Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி

கற்பவை கற்றபின்

 

Question 1.
கீழ்க்காணும் பத்தியைப் படித்து, அதில் இடம்பெற்றுள்ள பழைய வரிவடிவச் சொற்களை எடுத்து எழுதி, அவற்றை இன்றைய வரிவடிவில் மாற்றி எழுதுக.
Answer:
(i) சுற்றுப்புறச் சூழ்நிலைப் பிரச்சனைகள் பற்றிய இந்தியாவின் கவலை பல்லாண்டு காலமாக வளர்ந்தே வருகிறது.

(ii) ‘மனிதன் ஏழ்மையிலே இருக்கும்போது சத்தற்ற உணவினாலும், நோயினாலும் அச்சுறுத்தப்படுகிறான். பலவீனனாக இருப்பவன் போருக்கு அஞ்கிறான். செல்வந்தனாக இருப்பவனோ தன் கொழுத்த செல்வத்தால் உண்டான அசுத்தத்திற்கு அஞ்கிறான்’ என்றெல்லாம் திருமதி. இந்திராகாந்தி அன்றைக்கு ஆற்றிய உரை நாம் நினைவு கூரத் தக்கது.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 1

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற ……………………… காரணமாக அமைந்தது.
அ) ஓவியக்கலை
ஆ) இசைக்கலை
இ) அச்சுக்கலை
ஈ) நுண்கலை
Answer:
இ) அச்சுக்கலை

Question 2.
வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து …………………… என அழைக்கப் படுகிறது.
அ) கோட்டெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) சித்திர எழுத்து
ஈ) ஓவிய எழுத்து
Answer:
ஆ) வட்டெழுத்து

Question 3.
தமிழ் எழுத்துச் சீர்திருத்தப் பணியில் ஈடுபட்டவர் …………………….
அ) பாரதிதாசன்
ஆ) தந்தை பெரியார்
இ) வ.உ. சிதம்பரனார்
ஈ) பெருஞ்சித்திரனார்
Answer:
ஆ) தந்தை பெரியார்

கோடிட்ட இடத்தை நிரப்புக.

1. கடைச்சங்க காலத்தில் எழுதப்பட்ட தமிழ் எழுத்துகள் ………………………. என அழைக்கப்பட்டன.
2. எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களைக் களைந்தவர் ………………………
Answer:
1. கண்ணெழுத்துகள்
2. வீரமாமுனிவர்

குறுவினா

Question 1.
ஓவிய எழுத்து என்றால் என்ன?
Answer:
தொடக்க காலத்தில் எழுத்து என்பது பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்ததால் அதனை ஓவிய எழுத்து என்பர்.

Question 2.
ஒலி எழுத்து நிலை என்றால் என்ன?
Answer:
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர்.

Question 3.
ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள் ஆகியவற்றைப் பயன்படுத்த இயலாமைக்குக் காரணம் என்ன?
Answer:
(i) புள்ளியிட்டு எழுதினால் ஓலைச்சுவடி சிதைந்துவிடும்.
(ii) நேர்க்கோடிட்டு எழுதினால் ஓலைச்சுவடி கிழிந்துவிடும்.
ஆகிய காரணங்களால் ஓலைச்சுவடிகளில் நேர்க்கோடுகள், புள்ளிகள் பயன்படுத்தாமல் விட்டுவிட்டனர்.

Question 4.
வீரமாமுனிவர் மேற்கொண்ட எழுத்துச் சீர்திருத்தங்களில் எவையேனும் இரண்டனை எழுதுக.
Answer:
ஒகர வரிசை எழுத்துகளில் புள்ளிகளால் ஏற்படும் குழப்பங்களை வீரமாமுனிவர் போக்கினார்.
‘எ’ என்னும் எழுத்திற்குக் கீழ்க்கோடிட்டு ‘ஏ’ என்னும் எழுத்தை நெடிலாகவும் ‘ஒ’ என்னும் எழுத்திற்குச் சுழி இட்டு ‘ஓ’ என்னும் எழுத்தாக உருவாக்கினார்.
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 1.3 தமிழ் வரிவடிவ வளர்ச்சி 2

சிறு வினா.

Question 1.
எழுத்துச் சீர்திருத்தத்தின் தேவை குறித்து எழுதுக.
Answer:
(i) ஓலைச்சுவடிகளிலும், கல்வெட்டுகளிலும் புள்ளிபெறும் எழுத்துகளை எழுதும்போது அவை சிதைந்துவிடும் என்பதால் புள்ளி இடாமல் எழுதினர்.

(ii) ஓலைச்சுவடிகளில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது.

(iii) புள்ளி இடப்பட்டு எழுதப்படும் இடங்களில் புள்ளிகள் தெளிவாகத் தெரியாத நிலையில் அவற்றின் இடம் நோக்கி மெய்யா உயிர்மெய்யா, குறிலா நெடிலா என உணர வேண்டிய நிலை இருந்தது. இதனால் படிப்பவர்கள் பெரிதும் துன்பம் அடைந்தனர். எனவே எழுத்துச் சீர்திருத்தம் வேண்டியதாயிற்று.

 

Question 2.
தமிழ் எழுத்துகளில் ஏற்பட்ட உருவ மாற்றங்களை எழுதுக.
Answer:

  • நெடிலைக் குறிக்க ஒற்றைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் துணைக்கால் (1) பயன்படுகின்றது.
  • ஐகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்கு முன் இருந்த இரட்டைப் புள்ளிகளுக்குப் பதிலாக இக்காலத்தில் இணைக்கொம்பு ()ை பயன்படுகின்றது.
  • ஔகார உயிர்மெய்யைக் குறிக்க எழுத்துக்குப் பின் இருந்த இரட்டைப்புள்ளிக்குப் பதிலாக இக்காலத்தில் கொம்புக்கால் (ள) பயன்படுகின்றது.
  • குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளின் மேல் புள்ளி இடும் வழக்கம் இக்காலத்தில் வழக்கொழிந்துவிட்டது.

நெடுவினா

Question 1.
எழுத்துகளின் தோற்றம் குறித்து எழுதுக.
Answer:
(i) மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும், பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துகளைத் தெரிவிக்க விரும்பினான்.

(ii) அதற்காகப் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

(iii) தொடக்கக் காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ, வடிவத்தையோ குறிக்காமல் பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரி வடிவத்தை ஓவிய எழுத்து என்பர்.

(iv) அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்கு உரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று.

(v) இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை’ என்பர். இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

சிந்தனை வினா.

Question 1.
தற்காலத் தமிழ்மொழியின் வளர்ச்சிக்குச் செய்ய வேண்டிய பணிகளாக நீங்கள் கருதுவனவற்றை எழுதுக.
Answer:

  • தமிழராய்ப் பிறந்தோர் அனைவரும் தமிழ் வழிக் கல்வியை ஆதரிப்பவர்களாக விளங்க வேண்டும்.
  • தமிழ்மொழியில் தோன்றிய இலக்கண, இலக்கியங்கள் மற்றும் கல்வெட்டுகள், ஓலைச்சுவடிகள் போன்ற அனைத்தும் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் G அனைவருக்கும் பயன்படும் வகையில் வெளிப்பட வேண்டும்.
  • பழைமையைப் பேணுவதுடன், புதுமை காணும் நோக்கத்துடன் வெளிவரும் படைப்பிலக்கியங்களையும் அவற்றைப் படைப்போரையும் பேணும் நிலை வர வேண்டும்.
  • பிறமொழி இலக்கியங்களை மொழிபெயர்த்து தமிழிலேயே வெளியிட வேண்டும். கலைச்சொற்கள் புதிதாகப் படைக்கப்பட வேண்டும்.

Question 2.
தமிழை உரோமன் எழுத்துருவில் எழுதுவதால் தமிழுக்கு ஏற்படும் தீங்குகள் குறித்து விவாதிக்கவும்.
Answer:
அருள் : அம்மா இங்கே வா’ என்பதை amma ingkee vaa என்று ஆங்கில எழுத்துகளில் தமிழை எழுதுவது மிகவும் தவறு.

செல்வி : நான் எப்போதும் கைபேசியில் யாருக்காவது வாழ்த்து சொல்வதை vallthukal என்று தான் சொல்வேன்.

செல்வனி : மலாய் மொழியில் எல்லாம் ஆங்கில எழுத்துருவில் தான் அனைவரும் எழுதுகிறார்கள். என் அத்தை கூட இதனை அடிக்கடி கூறுவார்கள்.

ஆனந்தி : இணையத்தில், முகநூலில், கட்செவி அஞ்சலில் எழுதும் போது சிறிதாக எழுதுவதற்கு ஆங்கில எழுத்துருவைப் பயன்படுத்துவதில் தவறில்லை என்று நினைக்கிறேன்.

ஆரிப் : எப்படித் தவறில்லை ? என்று கூறலாம். உலகில் உள்ள அனைத்துக் கண்டுபிடிப்புகளுக்கும் தமிழில் பெயரிட்டுள்ளனர். இன்று இணையத்தில் அதிகம் தேடப்படும், பயன்படுத்தப்படும் எட்டு மொழிகளில் ஒன்றாகத் தமிழ் திகழ்ந்து வருகிறது. தமிழின் பெருமை கடல் கடந்தும் கோலோச்சி வருகிறது.

தமிழை நாம் எழுதும்போது தமிழ் எழுத்துருவில் தான் எழுத வேண்டும். வாழ்த்துகள்’ என்றும் ‘அம்மா இங்கே வா வா’ என்றும் தமிழில் எழுதுவதற்குப் பாமினி, இளங்கோ, ஸ்ரீலிபி, அமுதம், வானவில், அழகி போன்ற இணைய தமிழ் எழுத்துருக்களைப் பயன்படுத்தலாம். வாழ்க தமிழ்! வளர்க தமிழ்!!

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க ………………………. கண்டுபிடித்தான்.
அ) அறிவை
ஆ) நட்பை
இ) மொழியை
ஈ) மாநிலத்தை
Answer:
இ) மொழியை

Question 2.
மொழியை நிலைபெறச் செய்ய ……………………… உருவாக்கினான்.
அ) கூட்டத்தை
ஆ) எழுத்துகளை
இ) பாறைகளை
ஈ) அறிவை
Answer:
ஆ) எழுத்துகளை

Question 3.
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க ………………………….. பயன்படுத்தினான்.
அ) ஒலியை
ஆ) ஒளியை
இ) பொருளை
ஈ) சைகைகளை
Answer:
ஈ) சைகைகளை

Question 4.
மனிதன் பாறைகளிலும் குகைச் சுவர்களிலும் தன் எண்ணங்களை ……………………… ஆகப் பொறித்து வைத்தான்.
அ) இசையாக
ஆ) பாடலாக
இ) குறியீடுகளாக
ஈ) செம்மொழியாக
Answer:
இ) குறியீடுகளாக

Question 5.
தொடக்க காலத்தில் எழுத்து, பொருளின் ஓவிய வடிவமாகவே இருந்தது. இவ்வரிவடிவத்தை …………………… என்பர்.
அ) கண்ணெழுத்து
ஆ) வட்டெழுத்து
இ) ஒளிஎழுத்து
ஈ) ஓவிய எழுத்து
Answer:
ஈ) ஓவிய எழுத்து

Question 6.
ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ……………………… நிலை என்பர்.
அ) ஒலி எழுத்து
ஆ) ஒளி எழுத்து
இ) வடிவ எழுத்து
ஈ) பேச்சு எழுத்து
Answer:
அ) ஒலி எழுத்து

Question 7.
‘ஸ’ என்பது ……………….. மொழி எழுத்து.
அ) தெலுங்கு
ஆ) கன்ன டம்
இ) வட
ஈ) இந்தி
Answer:
இ) வட

Question 8.
தமிழ் எழுத்துகளின் பழைய வரிவடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும் ………………………….. களிலும் காண முடிகிறது.
அ) திருமேனி
ஆ) கல்வெட்டு
இ) செப்பேடு
ஈ) குகைகள்
Answer:
இ) செப்பேடு

Question 9.
…………………… கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
அ) செப்பேடுகள்
ஆ) ஓவியங்கள்
இ) கல்வெட்டுகள்
ஈ) எழுத்துகள்
Answer:
இ) கல்வெட்டுகள்

Question 10.
……………………… கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
அ) செப்பேடுகள்
ஆ) கல்வெட்டுகள்
இ) குடவோலை
ஈ) ஓவியங்கள்
Answer:
அ) செப்பேடுகள்

Question 11.
கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை …………………… வகையாகப் பிரிக்கலாம்.
அ) மூன்று
ஆ) ஐந்து
இ) நான்கு
ஈ) இரண்டு
Answer:
ஈ) இரண்டு

Question 12.
முதலாம் இராசராச சோழனின் ஆட்சிக் காலமான ……………………… ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு கிடைக்கும் கல்வெட்டுகளில் பழைய தமிழெழுத்துகள் காணப்படுகின்றன.
அ) 10
ஆ) 11
இ) 12
ஈ) 13
Answer:
ஆ) 11

Question 13.
கண்ணெழுத்துகள் பற்றிக் குறிப்பிடும் நூல் ……………………..
அ) திருக்குறள்
ஆ) மணிமேகலை
இ) சீவகசிந்தாமணி
ஈ) சிலப்பதிகாரம்
Answer:
ஈ) சிலப்பதிகாரம்

Question 14.
தமிழ் மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என அறிய ……………………….. கல்வெட்டே சான்றாகும்.
அ) ஆதிச்சநல்லூர்
ஆ) கீழடி
இ) அரிக்கமேடு
ஈ) அரச்சலூர்
Answer:
ஈ) அரச்சலூர்

Question 15.
எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் …………………… காலம் முதல் இருந்து வந்துள்ளது.
அ) வள்ளுவர்
ஆ) தொல்காப்பியர்
இ) இளங்கோவடிகள்
ஈ) சாத்தனார்
Answer:
ஆ) தொல்காப்பியர்

Question 16.
……………………. களில் நிறுத்தற் குறிகளும், பத்தி பிரித்தலும் கிடையாது.
அ) ஓலைச்சுவடி
ஆ) பாறை
இ) கல்வெட்டு
ஈ) ஓவியங்கள்
Answer:
அ) ஓலைச்சுவடி

Question 17.
தமிழ் எழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தத்தைச் செய்தவர் ……………………………..
அ) வீரமாமுனிவர்
ஆ) பெரியார்
இ) பாரதியார்
ஈ) கம்பர்
Answer:
அ) வீரமாமுனிவர்

Question 18.
‘எ’ என்னும் எழுத்திற்கு கீழ்க்கோடிட்டு ‘ஏ’ என சீர்திருத்தம் செய்தவர் ……………………..
அ) பெரியார்
ஆ) வீரமாமுனிவர்
இ) பாரதிதாசன்
ஈ) கம்பர்
Answer:
ஆ) வீரமாமுனிவர்

Question 19.
இருபதாம் நூற்றாண்டில் எழுத்துச் சீர்திருத்தம் செய்தவர் ………………………..
அ) வீரமாமுனிவர்
ஆ) பாரதியார்
இ) காந்தி
ஈ) பெரியார்
Answer:
ஈ) பெரியார்

Question 20.
‘னா’ என்னும் எழுத்தை ‘னா’ எனச் சீர்திருத்தம் செய்தவர் ………………………
அ) வீரமாமுனிவர்
ஆ) பெரியார்
இ) பாரதியார்
ஈ) இளங்கோவடிகள்
Answer:
ஆ) பெரியார்

Question 21.
தமிழ்மொழி ……………………… பயன்பாட்டிற்கு ஏற்றமொழியாகவும் ஆகியிருக்கிறது.
அ) செம்மொழி
ஆ) கையெழுத்து
இ) கணினி
ஈ) ஒலி
Answer:
இ) கணினி

பிரித்து எழுதுக.

காலந்தோறும் = காலம் + தோறும்
கற்றுக்கொண்டான் = கற்று + கொண்டான்
குறிப்பதாயிற்று = குறிப்பது + ஆயிற்று
வந்துள்ளன = வந்து + உள்ளன

இப்போதுள்ள = இப்போது + உள்ள
பெற்றுள்ளன = பெற்று + உள்ளன
நூற்றாண்டு = நூறு + ஆண்டு
தமிழெழுத்து = தமிழ் + எழுத்து
வட்டெழுத்து = வட்டம் + எழுத்து

காலமான = காலம் + ஆன
கண்ணெழுத்துகள் கண் + எழுத்துகள்
சிலப்பதிகாரம் = சிலம்பு + அதிகாரம்
மொழியிலுள்ள = மொழியில் + உள்ள

சேர்த்து எழுதுக.

காலத்திற்கு + ஏற்ப = காலத்திற்கேற்ப
அடைந்து + இருக்கின்றன = அடைந்திருக்கின்றன
அழகு + உணர்ச்சி = அழகுணர்ச்சி
சான்று + ஆகும் = சான்றாகும்

வழக்கில் + இருந்த = வழக்கிலிருந்த
செப்பு + ஏடு = செப்பேடு
நிலை + ஆன = நிலையான
இடர் + உற்றனர் = இடருற்றனர்

நிரப்புக.

1. பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ……………………… போன்றவற்றில் எழுதினர்.
2. அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளில் …………………… அமைந்தன.
3. பாறைகளில் செதுக்கும் போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் …………………………. பயன்படுத்தப்பட்டன.
4. ஓலைகளில் நேர்க்கோடுகளையும், புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் …………………………….. அதிகமாகப் பயன்படுத்தினர்.
5. சில எழுத்துகளை அழகுபடுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் ……………………… இடப்பட்டது.
Answer:
1. ஓலை
2. வடிவங்கள்
3. நேர்க்கோடுகள்
4. வளைகோடுகளை
5. குறுக்குக்கோடு

குறுவினா

Question 1.
மனிதன் எதற்காக எழுத்துகளை உருவாக்கினான்?
Answer:

  • மனிதன் தன் கருத்தைப் பிறருக்கு அறிவிக்க மொழியைக் கண்டுபிடித்தான்.
  • மொழியை நிலைபெறச் செய்ய எழுத்துகளை உருவாக்கினான்.

Question 2.
மனிதன் ஏன் சைகைகளைப் பயன்படுத்தினான்?
Answer:
மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான்.

Question 3.
எழுத்து வடிவத்தின் தொடக்க நிலைக் குறித்து எழுதுக.
Answer:

  • ஆதிமனிதன் பாறைகளிலும், குகைச்சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்து வைத்தான்.
  • இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலை ஆகும்.

Question 4.
தமிழ் எழுத்துகள் எவ்வாறு நிலையான வடிவத்தைப் பெற்றன?
Answer:

  • காலந்தோறும் தமிழ் எழுத்துகளின் வரி வடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன.
  • அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழ் எழுத்துகள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

Question 5.
தமிழ் எழுத்துகளின் பழைய வரிவடிவங்களை எங்கெங்கு காணமுடிகிறது?
Answer:
எப்போதிலிருந்து கிடைக்கின்றன? தமிழ் எழுத்துகளின் பழைய வடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல் சுவர்களிலும், செப்பேடுகளிலும் காண முடிகிறது.

  • கல்வெட்டுகள் கி.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.
  • செப்பேடுகள் கி.பி. ஏழாம் நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன.

Question 6.
பழைய வரிவடிவங்களை எத்தனை வகைகளாகப் பிரிக்கலாம்?
Answer:
கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இருவகையாகப் பிரிக்கலாம்.

Question 7.
கண்ணெழுத்துகள் குறித்து எழுதுக.
Answer:

  • கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் கண்ணெழுத்துகள் என்று அழைக்கப்பட்டன.
  • இதனைச் சிலப்பதிகாரத்தில் இடம் பெறும் கண்ணெழுத்துப் படுத்த எண்ணுப் பல்பொதி’ (சிலம்பு 5:12) என்னும் தொடரால் அறியலாம்.

சிறுவினா

Question 1.
பேச்சு மொழி எவ்வாறு உருவானது?
Answer:
(i) மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துகளையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்கச் சைகைகளைப் பயன்படுத்தினான். காலப்போக்கில் தனது குரலைப் பயன்படுத்தி ஒலிகள் மூலம் தனது கருத்துகளை வெளிப்படுத்த முற்பட்டான்.

(ii) அடுத்துச் சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்லக் கற்றுக்கொண்டான். அச்சொற்கள் மீண்டும் மீண்டும் பேசப்பட்டதால் செம்மைப்பட்டன. காலப்போக்கில் அவை
பண்பட்டுப் பேச்சுமொழியாக உருவானது.

Question 2.
தமிழ்மொழியில் இடம்பெற்ற புள்ளிகளும், எழுத்துகளும் குறித்து எழுதுக.
Answer:
(i) எகர ஒகர குறில் எழுத்துகளைக் குறிக்க எழுத்துகளின் மேல் புள்ளி வைக்கும் வழக்கம் தொல்காப்பியர் காலம் முதல் இருந்து வந்துள்ளது. (எடுத்துக்காட்டாக எது என எழுதப்பட்டால் எது என்றும், ஏது என எழுதப்பட்டால் எது என்றும் ஒலித்தனர்.

(ii) அகரவரிசை உயிர்மெய்க்குறில் எழுத்துகளை அடுத்துப் பக்கப்புள்ளி இடப்பட்டால் அவை நெடிலாகக் கருதப்பட்டன. (க. = கா, த. = தா). ஐகார எழுத்துகளைக் குறிப்பிட எழுத்துகளின் முன் இரட்டைப் புள்ளி இட்டனர். (..க =கை). எகர வரிசை உயிர்மெய்க் குறில் எழுத்துகளை அடுத்து இரு புள்ளிகள் இடப்பட்டால் அவை ஔகார வரிசை எழுத்துகளாகக் கருதப்பட்டன.

(கெ… = கௌ, தெ..= தௌ). மகர எழுத்தைக் குறிப்பிட, பகர எழுத்தின் உள்ளே புள்ளி (ப்) இட்டனர். குற்றியலுகர, குற்றியலிகர எழுத்துகளைக் குறிக்க அவற்றின் மேலேயும் புள்ளி இட்டனர்.

Question 3.
பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தம் குறித்து எழுதுக.
Answer:
(i) இருபதாம் நூற்றாண்டு வரை ‘ணா, றா, னா’ ஆகிய எழுத்துகளை ‘ணா, றா, னா’ என எழுதினர். அதே போல ‘ணை, லை, ளை, னை’ ஆகிய எழுத்துகளை ணை, லை, ளை, னை’ என எழுதினர்.

(ii) அச்சுக்கோப்பதற்காக இவ்வெழுத்துகளுக்குத் தனி அச்சுகள் உருவாக்கப்பட வேண்டியிருந்தது. இக்குறைகளை நீக்குவதற்காகத் தந்தை பெரியார் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவரது எழுத்துச் சீர்திருத்தங்கள் சில ஏற்கப்பட்டுத் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.

நெடுவினா

Question 1.
எழுத்துகளின் வரிவடிவ வளர்ச்சி குறித்து எழுதுக.
Answer:
(i) பண்டைக்காலத்தில் தமிழ் மொழியிலுள்ள எல்லா எழுத்துகளும் நாம் இன்று எழுதுவது போன்ற வடிவத்தில் எழுதப்படவில்லை .

(ii) அவை காலத்திற்கேற்பப் பல உருவமாற்றத்தைப் பெற்றுத்தான் இக்கால வடிவத்தை அடைந்திருக்கின்றன. இவ்வாறு எழுத்துகளில் மாற்றங்கள் ஏற்பட எழுதப்படும் பொருள்களின் தன்மை, அழகுணர்ச்சி போன்றவை காரணங்களாக அமைகின்றன.

(iii) பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர். அந்தந்தப் பொருள்களின் தன்மைக்கு ஏற்ப எழுத்துகளின் வடிவங்கள் அமைந்தன.

(iv) பாறைகளில் செதுக்கும் போது வளைகோடுகளைப் பயன்படுத்த முடியாது என்பதால் நேர்க்கோடுகள் பயன்படுத்தப்பட்டன. ஓலைகளில் நேர்க்கோடுகளையும், புள்ளிகளையும் எழுதுவது கடினம் என்பதால் வளைகோடுகளை அதிகமாகப் பயன்படுத்தினர்.

(v) சில எழுத்துகளை அழகுப்படுத்துவதற்காக அவற்றின் மேற்பகுதியில் குறுக்குக்கோடு இடப்பட்டது. பின்னர் அவையே நிலையான வடிவங்களாக அமைந்து விட்டன.