Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.4 Textbook Questions and Answers, Notes.
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 1 எண்ணியல் Ex 1.4
கேள்வி 1.
கொடுக்கப்பட்ட வகுத்தல் கூற்றுகளை நிறைவு செய்க.
(i) (-40) ÷ _______ = 40
விடை:
– 1
(ii) 25 ÷ _______ = -5
விடை:
– 5
(iii) _______ ÷ (-4) = 9
விடை:
– 36
(iv) (-62) ÷ (-62) = _______
விடை:
1
கேள்வி 2.
சரியா, தவறா எனக் கூறுக.
(i) (-30) ÷ (-6) = -6
விடை:
தவறு
(ii) (-64) ÷ (-64) என்பது 0
விடை:
தவறு
கேள்வி 3.
பின்வருவனவற்றின் மதிப்பைக் காண்க.
(i) (-75) ÷ 5
விடை:
\(\frac{-75}{5}\) = – 15
(ii) (-100) ÷ (-20)
விடை:
\(\frac{-100}{-20}\) = 5
(iii) 45 ÷ (-9)
விடை:
\(\frac{45}{-9}\) = – 5
(iv) (-82) ÷ 82
விடை:
\(\frac{-82}{82}\) = – 1
கேள்வி 4.
இரு முழுக்களின் பெருக்கற்பலன் -135. அதில் ஓர் எண் -15 எனில், மற்றொரு எண்ணைக் காண்க.
தீர்வு:
மற்றொரு எண் x என்க.
இரு முழுக்களின் பெருக்கற்பலன் =-135
ஒரு எண் × மற்றாரு எண் = -135
(-15) × x = 135
x = \(\frac{-135}{-15}\)
x = 9
கேள்வி 5.
ஓர் இடத்தில் வெப்பம் சீராகக் குறைகிறது. மேலும் 8 மணிநேர இடைவெளியின்போது, வெப்பம் 24°C. குறைந்தது எனில், ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் குறைந்த வெப்பத்தின் அளவு என்ன?
தீர்வு:
ஒவ்வொரு மணி நேர இடைவெளியிலும் குறைந்த வெப்பத்தின் அளவு X என்க.
வெப்பத்தின் அளவு × நேரம் = வெப்பநிலை
x × 8 = 24°C
x = \(\frac{24^{\circ} \mathrm{C}}{8}\) = 3°C
கேள்வி 6.
ஒரு மின்தூக்கி (Elevator) சுரங்க வாயிற்குழியில் 5மீ / நிமிடம் . என்ற வீதத்தில் கீழ்நோக்கிச் செல்கிறது. தரைமட்டத்திலிருந்து மேலே 15 மீட்டரிலிருந்து மின்தூக்கி செயல்படுகிறது எனில், – 250 மீட்டர் கீழ் நோக்கிச் செல்ல ஆகும் நேரம் எவ்வளவு?
தீர்வு:
வேகம் = 5மீ/நிமிடம்
தூரம் = 15 மீ – (-250 மீ)
= 15 + 250 = 265 மீ
நேரம் × வேகம் = தூரம்
நேரம் × 5 = 265
நேரம் = \(\frac{265}{5}\) = 53
கீழ்நோக்கிச் செல்ல 53 நிமிட நேரமாகும்.
கேள்வி 7.
30 நாள்கள் நடைப்பயணத்திற்குப் பிறகு, நான் 4800 கலோரிகள் இழந்திருந்தேன். என் கலோரி இழப்பு சீரானது எனில், ஒரு நாளில் இழந்த கலோரியைக் காண்க.
தீர்வு:
30 நாள் கலோரி இழப்பு = 4800
ஒரு நாளைக்கு = \(\frac{4800}{30}\) = 160
160 கலோரியானது ஒரு நாளின் இழப்பு ஆகும்.
கேள்வி 8.
168 × 32 = 5376 தரப்பட்டுள்ளது. (-5376) – (-32) ஐக் காண்க
தீர்வு:
168 × 32 = 5376
\(\frac{-5376}{-32}\) = 168 ……… (1)
\(\frac{-5376}{-32}=+\frac{5376}{32}\) = 168 [(1) லிருந்து]
கேள்வி 9.
(-20) இல் எத்தனை (-4) உள்ளது?
தீர்வு:
(-4) × x = -20
x = \(\frac{-20}{-4}\)
x = 5
கேள்வி 10.
(-400) ஐ, 10 சமப் பகுதிகளாகப் பிரிக்கக் கிடைப்பது யாது?
தீர்வு:
\(\frac{(-400)}{10}\) = – 40
கொள்குறி வகை வினாக்கள்
கேள்வி 11.
பின்வருவனவற்றுள் எது ஒரு முழுவைக் குறிக்காது.
(i) o ÷ (-7)
(ii) 20 ÷ (-4)
(iii) (-9) ÷ 3
(iv) 12 ÷ 5
விடை:
(iv) 12 ÷ 5
கேள்வி 12.
(-16) ÷ 4 இக்கு சமமானது எது?
(i) – (-16 ÷ 4)
(ii) – (16) ÷ (-4)
(iii) 16 ÷ (-4)
(iv) -4 ÷ (16)
விடை:
(iii) 16 ÷ (-4)
கேள்வி 13.
(-200) ÷ 10 என்பது
(i) 20
(ii) – 20
(iii) -190
(iv) 210
விடை:
(ii) -20
கேள்வி 14.
பின்வரும் எந்தச் செயலியில் முழுக்களின் தொகுப்பு அடைவுப் பண்பை ‘ பெறாது?
(i) கூட்டல்
(ii) கழித்த ல்
(iii) பெருக்கல்
(iv) வகுத்தல்
விடை:
(iv) வகுத்தல்