுக்கள் P மற்றும் S ஆனது 0 இலிருந்து சமதூரத்தில் உள்ளன.
(iv) Q ஆனது முழு R இன் இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.
விடை:
S < Q < 0 < R < P
கேள்வி 11.
வீடு (0) என்பதனைத் தொடக்கப் புள்ளியாகக் கொண்டு, பின்வரும் இடங்களை எண்கோட்டில் வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளின்படி குறித்து, அதற்குரிய முழுக்களை எழுதுக.
வீடு
இடங்கள்: வீடு, பள்ளி, நூலகம், விளையாட்டுத்திடல், பூங்கா, பல்பொருள் அங்காடி, பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிலையம், அஞ்சலகம், மின்சார அலுவலகம்.
குறிப்புகள்:
(i) பேருந்து நிறுத்தம், வீட்டிற்கு வலதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
விடை:
3
(ii) நூலகம், வீட்டிற்கு இடதுபுறம் 2 அலகுகள் தொலைவில் உள்ளது.
விடை:
– 2
(iii) பல்பொருள் அங்காடி, வீட்டிலிருந்து இடதுபுறமாக 6 அலகுகள் தொலைவில் உள்ளது.
விடை:
– 6
(iv) அஞ்சலகம், நூலகத்தின் வலதுபுறம் ஓர் அலகு தொலைவில் உள்ளது.
விடை:
– 1
(v)பூங்கா, பல்பொருள் அங்காடிக்கு வலது புறம் 1 அலகு தொலைவில் உள்ளது.
விடை:
– 5
(vi) தொடர்வண்டி நிலையம், அஞ்சலகத்தின் இடதுபுறம் 3 அலகுகள் தொலைவில் உள்ளது.
விடை:
– 4
(vii) பேருந்து நிறுத்தம், தொடர்வண்டி நிறுத்தத்திலிருந்து வலதுபுறம் 8 அலகுகள் தொலைவில் உள்ளது.
விடை:
4
(viii) பள்ளியானது, பேருந்து நிறுத்தத்தை அடுத்து வலது புறத்தில் உள்ளது.
விடை:
4
(ix) விளையாட்டுத் திடலும், நூலகமும் ஒன்றுக்கொன்று எதிரெதிரே உள்ளன.
விடை:
5
(x) மின்சார அலுவலகமும், பல்பொருள் அங்காடியும் வீட்டிலிருந்து சம தொலைவில் அமைந்துள்ளன.
விடை:
2
கேள்வி 12.
பின்வரும் குறிப்புகளைக் கொண்டு அட்டவணையை நிறைவு செய்க.
C1 : முதல் குறையற்ற முழு எண்
C3 : இரண்டாம் குறை எண்ணின் எதிரெண்
C5 : முழு எண்களின் கூட்டல் சமனி
C6: C2 இல் உள்ள முழுவின் தொடரி
C8 : C7 இல் உள்ள முழுவின் முன்னி.
C9: C5 இல் உள்ள முழுவின் எதிரெண்
விடை:
(i) C1 : (0)
(ii) C3 : (2)
(iii) C5 : (0)
(iv) C6 (-4)
(v) C8 (-8)
(vi) C9 (0)
கேள்வி 13.
கீழே உள்ள பட்டை வரைபடமானது, ஒரு சிறு வர்த்தக நிறுவனத்தின் 2011 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையிலான இலாபம் (+) மற்றும் நட்டத்தை (-) விளக்குகிறது.
(i) 2014 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபமா, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.
விடை:
+45
(ii) 2016 ஆம் ஆண்டில் நிறுவனத்திற்கு இலாபமா, நட்டமா என்பதைக் குறிக்கும் முழுவினை எழுதுக.
விடை:
0
(iii) 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தை முழுக்களால் எழுதுக.
விடை:
-10 மற்றும் – 20
(iv) 2012 ஆம் ஆண்டில் நிறுவனத்தின் நட்டம் மிகக் குறைவாக உள்ளது. இக்கூற்று சரியா? தவறா?
விடை:
தவறு
(v) நிரப்புக. 2011 ஆம் ஆண்டில் உள்ள நட்டமும், 2013 ஆம் ஆண்டில் உள்ள இலாபமும் …………
விடை:
சமம்