Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

Students can Download Tamil Chapter 2.1 காடு Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
வாழை, கன்றை …………
அ) ஈன்றது
ஆ) வழங்கியது
இ) கொடுத்தது
ஈ) தந்தது
Answer:
அ) ஈன்றது

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

Question 2.
‘காடெல்லாம்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………
அ) காடு + டெல்லாம்
ஆ) காடு + எல்லாம்
இ) கா + டெல்லாம்
ஈ) கான் + எல்லாம்
Answer:
ஆ) காடு + எல்லாம்

Question 3.
‘கிழங்கு + எடுக்கும்’ என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………
அ) கிழங்கு எடுக்கும்
ஆ) கிழங்கெடுக்கும்
இ) கிழங்குடுக்கும்
ஈ) கிழங்கொடுக்கும்
Answer:
ஆ) கிழங்கெடுக்கும்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

நயம் அறிக

Question 1.
பாடலிலுள்ள மோனை, எதுகை, இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.
Answer:
மோனை: ஒரு பாடலில் அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து ஒன்றி வருவது மோனைத் தொடை எனப்படும்.
அடிமோனை : கார்த்திகை – காடெல்லாம்
சீர்மோனை : குரங்கு – குடியிருக்கும்
மரங்கள் – மறைக்கும்

எதுகை : அடிகளிலோ, சீர்களிலோ முதல் எழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றியமைவது எதுகைத் தொடை எனப்படும்.

அடிஎதுகை :

பார்த்திட – பார்வை
குரங்கு – மரங்கள்
கார்த்திகை – பார்த்திட
பச்சை – நச்சர
சிங்கம் – எங்கும்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

சீர்எதுகை :

காடு – கொடுக்கும்

இயைபு : அடிகள் தோறும் இறுதி எழுத்தோ , அசையோ, சீரோ, அடியோ ஒன்றி வருவது இயைபுத் தொடை எனப்படும்.

பொருள் கொடுக்கும் – ஈன்றெடுக்கும்
குடியிருக்கும் – கனிபறிக்கும்
மயில் நடிக்கும் – கிழங்கெடுக்கும்

குறுவினா

Question 1.
காட்டுப்பூக்களுக்கு எதனை உவமையாகக் கவிஞர் சுரதா குறிப்பிடுகிறார்?
Answer:

  • கார்த்திகை மாதத்தில் ஏற்றும் கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும்.
  • அவற்றைப் பார்ப்பதற்கு கண்கள் குளிர்ச்சி பெறும் எனக் கவிஞர் காட்டுப் பூக்களுக்கு கார்த்திகை விளக்குகளை உவமையாகக் கூறுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

Question 2.
காட்டின் பயன்களாக கவிஞர் சுரதா கூறுவன யாவை?
Answer:
காட்டின் பயன்களாக கவிஞர் சுரதா கூறுவன :

  • காடு பலவகையான பொருள்களைத் தருகின்றது.
  • எல்லாரும் கூடி மகிழ்ந்திட குளிர்ந்த நிழலைத் தரும்.
  • காய்கனிகளைத் தந்து மற்ற உயிரினங்களை வாழச் செய்கிறது.
  • காட்டில் வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள, கனிகளைப் பறித்து உண்டு, தன் பசியைப் போக்கிக் கொள்ளும்.
  • மரங்கள் வெயிலை மறைத்து அங்கே நிழல் தரும்.
  • அடர்ந்த காடு வழிச் செல்வோர்க்குத் தடையாக இருக்கும்.

சிறுவினா

Question 1.
‘காடு’ பாடலில் விலங்குகளின் செயல்களாகக் கவிஞர் கூறுவனவற்றை எழுதுக.
Answer:

  • குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும்.
  • பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும்.
  • இந்தச் செயலைக் கண்டு நச்சுத் தன்மை உடைய பாம்புகள் அச்சத்தால் கலக்கம் அடையும்.
  • நரிகள் ஊளையிடும்.
  • மிகுந்த சுவையான தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும்.
  • இயற்கையான காட்டில் வாழும் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் மனம் போன போக்கில் அலைந்து திரியும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

சிந்தனை வினா

Question 1.
காட்டை இயற்கை விடுதி என்று கவிஞர் கூறக் காரணம் என்ன?
Answer:

  • காடு இயற்கை தந்த கொடை, காடு இயற்கை தந்த விடுதி கார்த்திகை மாதத்து விளக்குகளைப் போல காட்டுப் பூச்சிகள் பூத்திருக்கும். அதனைப் பார்க்கும் கண்களுக்கு குளிர்ச்சியைத் தரும்.
  • குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள கனிகளைப் பறித்து உண்ணும்.
  • பச்சை நிறம் உடைய காட்டு மயில்கள் நடனமாடும்.
  • பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். இந்தச் செயலைக் கண்டு நச்சுத்தன்மை உடைய பாம்புகள் அச்சத்தால் கலங்கி நிற்கும். நரிக்கூட்டம் ஊளையிடும்.
  • யானைக்கூட்டம் சுவைதரும் தழையை உண்டுவிட்டு புதிய நடை போடும். காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.
  • இயற்கைத் தந்த இடம் இந்தக் காடு. இது ஒரு தங்கும் விடுதி. இங்கு பறவைகள், விலங்கினங்கள் தங்கிச் செல்லும் செயலைத்தான் கவிஞர் காட்டை இயற்கை விடுதி என்று கூறி மகிழ்கிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

கற்பவை கற்றபின்

Question 1.
காடு என்னும் தலைப்பில் அமைந்த கிளிக்கண்ணி’ பாடலை இசையுடன் பாடி மகிழ்க.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே செய்ய வேண்டியவை.

Question 2.
பின்வரும் கிளிக்கண்ணிப் பாடலைப் பாடி மகிழ்க.
Answer:
நெஞ்சில் உரமுமின்றி
நேர்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ! – கிளியே
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று
கூவிப் பித்தலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடீ ! – கிளியே
நாளில் மறப்பாரடீ. ……….- பாரதியார்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. ஈன்று – பெற்று
2. களித்திட – மகிழ்ந்திட
3. கொம்பு – கிளை
4. நச்சரவம் – விடமுள்ள பாம்பு
5. அதிமதுரம் – மிகுந்த சுவை
6. விடுதி – தங்கும் இடம்

விடையளி :

Question 1.
காட்டைக் குறிக்கும் வேறு பெயர்கள் யாவை?
Answer:
கா, கால், கான், கானகம், அடவி, அரண், ஆரணி, புரவு, பொற்றை , பொழில், தில்லம், அழுவம், இயவு, பழவம், முளரி, வல்லை , விடர், வியல், வனம், முதை, மிளை, இறும்பு,
சுரம், பொச்சை, பொதி, முளி, அரில், அறல், பதுக்கை , கணையம்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

Question 2.
‘கிளிக்கண்ணி ‘ – குறிப்பு வரைக.
Answer:
(i) கிளியின் மொழி போன்ற இனிய சொற்களைப் பேசும் பெண்ணை நோக்கிக் ‘ கூறுவதாக இனிய சந்தத்தில் பாடப்படும் இசைப்பாடல் வகை கிளிக்கண்ணி ‘ ஆகும்.
(ii) கவிஞர் சுரதா எழுதிய பாடல் காடு. இப்பாடல் கிளிக்கண்ணி என்னும் பாவகையைச் சேர்ந்தது.

Question 3.
உவமைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் யார்?
Answer:
உவமைக் கவிஞர் எனப் போற்றப்படுபவர் கவிஞர் சுரதா.

Question 4.
சுரதாவின் இயற்பெயர் என்ன?
Answer:
சுரதாவின் இயற்பெயர் இராசகோபாலன்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

Question 5.
சுரதா இயற்றிய நூல்கள் சிலவற்றைக் கூறுக?
Answer:
அமுதும் தேனும், தேன்மழை, துறைமுகம் உள்ளிட்ட பல நூல்களை இவர் இயற்றியுள்ளார்.

Question 6.
நமக்கு பாடமாக வந்துள்ள இப்பாடல் எதிலிருந்து எடுக்கப்பட்டது?
Answer:
இப்பாடல் சுரதா கவிதைகள் என்னும் நூலில் இயற்கை எழில் என்னும் பகுதியிலிருந்து எடுத்துத் தரப்பட்டுள்ளது.

பாடலின் பொருள்

கார்த்திகை விளக்குகள் போலக் காடு முழுவதும் மலர்கள் மலர்ந்திருக்கும். அவற்றைக் காணும் கண்கள் குளிர்ச்சி பெறும். காடு பல வகையான பொருள்களைத் தரும். காய்கனிகளையும் தரும். எல்லாரும் கூடி மகிழ்ந்திட குளிர்ந்த நிழல் தரும். அங்கே வசிக்கும் குரங்குகள் மரக்கிளைகளில் உள்ள, கனிகளைப் பறித்து உண்ணும். மரங்கள் வெயிலை மறைத்து நிழல் தரும். அடர்ந்த காடு வழிச்செல்வோர்க்குத் தடையாய் இருக்கும்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.1 காடு

பச்சை நிறம் உடைய மயில்கள் நடனமாடும். பன்றிகள் காட்டில் உள்ள கிழங்குகளைத் தோண்டி உண்ணும். அதனைக் கண்டு நஞ்சினை உடைய பாம்புகள் கலக்கமடையும். நரிக்கூட்டம் ஊளையிடும். மிகுந்த சுவையுடைய தழையை யானைகள் தின்றபடி புதிய நடைபோடும். பூக்கள் பூத்துக் குலுங்கும் மரங்களில் குயில்கள் கூவும். இயற்கைத் தங்குமிடமாகிய காட்டில் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை போன்ற விலங்கினங்கள் எங்கும் அலைந்து திரியும்.