Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 1 Chapter 5 வடிவியல் Ex 5.5 Textbook Questions and Answers, Notes.
TN Board 7th Maths Solutions Term 1 Chapter 5 வடிவியல் Ex 5.5
Question 1.
அளவுகோல் மற்றும் கவராயம் மட்டும் பயன்படுத்திப் பின்வரும் கோணங்களை அமைக்க.
i) 60°
ii) 120°
iii) 30°
iv) 90°
v) 45°
vi) 150°
vii) 135°
தீர்வு :
i) 60° அளவுடைய கோணத்தை வரைதல்.
படி 1 :
ஒரு நேர்கோடு வரைக. அதன் மீது A என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2 :
A ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு ஆரத்தில் நேர்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்க்கோட்டை வெட்டும் புள்ளியை B எனக் குறிக்க.
படி 3 :
அதே அளவு ஆரத்துடன், B மையமாக கொண்டு முன்பு வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு A B B வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை C எனக் குறிக்க..
படி 4 :
ACஐ இணைக்க. ∠BACஎன்பது 60° அளவுடைய கோணமாகும்.
ii) 120° அளவுடைய கோணத்தை வரைதல்.
120° கோண அளவில், இரண்டு 60° கோண அளவுகள் உள்ளதை நாம் அறிவோம். எனவே 120° கோணத்தை அமைப்பதற்கு 60° கோணத்தை இரு முறை தொடர்ந்து அமைத்தல் போதுமானதாகும்.
படி 1:
ஒரு நேர்கோடு வரைக. அதன் மீது A என்ற புள்ளியைக் குறிக்க.
படி 2:
A ஐ மையமாகக் கொண்டு வசதியான ஆரத்தில் நேர்கோட்டை வெட்டுமாறு ஒரு வட்டவில் வரைக. நேர்க்கோட்டை வெட்டும் புள்ளியை B எனக் குறிக்க.
படி 3:
ஆரத்தின் அளவை மாற்றாமல் B யை ப மையமாக கொண்டு படி – 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை C எனக் குறிக்க.
படி 4:
மீண்டும் அதே அளவு ஆரத்துடன் C ஐ மையமாக கொண்டு படி – 2 இல் வரைந்த வட்டவில்லை வெட்டுமாறு (படத்தில் உள்ளவாறு) மற்றாரு வட்டவில்லை வரைக. வெட்டும் புள்ளியை D எனக் குறிக்க… –
படி 5:
AD ஐ இணை. ∠BAD என்பதே தேவையான 120° அளவுடைய கோணமாகும்.
iii) 30° அளவுடைய கோணத்தை வரைதல்.
60° இல் பாதி அளவு 30° என்பதால் 60° கோணத்தைக் கோண இருசமவெட்டியைப் பயன்படுத்திப் பிரிப்பதன் மூலம் 30° கோணத்தை வரை இயலும்.
படி 1 :
60° கோணத்தை அமைக்கவும் (60° அளவுடைய கோணத்தை வரைதல் முறையைப் பயன்படுத்துக).
படி 2 :
B ஐ மையமாகக் கொண்டு ஏதேனும் ஒரு AB ஆரமுடைய வட்டவில்லை ∠BAC இன் உட்பகுதியில் வரைக.
படி 3 :
அதே அளவு ஆரத்துடன், Cஐமையமாகக் கொண்டு படி 2 இல் வரைந்த வில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக வெட்டும் புள்ளியை D எனக் தறிக்க.
படி 4 :
AD ஐ இணைக்க. ∠BAD ஆனது தேவையான 30° அளவுடைய கோணமாகும். (∠DAC இன் அளவைக் குறித்துச் சிந்திக்க)
iv) 90° அளவுடைய கோணத்தை வரைதல்.
படி 1:
120° அளவுடைய கோணத்தை அமைக்கவும் (120° அளவுடைய கோணத்தை வரைதல் முறையைப் பயன்படுத்துக)
படி 2 :
C ஐமையமாகக்கொண்டு ஏதேனும் ஒரு அளவுடைய ஆரத்தில் ∠CAD இன் உட்பகுதியில் சிறு வட்டவில் ஒன்றை வரைக.
படி 3 :
அதே அளவு ஆரத்துடன், D ஐ மையமாகக் கொண்டு படி 2 இல் வரைந்த வட்ட வில்லை வெட்டுமாறு மற்றொரு வட்டவில்லை வரைக வெட்டும் புள்ளியை E எனக் குறிக்க.
படி 4 :
AE ஐ இணைக்க ∠BAD = 90° அளவுடைய கோணமாகும்.
v) 45° அளவுடைய கோணத்தை வரைதல் : (90° அளவுடைய கோணத்தை வரைதலில் உள்ள படி, 1, 2, 3, 4 ஐ பயன்படுத்தவும்)
படி 5:
குறிப்பிட்ட ஆரஅளவுடைய இரண்டு விற்களை வெட்டுமாறு E மற்றும் B ஐ பயன்படுத்தி வரைந்து G எனக் குறிக்க.
படி 6:
AG ஐ இணைக்க. ∠BAG = 45° அளவுடைய கோணமாகும்.
vi) 150° அளவுடைய கோணத்தை வரைதல் : (120 அளவுடைய கோணத்தை வரைதலில் உள்ள படி 1,2,3,4 ஐ பயன்படுத்தவும் )
படி 5:
குறிப்பிட்ட ஆர அளவுடைய இரண்டு விற்களை. வெட்டுமாறு E மற்றும் D ஐ பயன்படுத்தி – வரைந்து F எனக்குறிக்க.
படி 6 :
AFஐ இணைக்க ∠BAF = 150 அளவுடைய கோணமாகும்.
vii) 135° அளவுடைய கோணத்தை வரைதல்: (90° அளவுடைய கோணத்தை வரைதலில் உள்ள படி 1,2,3,4 ஐ பயன்படுத்தவும்)
படி 5 :
குறிப்பிட்ட ஆர அளவுடைய இரண்டு விற்களை வெட்டுமாறு F மற்றும் H ஐ பயன்படுத்தி வரைந்து G எனக்குறிக்க.
படி 6 :
AG ஐ இணைக்க ZBAG = 135° : AG என்பது ∠EAH ன் கோண இருசமவெட்டி ஆகும்.