Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 4.2 புத்தியைத் தீட்டு Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 4.2 புத்தியைத் தீட்டு

கற்பவை கற்றபின்

 

Question 1.
அறிவின் பெருமையை விளக்கும் பழமொழிகளைத் திரட்டுக.
Answer:

  • அறிவே ஆற்றல்
  • அறிவுடையார் எல்லாம் உடையார்
  • அறிவே ஆயுதம்
  • மெய்ப்பொருள் காண்பது அறிவு
  • அறிவே பலம்
  • அறிவே ஆனந்தம்
  • பேரறிவு பெருமை தரும்

பாடநூல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
என் நண்பர் பெரும் புலவராக இருந்தபோதும் …………………… இன்றி வாழ்ந்தார் .
அ) சோம்பல்
ஆ) அகம்பாவம்
இ) வருத்தம்
ஈ) வெகுளி
Answer:
ஆ) அகம்பாவம்

Question 2.
‘கோயிலப்பா ‘ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ……………………
அ) கோ + அப்பா
ஆ) கோயில் + லப்பா
இ) கோயில் + அப்பா
ஈ) கோ + இல்லப்பா
Answer:
இ) கோயில் + அப்பா

Question 3.
பகைவன் + என்றாலும் என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ………………….
அ) பகைவென்றாலும்
ஆ) பகைவனென்றாலும்
இ) பகைவன்வென்றாலும்
ஈ) பகைவனின்றாலும்
Answer:
ஆ) பகைவனென்றாலும

குறுவினா

Question 1.
யாருடைய உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது?
Answer:
மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கோயில் போன்றது ஆகும்.

Question 2.
பகைவர்களிடம் நாம் நடந்துகொள்ள வேண்டிய முறை யாது?
Answer:
பகைவர்களிடம் நாம் நடந்து கொள்ள வேண்டிய முறை அன்பு காட்டுவது ஆகும்.

சிறுவினா

Question 1.
புத்தியைத் தீட்டி வாழ வேண்டிய முறைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?
Answer:

  • கண்ணியம் தவறாமல் எடுத்த செயலில் தன்னுடைய திறமையைக் காட்ட வேண்டும்.
  • ஆத்திரம் கண்ணை மறைத்து விடும் என்பதால் அறிவுக்கு வேலை கொடுத்து அமைதி காக்க வேண்டும்.
  • பகைவன் அடிக்க வந்தாலும், அவரிடம் அன்பு காட்டி அரவணைக்க வேண்டும்.
  • மன்னிக்கத் தெரிந்த மனிதனின் உள்ளம் மாணிக்கக் கல் போன்றது.
  • இதனை மறந்து வாழ்ந்தவன் வாழ்க்கை, தடம் தெரியாமல் மறைந்து போய்விடும்.
  • வாழும் வாழ்க்கை சில காலமே! அதற்குள் என் அகம்பாவம்? இதனால் எந்த இலாபமும் கிடைக்காது. எனவே, அகம்பாவத்தைக் காட்டாமல் வாழ வேண்டும்.
  • இவற்றை எண்ணிப்பார்த்தால் வாழ்க்கை தெளிவாகும்.

சிந்தனை வினா

Question 1.
உங்கள் மீது பிறர் வெறுப்புக் காட்டினால் அவர்களை எவ்வாறு எதிர்கொள்வீர்கள்?
Answer:

  • முதலில் வெறுப்புக்குக் காரணம் என்ன? என்பதைப் பற்றி ஆராய்வேன்.
  • அவரிடம் சென்று அன்பாக, என் மீது நீங்கள் வெறுப்பு காட்ட, நான் செய்துள்ள பிழையை மன்னித்து, என்னை ஏற்றுக்கொள்ளுங்கள்.
  • நான் மனம் புண்படும்படியாகப் பேசியிருந்தால், அதனைப் பொறுத்துக் கொண்டு எனக்கு நல்வழி காட்டுங்கள் என்று கூறுவேன்.

கூடுதல் வினாக்கள்

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

Question 1.
புத்தியைத் தீட்டு என்னும் கவிதைப்பேழை பகுதியை எழுதியவர் ………………………
அ) ஆலங்குடி சோமு
ஆ) ஆலங்குடி வங்கனார்
இ) வாணிதாசன்
ஈ) குமரகுருபரர்
Answer:
அ) ஆலங்குடி சோமு

Question 2.
“தீட்ட வேண்டியது எது?” என்று ஆலங்குடி சோமு குறிப்பிடுகிறார்?
அ) கத்தி
ஆ) புத்தி
இ) கண்ணியம்
ஈ) ஆத்திரம்
Answer:
ஆ) புத்தி

Question 3.
……………………… க்கு அன்பு பாதை விட வேண்டும்.
அ) பகைவன்
ஆ) நண்பன்
இ) மன்னிக்க தெரிந்தவன்
ஈ) மறந்தவன்
Answer:
அ) பகைவன்

Question 4.
தடம் என்னும் சொல்லின் பொருள் ………………………..
அ) சினம்
ஆ) செருக்கு
இ) ஆணவம்
ஈ) அடையாளம்
Answer:
ஈ) அடையாளம்

Question 5.
ஆலங்குடி சோமு அவர்கள் பெற்ற விருது ……………………
அ) பத்மபூஷன்
ஆ) கலைமாமணி
இ) பாரத ரத்னா
ஈ) பத்மவிபூஷன்
Answer:
ஆ) கலைமாமணி

குறுவினா

Question 1.
எப்போது அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும்?
Answer:
ஆத்திரம் கண்ணை மறைக்கும் போது அறிவுக்கு வேலை கொடுக்க வேண்டும்.

Question 2.
ஆலங்குடி சோமு எவற்றை எண்ணிப் பார்க்கச் சொல்கிறார்?
Answer:
பூமியில் வாழ்வது சில காலம். அதற்குள் அகம்பாவம் ஏன்? அகம்பாவத்தால் ஒரு பயனும் கிடையாது. இதனை எண்ணிப் பார்த்து, மனிதர்களே தெளிவடையுங்கள் என்கிறார் ஆலங்குடி சோமு.

சொல்லும் பொருளும்

தடம் – அடையாளம்
அகம்பாவம் – செருக்கு
புத்தி – அறிவு
பாதை – வழி
உள்ளம் – மனம்
லாபம் – பலன்
எண்ணி – நினை