Students can Download Tamil Chapter 3.1 மலைப்பொழிவு Questions and Answers, Summary, Notes Pdf, Samacheer Kalvi 7th Tamil Book Solutions Guide Pdf helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
Tamilnadu Samacheer Kalvi 7th Tamil Solutions Term 3 Chapter 3.1 மலைப்பொழிவு
மதிப்பீடு
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Question 1.
மனித வாழ்க்கையில் தேவைப்படுவது ….
அ) பணம்
ஆ) பொறுமை
இ) புகழ்
ஈ) வீடு
Answer:
ஆ) பொறுமை
Question 2.
சாந்த குணம் உடையவர்கள் ………………… முழுவதையும் பெறுவர்.
அ) புத்தகம்
ஆ) செல்வம்
இ) உலகம்
ஈ) துன்பம்
Answer:
இ) உலகம்
Question 3.
மலையளவு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ………….
அ) மலை + யளவு
ஆ) மலை + அளவு
இ) மலையின் + அளவு
ஈ) மலையில் + அளவு
Answer:
ஆ) மலை + அளவு
Question 4.
‘தன்னாடு’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ….
அ) தன் + னாடு
ஆ) தன்மை + னாடு
இ) தன் + நாடு
ஈ) தன்மை + நாடு
Answer:
இ) தன் + நாடு
Question 5.
இவை + இல்லாது என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் …….
அ) இவையில்லாது
ஆ) இவை இல்லாது
இ) இவயில்லாது
ஈ) இவஇல்லாது
Answer:
அ) இவையில்லாது
பொருத்துக
குறுவினா
Quesiton 1.
இந்த உலகம் யாருக்கு உரியது?
Answer:
இந்த உலகம் முழுவதும் சாந்தம் என்னும் அமைதியான பண்புடையவர்களுக்கே
Quesiton 2.
உரியது. உலகம் நிலைதடுமாறக் காரணம் என்ன?
Answer:
உலகம் நிலைதடுமாறக்காரணம்: பலவேறுபட்ட சாதிகளாலும் கருத்துவேறுபாடுகளாலும் இவ்வுலகம் நிலைதடுமாறுகிறது.
Quesiton 3.
வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற என்ன செய்ய வேண்டும்?
Answer:
வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற செய்யவேண்டுவன :
(i) மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும்.
(ii) வாழ்க்கை மலர்ச்சோலையாக மாற வேண்டுமானால் மனிதன் நல்ல உள்ளத்தோடு வாழவேண்டும்.
சிறுவினா
சாந்தம் பற்றி இயேசு காவியம் கூறுவன யாவை?
Answer:
சாக்கம் பற்றி இயேசு காவியம் கூறுவன:
சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்களுக்கே இவ்வுலகம் முழுவதும் உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.
இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது. அறம் என்கிற ஒன்றனை நம்பிய பிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகிவிடும். பொருள் – ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும். இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் – பெற வேண்டும்.
இரக்கம் உடையவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர். இதுதான் அவர்களுக்கான பரிசு . மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும். நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவனுடைய வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.
மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். அவர்கள் தன்னாடு , பிறநாடு என்று பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள் தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.
சிந்தனை வினா
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ என்ன செய்ய வேண்டும்?
Answer:
எல்லா மக்களும் ஒற்றுமையாக வாழ செய்ய வேண்டுவன :
(i) மாணவர்கள் பள்ளியில் தன் நண்பர்களுடன் ஒற்றுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். சக மாணவர்களின் இன்ப துன்பங்களில் பங்கேற்க வேண்டும். அவர்கள் கற்பதற்கும் பாடங்களைப் படிப்பதற்கும் உதவி புரிய வேண்டும்.
(ii) வீட்டில் தன் அக்கா, தங்கை, அண்ணன், தம்பி ஆகியோருடன் விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும். நான், நீ என்று போட்டிப் போடக்கூடாது. ஆணவமின்றி இருக்க வேண்டும். நாம் சொல்வதை மட்டும் எல்லோரும் செய்ய வேண்டும் என்று நினைக்கக்கூடாது.
(iii) பொது இடங்களில் (சமுதாயம்) சாதி மத பேதங்களை பார்க்கக்கூடாது. இயற்கை அனைவருக்கும் பொது என்பதனைப் போல் தெய்வமும் பொதுவானது என உணர வேண்டும். பிற மதத் தெய்வங்களை வணங்கவில்லை யென்றாலும், அத்தெய்வங்களைப் பற்றியோ, மதத்தினர் பற்றியோ அவதூறு பேசக்கூடாது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று பாராமல் அனைவரும் ஒரே மனித சாதி என
எண்ண வேண்டும்.
(iv) யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கணியன் பூங்குன்றனார் கூறியதை நினைவில் வைத்து வாழ்ந்தால் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ முடியும்.
கற்பவை கற்றபின்
இயேசுவின் வாழ்வில் நடந்த சுவையான நிகழ்வு ஒன்றினை அறிந்து வந்து வகுப்பறையில் பகிர்க.
Answer:
(i) ஒரு பெண் பன்னிரண்டு ஆண்டுகளாகத் தீராத நோயினால் துன்பப்படுகின்றாள். அவள் எப்படியாவது அந்நோய் குணமாக வேண்டும் என்று நினைத்தாள். அவள் கூட்டத்திற்கிடையில் நின்றிருந்த இயேசுவின் பின்னால் போய் அவருடைய அங்கியின் ஓரத்தைத் தொட்டாள். உடனடியாக அவள் குணமாகிவிட்டாள். அப்போது இயேசு , “யார் என்னைத் தொட்டது?” என்று கேட்டார். அந்தப் பெண் பயந்து போனாள். பிறகு அவர் முன்னால் வந்து உண்மையைச் சொன்னாள். இயேசு அவளிடம் மகளே , நிம்மதியாகப் போ’ என்று ஆறுதலாகச் சொன்னார்.
(ii) இன்னொரு முறை, யவீரு என்ற அதிகாரி இயேசுவிடம் வந்து, தயவுசெய்து என் வீட்டுக்கு வாருங்கள். என்னுடைய குட்டிப் பெண் மிகவும் உடம்பு முடியாமல் இருக்கிறாள் என்று கெஞ்சினார். ஆனால், இயேசு அங்கே போவதற்கு முன்பே அவள் இறந்து விட்டாள். இருந்தாலும், யவீருவின் வீட்டுக்கு இயேசு போனார். அங்கே நிறைய பேர் அந்தக் குடும்பத்தாருடன் சேர்ந்து புலம்பி அழுது கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களிடம், “அழாதீர்கள், அவள் தூங்குகிறாள்” என்று சொன்னார். பிறகு, அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து, சிறுமியே, எழுந்திரு!” என்று சொன்னார். உடனே அவள் எழுந்து உட்கார்ந்தாள். சாப்பிட அவளுக்கு ஏதாவது கொடுக்கும்படி இயேசு அவளுடைய அப்பா, அம்மாவிடம் சொன்னார். அந்த பெற்றோர் அளவிலா ஆனந்தம் அடைந்தனர். இதேபோல் பல நிகழ்வுகள் இயேசுவின் வாழ்வில் நிகழ்ந்துள்ளன.
கூடுதல் வினாக்கள்
நிரப்புக.
1. கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா.
2. கண்ண தாசனின் சிறப்புப் பெயர் கவியரசு .
3. கண்ணதாசன் தமிழக அரசவைக் கவிஞராக இருந்துள்ளார்.
4. இயேசுவின் வாழ்க்கை வரலாற்றையும் அவரது அறிவுரைகளையும் கூறும் நூல் இயேசு காவியம் ஆகும்.
5. மலைப்பொழிவு என்னும் பகுதி இயேசு காவியம் என்னும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
6. இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.
7. போட்டி இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.
விடையளி :
Question 1.
கவிஞர் கண்ணதாசன் எவ்வகையான நூல்களை எழுதினார்?
Answer:
காவியங்கள், கவிதைகள், கட்டுரைகள், சிறுகதைகள், நாடகங்கள், புதினங்கள் போன்ற இலக்கிய வடிவங்களில் பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் கண்ணதாசன்.
Question 2.
தலைவர்கள் என்று இயேசுநாதர் குறிப்பிடப்பட்டவர் யாவர்?
Answer:
சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்று இயேசுநாதர் கூறுகிறார்.
Question 3.
அறம் பற்றி இயேசுநாதர் கூறியவை பற்றி எழுதுக.
Answer:
இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைதடுமாறுகிறது. அறம் என்கிற ஒன்றனை நம்பிய பிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும் என்று இயேசுநாதர் கூறியுள்ளார்.
Question 4.
உண்மையில்லா உறவுகளாக இயேசுநாதர் கூறுவது யாது?
Answer:
மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். மேலும், அவர்கள் தன்னாடு, பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.
பாடலின் பொருள்
(தம் சீடர்களுக்கு அறிவுரை கூற எண்ணிய இயேசுநாதர் ஒரு குன்றின் மீது ஏறி நின்று பேசத் தொடங்கினார்.)
சாந்தம் என்னும் அமைதியான பண்பு கொண்டவர்கள்தான் பேறு பெற்றவர்கள். இந்த உலகம் முழுவதும் அவர்களுக்கே உரியது. அவர்களே தலைவர்கள் ஆவர் என்ற உண்மையை இயேசுநாதர் கூறினார். மனித வாழ்க்கையில் தேவைப்படுவது பொறுமை. அது மண்ணையும் விண்ணையும் ஆட்சி செய்யும் பெருமையுடையது என்றார்.
இவ்வுலகம் சாதிகளாலும் கருத்து வேறுபாடுகளாலும் நிலைத்தடுமாறுகிறது. அறம் என்கிற ஒன்றனை நம்பிய பிறகு சண்டைகள் நீங்கி உலகம் அமைதியாகி விடும். பொருள் ஈட்டுவதிலும் அறவழியைப் பின்பற்ற வேண்டும். இவ்வுலகம் ஏற்றத்தாழ்வு இல்லா வாழ்வைப் பெற வேண்டும்.
இரக்கம் உடையோரே பேறுபெற்றவர் ஆவர். அவர்கள் பிற உயிர்களின் மீது இரக்கம் காட்டி இறைவனின் இரக்கத்தைப் பெறுவர். இதுதான் அவர்களுக்கான பரிசு . மனிதன் ஆசையில் விழுந்துவிட்டால் அவனது வாழ்வு பாலைவனம் போல் பயனற்றதாகிவிடும். அவன் நல்ல உள்ளத்தோடு வாழ்ந்தால் அவன் வாழ்க்கை மலர்ச்சோலையாக மாறிவிடும்.
மனிதர்கள் சண்டை சச்சரவுகளால் தாமும் துன்புற்றுப் பிறரையும் துன்புறுத்துகின்றனர். மேலும் அவர்கள் தன்னாடு என்றும், பிறர்நாடு என்றும் பேசி உண்மையில்லா உறவுகளாக வாழ்கின்றனர்.
கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நடக்கும் ஆயிரம் போட்டிகளால் பயனற்ற கனவுகள்தாம் தோன்றுகின்றன. இவை இல்லாமல் அமைதியாக வாழ்ந்தால் இதயம் மலையளவு உயர்ந்ததாக மாறும்.