Students can Download Tamil Chapter 2.4 உண்மை ஓளி Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 2.4 உண்மை ஓளி
மதிப்பீடு
Question 1.
உண்மை ஒளி’ படக்கதையைச் கதையாகச் சுருக்கி எழுதுக.
Answer:
ஜென் குரு ஒருவர் மாணவர்களுக்குப் பாடம் கற்பித்துக் கொண்டிருந்தார். குழந்தைகளிடம் உண்மையான ஒளி எது?’ என்பதைப் பற்றி இன்று அறிந்து கொள்ளப் போகிறோம் என்று கூறிவிட்டு தொடங்கினார்.
பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிரும் ஒன்றே. பசி, தாகம், தூக்கம் ஆகியவை எல்லா உயிர்களுக்கும் உண்டு. அதுமட்டுமில்லாமல் இரவும் பகலும் மாறி மாறி வருவதுபோல வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்று கூறினார்.
பிறகு, “இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது என்பதை எந்த நொடியில் நீங்கள் அறிவீர்கள்?” என்று மாணவர்களிடம் கேட்டார். அதற்கு ஒரு மாணவன், “தொலைவில் விலங்கு குதிரையா? கழுதையா? என்பதை அடையாளம் காணக்கூடிய நொடியில் வெளிச்சம் வந்துவிட்டதை நான் அறிவேன் ஐயா” என்றான். அதனைக் குரு ஏற்றுக் கொள்ளவில்லை.
மற்றொரு மாணவன் “தூரத்திலிருக்கும் மரம் ஆலமரமா? அரசமரமா? என்பதை அடையாளம் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்துவிட்டது என்பதை அறியலாம். சரிதானே ஐயா?” என்றான்.
குரு “வேறு யாருக்காவது தெரியுமா?” என்று கேட்டார். உடனே மாணவர்கள் “எங்களுக்குத் தெரியவில்லை ஐயா, தாங்களே கூறிவிடுங்கள்” என்று கேட்டுக் கொண்டனர். ஒரு மனிதரைக் காணும்போது இவர் என் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள்” என்று குரு கூறினார்.
“இரவும் பகலும் வெறும் காலவேறுபாடுகள் தான். உண்மையான ஒளி உள்ளத்தின் உள்ளே ஏற்பட வேண்டியது என்பதை நீங்கள் அளித்த விளக்கத்தின் மூலம் நாங்கள் புரிந்து கொண்டேம் ஐயா” என்று மாணவர்கள் கூறினர். உள்ளுக்குள் ஒளி இல்லையென்றால் உச்சி வெயில் கூடக் காரிருளே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
வகுப்பு முடிந்த பிறகு குரு அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்பட்டுச் சென்றார். இருட்டுவதற்குள் ஊரை அடைய வேண்டும் என்று எண்ணிக்கொண்டே சென்றார். சாலையோரம் ஒருவன் மயங்கிக் கிடந்தான். குதிரையை நிறுத்தி, கீழே இறங்கிய குரு அந்த மனிதனை எழுப்பிப் பார்த்தார். அவன் மயங்கிய நிலையிலேயே இருந்தான். மீண்டும் மீண்டும் எழுப்பியதில் மயங்கியவன் எழுந்தான்.
குரு , கொஞ்சம் நீரைக் கொடுத்துக் குடிக்கச் செய்தார். மயங்கியவன், தான் பசியால் மயங்கி விழுந்துவிட்டதாகவும் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறினான். மேல் பரிதாபப்பட்டு அவனைக் கிரையில் அன வனைக் குதிரையில் அழைத்துச் செல்ல N எண்ணினார். அதனால் அவனை மெதுவாகக் குதிரையின் மீது குரு ஏற்றினார்.
குதிரையில் ஏறிய அவன் குதிரையை அடித்து விரட்டத் தொடங்கினான். குதிரையைத் – திருடுவதற்குகாகத்தான் மயங்கியவன் போல் நடித்துள்ளான் என்பதைக் குரு உணர்ந்தார்.
குரு குதிரையில்லாமல் எங்கும் செல்ல இயலாது என்பதால், எப்படியாவது ஒரு கை குதிரையை வாங்கிக் கொண்டுதான் ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று முடிவெடுத்தார். அந்தச் சந்தையில் குருவின் குதிரை நின்று கொண்டிருந்தது. குரு அவன் தோளைத் தொட்டார். குழந்தாய்! என்று அழைத்தார். ஒன்றும் தெரியாதவன் போல் குருவைப் பார்த்து “ஆ! நீங்களா?” என்று கேட்டான். குரு அவனிடம், ” யாரிடமும் சொல்லாதே!” என்றார். குதிரையைத் திருடியவன் எதை? ஏன்?” என்று கேட்டான். குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், இது உனக்கு எப்படிக் கிடைத்தது என்று யாரிடமும் சொல்லாதே” என்று குரு கூறினார். திருடன் இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான்.
உடனே, குரு “நீ நினைப்பது எனக்குப் புரிகிறது குழந்தாய்! ஆனால், நான் ஏமாந்து போனது தெரிந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால் கூட அவர்களுக்கு யாரும் உதவ முன்வரமாட்டார்கள். புரிகிறதா? குறுகிய தன்னலத்துக்காக நல்ல கோட்பாடுகளை அழித்துவிடக்கூடாது. இதை நீ தெரிந்துகொள்” என்று கூறினார்.
குதிரையைத் திருடியவன் குருவின் பெருந்தன்மையை உணர்ந்து வெட்கித் தலை குனிந்தான்.
கற்பவை கற்றபின்
Question 1.
ஜென் கதைகளில் வேறு சிலவற்றை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
ஜென் கதை – வெற்றியைத் தீர்மானிப்பது கடவுளா?
இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே வெகு மும்முரமாக சண்டை நடந்து கொண்டிருந்தது. எதிரி நாட்டுப் படையிடம் கிட்டத்தட்ட தோற்றுவிட்ட நிலை. ஆனாலும் தாய்நாட்டுப் படைத்தளபதிக்கு போரை இழக்க மாட்டோம் என்ற அசாத்திய நம்பிக்கை. ஆனால் துணைத் தளபதி உள்ளிட்ட அவன் வீரர்களுக்கு அந்த நம்பிக்கை கொஞ்சம் கூட இல்லை. எல்லோரும் ஓடுவதில் குறியாக இருந்தனர்.
என்னதான் நம்பிக்கை இருந்தாலும் வீரர்களில்லாமல் தனி ஆளாய் என்ன செய்ய இயலும்? கடைசி நாள் சண்டை. போர்க்களத்துக்குப் போகும் வழியில் ஒரு கோயிலைக் கண்டார்கள். உடனே தளபதி வீரர்களை அழைத்து, “சரி வீரர்களே… நாம் ஒரு முடிவுக்கு வருவோம். இதோ இந்தக் கோயிலுக்கு முன் ஒரு நாணயத்தைச் சுண்டி விடுகிறேன். அதில் தலைவிழுந்தால் வெற்றி நமக்கே. பூ விழுந்தால் நாம் தோற்பதாக அர்த்தம். இப்படியே திரும்பி விடுவோம். வெற்றியா? தோல்வியா? நமக்கு மேல் உள்ள சக்தி தீர்மானிக்கட்டும்… சரியா?” “ஆ…. நல்ல யோசனை. அப்படியே செய்வோம்.”
நாணயத்தைச் சுண்டினான் தளபதி. காற்றில் மிதந்து, விர்ரென்று சுழன்று தரையில் விழுந்தது நாணயம்.
தலை…!
வீரர்கள் உற்சாகத்தில் மிதந்தனர். வெற்றி, வெற்றி என்று எக்காளமிட்டபடி போர்க்களம் நோக்கி ஓடினர். வெகு வேகமாக எதிரி நாட்டினருடன் சண்டையிட்டனர்.
அம்! என்ன ஆச்சர்யம். அந்த சிறிய படை, எதிரி நாட்டின் பெரும் படையை வீழ்த்திவிட்டது. துணைத் தளபதி வந்தான். “நாம் வென்றுவிட்டோம். கடவுள் தீர்ப் முடியாதல்லவா….” என்றான் உற்சாகத்துடன்.
“ஆமாம்… உண்மைதான்” என்று கூறியபடி அந்த நாணயத்தைத் துணைத் தளபதியிடம் கொடுத்தான் தளபதி.
நாணயத்தின் இருபக்கங்களிலும் தலை.
இக்கதையில் மூலம் நாம் உணர்வது தன்னம்பிக்கைதான் வெற்றியின் முதல்படி என்பதாகும்.
Question 2.
உண்மை ஒளி’ படக்கதையை வகுப்பறையில் நாடகமாக நடித்துக் காட்டுக.
Answer:
காட்சி -1
ஜென் குரு : குழந்தைகளே! உண்மையான ஒளி எது என்பதைப் பற்றி இன்று அறிந்து கொள்ளப் போகிறோம்.
மாணவர்கள் : அறிந்து கொள்ள ஆவலாக உள்ளோம் ஐயா!
ஜென் குரு : பிறப்பின் அடிப்படையில் எல்லா உயிரும் ஒன்றே. பசி, தாகம், தூக்கம் ஆகியவை எல்லா உயிர்களுக்கும் உண்டு.
மேலும் இரவும் பகலும் மாறி மாறி வருவது போல வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும். இப்பொழுது உங்களை ஒரு கேள்வி கேட்கட்டுமா? இருள் கலைந்து வெளிச்சம் வந்துவிட்டது என்பதை எந்த நொடியில் நீங்கள் அறிவீர்கள்?
மாணவன் : தொலைவில் நிற்கும் விலங்கு குதிரையா? கழுதையா? என்பதை அடையாளம் காணக்கூடிய நொடியில் வெளிச்சம் வந்துவிட்டதை நான் அறிவேன் ஐயா.
ஜென் குரு : இல்லை. வேறு யாராவது கூறுங்கள் பார்ப்போம்.
மாணவன் : தூரத்திலிருக்கும் மரம் ஆலமரமா? அரசமரமா? என்பதை அடையாளம் காணக்கூடிய நேரத்தில் உண்மையாக விடிந்துவிட்டது என்பதை அறியலாம். சரிதானே ஐயா!
ஜென் குரு : இல்லை. வேறு யாருக்காவது தெரியுமா? மாணவர்கள் எங்களுக்குத் தெரியவில்லை ஐயா. தாங்களே கூறி விடுங்கள்.
ஜென் குரு : ஒரு மனிதரைக் காணும் போது இவர் உடன்பிறந்தவர் என்று எப்போது நீங்கள் உணர்கிறீர்களோ, அப்போதுதான் உண்மையான ஒளி உங்களுக்குள் ஏற்படுகிறது என்பது பொருள்.
மாணவர்கள் : இரவும் பகலும் வெறும் கால வேறுபாடுகள் தான். உண்மையான ஒளி உள்ளத்தின் உள்ளே ஏற்பட வேண்டியது என்பதை தாங்கள் புரிந்துகொண்டோம் ஐயா.
ஜென் குரு : உள்ளுக்குள் ஒளி இல்லையென்றால் உச்சி வெயில் கூடக் காரிருளே என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். மீண்டும் நாளை சந்திப்போம். வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து செல்கின்றனர்.)
காட்சி – 2
(குரு அருகில் உள்ள சிற்றூருக்குப் புறப்படுகிறார்.)
ஜென் குரு : (மனதிற்குள்) இருட்டுவதற்குள் ஊரை அடைய வேண்டும்.
ஜென் குரு :(வழியில்) ஆ! யாரது சாலையோரம் படுத்துக்கிடப்பது.
(குதிரையை நிறுத்தி, கீழே இறங்கிய குரு அந்த மனிதனை எழுப்புகிறார்)
ஜென் குரு : குழந்தாய்! எழுந்திரு. நீ யார்? ஏன் இங்கே படுத்திருக்கிறாய்?
(மனதிற்குள்) இவன் மயக்கம் அடைந்திருக்கிறான்.
(படுத்திருப்பவனுக்கு நீரைப் பருகத் தருகிறார் குரு.)
ஜென் குரு : குழந்தாய்! எழுந்திரு . இந்த நீரைக் கொஞ்சம் குடி.
(மயக்கமடைந்தவன் எழுந்து உட்காருகிறான்.)
வழிப்போக்கன் : பசியால் மயங்கி விழுந்து விட்டேன். ஐயா. நான் பக்கத்து ஊருக்குச் செல்ல வேண்டும்.
ஜென் குரு : அப்படியா! சரி என்னிடம் குதிரையிருக்கிறது. நான் உன்னை அழைத்துச் செல்கிறேன். (குரு , அவனைத் தன் குதிரையின் மீது உட்கார வைக்கிறார்.)
ஜென் குரு : மெதுவாக ஏறுப்பா! பார்த்து உட்கார். (குதிரையில் ஏறிய அவன் குதிரையை அடித்து விரட்டத் தொடங்குகிறான்.)
ஜென் குரு : ஆ! என்ன இது? ஓ! இவன் திருடன் போல இருக்கிறது. என் குதிரையைத் திருடவே இப்படி நடித்திருக்கிறான். (குரு ஏமாற்றத்துடன் நடந்து ஊரை அடைகிறார்.)
காட்சி – 3
இடம் : சந்தை
ஜென் குரு – (மனதிற்குள்) இங்கு எப்படியாவது ஒரு குதிரையை வாங்கிக் கொண்டுதான் ஊருக்குத் திரும்ப வேண்டும்.
ஜென் குரு : ஆ! அதோ அங்கு நிற்பது என்னுடைய குதிரையைப் போல் உள்ளதே
(குருவிடம் குதிரையைத் திருடியவன் அங்கு நிற்கிறான். குரு அவன் தோளைத் தொடுகிறார்)
ஜென் குரு : குழந்தாய்!
திருடன் : ஆ. நீங்களா? (குரு மெல்லச் சிரிக்கிறார்)
ஜென் குரு : யாரிடமும் சொல்லாதே !
திருடன் : எதை? ஏன்?
ஜென் குரு : குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், இது உனக்கு எப்படிக் கிடைத்தது என்று யாரிடமும் சொல்லாதே.
திருடன் : (மனத்திற்குள்) இவர் ஏமாந்தது யாருக்காவது தெரிந்தால் அவமானம் என்று நினைக்கிறார் போலிருக்கிறது.
ஜென் குரு : நீ நினைப்பது எனக்குப் புரிகிறது குழந்தாய்! ஆனால், நான் ஏமாந்து போனது தெரிந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால் கூட அவர்களுக்கு யாரும் உதவ முன்வர மாட்டார்கள். புரிகிறதா? குறுகிய தன்னலத்துக்காக நல்ல கோட்பாடுகளை அழித்துவிடக்கூடாது. இதை நீ தெரிந்து கொள்.