Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

Students can Download Tamil Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 1 Chapter 2.2 அப்படியே நிற்கட்டும் அந்த மரம்

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
நாவற்பழத்திற்கு உவமையாகக் கூறப்படுவது ….
அ) பச்சை இலை
ஆ) கோலிக்குண்டு
இ) பச்சைக்காய்
ஈ) செங்காய்
Answer:
ஆ) கோலிக்குண்டு

Question 2.
‘சுட்ட பழங்கள்’ என்று குறிப்பிடப்படுபவை ……………………
அ) ஒட்டிய பழங்கள்
ஆ) சூடான பழங்கள்
இ) வேக வைத்த பழங்கள்
ஈ) சுடப்பட்ட பழங்கள்
Answer:
அ) ஒட்டிய பழங்கள்

Question 3.
‘பெயரறியா’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது………
அ) பெயர + றியா
ஆ) பெயர் + ரறியா
இ) பெயர் + அறியா
ஈ) பெயர + அறியா
Answer:
இ) பெயர் + அறியா

Question 4.
‘மனமில்லை ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது……..
அ) மன + மில்லை
ஆ) மனமி + இல்லை
இ) மனம் + மில்லை
ஈ) மனம் + இல்லை
Answer:
ஈ) மனம் + இல்லை

Question 5.
நேற்று + இரவு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………..
அ) நேற்று இரவு
ஆ) நேற்றிரவு
இ) நேற்றுரவு
ஈ) நேற்இரவு
Answer:
ஆ) நேற்றிரவு

குறுவினா

Question 1.
நாவல் மரம் எத்தனை தலைமுறைகளாக அங்கு நின்றிருந்தது?
Answer:
நாவல் மரம் ஆறு தலைமுறைகளாய் அங்கு நின்றிருந்தது.

Question 2.
சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவியோர் யாவர்?
Answer:
காக்கை, கிளி, குருவி, மைனா, கிளிகள் மற்றும் பெயரறியாப் பறவைகள், அணில்கள், காற்று ஆகியவை சிறுவர்களுக்கு நாவற்பழம் கிடைக்க உதவின.

சிறுவினா

Question 1.
நாவல் மரம் பற்றிய நினைவுகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:
ஊரின் வடகோடியில் இருந்த நாவற்பழமரம்கவிஞரின் ஐந்து வயதில் எப்படியிருந்ததோ அப்படியேதான் அவருடைய ஐம்பது வயதைத் தாண்டியும் இருந்தது.

கவிஞருடைய தாத்தாவின் தாத்தா காலத்தில் நடப்பட்ட மரம் என்று கவிஞர், தன் அப்பா சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறார்.

அந்த மரத்தில் பச்சைக் காய்கள் நிறம் மாறி செங்காய்த் தோற்றம் ஏற்பட்டவுடன் சிறுவர்களின் மனதில் பரவசம் பொங்கும். பளபளப்பான பச்சை இல்லைகளின் நடுவில், கிளைகளில் கருநீலக் குண்டுகளாய் நாவற்பழங்கள் தொங்குவதைப் பார்த்தவுடனேயே நாவில் நீருறும்.

பறவைகள், அணில்கள் மற்றும் காற்று ஆகியவற்றால் உதிர்ந்திடும் பழங்களைப் பொறுக்குவதற்காக சிறுவர் கூட்டம் அலைமோதும் எனக் கவிஞர் நாவல் மரம் பற்றிய தன்னுடைய நினைவுகளைக் கூறுகிறார்.

சிந்தனை வினா

Question 1.
பெருங்காற்றில் வீழ்ந்த மரத்தைக் கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை ?
Answer:
கவிஞருடைய தாத்தாவின் தாத்தா காலத்தில் நடப்பட்ட நாவற்பழ மரத்தின் நிழலில் கவிஞரின் மகனும் விளையாடியுள்ளான்.

ஆறு தலைமுறைகளாக அங்கு நின்றிருந்த அந்த மரத்தில் கருநீலக் குண்டுகளாக நாவற்பழம் தொங்குவதைப் பார்த்தவுடனேயே நாவில் நீருறும். காக்கை, குருவி, மைனா, கிளிகள் மற்றும் பெயரறியாப் பறவைகள், அணில்கள் ஆகியவற்றிற்கு வாழ்விடமாக இருந்தது அந்த மரம். மேலும் அவைகளுக்கு மட்டுமல்லாமல், இரவில் வந்த வௌவால் கூட்டங்களுக்கும் உணவளித்தது அந்த மரம்.

தோப்பு முழுவதும் பரவிக்கிடந்த அந்த மரத்தின் குளிர்ந்த நிழலிலே, அப்பா புளியமிளாறை எடுத்துக் கொண்டு அடிக்க வரும் வரை சுவராசியமாக கிளியாந்தட்டு விளையாடிய அனுபவங்களை கவிஞரால் மறக்க முடியவில்லை.

பெருவாழ்வு வாழ்ந்த அந்த மரம் ஒருநாள் பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்து விட்டது. அறிந்த ஊர் மக்கள் அனைவரும் அதைப் பார்க்கச் சென்றனர். குன்றுகளின் நடுவே பெரிய மலை இருப்பது போல, கவிஞரின் மன ஓட்டங்களின் நடுவே அந்த மரம் பற்றிய நினைவுகள் உயர்ந்து நிற்கின்றது. அந்த மரம் அவரைப் பொருத்த அளவில் விழவில்லை . எனவே அந்த வீழ்ந்த மரத்தைச் சென்று பார்க்க விரும்பவில்லை.

கற்பவை கற்றபின்

Question 1.
உங்கள் சுற்றுப்புறத்திலுள்ள ஏதேனும் ஒரு மரம் குறித்து வருணனையாக ஐந்து
தொடர்கள் எழுதுக.
Answer:

  • பனை மரம் பூலோக கல்பதரு என்று அழைக்கப்படும் ஒரே மரம்.
  • பனை மரத்தின் வேர்கள் பூமியை நோக்கி நீளமான செல்வதால் வறட்சி தாங்கும் சக்தி உண்டு.
  • சுவாசிக்க ஆக்ஸினை தருபவை பனை மரம்.
  • பனை உண்டானால் நோய் தாக்குதல் மிகக் குறைவு.

Question 2.
உங்கள் பகுதிகளில் உள்ள மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
Answer:
மரங்களின் பெயர்கள் :
(i) பனைமரம்
(ii) தென்னை மரம்
(iii) வேப்பமரம்
(iv) ஆலமரம்
(v) அரசமரம்
(vi) மாமரம்
(vii) பலா மரம்
(viii) பாக்கு மரம்
(ix) பூவரச மரம்
(x) தேக்குமரம்
(xi) புளிய மரம்
(ix) கொய்யா மரம்
(xi) புங்கை மரம்
(xii) கருவேல மரம்
(xiii) வில்வ மரம்
(xiv) நெல்லி மரம்

கூடுதல் வினாக்கள்

சொல்லும் பொருளும் :

1. பரவசம் – மகிழ்ச்சிப் பெருக்கு
2. துஷ்டி கேட்டல் – துக்கம் விசாரித்தல்

நிரப்புக :

Question 1.
‘கொல்லிப்பாவை’ என்னும் சிற்றிதழை நடத்தியவர் ……
Answer:
ராஜமார்த்தாண்டன்

Question 2.
ராஜமார்த்தாண்டன், …………. என்னும் நூலுக்காகத் தமிழ் வளர்ச்சித் துறையின் பரிசு
பெற்றார்.
Answer: ராஜமார்த்தாண்டன் கவிதைகள்

பாடலின் பொருள்

கவிஞரின் ஊரில் வடகோடியில் இருந்த நாவற்பழ மரம் கவிஞரின் ஐந்து வயதிலும் சரி, ஐம்பது வயதிலும் சரி மாறாமல் அப்படியே நிற்கிறது.
கவிஞரின் தாத்தாவின் தாத்தா காலத்தில் நடப்பட்டு வளர்ந்த மரம் என தன் அப்பா சொல்ல கவிஞர் கேட்டிருக்கிறார்.

அந்த மரத்தில் பச்சைக்காய்கள் நிறம் மாறி செங்காயாக மாற்றம் பெற்றவுடன் சிறுவர்களின் மனதில் உற்சாகம் தோன்றிவிடும்.
அந்த மரத்தில் பளபளப்பாக இருக்கும் பச்சை இலைகளின் நடுவில் கருநீல நிறத்தில், கோலி குண்டுகள் போலத் தோற்றமளிக்கும் நாவற்பழங்கள் கிளைகளில் தொங்கும். அவற்றைப் பார்க்கும்போதே நாவில் நீர் ஊறும்.

காக்கை, குருவி, மைனா, கிளிகள் இன்னும் பெயரறியாப் – பறவைகள், அணில்கள் மற்றும் காற்று ஆகியவற்றினால் உதிர்ந்து விழும் பழங்களை எடுப்பதற்காக சிறுவர்கள் கூட்டம் அலைமோதும். வயது வந்த அக்காக்கள் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார்கள் என்பதனால் அவர்களுக்காக பழம் எடுக்க கூடையுடன் வரும் தங்கைமார்கள் ஓடி ஓடி பழங்களைப் பொறுக்குவார்கள்.

இரவில் மெல்லிய நிலவொளியில் பழந்தின்னி வௌவால்கள் கூட்டம் கூட்டமாக படையெடுத்து அந்த மரத்தை நோக்கி வரும். தோப்பு முழுவதுமாக நிறைந்து நிற்கும் அந்த மரத்தின் நிழலிலே கவிஞர் தன் அப்பா புளியமிளாறை எடுத்து வந்து மிரட்டும் வரை சுவாரசியமாக கிளியாந்தட்டு விளையாடியுள்ளார். அவருடைய மகனும் தன் நண்பர்களுடன் அந்த மரத்தினடியில் விளையாடியுள்ளான்.

கவிஞருடைய தாத்தாவின் தாத்தா காலத்திலிருந்து மூன்று தலைமுறைகள், கவிஞருடைய அப்பா, கவிஞர், கவிஞருடைய மகன் என்று மொத்தம் ஆறு தலைமுறைகளைக் கண்டு பெருவாழ்வு வாழ்ந்த மரமானது ஒருநாள் இரவு பேய்க்காற்றில் வேரோடு சாய்ந்துவிட்டது.

ஊர் மக்கள் மொத்தமும் துக்கம் விசாரிக்கச் செல்வது போன்று, வீழ்ந்துவிட்ட அந்த மரத்தைக் காணச் சென்றார்கள். கவிஞர் மட்டும் செல்லவில்லை.

அவர் மனதில் அந்த மரம் வீழவில்லை அப்படியே நிற்கிறது. அந்தக் காட்சியை மாற்ற கவிஞருக்கு மனமில்லை . குன்றுகளின் நடுவே பெரிய மலை நிற்பது போல, அவரது நினைவுகளின் நடுவே அந்த மரம் அப்படியே நிற்கிறது.