Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

Students can Download Tamil Chapter 2.1 புதுமை விளக்கு Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.

Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

மதிப்பீடு

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
“இடர் ஆழி நீங்குகவே – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ………………….
அ) துன்பம்
ஆ) மகிழ்ச்சி
இ) ஆர்வம்
ஈ) இன்பம்
Answer:
அ) துன்பம்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

Question 2.
ஞானச்சுடர்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………………….
அ) ஞான + சுடர்
ஆ) ஞானச் + சுடர்
இ) ஞானம் + சுடர்
ஈ) ஞானி + சுடர்
Answer:
இ) ஞானம் + சுடர்

Question 3.
இன்பு உருகு என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) இன்பு உருகு
ஆ) இன்பும் உருகு
இ) இன்புருகு
ஈ) இன்பருகு
Answer:
இ) இன்புருகு

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

பொருத்துக

அன்பு – நெய்
ஆர்வம் – தகனி
சிந்தை – விளக்கு
ஞானம் – இடுதிரி
Answer:
Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு - 1

குறுவினா

Question 1.
பொய்கையாழ்வாரும் பூதத்தாழ்வாரும் அகல்விளக்காக உருவகப்படுத்துகின்றனர்?
Answer:
பொய்கையாழ்வார் பூமியை அகல்விளக்காக உருவகப்படுத்துகின்றார். பூதத்தாழ்வார் அன்பை அகல்விளக்காக உருவகப்படுத்துகின்றார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

Question 2.
பொய்கை ஆழ்வார் தற்காகப் பாமாலை சூட்டுகிறார் ?
Answer:
பொய்கையாழ்வார் தம்முடைய கடல் போன்ற துன்பம் நீங்குவதற்காகத் திருமாலுக்குப் பாமாலை சூட்டுகிறார்.

சிறுவினா

பூதத்தாழ்வார் ஞானவிளக்கு ஏற்றும் முறையை விளக்குக.
Answer:
பூதத்தாழ்வார் ஞான விளக்கேற்றும் முறை:
(i) விளக்கேற்றுவதற்கு அகல்விளக்கு, நெய், திரி ஆகியவை தேவை
(ii) இங்கு , பூதத்தாழ்வார் தம் உள்ளத்தில் எழுகின்ற அன்பை அகல்விளக்காவும்,
ஆர்வத்தை நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு ஞான ஒளியாகிய சுடர்விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றுகிறார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

சிந்தனை வினா

பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நீங்கள் எவற்றை எல்லாம் விளக்காக உருவகப்படுத்துவீர்கள்
Answer:
பொய்கையாழ்வார் ஞானத்தை விளக்காக உருவகப்படுத்துகிறார். நான் ஒழுக்கம், அன்பு ஆகியவற்றை விளக்காக உருவகப்படுத்துவேன்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

கற்பவை கற்றபின்

Question 1.
பன்னிரு ஆழ்வார்களின் பெயர்களைத் திரட்டுக.
Answer:

  1. பொய்கை ஆழ்வார்
  2. பூதத்தாழ்வார்
  3. பேயாழ்வார்
  4. திருமழிசை ஆழ்வார்
  5. நம்மாழ்வார்
  6. திருமங்கையாழ்வார்
  7. தொண்டரடிப் பொடி ஆழ்வார்
  8. பெரியாழ்வார்
  9. ஸ்ரீ ஆண்டாள்
  10. குலசேகர ஆழ்வார்
  11. மதுரகவி ஆழ்வார்
  12. திருப்பாணாழ்வார்

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

தெரிந்து தெளிவோம்

(i) ஒரு பாடலின் இறுதி எழுத்தோ அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர். (அந்தம் – முடிவு, ஆதி – முதல்). இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

(ii) திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள். அவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம் ஆகும். இதனைத் தொகுத்தவர் நாதமுனி ஆவார். பன்னிரு ஆழ்வார்களுள் பொய்கை யாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் ஆகிய மூவரையும் முதலாழ்வார்கள் என்பர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

கூடுதல் வினாக்கள்

நிரப்புக

  1. உள்ளத் தூய்மையோடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு.
  2. பொய்கையாழ்வார் பிறந்த ஊர் காஞ்சிபுரத்திற்கு அருகில் உள்ள திருவெஃகா.
  3. பொய்கையாழ்வார் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியைப் பாடியுள்ளார்.
  4. பூதத்தாழ்வார் பிறந்த ஊர் மாமல்லபுரம்.
  5. நாலாயிரத்திவ்வியப் பிரபந்ததில் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர் பூதத்தாழ்வார்.
  6. முதலாழ்வார்கள் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார்.
  7. திருமாலைப் போற்றிப் பாடியவர்கள் பன்னிரு ஆழ்வார்கள்.
  8. ஆழ்வார்கள் மொத்தம் பன்னிருவர்.
  9. ஆழ்வார்கள் பாடிய பாடல்களின் தொகுப்பு நாலாயிரத் திவ்விய பிரபந்தம்.
  10. நாலாயிரத் திவ்விய பிரபந்தத்தைத் தொகுத்தவர் நாதமுனி.
  11. பொய்கையாழ்வார் கடலை நெய்யாகவும், பூதத்தாழ்வார் ஆர்வத்தை நெய்யாகவும் பாடியுள்ளார்.
  12. அன்பை அகல்விளக்காகப் பாடியவர் பூதத்தாழ்வார்.
  13. பூமியை அகல்விளக்காகப் பாடியவர் பொய்கையாழ்வார்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

விடையளி :

Question 1.
அந்தாதி – குறிப்பு எழுதுக
Answer:

  • ஒரு பாடலின் இறுதி எழுத்தோ , அசையோ, சொல்லோ அடுத்து வரும் பாடலுக்கு முதலாக அமைவதை அந்தாதி என்பர்.
  • இவ்வாறு அந்தாதியாக அமையும் பாடல்களைக் கொண்டு அமைவது அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையாகும்.

Question 2.
பொய்கையாழ்வார் குறிப்பு எழுதுக.
Answer:

  • பொய்கையாழ்வார் காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள திருவெஃகா என்னும் ஊரில் பிறந்தவர்.
  • நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் உள்ள முதல் திருவந்தாதியைப் பாடியவர்.

Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.1 புதுமை விளக்கு

Question 3.
பூதத்தாழ்வார் குறிப்பு வரைக.
Answer:

  • பூதத்தாழ்வார் சென்னையை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிறந்தவர்.
  • இவர் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் இரண்டாம் திருவந்தாதியைப் பாடியவர்.

பாடலின் பொருள்

ஞானத்தமிழ் பயின்ற நான் அன்பையே அகல்விளக்காகவும், ஆர்வத்தையே நெய்யாகவும், இனிமையால் உருகும் மனத்தையே இடுகின்ற திரியாகவும் கொண்டு, ஞான ஒளியாகிய சுடர் விளக்கை மனம் உருக திருமாலுக்கு ஏற்றினேன்.