Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.3

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.3 Textbook Questions and Answers, Notes.

TN Board 7th Maths Solutions Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.3

Question 1.
விடுபட்ட விவரத்தினைக் காண்க.

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 2 எண்ணியல் Ex 2.3 1

தீர்வு:
i) கொடுக்கப்பட்டவை h = 10 மீ, a = 12 மீ, b = 20 மீ
சரிவகத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × h × (a + b) ச.அ
= \(\frac{1}{2}\) × 10 × (12 + 20)
= 5 × 32
பரப்பு = 160 செ.மீ2

ii) கொடுக்கப்பட்டவை a = 13 செ.மீ, b = 28 செ.மீ, பரப்பு = 492 ச. செ.மீ
சரிவகத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × h × (a + b) ச.அ
\(\frac{1}{2}\) × h × (13 + 28) = 492
h = \(\frac{492 \times 2}{41}\)
h = 24 செ.மீ

iii) கொடுக்கப்பட்டவை h = 19 மீ, b = 16 மீ. பரப்பு = 323 ச.மீ
சரிவகத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × h × (a + b) ச.அ
\(\frac{1}{2}\) × h × (a + 168) = 323
a + 16 = \(\frac{323 \times 2}{19}\)
a + 16 = 34
a = 34 – 16
a = 18 மீ

iv) கொடுக்கப்பட்டவை h = 16 செ.மீ, a = 15 செ.மீ, பரப்பு = 360 ச. செ.மீ
சரிவகத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × h × (a + b) ச.அ.
\(\frac{1}{2}\) × 16 × (15 + b) = 360
15 + b = \(\frac{360}{8}\)
b = 45 – 15
b = 30 செ.மீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.3

Question 2.
இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே 24 செ.மீ, 20 செ.மீ மற்றும் உயரம் 15 செ.மீ கொண்ட சரிவகத்தின் பரப்பளவைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை a = 24 செ.மீ, b = 20 செ.மீ, h = 15செ.மீ
சரிவகத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × h × (a + b) ச.அ
= \(\frac{1}{2}\) × 15 × (24 + 20)
= \(\frac{1}{2}\) × 15 × 44
= 15 × 22
= 330 செ.மீ2

Question 3.
பரப்பளவு -1586 ச.செ.மீ. உயரம் 26 செ.மீ கொண்ட சரிவகத்தின் இணைப்பக்கங்கள் ஒன்றின் அளவு 84 செ.மீ எனில், மற்றொன்றின் அளவைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை,பரப்பு = 1586 ச.செ.மீ h = 26 செ.மீ, a = 84 செ.மீ, b = ?
சரிவகத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × h × (a + b) ச.அ
\(\frac{1}{2}\) × 2 × (84 + b) = 1586
84+ b = \(\frac{1586}{13}\)
84 + b = 122
b = 122 – 84
b = 38 செ.மீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.3

Question 4.
பரப்பளவு 1080 ச.செ.மீ, இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே, 55.6 செ.மீ மற்றும் 34.4 செ.மீ கொண்ட சரிவகத்தின் உயரத்தைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை, பரப்பு = 1080 ச.செ.மீ a = 55.6 செ.மீ, b = 34.4 செ.மீ, h = ?
சரிவகத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × h × (a + b) ச.அ
\(\frac{1}{2}\) × 1 × (55.6 + 34.4) = 1080
\(\frac{1}{2}\) × h × 90 = 1080
h = \(\frac{1080 \times 2}{90}\)
h = 24 செ.மீ

Question 5.
பரப்பளவு 180 ச.செ.மீ. உயரம் 9 செ.மீ கொண்ட ஒரு சரிவகத்தின் இணைப்பக்கங்களில் ஒன்றை விட மற்றொன்று 6 செ.மீ கூடுதலாக உள்ளது எனில், இணைப்பக்கங்களின் அளவுகளைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை. பரப்பு = 180 ச.செ.மீ, h= 9 செ.மீ, a = x செ.மீ, b = x + 6 செ.மீ.
– 1 – சரிவகத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × h × (a + b) ச.அ
\(\frac{1}{2}\) × 9 × (x + x + 6) = 180
2x + 6 = \(\frac{180 \times 2}{9}\)
2x + 6 = 40
2x = 40 – 6 = 34
2x = 34
x = \(\frac{34}{2}\)
x = 17 செ.மீ
a = x = 17 செ.மீ
b= x + 6 = 17 + 6 = 23 செ.மீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.3

Question 6.
ஒரு கதிரொளி மறைப்பான் (Sunshade) இருசமபக்கச் சரிவக வடிவில் உள்ளது. அதன் இணைப்பக்க அளவுகள் முறையே 81 செ.மீ மற்றும் 64 செ.மீ அதன் உயரம் 6 செ.மீ எனில், அப்பரப்பை வண்ணமிட ஒரு ச.செ.மீக்கு ₹2 வீதம் ஆகும் செலவைக் காண்க.
தீர்வு :
a = 81 செ.மீ, b = 64 செ.மீ, h = 6 செ.மீ.
சரிவகத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × h × (a + b) ச.அ
= \(\frac{1}{2}\) × 6 × (81 + 64)
= 3(145)
பரப்பு = 435 செ.மீ2

வண்ண மிட ஒரு ச.செ.மீக்கு = ரூ.2
வண்ண மிட 435 ச.செ.மீக்கு = ரூ. 435 × 2 = ரூ. 870.

Question 7.
ஒரு சரிவக வடிவச் சாளரத்தின் இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே, 105 செ.மீ மற்றும் 50 செ.மீ. மேலும் இணைப்பக்கங்களுக்கு இடையே உள்ள தொலைவு 60 செ.மீ எனில் அந்தச் சாளரத்துக்கு 100 ச.செ.மீ க்கு ₹ 15 வீதம் கண்ணாடி அமைக்க ஆகும் மொத்தச் செலவைக் காண்க.
தீர்வு:
கொடுக்கப்பட்டவை a = 105 செ.மீ, b = 50 செ.மீ, h = 60 செ.மீ.
சரிவகத்தின் பரப்பு = \(\frac{1}{2}\) × h × (a + b) ச.அ
= \(\frac{1}{2}\) × 60 × (105 + 50) = 30 × 155
= 4650 செ.மீ2
கண்ணாடி அமைக்க 100 ச. செ.மீ க்கு = ரூ.15
கண்ணாடி அமைக்க 4650 ச. செ.மீக்கு = ரூ. 46.50 x 15 = ரூ. 697.50.

கொள்குறி வகை வினாக்கள்

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.3

Question 8.
உயரம் 5 செ.மீ இணைப்பக்கங்களின் அளவுகள் முறையே, 8 செ.மீ உம், 10 செ.மீ உம் கொண்ட சரிவகத்தின் பரப்பளவு
i) 45 ச. செ.மீ
ii) 40 ச. செ.மீ
iii) 18 ச. செ.மீ
iv) 50 ச. செ.மீ
விடை :
i) 45 ச.செ.மீ

Question 9.
பரப்பளவு 140 ச.மீ உம் இணைப்பக்க அளவுகளின் கூடுதல் 10மீ உம் கொண்ட சரிவகத்தின் உயரம்
i) 7 செ.மீ
ii) 40 செ.மீ
iii) 14 செ.மீ
Iv) 28 செ.மீ
விடை :
iv) 28 செ.மீ

Samacheer Kalvi 7th Maths Guide Term 1 Chapter 2 அளவைகள் Ex 2.3

Question 10.
ஒரு சரிவகத்தில் இணையற்ற பக்கங்கள் சமம் எனில் அது ஒரு
i) சதுரம்
ii) செவ்வகம்
iii) இருசமபக்கச் சரிவகம்,
iv) இணைகரம்
விடை:
iii) இருசமபக்கச் சரிவகம்