Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 8th Tamil Book Solutions Guide Pdf Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் Text Book Back Questions and Answers, Summary, Notes.

Tamilnadu Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

கற்பவை கற்றபின்

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

Question 1.
இசைக்கருவிகளின் படங்களைத் திரட்டிப் படத்தொகுப்பு உருவாக்குக.
Answer:
Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள் 1

Question 2.
இக்கால இசைக்கருவிகள் குறித்து கலைக்களஞ்சிய வடிவில் செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
வயலின் :
வில் போட்டு வாசிக்கப்படும் மரத்திலான தந்திக் கருவி ஆகும். இது பழங்காலத்தில் பிடில் எனப்பட்டது. இதுமேலைத் தேயம், கீழைத் தேயம் என இருவகைப் பிராந்திய இசைகளால் இசைக்கப்படும் கருவி. இது நான்கு தந்திகளைக் கொண்டுள்ளது.

தம்புரா :
கம்பி கட்டப்பட்ட இசைக்கருவி தம்புரா. இது ராகம் இசைக்கும் நேரம் முழுவதும் நிலையான தொனியில் இசைக்கப்படுகின்றது.

நாதசுவரம் :
நாகஸ்வரம், நாகசு, நாயனம் ஆகிய வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. திறந்த இடத்தில் இசைப்பதற்கு ஏற்றது. தென்னிந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் பெருமளவு இசைக்கப்படும் வாத்தியம் இவை. வட்ட வடிவமாக விரிந்து காணப்படும் உள் நீண்ட மரக்குழலால் ஆன உடல், உடல் மேல் பகுதியில் செப்புத் தகடு பொருத்தப்பட்டு இருக்கும்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

தவில் :
நாதஸ்வரத்திற்குத் துணையாக இசைக்கப்படும் கருவி ஆகும். விலங்கின் தோலால் இழுக்கப்பட்டு வளையத்தைக் கொண்டு ஓட்டில் கட்டப்பட்டு இருக்கும்.

பாடநூல் வினாக்கள்

Question 1.
காற்றுக் கருவிகள் குறித்த செய்திகளைத் தொகுத்து எழுதுக.
Answer:
முன்னுரை :
மக்களின் மனதிற்கு எழுச்சியைத் தருபவை இசைக்கருவிகள். கருவிகளில் தோல், நரம்பு, காற்று, கஞ்சக் கருவிகள் என பல வகை உள்ளன. அவற்றுள் காற்றுக் கருவிகள் குறித்துக் காண்போம்.

காற்றுக் கருவிகள் :
காற்றைப் பயன்படுத்திச் செய்யப்படுபவை காற்றுக்கருவிகளாகும். குழல், சங்கு, கொம்பு ஆகியவை காற்றுக் கருவிகளாகும்.

குழல் :
குழல் என்றால் புல்லாங்குழல் ஆகும். காடுகளில் மூங்கில் மரங்களை வண்டுகள் துளை இட்டதால் காற்று வழியாக இசை பிறந்தன. இதனைக் கேட்டும் பார்த்தும் முன்னோர்கள் புல்லாங்குழலை வடிவமைத்தனர்.

மூங்கில், சந்தனம் செங்காலி, கருங்காலி ஆகிய மரங்களாலும் புல்லாங்குழல் செய்யப்படுகின்றன. கொன்றைக் குழல், முல்லைக் குழல், ஆம்பல் குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகின்றது. திருவள்ளுவரும், ‘குழல் இனிது’ என்கின்றார்.

Samacheer Kalvi 8th Tamil Solutions Chapter 5.4 தமிழர் இசைக்கருவிகள்

கொம்பு :
கொம்பு இறந்த மாடுகளின் கொம்புகளைப் பயன்படுத்தி ஒலி எழுப்பினர். அதுவே, பின்னால் ‘கொம்பு என்னும் இசைக்கருவி தோன்றக் காரணமாயிற்று. பித்தளை மற்றும் வெண்கலத்தால் கொம்புகள் செய்யப்பட்டன. வேட்டையாடும்போது வேடர்கள் இதனை ஊதுவார்கள்.

கள்வர்களை விரட்டவும், விலங்குகளிடமிருந்து எச்சரிக்கை செய்யவும் இக்கொம்பினை ஊதுவார்கள். திருவிழாக் காலங்களில் – கொம்பினை ஊதுவர். ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி ஆகிய கொம்புகள் இக்காலத் திருவிழாக்களில் இசைக்கப்படுகின்றது.

சங்கு :
சங்கு ஓர் இயற்கைக் கருவி. கடலிலிருந்து எடுக்கப்படும் வலமாகச் சுழிந்து இருக்கும் சங்கை, “வலம்புரிச்சங்கு என்று கூறுவர். சங்கின் ஒலியைச் சங்கநாதம் என்பர். இலக்கியங்கள் இதனைப் ‘பணிலம்’ என்கிறது. திருவிழாக்களிலும், சடங்குகளிலும் சங்கினை முழங்கும் வழக்கம் இருந்து வருகிறது.

முடிவுரை :
அழிந்து வரும் இவ்வகைக் காற்று இசைக்கருவிகளைக் காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் காற்றுக்கருவிகள் ஏதேனும் ஒன்றினைக் கற்று, அதனைப் பயன்படுத்த வேண்டும்.