Students can Download Tamil Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 1.3 பேச்சுமொழியும் எழுத்து மொழியும்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மொழியின் முதல்நிலை பேசுதல், …………………. ஆகியனவாகும்.
அ) படித்தல்
ஆ) கேட்டல்
இ) எழுதுதல்
ஈ) வரைதல்
Answer:
ஆ) கேட்டல்
Question 2.
ஒலியின் வரிவடிவம் …….. …… ஆகும்.
அ) பேச்சு
ஆ) எழுத்து
இ) குரல்
ஈ) பாட்டு
Answer:
ஆ) எழுத்து
Question 3.
தமிழின் கிளைமொழிகளில் ஒன்று ………….
அ) உருது
ஆ) இந்தி
இ) தெலுங்கு
ஈ) ஆங்கிலம்
Answer:
இ) தெலுங்கு
Question 4.
பேச்சுமொழியை ………………….. வழக்கு என்றும் கூறுவர்.
அ) இலக்கிய
ஆ) உலக
இ) நூல்
ஈ) மொழி
Answer:
ஆ) உலக
சரியா தவறா என எழுதுக
Question 1.
மொழி காலத்திற்கு ஏற்ப மாறுகிறது.
Answer:
சரி
Question 2.
எழுத்துமொழி காலம் கடந்தும் நிலைத்து நிற்கிறது.
Answer:
சரி
Question 3.
பேசுபவரின் கருத்திற்கு ஏற்ப உடனடிச் செயல்பாட்டிற்கு உதவுவது எழுத்துமொழி.
Answer:
தவறு
Question 4.
எழுத்து மொழியில் உடல்மொழிக்கு வாய்ப்பு அதிகம்.
Answer:
தவறு
Question 5.
பேச்சுமொழி சிறப்பாக அமையக் குரல் ஏற்றத்தாழ்வு அவசியம். Answer:
சரி
ஊடகங்களை வகைப்படுத்துக
வானொலி, தொலைக்காட்சி, செய்தித்தாள், நூல்கள், திரைப்படம், மின்னஞ்சல்
Answer:
குறுவினா
Question 1.
மொழியின் இரு வடிவங்கள் யாவை?
Answer:
(i) ஒரு மொழி உயிர்ப்போடு வாழ்வதற்குப் பேச்சுமொழித் தேவைப்படுகிறது.
(ii) காலம் கடந்து வாழ்வதற்கு எழுத்துமொழித் தேவைப்படுகிறது. (iii) எனவே பேச்சுமொழி, எழுத்துமொழி இவ்விரு வடிவங்களும் மொழியின் இரு கண்களாகும்.
Question 2.
பேச்சுமொழி என்றால் என்ன?
Answer:
- வாயினால் பேசப்பட்டுப் பிறரால் கேட்டு உணரப்படுவது பேச்சுமொழியாகும்.
- மொழியின் உயிர் நாடியாக விளங்குவது பேச்சுமொழியே என்பர்.
Question 3.
வட்டாரமொழி எனப்படுவது யாது?
Answer:
- பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும்.
- மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும்.
- இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.
சிறுவினா
Question 1.
பேச்சுமொழிக்கும் எழுத்துமொழிக்கும் இடையே உள்ள வேறுபாடுகளுள் நான்கினை விளக்குக.
Answer:
Question 2.
கிளைமொழிகள் எவ்வாறு உருவாகின்றன?
Answer:
- ஒரே மொழியைப் பேசும் மக்கள் வெவ்வேறு இடங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
- அவர்கள் வாழும் இடத்தின் நில அமைப்பு, இயற்கைத் தடைகள் போன்றவற்றின் காரணமாக பேசும் மொழியில் சிறிது சிறிது மாற்றங்கள் ஏற்படும்.
- அவர்களுக்கு இடையேயான தொடர்பு குறையும் பொழுது இம்மாற்றங்கள் மிகுதியாகிப் புதிய மொழியாகப் பிரியும். அவ்வாறு உருவாகும் புதிய மொழிகள் கிளைமொழிகள்’ எனப்படும்.
- கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலிய திராவிட மொழிகள் தமிழிலிருந்து பிரிந்து சென்ற கிளைமொழிகள் ஆகும்.
சிந்தனை வினா
Question 1.
இலக்கியங்கள் காலம் கடந்தும் அழியாமல் வாழ்வதற்கு என்ன காரணம் என்று கருதுகிறீர்கள்?
Answer:
இலக்கு + இயம் = இலக்கியம். இலக்கியங்கள் நம் வாழ்வை வளப்படுத்த, வழிகாட்டக்கூடிய ஒளிவிளக்குகளாகத் திகழ்கின்றன. இலக்கியங்கள் நம் வாழ்க்கைக்கு வழிகாட்டுகின்றன. அற இலக்கியங்கள் வழங்கும் அற்புதமான கருத்துகளைக் கடைப்பிடித்தால் நம் வாழ்வு பிறரால் பாராட்டப்படும் தன்மையுடையதாக விளங்கும்.
இலக்கியங்கள் வழங்குகின்ற கருத்துகள் எக்காலமும் நிலைத்து நிற்கின்ற கருவூலமாகத் திகழ்கின்றன. ஒவ்வொரு இலக்கியமும் ஒவ்வொரு உண்மையை பறைசாற்றுகின்றன.
மணிமேகலை பசிப்பிணி அகற்றும் மாண்பை எடுத்துரைக்கிறது. சிலப்பதிகாரம் அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும், உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர், ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்ற உண்மைகளை உலகிற்கு எடுத்துரைக்கிறது. இவ்வாறு ஒவ்வொரு இலக்கியமும் தரும் உண்மையான கருத்துகளைக் கடைப்பிடித்து நாம் வாழ்வின் உன்னத நிலையை அடைவோம்.
இயல் தமிழ், இசைத் தமிழ், நாடகத் தமிழ் என்ற நிலை கடந்து அறிவியல் தமிழ், கணினி தமிழ், இணையத் தமிழ், ஊடகத் தமிழ் என்று மொழி வளர்ந்து கொண்டே வருகிறது. இத்தகு வளர்ச்சி தமிழ்மொழியின் உச்சநிலை வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது என்பதைக் காட்டுகிறது. பலநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இலக்கியங்கள் எழுத்து வடிவில் இருப்பதால்தான் நம்மால் இன்றும் படிக்க முடிகிறது.
கற்பவை கற்றபின்
Question 1.
உங்கள் வீட்டில் பயன்படுத்தும் பேச்சு வழக்குத் தொடர்களுக்கு இணையான எழுத்துவழக்குத் தொடர்களை எழுதி வருக.
Answer:
பேச்சுமொழி : அம்மா பசிக்குது எனக்குச் சோறு வேணும்.
எழுத்துமொழி : அம்மா! பசிக்கிறது. எனக்குச் சோறு வேண்டும். பேச்சுமொழி : நல்லாச் சாப்ட்டான்.
எழுத்துமொழி : நன்றாகச் சாப்பிட்டான்
பேச்சுமொழி : நல்லா படிச்சான்.
எழுத்துமொழி : நன்றாகப் படித்தான்.
பேச்சுமொழி : சந்தியா சாப்ட்டியா.
எழுத்துமொழி : சந்தியா சாப்பிட்டாயா.
பேச்சுமொழி : வீட்டுப் பாடம் எழுதிட்டியா.
எழுத்துமொழி : வீட்டுப்பாடம் எழுதிவிட்டாயா.
Question 2.
பேசும் போது சில நேரங்களில் சொற்களின் இறுதியில் உகரம் சேர்ந்து ஒலிப்பது உண்டு. ‘ஆ’ என்னும் எழுத்து இகரமாக மாறுவதும் உண்டு. அவ்வாறு ஒலிக்கும் சொற்களை எழுதி அவற்றுக்கு இணையான எழுத்து வழக்குச் சொற்களையும் எழுதுக.
Answer:
எடுத்துக்காட்டு :
(i) சொல்லு – சொல்
(ii) வில்லு – வில்
(iii) நில்லு – நில்
(iv) வந்தியா – வந்தாயா?
(v) எழுந்தியா – எழுந்தாயா?
(vi) சாப்ட்டியா – சாப்பிட்டாயா?
கூடுதல் வினாக்கள்
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
வரிவடிவமாக எழுதப்பட்டுப் படிக்கப்படுவது ………………. மொழியாகும்.
அ) பேச்சுமொழி
ஆ) எழுத்துமொழி
இ) இரட்டை வழக்கு மொழி
ஈ) இவை ஏதும் இல்லை
Answer:
ஆ) எழுத்துமொழி
Question 2.
சொல்லை ஒலிப்பதில் ஏற்படும் ஏற்ற இறக்கத்தால் பொருள் வேறுபடும் என்பதை உணர்த்தும் இலக்கண நூல் ..
அ) நன்னூல்
ஆ) தண்டியலங்காரம்
இ) புறப்பொருள் வெண்பா
ஈ) தொல்காப்பியம்
Answer:
அ) நன்னூல்
Question 3.
பேச்சுமொழியில் உணர்ச்சிக் கூறுகள்……………..
அ) அதிகமாக இருக்கும்
ஆ) குறைவாக இருக்கும்
இ) அளவாக இருக்கும்
ஈ) இவை ஏதும் இல்லை
Answer:
அ) அதிகமாக இருக்கும்
நிரப்புக :
Question 1.
பேச்சுமொழியின் சிறப்புக் கூறுகள் ……..
Answer:
உடல்மொழி , ஒலிப்பதில் ஏற்ற இறக்கம்)
Question 2.
பேசப்படும் சூழலைப் பொருத்துப் பேச்சுமொழியின் பொருள் ……….
Answer:
வேறுபடும்
Question 3.
பேச்சுமொழி இடத்திற்கு இடம் ……….
Answer:
மாறுபடும்
Question 4.
சூழலுக்கு ஏற்றவாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை என்பர்.
Answer:
வட்டார மொழி
Question 5.
கன்னடம், தெலுங்கு, மலையாளம் முதலியவை ………. மொழிகளாகும்.
Answer:
கிளை
விடையளி :
Question 1.
இரட்டை வழக்குமொழி என்றால் என்ன?
Answer:
தமிழில் பேச்சுமொழிக்கும் எழுத்து மொழிக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடு இருந்தால், தமிழை இரட்டை வழக்கு மொழி என்பர்.
Question 2.
இரட்டை வழக்கு மொழியை தொல்காப்பியர் எவ்வாறு குறிப்பிடுகிறார்?
Answer:
இரட்டை வழக்கு மொழியை தொல்காப்பியர் உலக வழக்கு , செய்யுள் வழக்கு என்று குறிப்பிடுகிறார்.
Question 3.
மொழியின் முதல் நிலை எவை?
Answer:
பேசுவதும் கேட்பதும் மொழியின் முதல் நிலை ஆகும்.
Question 4.
இரண்டாம் நிலை என்று மொழியில் எதனை குறிப்பிடுகின்றோம்? Answer:
படித்தல், எழுதுதல் என்பவை மொழியின் இரண்டாம் நிலை எனக் குறிப்பிடுகின்றோம்.
Question 5.
மொழி இல்லையேல் மனித சமுதாயம் முன்னேற்றம் அடைந்திருக்காது இக்கூற்றை மெய்ப்பிக்க.
Answer:
- மொழியின் மூலமாக மனிதர்களின் சிந்தனை ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்லப்படுகிறது.
- மொழி இல்லையேல் மனித சமுதாயம் இன்று அடைந்திருக்கும் முன்னேற்றத்தை எட்டியிருக்க முடியாது என்பது முற்றிலும் உண்மையே.
Question 6.
மொழிகள் பல தோன்றக் காரணங்கள் யாவை?
Answer:
- ஆரம்ப காலத்தில் மனிதர்கள் தனித்தனிக் குழுக்களாக வாழ்ந்து வந்தனர்.
- அவர்கள் தங்களுக்குள் தனித்தனியான ஒலிக்குறியீடுகளை உருவாக்கிக்
கொண்டனர். - இதன் விளைவாகவே மொழிகள் பல தோன்றின.
Question 7.
மொழியைப் பற்றி மு. வரதராசனார் கூறுவன யாவை?
Answer:
- பேசப்படுவதும் கேட்கப்படுவதுமே உண்மையான மொழி; எழுதப்படுவதும் படிக்கப்படுவதும் அடுத்த நிலையில் வைத்துக் கருதப்படும் மொழியாகும். இவையே அன்றி வேறுவகை மொழிநிலைகளும் உண்டு.
- எண்ணப்படுவது, நினைக்கப்படுவது, கனவு காணப்படுவது ஆகியவையும் மொழியே ஆகும் என மு. வரதராசனார் மொழியைப் பற்றி கூறுகிறார்.
Question 8.
மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமாக இருப்பது ஏன்?
Answer:
- மனிதர்களின் சிந்தனைகள் காலம் கடந்து வாழ்வதற்கு காரணமாக இருப்பது எழுத்து மொழியே.
- நேரில் காண இயலாத நிலையில் செய்தியைத் தெரிவிக்க எழுத்துமொழி உதவுகிறது.
Question 9.
மொழியின் உயிர்நாடியாக விளங்குவது எது? ஏன்?
Answer:
- மொழியின் உயிர்நாடியாக விளங்குவது பேச்சுமொழியே.
- பேச்சுமொழி உணர்வுகளை எளிதாக வெளிப்படுத்தும்.
- அது கருத்தை வெளிப்படுத்துவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டது.
- பேசுபவரின் உடல்மொழியும் ஒலிப்பதில் ஏற்ற இறக்கம் ஆகியவையும் பேச்சுமொழியின் சிறப்புக்கூறுகள் ஆகும்.
Question 10.
வட்டார மொழிக்குச் சான்று தருக.
Answer:
- பேச்சுமொழி இடத்திற்கு இடம் மாறுபடும்.
- மனிதர்களின் வாழ்வியல் சூழலுக்கு ஏற்பவும் மாறுபடும். (iii) இவ்வாறு மாறுபடும் ஒரே மொழியின் வெவ்வேறு வடிவங்களை வட்டார மொழி என்பர்.
எடுத்துக்காட்டு :
‘இருக்கிறது’ என்னும் சொல் இருக்கு’, ‘இருக்குது’ ‘கீது’ என்று தமிழகத்தின் ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு வகையாகப் பேசப்படுகிறது.