Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.5 Textbook Questions and Answers, Notes.
TN Board 7th Maths Solutions Term 3 Chapter 1 எண்ணியல் Ex 1.5
பலவகைத் திறனறி பயிற்சிக் கணக்குகள்
Question 1.
மாலினி 13.92 மீ, 11.5 மீ மற்றும் 10.64 10. இரு எண்களின் பெருக்குக் தொகை மீ அளவுடைய மூன்று ரிப்பன்களை வாங்கினாள் எனில், ரிப்பனின் மொத்த 40.376 ஒரு எண் 14.42 எனில், மற்றொரு நீளத்தைக் காண்க. எண்ணைக் காண்க.
தீர்வு :
ரிப்பனின் மொத்த நீளம் = 13.92 + 11.5 + 10.64 = 36.06 மீ
Question 2.
சித்ரா இனிப்பு தயாரிக்க 10 கி.கி 35 கி நெய் வாங்குகிறார். அதில் 8 கி.கி 59 கி நெய்யைப் பயன்படுத்துகிறார் எனில், மீதமுள்ள நெய்யின் அளவைக் காண்க.
தீர்வு :
சித்ரா வாங்கியது=10 கி.கி 35கிராம் = 10.035 கி.கி
பயன்படுத்திய நெய் = 8 கி.கி 59 கிராம் = 8.059 கி.கி
மீதமுள்ள நெய்பான் அளவு = 10.035 – 8.059 = 1.976 கி.கி
Question 3.
ஒரு பால் குப்பியின் கொள்ளளவு 2.53 லி எனில், அதேபோன்ற 8 குப்பிகளில் நிரப்ப எவ்வளவு பால் தேவைப்படும்?
தீர்வு :
ஒரு பால் குப்பியின் கொள்ளளவு = 2.53
லிட்டர் 8 பால் குப்பியின் கொள்ளளவ = 2.53 × 8 = 20.24 லிட்டர்
Question 4.
ஒரு கூடை ஆரஞ்சின் எடை 22.5 கி.கி ஒரு குடும்பத்திற்குத் தேவைப்படும் ஆருஞ்சின் எடை 2.5 கி.கி எனில், அதனை எத்தனை குடும்பங்களுக்குச் சமமாகப் பங்கிட முடியும்?
தீர்வு : ஒரு கூடை ஆரஞ்சின் எடை = 22.5 கி.கி
ஒரு குடும்பத்திற்கு தேவைப்படும் ஆரஞ்சின் எடை = 2.5 கி.கி
குடும்பங்களின் எண்ணிக்கை = \(\frac{22.5}{2.5}\)
= \(\frac{22.5}{2.5}\) × \(\frac{10}{10}\)
= \(\frac{22.5}{25}\) = 9
Question 5.
ஒரு ரொட்டி சுடுபவர் 10 சம அளவிலான கேக்குகளை தயாரிப்பதற்கு 3.924 கி.கி சர்க்கரை பயன்படுத்தினார் எனில், ஒவ்வொரு கேக்கிற்கும் பயன்படுத்தப்படும் சர்க்கரையின் அளவைக் காண்க.
தீர்வு :
10 கேக்குகளை தயாரிக்க ஆகும் சர்க்கரை அளவு = 3.924 கி.கி
ஒரு கேக்கிற்கு பயன்படும் சர்க்கரை அளவு = \(\frac{3.927}{10}\) = 0.3924 கி.கி
Question 6.
மதிப்பு காண்க :
i ) 26.13 × 4.6
ii) 3.628 + 31.73 – 2.1 3.628
Question 7.
முருகன் சில பைகளில் காய்கறிகளை வாங்கினார். ஒவ்வொரு பையும் 20.55 கி.கி எடையுடையது. அனைத்துப் பைகளின் மொத்த எடை 308.25 கி.கி எனில், எத்தனை பைகளை வாங்க வேண்டும்?
தீர்வு :
அனைத்து பைகளின் மொத்த எடை = 308.25 கி.கி
ஒரு பையன் எடை = 20.55 கி.கி
பையன் எண்ணிக்கை = \(\frac{308.25}{20.55}\)
= \(\frac{308.25}{20.55}\) × \(\frac{100}{100}\)
= \(\frac{30825}{2055}\)
= \(\frac{30825}{2055}\) = 15
Question 8.
ஒருவர் வட்ட வடிவப் பூங்காவில் நடைப் பயிற்சி செய்யும் தூரம் 23.761 மீ எனில், 100 வட்டமடித்தால் அவர் கடந்த தொலைவானது எவ்வளவு?
தீர்வு :
ஒரு வட்ட வடிவ பூங்காவின் தூரம் = 23.761 மீ
100 வட்டமடித்தால் கடக்கும் தூரம் = 23.761 × 100 = 2376.1 மீ
Question 9.
0.002 விட 0.0543 எவ்வளவு பெரியது?
தீர்வு :
0.0543 – 0.002 = 0.0543 – 0.0020 = 0.0020
Question 10.
ஒரு அச்சு எந்திரமானது ஒரு நிமிடத்தில் 15 பக்கங்களை அச்சிடுகிறது எனில், 4.6 நிமிடங்களில் அது எத்தனை பக்கங்களை அச்சிடும்?
தீர்வு :
ஒரு அச்சு எந்திரமானது 4 நிமிடத்தில் அச்சிடும் பக்கங்கள் = 15
ஒரு அச்சு எந்திரமானது 4.6 நிமிடத்தில் அச்சிடும் பக்கங்கள் = 15 × 4.6 = 69 பக்கங்கள்
மேற்சிந்தனைக் கணக்குகள்
Question 11.
பிரபுவின் வீட்டிலிருந்து யோகா நிலையத்திற்கு உள்ள தூரம் 102 மீ மற்றும் யோகா நிலையத்திலிருந்து பள்ளிக்குத் தூரம் 165 மீ எனில், அவன் பயணம் செய்யும் மொத்தத் தூரத்தினைக் கிலோ மீட்டரில் காண்க (தசம எண் வடிவம்)
தீர்வு :
மொத்த தூரம் = வீட்டிலிருந்து யோகா நிலையம் + யோகா நிலையத்திலிருந்து பள்ளி = 102 மீ + 165 மீ = 267 மீ)
= \(\frac{267}{1000}\) கி.மீ = 0.267 கி.மீ
1000மீ = 1கி.மீ 1000
Question 12.
அன்பு மற்றும் மாலா இருவரும் A இலிருந்து C இக்கு இருவேறு பாதைகளில் பயணிக்கிறார்கள். அன்பு A என்ற இடத்திலிருந்து B என்ற இடத்திற்கு அங்கிருந்து C என்ற இடத்திற்கும் பயணம் செய்கிறார். B இலிருந்து A ஆனது 8.3 கி.மீ மற்றும் C இலிருந்து B ஆனது 15.6 கி.மீ உள்ளது. மாலா A என்ற இடத்திலிருந்து D என்ற இடத்திற்கு அங்கிருந்து C என்ற இடத்திற்கு பயணம் செய்கிறார். A இலிருந்து D இன் தொலைவு 7.5 கி.மீ மற்றும் D இலிருந்து C இன் தொலைவு 16.9 கி.மீ எனில், யார் பயணம் செய்த தொலைவு அதிகம் மற்றும் எவ்வளவு அதிக தூரம் அவர் பயணம் செய்தார்?
தீர்வு :
அன்பு பயணித்த தூரம் = AB + BC = 8.3 + 15.6 = 23.9 கி.மீ
மாலா பயணித்த தூரம் = AD + DC = 7.5 + 16.9 = 24.4 கி.மீ
வித்தியாசம் = 24.4 – 23.9 = 0.5 கி.மீ
மாலா பயணம் செய்த தூரம் அதிகமாகும்.
மாலா அன்புவை விட 0.5 கி.மீ அதிகம் பயணம் செய்தார்.
Question 13.
ரமேஷ் ஒரு வாடகை வண்டியில் பயணம் செய்ய ஒரு மணி நேரத்திற்கு ₹ 97.75 செலுத்துகிறார் எனில், ஒரு வாரத்தில் 35 மணி நேரம் பயணம் செய்கிறார் எனில், ஒரு வாரத்திற்கு அவர் செலுத்த வேண்டிய மொத்தத் தொகை எவ்வளவு?
தீர்வு :
ரமேஷ் செலுத்தியது = ₹ 97.75
பயன்படுத்தியது = 35 மணி நேரம்
ஒரு வாரத்திற்கு செலுத்த வேண்டிய மொத்த தொகை = 97.75 × 35
= 3421.25 = ₹ 3421.25
Question 14.
ஒரு வானூர்தி 6 மணிநேரத்தில் பயணித்த தொலைவு 2781.20 கி.மீ எனில், அதன் சராசரி வேகத்தைக் காண்க.
தீர்வு :
ஒரு வானூர்தி 6 மணி நேரத்தில்
பயணித்து தொலைவு = 2781.20 கி.மீ
ஒரு வானூர்தி 1 மணி
நேரத்தில் பயணித்து தொலை = \(\frac{2781.20}{6}\) = 463.53 கிமீ/மணி
Question 15.
குமாரின் மகிழுந்து ஒரு லிட்டருக்கு 12.6 கி.மீ தருகிறது. அவனது எரிபொருள் கலனில் 25.8 லி எரிபொருள் கொள்ளும் எனில், அவனால் எவ்வளவு தூரத்தைக் கடக்க இயலும்?
தீர்வு :
1 லிட்டருக்கு கடக்கும் தூரம் = 12.6 கி.மீ
25.8 லிட்டருக்கு கடக்கும் தூரம் = 12.6 × 25.8 = 325.08 கி.மீ