Students can Download Tamil Chapter 3.5 தொழிற்பெயர் Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 2 Chapter 3.5 தொழிற்பெயர்
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
பின்வருவனவற்றுள் விகுதி பெற்ற தொழிற்பெயர் எது?
அ) எழுது
ஆ) பாடு
இ) படித்தல்
ஈ) நடி[விடை
Answer:
இ) படித்தல்
Question 2.
பின்வருவனவற்றுள் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எது?
அ) ஊறு
ஆ) நடு
இ) விழு
ஈ) எழுதல்
Answer:
அ) ஊறு
பொருத்துக
1. ஓட்டம் – முதனிலைத் தொழிற்பெயர்
2. பிடி – முதனிலை திரிந்த தொழிற்பெயர்
3. சூடு – விகுதி பெற்ற தொழிற்பெயர்
Answer:
1. ஓட்டம் – விகுதி பெற்ற தொழிற்பெயர்
2. பிடி – முதனிலைத் தொழிற்பெயர்
3. சூடு – முதனிலை திரிந்த தொழிற்பெயர்
சிறுவினா
Question 1.
வளர்தல், பேசுதல் – இவை எவ்வகைப் பெயர்கள்? விளக்கம் தருக.
Answer:
- வளர்தல், பேசுதல் – இவை விகுதி பெற்ற தொழிற்பெயர்கள்
- வளர்’, ‘பேசு’ என்ற வினைப் பகுதிகள் ‘தல்’ என்ற விகுதியோடு சேர்ந்து தொழிற்பெயர்களாக அமைந்துள்ளன.
- இவ்வாறு வினைப் பகுதியுடன் தொழிற்பெயர் விகுதி சேர்ந்து வருவதனால் விகுதி பெற்ற தொழிற்பெயராயிற்று.
Question 2.
முதனிலை திரிந்த தொழிற்பெயர் என்றால் என்ன? சான்று தருக.
Answer:
முதனிலை திரிந்த தொழிற்பெயர் : முதனிலையான பகுதி திரிவதால் உருவாகும் தொழிற்பெயர் முதனிலை திரிந்த தொழிற்பெயர் எனப்படும்.
சான்று :
(i) தமிழ் படிக்கும் பேறு பெற்றேன்.
பெறு – பேறு எனத் திரிந்துள்ளது.
(ii) உணவின் சூடு குறையவில்லை .
சுடு – சூடு எனத் திரிந்துள்ளது.
கற்பவை கற்றபின்
Question 1.
பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ள தொழில் பெயர்களைக் கண்டறிந்து தொகுக்க.
Answer:
பேசும் ஓவியங்கள் பாடப்பகுதியில் இடம்பெற்றுள்ள தொழில் பெயர்கள்: வேட்டைக்குச் செல்லுதல், நடனம் ஆடுதல், போர் செய்தல்.
மொழியை ஆள்வோம்
கேட்க.
Question 1.
கோட்டோவியம் பற்றிய செய்திகளை உங்கள் பள்ளி ஓவிய ஆசிரியரிடம் கேட்டு அறிக.
Answer:
மாணவர்கள் தாங்களாகவே கோட்டோவியம் பற்றிய செய்திகளை அவரவர் பள்ளி ஓவிய ஆசிரியரிடம் கேட்டு அறிய வேண்டும்.
பேசுக
Question 1.
நீங்கள் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றி வகுப்பறையில் பேசுக.
Answer:
அனைவருக்கும் வணக்கம்.
நான் கண்டு வியந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் பற்றிக் கூறப் போகிறேன். தஞ்சை மாவட்டத்திலுள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோயில் இரண்டாம் இராசராச சோழனால் கி.பி. 1107ஆம் கட்டப்பட்டது. இக்கோயில் கலைகளின் சரணாலயம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு ஓவியங்களாலும் சிற்பங்களாலும் அழகூட்டப்பட்டுள்ளது.
இக்கோயில் அர்த்தமண்டபம், முகமண்டபம், இராஜகம்பீர மண்டபம், கருவறை மண்டபம் என்று நான்கு மண்டங்களைக் கொண்டது. அடிப் பகுதி, தூண்கள் மற்றும் விதானங்களில் மூன்று பகுதிகளாகச் சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஒவ்வொரு தூணின் நான்கு பட்டைகளிலும் அமைந்த சிற்றோவியங்கள் அழகாகத் திகழ்கின்றன. கோயிலின் நுழைவு வாயிலில் அமைந்த ஏழு கருங்கற் படிகள், நாதப்படிகளாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் நடனக் காட்சிகள், போர்க் காட்சிகள், ரிஷிகள், விலங்குகள், கற்பனை உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கருவறை மண்படத்தின் வெளிப்புறச் சுவர்களில் கீழிருந்து மேற்புறம் வரை சிற்பங்கள் நிறைந்து காணப்படுகின்றன.
தாராசுரம் – தமிழரின் கலை, கலாச்சாரப் பண்பாட்டினைப் பறைசாற்றும் எத்தனையோ சின்னங்களில் இதுவும் ஒன்று. இக்கோயிலின் சிறப்பம்சமே, கருவறை மண்டபத்தின் வெளிப்புறச் சுவரின் அடிப்பாகத்தில் 63 நாயன்மார்களின் கதைகளை 95 கற்களில் செதுக்கி வைத்திருப்பதுதான்.
இங்கு கடவுளர் பலரின் வடிவங்கள், முனிவர்கள், வழிபடும் மக்கள், கடவுளின் கதைகள், மக்களின் வாழ்க்கை முறை, கலாச்சாரம், மலர்கள், விலங்குகள், யாழிகள் எனப் பல வகையான வடிவங்களைக் காணமுடிகிறது.
இக்கோயிலில் நடனம், இசை மற்றும் பொழுதுபோக்குகளை வெளிப்படுத்தும் பல்வேறு சிற்பங்கள் அமைந்துள்ளன. ஒரு பெண்மணி ஒரு யானையைத் துரத்துவதுபோல் அமைந்த சிற்பம் என்னை மிகவும் கவர்ந்தது. பெண்களின் வீரத்தைத் தத்ரூபமாக வடித்துள்ளனர்.
இராமாயண மகாபாரதக் கதைகள், இரதி – மன்மதன் கதை, சிவபுராணக் கதைகள் முதலியனவும், பரத நாட்டிய அடவுகளும் காண்பவர் மனத்தை ஈர்க்குமாறு தாராசுரம் கோயில் சிற்பங்கள் அமைந்துள்ளன. பநூறு கோயில்களுக்குச் சென்று சிற்பங்களின் பேரழகைக் கண்டு மகிழ்ந்த அனுபவத்தைத் தாராசுரம் கோயில் ஒன்றே தருகிறது. காண்போரை சுண்டி இழுக்கும் ஓவியங்களும் சிற்பங்களும் என்னை வியப்பில் ஆழ்த்தின.
கவிதையை நிறைவு செய்க
வானும் நிலவும் அழகு
வயலும்…………………………………………………..
……………………………………………………
……………………………………….அழகு
Answer:
வானும் நிலவும் அழகு
வயலும் நீரோடையும் அழகு
வண்ண மீனும் நீலக்கடலும் அழகு
வானவில்லும் விண்மீன்களும் அழகோ அழகு.
படம் உணர்த்தும் கருத்து
Answer:
ஓடி விளையாடு பாப்பா என்னும் பாரதியின் வாக்கிற்கு இணங்க ஒற்றுமையோடு
ஓடியாடும் சிறுவர்கள். வற்றாமல் வளம் தரும் ஆறு. நிழல் தரும் மரம், வண்ண த்துப் பூச்சிகள், பூத்துக்குலுங்கும் சோலை, பாடித் திரியும் பறவைகள், மலைக்க வைக்கும் மலையென இயற்கைக் காட்சிகளை ரசித்த வண்ணம் விளையாடுகின்றனர் சிறுவர்கள்.
கொடுக்கப்பட்டுள்ள சொற்களை ஒரு தொடரில் முதல் மற்றும் இறுதிச்சொல்லாகக் கொண்டு சொற்றொடர் உருவாக்குக
(ஓவியக்கலை, இசை, கட்டடக்கலை, வண்ணங்கள் )
(எ.கா.) ஓவியக்கலை கண்ணையும் கருத்தையும் கவர்கிறது.
நுண்கலைகளுள் ஒன்று ஓவியக்கலை.
இசை : இசைக்கு மயங்காதவர் இல்லை.
தொன்மைக் கலைகளுள் தனித்தன்மையுடையது இசை.
கட்டக்கலை : கட்டடக்கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாகத் தமிழர்கள் விளங்கினார்.
தமிழர்களின் கை வந்த கலை கட்டடக்கலை.
வண்ணங்கள் : வண்ணங்கள் ஏழும் வானவில்லிற்கு அழகு.
சிவப்பு, பச்சை, நீலம் ஆகிய மூன்றும் முதன்மை வண்ணங்கள்.
சொல்லக் கேட்டு எழுதுக
1. கலைப்படைப்பு மானுடத்தைப் பேச வேண்டும்
2. இருபொருள் தருமாறு பாடப்படுவது இரட்டுற மொழிதல் ஆகும்.
3. வண்ணங்கள் பயன்படுத்தாமல் வரைவது புனையா ஓவியம்.
4. ஆற்று மணலுடன் சுண்ணாம்பைச் சேர்த்துச் சுவரைச் சமப்படுத்துவர்.
5. வள்ளுவர் கோட்டத்தின் அமைப்பு திருவாரூர்த் தேர் போன்றது.
இடைச்சொல் ‘ஐ’ சேர்த்துத் தொடரை மீண்டும் எழுதுக
(எ.கா.) வீடு கட்டினான் – வீடு + ஐ + கட்டினான் = வீட்டைக் கட்டினான்.
1. கடல் பார்த்தாள் – கடல் + ஐ + பார்த்தாள் = கடலைப் பார்த்தாள்
2. புல் தின்றது – புல் + ஐ + தின்றது = புல்லைத் தின்றது
3. கதவு தட்டு ஓசை – கதவு + ஐ + தட்டும் ஓசை = கதவைத் தட்டும் ஓசை
4. பாடல் பாடினாள் – பாடல் + ஐ + பாடினாள் = பாடலைப் பாடினாள்
கீழ்க்காணும் குறிப்புகளைக் கொண்டு கட்டுரை எழுதுக
எங்கள் ஊர்
(முன்னுரை – அமைவிடம் – பெயர்க்காரணம் – தொழில்கள் – சிறப்பு மிகு இடங்கள் – திருவிழாக்கள் – மக்கள் ஒற்றுமை – முடிவுரை )
முன்னுரை :
எங்கள் ஊர் காஞ்சிபுரம். இது இந்தியாவின் ஏழு புனிதத் தலங்களுள் ஒன்றாகும். பல்லவர்களின் தலைநகர் என்ற பெருமைக்குரிய ஊராகும்.
அமைவிடம் :
காஞ்சிபுரம், தமிழ்நாட்டு மாவட்டங்களில் சிறப்புப் பெற்ற மாவட்டமாகும். இது பாலாற்றின் கரையில் அமைந்துள்ளது. இது தென்னிந்தியாவின் மிகவும் பழமையான நகரங்களில் ஒன்றாகும்.
பெயர்க் காரணம் :
இங்குக் காஞ்சி மரங்கள் நிறைந்திருந்ததால் காஞ்சியூர் என்றழைக்கப்பட்டுப் பிறகு காஞ்சிபுரம் எனக் காலப்போக்கில் மாறியிருக்கலாம். கா என்றால் பிரம்மன். அஞ்சித்தல் என்றால் பூசித்தல், புரம் என்றால் நகரம் என்பது பொருள். பிரம்மன் பூசித்த நகரம் ஆதலால் காஞ்சிபுரம் ஆயிற்று என்று பலவாறு பெயர்க்காரணங்கள் கூறப்படுகின்றன.
தொழில்கள் :
காஞ்சிபுரம் கோயில் நகரம் என்றும், பட்டு நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. இங்கு முதன்மைத் தொழிலாகப் பட்டு நெசவு நடைபெறுகிறது. காஞ்சிப்பட்டு உலகப் புகழ் பெற்றதாகும். பரம்பரை பரம்பரையாகப் பட்டுப்புடவைகளை நெய்யும் நெசவாளிகள் இங்கு வாழ்கிறார்கள். வேளாண்மையில் நெல், கரும்பு, நிலக்கடலை, பயறு வகைகள் நவதானியங்கள் பயிரிடப்படுகின்றன.
சிறப்புமிகு இடங்கள் :
காஞ்சிபுரம் முக்தி தரும் ஏழு நகரங்களில் ஒன்றாகும். இங்குப் பல கோயில்கள் உள்ளன. கைலாசநாதர் கோயில், காமாட்சியம்மன் கோயில், ஏகாம்பர நாதர் கோயில், வரதராஜ பெருமாள் கோயில் ஆகிய கோயில்கள் மிகவும் முக்கியமானவை.
திருவிழாக்கள் :
காஞ்சிபுரத்தில் திருவிழா நடைபெறாத நாட்களே இல்லை என்று கூறும் அளவிற்கு நாள்தோறும் விழாக்கள் நடைபெறும். வரதராஜர் கோயிலில் வைகாசி மாதம் கருடர் சேவை மற்றும் தேர்த் திருவிழா நடைபெறும். ஏகாம்பரநாதர் கோயிலில் பிரம்மோற்சவம் பங்குனி மாதம் 10 நாட்கள் திருவிழாவாகவும் ஏலவார் குழலி அம்மன் திருமணமும் நடைபெறும். பிரம்மோற்சவம் நடைபெறும். இன்னும் பல விழாக்களும் நடைபெறும். அத்திவரதர் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டு நாற்பத்தெட்டு நாள்கள் காட்சியளிப்பார்.
மக்கள் ஒற்றுமை :
இங்கு வாழ் மக்கள் பல இனத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் ஒன்றுபட்டு 2 வாழ்கின்றனர். ஏற்றத்தாழ்வின்றியும் பூசலின்றியும் வாழ்கின்றனர். வேற்றுமையில் ஒற்றுமையை நிலைநாட்டுகின்றனர்.
முடிவுரை :
எங்கள் கோயில் நகரமான காஞ்சிபுரத்திற்கு வருகை தந்து இங்குள்ள கடவுளர்களை வழிபட்டு நன்மையடையுங்கள்.
மொழியோடு விளையாடு
கீழ்க்காணும் புதிரைப் படித்து விடையைக் கண்டறிக.
1. நான் இனிமை தரும் இசைக் கருவி.
எனது பெயர் ஆறு எழுத்துக்களை உடையது.
அதில் இறுதி நான்கு எழுத்துகள் விலை உயர்ந்த ஓர் உலோகத்தைக் குறிக்கும்.
முதல் இரண்டு மற்றும் கடைசி இரண்டு எழுத்துகளைச் சேர்த்தால் விலங்கின் வேறு பெயர் கிடைக்கும். நான் யார்? ……….
Answer:
மிருதங்கம்
2. நான் ஒரு காற்று கருவி
நான் புல் வகையைச் சேர்ந்த தாவரத்திலிருந்து உருவாக்கப்படுகிறேன்.
எனது பெயர் ஏழு எழுத்துகளைக் கொண்டது.
முதல் இரண்டு எழுத்துகள் ஒரு தாவர வகையைக் குறிக்கும்.
இறுதி மூன்று எழுத்துகள் எனது வடிவத்தைக் குறிக்கும். நான் யார்? …
Answer:
புல்லாங்குழல்
பின்வரும் பத்திகளைப் படித்து, கேட்கப்பட்டுள்ள வினாக்களுக்கு விடையளிக்க
சாலை விபத்துகளைத் தவிர்க்கச் சாலை விதிகளை அறிந்து ஒவ்வொருவரும் வாகனங்களை ஓட்ட வேண்டும்.
சாலையில் வாகனங்களை இடப்புறமாகவே செலுத்த வேண்டும். இருவழிச் சாலையின் மையத்தில் விட்டுவிட்டுப் போடப்பட்டுள்ள வெள்ளைக் கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரி சமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும். வாகனங்களை முந்துவதற்குக் கோட்டுக்கு வலது பக்கம் உள்ள சாலையைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. இருவழிச் சாலையின் மையத்தில் தொடர்ச்சியாக வெள்ளை அல்லது மஞ்சள் கோடு
வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக்கூடாது. இரட்டை மஞ்சள் கோடு வரையப்பட்டிருந்தால் முந்துவதற்கு எக்காரணம் கொண்டும் வலது பக்கச் சாலையைப் பயன்படுத்தக் கூடாது.
ஒருவழிப்பாதை என்று குறிப்பிடப்பட்டுள்ள சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டும் வாகனங்களைச் செலுத்த வேண்டும். தடக்கோடுகள் இடப்பட்டுள்ள சாலையில் தடத்தின் உள்ளேயே வாகனங்களைச் செலுத்த வேண்டும். வாகனத்தைப் பின்தொடரும் போது மிகவும் நெருக்கமாகப் பின்தொடரக் கூடாது. திரும்பும் போது சைகை காட்ட அடையாள விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்.
வினாக்கள் :
Question 1.
சாலையின் எந்தப் பக்கமாக வாகனங்களைச் செலுத்த வேண்டும்?
Answer:
சாலையின் இடப்புறமாகவே வாகனங்களைச் செலுத்த வேண்டும்.
Question 2.
விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக்கோடு எதனைக் குறிக்கும்?
Answer:
விட்டுவிட்டுப் போடப்படும் வெள்ளைக் கோடு இரு போக்குவரத்துக்காகச் சாலை சரிசமமாகப் பிரிக்கப்பட்டுள்ளதைக் குறிக்கும்.
Question 3.
எந்தக் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை?
Answer:
இரட்டை மஞ்சள் கோட்டைத் தாண்டி வாகனங்களை முந்திச் செல்ல அனுமதி இல்லை.
Question 4.
ஒருவழிப் பாதை எனப்படுவது யாது?
Answer:
ஒருவழிப் பாதை என்பது சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள திசையில் மட்டுமே வாகனங்களைச் செலுத்துவது ஆகும்.
Question 5.
வாகனங்களைப் பின் தொடர்வதற்கான முறையைக் கூறு.
Answer:
வாகனங்களைப் பின்தொடரும் போது மிகவும் நெருக்கமாகப் பின் தொடரக் கூடாது.
நிற்க அதற்குத் தக
என் பொறுப்புகள் …
1. நம் நாட்டுத் தொன்மைக் கலைகளை மதிப்பேன்.
2. கலைகளில் ஒன்றையேனும் கற்றுக் கொள்வேன்.
3. கலைச் சின்னங்களைப் பாதுகாப்பேன்.
4. தமிழகச் சுற்றுலாச் சிறப்பு வாய்ந்த இடங்களுக்குச் சென்று தமிழர்தம் கலைத்திறனை அறிந்து போற்றுவேன்.
கலைச்சொல் அறிவோம்