Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 7th Maths Guide Pdf Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.1 Textbook Questions and Answers, Notes.
TN Board 7th Maths Solutions Term 3 Chapter 2 சதவீதமும் தனி வட்டியும் Ex 2.1
Question 1.
பின்வரும் ஒவ்வொரு படத்திலும் வண்ணம் தீட்டப்பட்ட சதுரங்களின் எண்ணிக்கையைக் கணக்கிட்டு அதை ஒரு பின்னமாகவும், தசமமாகவும் சதவீதமாகவும் மாற்றி எழுதுக.
i)
விடை :
பின்னம் = \(\frac{58}{100}\)
தசமம் = 0.58
சதவீதம் = \(\frac{58}{100}\) = 58%
ii)
விடை :
பின்னம் = \(\frac{53}{100}\)
தசமம் = 0.53
சதவீதம் = \(\frac{53}{100}\) = 53%
iii)
விடை :
பின்னம் = \(\frac{25}{50}\)
தசமம் = \(\frac{25}{50} \times \frac{2}{2}\) = \(\frac{50}{100}\) = 0.50
சதவீதம் = \(\frac{25}{50} \times \frac{2}{2}\) = \(\frac{50}{100}\) = 50%
iv)
விடை :
பின்னம் = \(\frac{17}{25}\)
தசமம் = \(\frac{17}{25} \times \frac{4}{4}\) = \(\frac{68}{100}\) = 0.68
சதவீதம் = \(\frac{68}{100}\) = 68%
v)
விடை :
பின்னம் = \(\frac{15}{30}\)
தசமம் = \(\frac{15}{30}\) = \(\frac{1}{2}\) = 0.5
சதவீதம் = \(\frac{1}{2} \times \frac{50}{50}\) = \(\frac{58}{100}\) = 50%
Question 2.
ஒரு சதுரங்க அட்டையின் படம் கொடுக்கப்பட்டுள்ளது
i) வெள்ளை நிறச் சதுரங்களின் சதவீதத்தைக் கண்டறியவும்.
ii) சாம்பல் நிறச் சதுரங்களின் சதவீதத்தைக் கண்டறியவும்.
iii) சதுரங்கக் காய்கள் உள்ள சதுரங்களின் சதவீதத்தைக் காண்க.
iv) காய்கள் இல்லாத சதரங்களின் சதவீதத்தைக் காண்க.
விடை :
மொத்த சதுரங்களின் எண்ணிக்கை = 64
வெள்ளை நிற சதுரங்கள் = 32
சாம்பல் நிற சதுரங்கள = 32
i) வெள்ளை நிற சதுரங்களின் சதவீதம் = = 50%
ii) சதுரங்கக் சாம்பல் நிற சதுரங்களின் சதவீதம் = = 50%
iii) சதுரங்கக் காய்கள் உள்ள சதுரங்களின் சதவீதம் =
= \(\frac{125}{4}\) = 31\(\frac{1}{4}\) %
iv) காய்கள் இல்லாத சதுரங்களின் சதவீதம் =
= \(\frac{11 \times 25}{4}\)
= \(\frac{275}{4}\)
= 68\(\frac{3}{4}\) %
Question 3.
ஒரு கட்டப் பலகையின் (Dart board) படம் கொடுக்கப்பட்டுள்ளது வெள்ளை நிறப் பகுதியின் சதவீதத்தையும் கருப்பு நிறப் பகுதியின் சதவீதத்தையும் காண்க..
விடை :
கட்டப் பலகையின் பகுதிகள் = 20
வெள்ளை நிறப்பகுதி = 10
கருப்பு நிறப்பகுதி = 10
i) வெள்ளை நிறப்பகுதியின் சதவீதம் = = 50 %
ii) கருப்பு நிறப்பகுதியின் சதவீதம் = = 50 %
Question 4.
பின்வரும் ஒவ்வொரு பின்னத்தையும் சதவீதமாக மாற்றுக.
(i) \(\frac{36}{50}\)
விடை :
\(\frac{36}{50}\) = \(\frac{36}{50} \times \frac{2}{2}=\frac{72}{100}\) = 72 %
(ii) \(\frac{81}{30}\)
விடை :
\(\frac{27}{10} \times \frac{10}{10}=\frac{270}{100}\) = 270 %
(iii) \(\frac{42}{5}\)
விடை :
\(\frac{6}{8}=\frac{3}{4} \times \frac{25}{25}=\frac{75}{100}\) = 75 %
(iv) 2 \(\frac{1}{4}\)
விடை :
2 \(\frac{1}{4}\) = \(\frac{9}{4} \times \frac{25}{25}=\frac{225}{100}\) = 225 %
(v) 1 \(\frac{3}{5}\)
விடை :
\(\frac{3}{5}\) = \(\frac{8}{5} \times \frac{20}{20}=\frac{160}{100}\) = 160 %
Question 5.
அன்பு ஒரு தேர்வில் 500 இக்கு 436 மதிப்பெண்கள் பெற்றார் எனில், அவர் பெற்ற மதிப்பெண்களைச் சதவீதத்தில் கூறுக.
விடை :
பெற்ற மதிப்பெண் சதவீதத்தில் = \(\frac{436}{500}\) × 100
= \(\frac{436}{500}\) = 87.2 %
Question 6.
பின்வரும் ஒவ்வொரு சதவீதத்தையும் பின்னமாக மாற்றுக.
i) 21%
விடை :
\(\frac{21}{100}\)
ii) 93.1%
விடை :
\(\frac{93.1}{100} \times \frac{10}{10}\) = \(\frac{931}{1000}\)
iii) 151%
விடை :
\(\frac{151}{100}\)
iv) 65%
விடை :
\(\frac{65}{100}\) = \(\frac{13}{20}\)
v) 0.64%
விடை :
0.64 % = \(\frac{64}{100} \%=\frac{64}{100 \times 100}\) = \(\frac{64}{10000}=\frac{4}{625}\)
Question 7.
இனியன் 5 டசன் முட்டைகளை வாங்கினார் அதில் 10 முட்டைகள் கெட்டுவிட்டால், நல்ல முட்டைகளின் சதவீதத்தைக் காண்க.
விடை :
இனியன் வாங்கிய 5 டசன் முட்டைகள் = 60 முட்டைகள்
அழுகிய முட்டைகள் = 10
நல்ல முட்டைகள் = 60 – 10 = 50
நல்ல முட்டைகளின் சதவீதம் = \(\frac{50}{60}\) × 100
= \(\frac{5}{6}\) × 100
= \(\frac{500}{6}\)
= 83.33%
Question 8.
ஒரு தேர்தலில் வேட்பாளர் ஒருவர் பெற்ற வாக்குகளின் சதவீதம் 48% ஆகும். அவர் பெற்ற வாக்குகளைப் பின்னமாக வெளிப்படுத்துக.
விடை :
வேட்பாளர் பெற்ற வாக்கு சதவீதம் = 48% வாக்குகள்
= \(\frac{48}{100}\) = \(\frac{12}{25}\)
Question 9.
இரஞ்சித்தின் மாத வருமானம் ₹ 7,500 அதில் 25% ஐச் சேமித்தார் எனில், அவர் எவ்வளவு தொகையைச் சேமித்தார் என்பதைக் காண்க.
விடை :
மொத்த வருமானம் = ₹ 7500
சேமித்த தொகை = 25%
= \(\frac{25}{100}\) × 7500 = ₹ 1875
கொள்குறி வகை வினாக்கள்
Question 10.
தென்றல் தனது வருமானத்தில் 4 இல் ஒரு பங்கைச் சேமித்தால் அதன் சதவீதத்தைக் காண்க.
i \(\frac{3}{4}\) %
ii) \(\frac{1}{4}\) %
iii) 25 %
iv) 1 %
விடை :
iii) 25 %
Question 11.
கவின் 25 இக்கு 15 மதிப்பெண்களைப் பெற்றால் அதன் சதவீதம்
i) 60 %
ii) 15 %
iii) 25 %
iv) 15/25
விடை :
i) 60 %
Question 12.
0.07% என்பது
i) \(\frac{7}{10}\)
ii) \(\frac{7}{100}\)
iii) \(\frac{7}{1000}\)
iv) \(\frac{7}{10,000}\)
விடை :
iv) \(\frac{7}{10,000}\)