Students can Download Tamil Nadu 12th Tamil Model Question Paper 2 Pdf, Tamil Nadu 12th Tamil Model Question Papers helps you to revise the complete Tamilnadu State Board New Syllabus and score more marks in your examinations.
TN State Board 12th Tamil Model Question Paper 2
நேரம்: 2.30 மணி
மதிப்பெண்கள் : 90
குறிப்புகள்:
- இவ்வினாத்தாள் ஐந்து பகுதிகளைக் கொண்டது. அனைத்து பகுதிகளுக்கும் விடையளிக்க வேண்டும். தேவையான இடங்களில் உள் தேர்வு வினாக்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
- பகுதி I, II, III, IV மற்றும் Vல் உள்ள அனைத்து வினாக்களுக்கும் தனித்தனியே விடையளிக்க வேண்டும்.
- வினா எண் 1 முதல் 14 வரை பகுதி-1ல் தேர்வு செய்யும் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வினாவிற்கும் ஒரு மதிப்பெண். சரியான விடையைத் தேர்ந்தெடுத்துக் குறியீட்டுடன் விடையினையும் சேர்த்து எழுதவும். - வினா எண் 15 முதல் 30 வரை பகுதி-பால் இரண்டு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன. –
- வினா எண் 31 முதல் 43 வரை பகுதி-IIIல் நான்கு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.
- வினா எண் 44 முதல் 46 வரை பகுதி-IVல் ஆறு மதிப்பெண் வினாக்கள் தரப்பட்டுள்ளன.அனைத்து வினாவிற்கும் விடையளிக்கவும்.
- வினா எண் 47-ல் பகுதி-Vல் மனப்பாடப்பகுதி தரப்பட்டுள்ளன.
பகுதி – I
அனைத்து வினாக்களுக்கும் விடை தருக. [14 x 1 = 14]
(விடைகள் தடித்த எழுத்தில் தரப்பட்டுள்ளன)
Question 1.
ஓசையும் பொருளும் இணைந்து கலை வடிவம் கொள்வதையே அந்தப் பனுவலின் ……… என்பர்.
(அ) ஒலி வடிவம்
(ஆ) ஒலிப்பின்னல்
(இ) ஒலிக்கோலம்
(ஈ) ஒலிக்குறிப்பு
Answer:
(ஆ) ஒலிப்பின்னல்
Question 2.
அணி இலக்கணத்துடன் பிற இலக்கணத்தையும் கூறும் நூல் ……….
(அ) தண்டியலங்காரம்
(ஆ) வீரசோழியம்
(இ) மாறனலங்காரம்
(ஈ) குவலயானந்தம்
Answer:
(ஆ) வீரசோழியம்
Question 3.
நெல்லைத் தென்றல்’ என்ற கவிதை நூலின் ஆசிரியர்… ஆவார்.
(அ) நெல்லைக் கண்ணன்
(ஆ) நெல்லை பாலாஜி
(இ) பரலி நெல்லையப்பர்
(ஈ) நாஞ்சில் நெடுமாறன்
Answer:
(இ) பரலி நெல்லையப்பர்
Question 4.
”பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே” என்று கூறும் நூல்……………
(அ) தொல்காப்பியம்
(ஆ) அகத்தியம்
(இ வள்ளுவம்
(ஈ) நன்னூல்
Answer:
(ஈ) நன்னூல்
Question 5.
கம்பராமாயணத்திற்குக் கம்பர் சூட்டிய பெயர்…………
(அ) இராமாவதாரம்
(ஆ) தசாவதாரம்
(இ) விஸ்வரூபம்
(ஈ) கிருஷ்ணாவதாரம்
Answer:
(அ) இராமாவதாரம்
Question 6.
பண்டைக்காலப் பள்ளிகளில் மையாடல் விழா பற்றி ‘ஐயாண் டெய்திடமையாடி அறிந்தார் கலைகள்’ என்று கூறிய நூல்…….. ஆகும்.
(அ) சீவக சிந்தாமணி
(ஆ) வளையாபதி
(இ) குண்டலகேசி
(ஈ) மணிமேகலை
Answer:
(அ) சீவக சிந்தாமணி
Question 7.
சொல்லுதலை அடிப்படையாகக் கொண்டு தோன்றியது………..
(அ) வஞ்சிப்பா
(ஆ) கலிப்பா
(இ) வெண்பா
(ஈ) ஆசிரியப்பா
Answer:
(ஆ) கலிப்பா
Question 8.
முதற்சீர் விளச்சீர் என்றால் வரும் சீரின் முதல் அசை………. என்று தான் இருக்கும்.
(அ) நிரை
(ஆ) நிரைபு
(இ) நேர்
(ஈ) நேர்பு
Answer:
(ஆ) நிரைபு
Question 9.
சரியானவற்றைப் பொருத்தித் தேர்கள்
(அ) படலம் – 1. சிலப்பதிகாரம்
(ஆ) இலம்பகம் – 2. சீவக சிந்தாமணி
(இ சருக்கம் – 3. கந்தபுராணம்
(ஈ) காதை – 4. சூளாமணி
(ஆ) 3.2, 4, 1 (ஆ) 1, 2, 3, 4 இ 2.3.14 (ஈ) 4.3.2,1
Answer:
இ 2.3.14
Question 10.
ஏற்ற காலத்தில் ஏற்ற செயலைச் செய்தால் உலகையே விரும்பினாலும் அடைய முடியும் என்ற தன்னம்பிக்கை வாசகத்தைக் கூறியவர்
(அ) புத்தர்
(ஆ) உ.வே.சா
(இ) பாரதி
(ஈ) வள்ளுவர்
Answer:
(ஆ) உ.வே.சா
Question 11.
‘தாங்கெட நேர்ந்தபோதும் தமிழ் கெடலாற்றா அண்ணல்’ என வேங்கடசாமியால் புகழப்பட்டவர்
(அ) மகாகவி
(ஆ) பாவேந்தர்
(இ) கவிமணி
(ஈ) மொழிஞாயிறு
Answer:
(ஈ) மொழிஞாயிறு
Question 12.
ஐங்குறுநூறு என்ற சொல்லை …………….. ஆகப்பிரிப்பதே சரியானதாகும்.
(அ) ஐ – குறுநூறு
(ஆ) ஐங்குறு + நூறு
(இ) ஐந்து + குறுமை + நூறு
(ஈ) ஐந்து + குறுநூறு
Answer:
(இ) ஐந்து + குறுமை + நூறு
Question 13.
தொன்மங்களை வெளிப்படுத்தும் முதன்மைக் கருவியாக…………. விளங்குகின்றது.
(அ) கற்பனை
(ஆ) கதை
(இ) உரைநடை
(ஈ) கவிதை
Answer:
(ஈ) கவிதை
Question 14.
அறம், பொருள், இன்பம், வீடு இவற்றில் ஒன்றோ , இரண்டோ குறைந்து வருவது……
(அ) சிறுகாப்பியம்
(ஆ) பெருங்காப்பியம்
(இ) இலக்கியம்
(ஈ) இலக்கணம்
Answer:
(அ) சிறுகாப்பியம்
பகுதி – 1
இரண்டு அல்லது மூன்று வரிகளில் விடை தருக. [12 x 2 = 24]
பிரிவு – 1
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக.
Question 15.
முகம் முகவரியற்றுப் போனதற்கு, சுகந்தி சுப்ரமணியன் கூறும் காரணத்தை எழுதுக.
Answer:
- பல முகங்களோடு முகம் காணும் போது எனது முகம் காணவில்லை. எனக்குள்ளே என்னை தொலைத்த பின் எனது முகம் முகவரியற்றுப் போனது இன்னும் என்னைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.
Question 16.
கடையேழு வள்ளல்கள் யாவர்?
Answer:
- பாரி
- ஓரி
- காரி
- ஆய்
- அதிகன்
- பேகன்
- நள்ளி கடையேழு வள்ளல்கள் ஆவார்.
Question 17.
பிறர் பொருளை விரும்பாதவர் யார்?
Answer:
ஐம்புலன்களையும் வென்ற தெளிவுடையோர். தாம் வறியவர் என்ற காரணத்தைக் காட்டிப் பிறர் பொருளை விரும்புதலைச் செய்யமாட்டார்.
Question 18.
‘மூச்சு நின்று விட்டால் பேச்சும் அடங்கும்’ – கவிதைக்குப் பொருத்தமான பழமொழி ஒன்றை எழுதுக.
Answer:
ஆறிலும் சாவு. நூறிலும் சாவு
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு விடை தருக
Question 19.
அரசன் நேர மேலாண்மையோடு செயல்பட வேண்டும் என்பதை வள்ளுவர் வழி நிறுவுக.
Answer:
- ஓர் அரசன் ஒரு நாளை எவ்வாறு ஒதுக்கிப் பணியாற்ற வேண்டும் என்பதை மடியின்மை என்னும் அதிகாரத்தில் வள்ளுவர் கூறியுள்ளார்.
மடியிலா மன்னவன் எய்தும் அடி அளந்தான்
தாஅயது எல்லாம் ஒருங்கு
பொருள் : ஆட்சியாளன் சோம்பல் இல்லாதவனாக இருந்தால், திருமால் தன் அடியால் அளந்த இந்த நிலவுலகை எல்லாம் அடைவன். எனவே நேரம் பார்க்காமல் மன்னன் உழைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
Question 20.
இலக்கியம் தனக்குரிய அழகியல் சாதனமாக எவ்வாறு மாறுகிறது?
- பேசுபவன், கேட்பவன் ஆகியோருடைய தனிப்பட்ட சூழல்கள், பேசும்போதும் கேட்கும் போதுமான தனிச் சூழல்கள்.
- வரலாறு முழுக்க மொழி, மனித நாக்குகளின் ஈரம் பட்டுக்கிடக்கிறது.
- அதனையே இலக்கியம், தனக்குரிய அழகியல் சாதனமாக மாற்ற வேண்டியிருக்கிறது.
Question 21.
சங்ககாலத்தில் எந்த வழி உறவு குலத்தொடர்ச்சியாக கருதப்பட்டது?
Answer:
- சங்ககாலத்தில் கண சமூகத்துக்குத் தாயே தலைமை ஏற்றிருந்தாள். தாய்வழியாகவே குலத்தொடர்ச்சி குறிக்கப்பட்டது.
- பதிற்றுப்பத்து கூறும் சேரநாட்டு மருமக்கள் தாய முறை இதற்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.
பிரிவு – 3
Question 22.
ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் பகுபத உறுப்பிலக்கணம் தருக
Answer:
(அ) கிடைத்த (ஆ) பழித்தனர்
Question 23.
ஒன்றனுக்கு மட்டும் இலக்கணக்குறிப்புத் தருக.
(அ) வாழியர் (ஆ) உன்ன லிர்
Answer:
விடை: அ) வியங்கோள் வினைமுற்று (ஆ) முன்னிலைப் பன்மை வினைமுற்று
Question 24.
மரபுப் பிழை நீக்குக.
Answer:
சாத்தப்பன் கூடை பின்னிக்கொண்டே அப்பம் சாப்பிட்டான்.
விடை. சாத்தப்பன் கூடை முடைந்தபடியே அப்பம் தின்றான்.
Question 25.
ஏதேனும் ஒன்றனுக்குப் பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
(அ) பெருந்தேர் (ஆ) பூங்குயில்
Answer:
(அ) பெருமை + தேர்
பெரு – தேர் = பெருந்தேர்
விதி : 1. ஈறுபோதல் 2. இனமிகல்
(ஆ) பூங்குயில் = பூ + குயில்
விதி : பூப்பெயர் முன் இனமென்மையும் தோன்றும்
Question 26.
கொச்சை திருத்துக. விடியங்காட்டியும் வெத்தலை போடறது பளக்கமா?
Answer:
விடிவதற்குள் வெற்றிலை போடுவது பழக்கமா?
Question 27.
விடைக்கேற்ற வினா எழுதுக. வகுப்பாசிரியர் தினமும் வீட்டுப்பாடம் எழுதிவரச் சொல்கிறார்.
Answer:
வகுப்பாசிரியர் தினமும் வீட்டுப்பாடம் எழுதிவரச் சொல்கிறாரா?
Question 28.
மயங்கொலிச் சொற்களில் பொருள் வெளிப்படுமாறு ஒரே தொடரில் விடையளி.
Answer:
மலை – மழை
நான் மருத மலையின் மீது ஏறியபோதே மழையில் நனைந்துவிட்டேன்.
Question 29.
தேவையான இடங்களில் வல்லின மெய் இட்டு எழுதுக. என் தந்தையும் தாயும் பணிக்கு சென்றவுடன் என் தங்கையை பத்திரமாக பள்ளிக்கு அழைத்து செல்வேன்.
Answer:
என் தந்தையும் தாயும் பணிக்குச் சென்றவுடன் என் தங்கையைப் பத்திரமாகப் பள்ளிக்கு அழைத்துச் செல்வேன்.
Question 30.
வடசொல் நீக்கித் தனித்தமிழில் எழுதுக. ஆலயங்களில் கொடிமரத்தின் முன்பாக சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.
Answer:
ஆலயங்களில் கொடிமரத்தின் முன்பாக நெடுஞ்சாண் – கிடையாக வணக்கம் செய்ய வேண்டும்.
பகுதி – III
ஐந்து அல்லது ஆறு வரிகளில் விடை தருக. [7 x 4 = 28]
பிரிவு – 1
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக
Question 31.
வாடைக் காலத்தில் கோவலர்கள் எவ்வாறு பாதுகாப்பைத் தேடினர்?
Answer:
- கொடுங்கோல் கோவலர் வளைந்த கோலினை உடைய கோவலர் தான் தங்கியிருந்த மலையை வலப்பக்கமாகச் சூழ்ந்து எழுந்த மேகமானது உலகம் குளிருமாறு புதிய மழையைப் பொழிந்தது.
- தாழ்வான பகுதிகளில் பெருகிய வெள்ளத்தை வெறுத்த, வளைந்த கோலையுடைய ஆயர் எருமை, பசு, ஆடு ஆகிய நிரைகளை வேறு மேடான நிலங்களில் மேய விட்டனர்.
- தாம் பழகிய நிலத்தை விட்டுப் பெயரும் நிலையால் வருத்தம் அடைந்தனர்.
- அவர்கள் தலையில் சூடியிருந்த நீண்ட இதழ்களையுடைய காந்தள் மாலை கசங்கியது.
- பலருடன் சேர்ந்து கொள்ளி நெருப்பினால் கைகளுக்குச் சூடேற்றிய போதிலும் அவர்களது பற்கள் நடுங்கின.
- விலங்குகள் குளிர்மிகுதியால் மேய்ச்சலை மறந்தன. குரங்குகள் நடுங்கின.
- மரங்களில் தங்கியிருந்த பறவைகள் நிலத்தில் வீழ்ந்தன. பசுக்கள் பாலுண்ண வந்த கன்றுகளைத் தவிர்த்தன.
- மலையையே குளிரச் செய்வது போன்றிருந்தது அக்குளிர்கால நள்ளிரவு.
Question 32.
சுரதா குறிப்பு வரைக.
Answer:
- உவமைக் கவிஞர் என்று சிறப்பிக்கப்படும் சுரதா வின் இயற்பெயர் இராசகோபாலன்.
- அப்பெயரைப் பாரதிதாசன் மீது கொண்ட பற்றுதலால் சுப்புரத்தினதாசன் என்று மாற்றி, அதன் சுருக்கமான சுரதா என்னும் பெயரில் மரபுக் கவிதைகள் எழுதினார்.
- முழுக்க முழுக்கக் கவிதைகளையே கொண்ட காவியம் என்ற இதழை நடத்தியதோடு இலக்கியம், விண்மீன், ஊர்வலம் போன்ற இலக்கிய ஏடுகளையும் நடத்தியுள்ளார்.
- தேன்மழை, துறைமுகம், மங்கையர்க்கரசி, அமுதும் தேனும் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்துள்ளார்.
- இவர் தமிழக அரசின் கலைமாமணி விருது, பாரதிதாசன் விருது, தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக்தின் இராசராசன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர்.
Question 33.
தனக்கு இன்னல் இழைத்தோர்க்கும் இறைமகன் இரக்கம் காட்டிய பாங்கினை விளக்குக.
Answer:
- இறைமகன் தன்னைப் பிறர் கயிற்றால் கட்டும் போது அதற்கு உடன்பட்டு நின்றார்.
- அச்செயலானது, இயல்பாக மனிதர்களிடம் காணப்படுகிற சாதாரண அன்புச்செயல் என்று கருத வேண்டியதில்லை.
- தம்மீது பகை கொண்டு தனக்கு இழிவான செயல்களைச் செய்த இம்மனிதர்கள் தாங்கள் வாழும் காலம் முழுவதும்.
- துன்பத்தில் இருப்பார்களோ என்று எண்ணி அவர்களுக்காக இரக்கப்படுகிற தன்மையே காரணம்.
- அந்த அன்பு என்னும் உறுதியான கட்டிலிருந்து விடுபட முடியாமல் தான், எந்த உதவியும் பெற இயலாத ஓர் ஏழையைப் போல அமைதியுடன் நின்றார்.
- கொடியோர் ஒன்று கூடிக் கூறிய இகழ்ச்சி மொழி எனும் கொடிய தீக்கொள்ளியானது மாசில்லாத அருள் நிறைந்த இறைமகன் இதயத்தில் அழுந்தியது.
- அவர் மிக வேதனையடைந்து மனம் வெந்து புண்பட்டாரே அல்லாமல், தம்மைத் துன்புறுத்துகிறவர்கள் மீது சினந்து வருந்தத்தக்க ஒரு மறுசொல்லும் கூறாமல் நின்றார்.
- தாம் கருதி வந்த வேலை நிறைவேறுவதற்காக அவர் அமைதி காத்தார்.
Question 34.
“தண்டியலங்காரம்” நூல் குறிப்புத் தருக.
Answer:
- தண்டியலங்காரம், அணி இலக்கணத்தைக் கூறும் சிறப்பான நூல்களில் ஒன்று.
- பாடப்பகுதி பொருளணியியல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
- காவியதர்சம் என்னும் வடமொழி இலக்கண நூலைத் தழுவி எழுதப்பட்ட இந்நூலின் ஆசிரியர் தண்டி ஆவார்.
- இவர் கி. பி. (பொ.ஆ) 12 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவர்.
- இந்நூல் பொதுவியல், பொருளணியியல், சொல்லணியியல் என மூன்று பெரும் பிரிவுகளை உடையது. இலக்கண நூலார்.
- உரையாசிரியர்கள் ஆகியோர் பலரால் எடுத்தாளப்பட்ட பெருமை பெற்றது.
பிரிவு – 2
எவையேனும் இரண்டனுக்கு மட்டும் விடை தருக.
Question 35.
வேளாண் மேலாண்மை குறித்து நீவிர் பரிந்துரைப்பனவற்றை எழுதுக.
Answer:
- வேளாண்மைக்குள்ளும் மேலாண்மைக் கூறுகள் உண்டு.
- சரியான பயிரைத் தேர்ந்தெடுத்தல், உரிய நேரத்தில் விதைத்தல், நீர் மேலாண்மையை நெறிப்படுத்துதல்.
- அறுவடைக்குப்பின் பாதுகாத்தல், உரிய விலை வரும் வரை இருப்பு வைத்தல் என்று ஒவ்வொரு.
- கட்டத்திலும் விழிப்புணர்வும் பொறுப்புணர்வும் நிருவாக நெறியும் இணைந்தால்தான் வேளாண்மை செழிக்கும்.
- கம்பராமாயணத்தில், தசரதன் தன் நாட்டை மிகவும் செப்பமாகவும், நுணுக்கமாகவும் ஆட்சி செய்தான் என்பதைக் கம்பர்,
“வையகம் முழுவதும் வறிஞன் ஓம்பும் ஓர்
செய் எனக் காத்து இனிது அரசு செய்கின்றான்”
என்றார். வறியவன் ஒருவன் தன் சிறு வயலைப் பாதுகாப்பது போல, இவ்வுலகம் முழுவதையும் பாதுகாத்து மிகச்சிறந்த முறையில் ஆட்சி செய்தான் என்று அவர் குறிப்பிடுகிறார்.
Question 36.
இந்தோ -சாரசெனிக் கட்டடக்கலை குறித்தெழுதுக
Answer:
- இது முகலாயக் கட்டடக்கலை, பிரித்தானியக் கட்டடக்கலை.
- இந்தியப் பாரம்பரிய பாணி ஆகியவற்றைக் கலந்து உருவாக்கப்பட்டது.
- இப்பாணியில் 1768 இல் கட்டி முடிக்கப்பட்ட முதல் கட்டடம் சேப்பாக்கம் அரண்மனையே ஆகும்.
- சென்னையின் புகழ்பெற்ற கட்டடங்களான மத்தியத் தொடர்வண்டி நிலையம், தென்னகத் தொடர்வண்டித் தலைமையகம்.
- எழும்பூர் தொடர்வண்டி நிலையம், பொது அஞ்சல் அலுவலகம், உயர் நீதிமன்றம், சென்னைப் பல்கலைக்கழகம்.
- ரிப்பன் கட்டடம், விக்டோரியா அரங்கு போன்றவை இந்திய – சார்செனிக் கட்டடக்கலையின் சிறப்புகளை நமக்குக் காட்டுகின்றன.
Question 37.
ஆற்றங்கரை படிவு என்றால் என்ன? அவற்றின் பயன்கள் யாவை?
Answer:
- தமிழ்நாட்டில் மழைக்காலங்களில் பெறும் நீரைச் சேமித்து வைக்கும் நீர் மேலாண்மை அமைப்புகள் இருந்தன.
- வெள்ளச் சமவெளி என்பது ஆற்றின் நீரோட்ட வழியில் இயற்கை உருவாக்கிய காப்பரண். ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு வரும் காலங்களில் அடித்து வரப்படும் பொருள்கள் ஆற்றின் ஓரங்களில் படிந்துவிடும்.
- இது ஆற்றங்கரைப்படிவு எனப்படும். இதில் படிகின்ற பொருள்களால் ஆற்றுச் சமவெளியில் அடர்த்தியான.
- மணலாலும் மற்றும் சேற்றினாலும் அடுக்குப் படிவம் உருவாகும்.
- அப்படிவம் வெள்ளப்பெருக்குக் காலங்களில் நீரை உறிஞ்சுவதால் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது குறையும், நீர் மாசடைவதைத் தடுக்கும்.
- மண் அரிப்பைத் தடுக்கும், வறட்சிக் காலங்களில் நீர்மட்டம் குறைந்துவிடாமல் பாதுகாக்கும். உபரிநீர்க் கால்வாய்களும் வெள்ளக்காலங்களில் உதவியாக இருக்கும்.
Question 38.
தொல்காப்பியம் பாவகைகளுடன் அறவியல் கருத்துக்களையும் இணைத்துள்ளது என்பதற்கான சான்று தருக.
Answer:
அகம் ஐந்திணைகளைப் பேசுகிற தொல்காப்பியம் புணர்தல், பிரிதல் முதலான அகன் ஐந்திணைகளை இன்பம், பொருள், அறம் ஆகிய அறவியல் லட்சியப் பொருள்களோடு இரண்டற இணைத்துவிடுகின்றது. அதுபோல், இன்னோரிடத்தில், பாவகைகள் ஆசிரியம் முதற்கொண்டு நான்கு எனச் சொல்லிவிட்டுத் தொடர்ந்து.
அந்நில மருங்கின் அறமுதலாகிய
மும்முதற் பொருட்கும் உரிய என்ப
என்று பாவகைகளோடு அறவியல் கருத்துக்களை இணைத்துச் சொல்லிவிடுகிறது.
பிரிவு – 3
எவையேனும் மூன்றனுக்கு விடை தருக
Question 39.
குறிஞ்சித்திணை
Answer:
அகத்திணைகள் ஐந்து, அவற்றுள் ஒன்று குறிஞ்சித்திணை
முதற்பொருள்
நிலம் – மலையும் மலை சார்ந்த இடமும்
பொழுது – சிறுபொழுது – யாமம்; பெரும்பொழுது – கூதிர், முன்பனி
கருப்பொருள்
தெய்வம் – முருகன்
மக்கள் – சிலம்பன், வெற்பன், பொருப்பன், கொடிச்சி, குறத்தி, குறவர், குறத்தியர் கானவர்
பறவை – கிளி, மயில்
விலங்கு – புலி, கரடி, யானை, சிங்கம்
க – காந்தள், குறிஞ்சி, வேங்கை
தொழில் – தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், வெறியாடல், தினைகாத்தல்
உணவு – தினை, மலைநெல், மூங்கிலரிசி
ஊர் – சிறுகுடி
உரிப்பொருள்:
புணர்தலும் புணர்தல் நிமித்தமும்
சான்று : ஒழுகுநீ ராரல் பார்க்கும்
குருகு முண்டுதான் மணந்த ஞான்றே
விளக்கம் :
தலைவன் நெடுங்காலம் தலைவியைத் திருமணம் செய்து கொள்ளாமல் காலந்தாழ்த்த அதனால் வருந்திய தலைவி “தலைவர் கருணைகொண்டு என்னைத் திருமணம் செய்து கொண்டாலன்றி எனக்கு உதவியாகச் சான்று கூறுவார் வேறு ஒருவரும் இலர்” என்று தோழியிடம் கூறியது.
(அல்ல து)
பொதுவியல் திணை
திணை விளக்கம்:
வெட்சி முதல் பாடாண் இறுதியாக உள்ள தொல்காப்பியனார் கூறும் புறத்திணைகளுள் கூறப்படாத செய்திகளையும், அத்திணைகளுக்குப் பொதுவான செய்திகளையும் கூறுவது பொதுவியல் திணையாகும்.
சான்று: நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்புமி னதுதான்
எல்லாரு முவப்ப தன்றியும்
நல்லாற்றுப் படூஉ நெறியுமா ரதுவே
விளக்கம் :
நல்லது செய்யவில்லையென்றாலும் தீயன செய்தலைக் கைவிட வேண்டும். அதுவே எல்லோரும் விரும்புவதாகவும் உங்களை மறுமையில் நற்கதி சேர்க்கும் வழியாகவும் உள்ளது.
பொருத்தம் : நல்லது செய்தல் இயலாவிடினும் தீயன செய்தலைக் கைவிடல் வேண்டும் என்று போர் பற்றிய செய்தியைக் கூறாது. புறத்திணைகளுக்கெல்லாம் பொதுவான கருத்தைக் கூறுவதால் இஃது பொதுவியல் திணை ஆயிற்று.
Question 40.
இல்பொருள் உவமையணி அல்லது பிறிது மொழிதலணியை விளக்கி எழுதுக.
Answer:
அணி விளக்கம் :
உலகில் இல்லாத ஒன்றை உவமையாக்கிக் கூறுதல் இல்பொருள் உவமையணி ‘ ஆகும். உலகில் இயல்பாக நடக்காத நிகழ்ச்சியை உவமையாகக் கூறுவதும் இதில் அடங்கும்.
(எ.கா.) அன்பகத் தில்லா உயிர்வாழ்க்கை வன்பாற்கண் வற்றல் மரந்தளிர்த் தற்று
விளக்கம் :
பாலைவனத்தில் நீரின்றி வற்றிப்போன மரமானது மீண்டும் தளிர்த்தல் என்பது இல்லாத (நடக்காத) நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியானது மனதில் அன்பு இல்லாதவர்க்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இது இல்பொருள் உவமையணி’ எனப்படும். (இல்பொருள் – உலகில் இல்லாத பொருள்)
(அல்லது)
பிறிது மொழிதல் அணி
அணி விளக்கம் :
புலவர் தாம் கூறக் கருதியதை வெளிப்படையாகக் கூறாமல், அதனோடு தொடர்புடைய வேறொன்றின் மீது ஏற்றிக் கூறி, அதன்மூலம் தாம் கருதியதைப் பெற வைத்தல் பிறிது மொழிதல் அணி ‘யாகும்.
(எ.கா) பீலிபெய் சாகாடும் அச்சு இறும் அப்பண்டம் சால மிகுத்துப் பெயின்.
விளக்கம்:
மயிலிறகு மென்மையானது என்றாலும், அதனையே அளவுக்கு மேல் வண்டியில் ஏற்றினால், வண்டியானது பளு தாங்காமல் அச்சு முறிந்துவிடும் என்பது இக்குறளின் பொருள். ஆனால், வள்ளுவர் இக்கருத்தை உணர்த்த இந்தக் குறளைக் கூறவில்லை எதிரிகள் வலிமையற்றவர்களாக இருந்தாலும்.
அவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்து, வலிமையுடைய வனைத் தாக்கினால் அவன் நிலைகுலைந்து போவான். இக்கருத்தை வலியுறுத்தவே வள்ளுவர் இக்குறளை எழுதியுள்ளார். எனவே, இது பிறிது மொழிதல் அணி ‘ ஆகும். (பிறிது – வேறொன்று : மொழிதல் – கூறுதல்)
Question 41.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா (அல்லது) உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்னும் பழமொழியை வாழ்க்கை நிகழுவுகளோடு தொடர்புபடுத்தி எழுதுக. ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா.
Answer:
பழமொழி விளக்கம்:
இளமையில் நல்லொழுக்கங்களைக் கற்காதவன் முதுமையில் கற்பது என்று கூறுவது கடினமானது. அதுவே இப்பழமொழியின் கருத்தாகும்.
வாழ்க்கை நிகழ்வு:
கங்கை கொண்டான் என்பது ஒரு சிற்றூர். அந்த ஊரில் வாழ்பவர்கள் கங்கை நீரை விட புனிதமானவர்கள். சிறு தவறு கூட செய்யமாட்டார்கள். அந்த ஊரின் பெருமையைக் கெடுக்க வந்தவன்தான் பிரசன்னா, பிரசன்னாவை அந்த ஊரில் பிரச்சனை என்று தான் கூறுவார்கள். இவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் கிடையாது.
இவர்கள் அனைவரும் கங்கை கொண்டானை அடுத்துள்ள ஜெயங்கொண்டானிற்குத்தான் படிக்கச் செல்வார்கள். அந்தச் சமயம் பிரசன்னா. அந்த ஊர் மாணவர்களிடம் பென்சில் மற்றும் பேனாவை அடிக்கடி திருடிவிடுவான். அவனது அம்மாவோ நீ திருடி வந்த பேனாவின் நிறம் நன்றாக இல்லை. வேறு ஒரு பேனாவைத் திருடிக் கொண்டு வா – என்று அவனை உற்சாகப்படுத்தினாள்.
பெரியவன் ஆனதும் அவன் கொள்ளை கொலை போன்ற னான். சிறு வயதிலேயே அவனது தாயார் திருத்தி இருந்தால் அவன் திருந்தியிருப்பான்.
(அல்லது)
உப்பிட்டவரை உள்ளளவும் நினை
பழமொழி விளக்கம்:
நமக்கு உதவி செய்தவரை நம் உயிர் உள்ளவரை நாம் மறக்கக் கூடாது.
வாழ்க்கை நிகழ்வு:
கல்லூரியில் பயிலும் வேலனும் கந்தனும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். வேலன் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன். கந்தன் தன் நண்பனுக்குத் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்து வந்தான். ஒருமுறை, கல்லூரியில் தேர்வு தினம் அறிவிக்கப்பட்டது. அனைவரும் அவர்களின் தேர்வுக் கட்டணத்தைச் செலுத்திவிட்டனர்.
வேலனோ எவ்வளவு முயன்றும் அவனால் தன் கட்டணத்தைச் செலுத்த முடியவில்லை. பணம் செலுத்தாவிட்டால் தேர்வு எழுத முடியாது என்னும் இக்கட்டான நிலையில் கந்தன் அவனது கட்டணத்தைக் கட்டி உதவினான். இவ்வாறு பல உதவிகளைக் கந்தன் செய்தான். வேலன், ‘இந்த உதவிகளுக்கு உனக்கு நான் என்ன கைம்மாறு செய்யப் போகிறேனோ?’ என்று அடிக்கடி கூறுவான்.
ஒருநாள் கல்லூரிக்கு வரும் பாதையில் கந்தனுக்கு விபத்து ஏற்பட்டது. அவன் அவசர பிரிவில் சேர்க்கப்பட்டதை அறிந்த வேலன் மருத்துவமனைக்கு விரைந்தான்.
தன் நண்பனின் நிலையைக் கண்டு கண் கலங்கி நின்றான் வேலன். மருத்துவர் அவனிடம் கந்தனுக்கு இரத்தப் பிரிவும் அவனுடைய இரத்தப் பிரிவும் ஒன்று என்பதால் வேலன் தன் உதிரத்தைக் கொடுத்து தன் நண்பனைக் காப்பாற்றினான்.
Question 42.
தமிழாக்கம் தருக.
Answer:
1. Waste not want not
2. Experience will make a person efficient.
3. Tit for Tat.
4. No smoke without fire.
1. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்யாதே.
2. அனுபவம் ஒருவனைத் திறமை மிக்கவனாக்கும்.
3. யானைக்கும் பானைக்கும் சரி.
4. நெருப்பில்லாமல் புகை இல்லை.
Question 43.
பின்வரும் தலைப்புகளில் ஒன்றின் கவிதை புனைக.
Answer:
மரம் வளர்போம் அல்லது) நம்மால் முடியும்
பகுதி – IV
பின்வரும் வினாக்களுக்கு இரு பக்கங்களுக்கு மிகாமல் விடை தருக. [3:6 = 18]
Question 44.
அ தமிழின் சீரிளமைத் திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுவனவற்றைத் தொகுத்து எழுதுக.
Answer:
- தமிழின் சீரிளமைத் திறத்தை வியந்த கவிஞர் சிற்பி பின்வருமாறு கூறுகிறார். செம்மை மிகுந்த.
- சூரியன் மாலையில் மலை முகட்டில் மறையும் பொழுது வானம் செந்நிறப்பூக்காடாய் காட்சி தருகிறது.
- தொழிலாளர்களின் கைகள் சிவந்து திரண்ட தோள்களில் வியர்வைத் துளிகள் முத்து முத்தாகக் காணப்படும்.
- இக்காட்சிகளை எல்லாம் நான் வியந்து பாடி அன்னைத் தமிழே உன் துணை வேண்டும்.
- பெருகி வரும் கவிதைகளுக்கு உணவாக இருக்கும் தமிழே.
- பாரி முதல் வள்ளல்களை இவ்வுலகிற்குத் தந்த தாயோ!
- உன் பழமையான நலன்களை எல்லாம் புதுப்பித்து, தமிழ்க்குயிலே நீ மெய்சிலிர்க்கக் கூவி வா.
- கூண்டினை உடைத்தெறிந்த சிங்கம் போல வா!
- குளிர் பொதிகையில் தோன்றிய தென் தமிழே சீறி வா.
இவ்வாறே தமிழின் சீரிளமைத்திறம் வியந்து கவிஞர் சிற்பி பாலசுப்பிரமணியம் கூறுகின்றார்.
(அல்லது)
Question 44.
(ஆ) பண்பின் படிமமாகப் படைக்கப்பட்ட இராமன், பிற உயிர்களுடன் கொண்டிருந்த உறவு நிலையைப் பாடப்பகுதி வழி நிறுவுக
Answer:
குகனிடம் இராமன் கூறியது:
வேடுவ தலைவர் குகனிடம் இராமன் நீ என் தம்பி; இலக்குவன் உன் தம்பி, அழகிய வெற்றியைக் கொண்ட சீதை , உன் அண்ணி குளிர் கடலும் இந்நிலமும் எல்லாம் உனதேயாகும். நான் உன்னுடைய ஏவலுக்கேற்பப் பணிபுரிபவன்.
துன்பு உளது எனின் அன்றோ
சுகம் உளது? அது அன்றிப்
குகனின் வருத்தம் :
(இராமன் காட்டிற்குச் சென்று துன்புறுவானே என்று குகன் வருந்தினான். அதை உணர்ந்த இராமன் கூறுகிறான் குகனே! துன்பம் என்று ஒன்று இருந்தால் தானே இன்பம் என்பது புலப்படும். துன்பத்திற்குப் பின் இன்பம் உறுதியாக உண்டு. நமக்கிடையே இப்போது இப்பிரிவு நேர்கிறது என்று எண்ணாதே. இதுவரை நாங்கள் நால்வரே உடன் பிறந்தவர் என்றிருந்தோம். உறவு என்பது எங்கள் நால்வரோடு நின்றுவிடவில்லை. இப்போது உன்னையும் சேர்த்து நாம் ஐவர் ஆகின்றோம்.
இராமன் செய்த இறுதிச்சடங்கு :
கழுகு வேந்தன் சடாயு, இராவணன் சீதையைச் சிறையெடுத்தபோது தடுத்துச் சண்டையிட்டுக் காயப்படுகிறான். இராமனிடம் நடந்ததைக் கூறுகிறான். பின் இறந்துவிடுகிறான். இராமன், தன் தந்தையின் நண்பனான அக்கழுகு வேந்தனையும் தன் தந்தையாகவே கருதி.
மகன் நிலையில் அவனுக்குரிய இறுதிச் சடங்குகளைச் செய்கிறான்” எப்படிப்பட்ட சிறப்பான விறகுகள் இவை” என்று கண்டவர் வியக்கும்படியான கரிய அகில் கட்டைகளையும், சந்தனக் கட்டைகளையும் இராமன் கொண்டு வந்து வைத்தான். தேவையான அளவு தருப்பைப் புற்களையும் ஒழுங்குபட அடுக்கினான்.
பூக்களையும் கொண்டுவந்து தூவினான். மணலினால், மேடையைத் திருத்தமாக அமைத்தான். நன்னீரையும் எடுத்து வந்தான். இறுதிச்சடங்கு செய்யப்படக் கூடிய மேடைக்குத் தன் தந்தையாகிய சடாயுவைப் பெரிய கைகளில் தூக்கிக் கொண்டு வந்தான்.
குகனும் விடணும் இராமனின் தம்பியாதல்.:
இராமனின் தம்பிகள் நால்வர் உடன்பிறந்தவர்களாக இருந்தோம் குகனுடன் சேர்த்து நாங்கள் ஐவர் ஆனோம். பின்னர் மேருமலையைச் சுற்றி வரும் கதிரவனின் மகனான சுக்ரீவனுடன் அறுவர் ஆனோம்.
உள்ளத்தில் அன்பு கொண்டு எங்களிடம் வந்த அன்பனே, உன்னுடன் சேர்த்து எழுவர் ஆனோம். புகுதற்கரிய கானக வாழ்வை மேற்கொள்ளும்படி என்னை அனுப்பிய உன் தந்தையாகிய தயரதன், இதனால் புதல்வர்களைக் கூடுதலாக அடைந்து பெருமை பெறுகிறான்.
சவரியின் விருந்து:
சவரி, இராமனைப் புகழ்ந்து அன்பின் கனிவினால் அருவி இழிவது போலக் கண்ணீர் வடித்தாள். (இராமனைக் கண்டதால் என் பொய்யான உலகப்பற்று அழிந்தது. அளவற்ற காலம் நான் மேற்கொண்டிருந்த தவம் பலித்தது. என் பிறவி ஒழிந்தது’ என்று கூறினாள், வேண்டிய எல்லாம் கொண்டுவந்து அவள் இராம இலக்குவருக்கு விருந்து செய்விக்க, அவர்களும் விருந்தை ஏற்றனர்.
Question 45.
(அ) ‘ஒவ்வொரு நகரத்துக்கும் வரலாறும் வடிவழகும் உண்டு’ – நீங்கள் பார்த்த அல்லது வாழ்ந்த ஒரு நகரம் குறித்து இருபக்க அளவில் கட்டுரை எழுதுக.
Answer:
முன்னுரை:
மதுரை தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு தொன்மையான நகரம் ஆகும். மதுரை மாவட்டத்தின் தலைநகராக இருப்பது மதுரை. அம்மதுரையின் சிறப்பு குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
மதுரை மாநகர்:
தமிழ்நாட்டின் 3 ஆவது பெரிய நகரம் மதுரை. 10 லட்சத்திற்கும் மேல் மக்கட்தொகை கொண்டது. இந்திய மாநகரங்களின் பட்டியலில் 31ஆவது பெரிய நகரம் வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவில் மிகவும் புகழ்வாய்ந்தது.
பழமை :
இந்திய துணைக் கண்டத்தில் தொன்மையான வரலாற்றைக் கொண்ட மதுரை சுமார் 25,000 ஆண்டுகள் பழமையானது. பாண்டிய மன்னர்களின் தலைமையிடமாக விளங்கியது.
பெயர்க்காரணம்:
இந்நகரம் மதுரை, கூடல், மல்லிகை மாநகர், நான் மாடக்கூடல் திரு ஆலவாய் போன்ற பல்வேறு பெயர்களால் குறிக்கப்படுகிறது. மருதத்துறை மதுரை, மருதமரங்கள் மிகுதியாகவிருந்ததால் மருதத்துறை என்பது மருவி, மதுரை என ஆனது. இந்துக்கடவுள் சிவனின் தலையிலிருந்து பொழிந்த மதுரத்தால் இப்பெயர் பெற்றது என்றும் கூறுவர்.
வரலாற்று நினைவிடங்கள்:
மதுரையில் வரலாற்று நினைவிடங்கள் பல அமைந்துள்ளன. மீனாட்சியம்மன் கோவில், திருமலை நாயக்கர் அரண்மனை, போன்றவை அவற்றில் புகழ் பெற்றவை. இந்நகரில் ஆண்டுதோறும் பல கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. அவற்றில் புகழ் பெற்றது சித்திரைத் திருவிழா. இது 10 நாட்கள் நடைபெறும் திருகல்யாணம் ஆகும். அதில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சிறப்பு.
ஏறுதழுவுதல் :
மதுரை மாநகரில் ஏறுதழுவுதல் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் ஏறுதழுவுதல் நகரின் அருகே உள்ள அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் நடைபெறும். இது பலகாலமாக நடைபெற்று வரும் ஒரு நிகழ்வாகும். தற்பொழுது ஏறுதழுவுதலுக்குத் தடைவிதிக்கப்பட்டு பல போராட்டங்களை மக்கள் நடத்தி அதில் வெற்றி பெற்றனர்.
தொழில் மற்றும் கல்வி:
மதுரை தென் தமிழகத்தின் முக்கிய தொழிற்துறை மையமாகவும், கல்வி மையமாகவும் திகழ்கிறது. இரப்பர், கிரானைட் போன்ற உற்பத்தித் தொழில்கள் மதுரையில் நடை பெறுகின்றன. தகவல் தொழில் நுட்பத்துறையில் இரண்டாம் அடுக்கு நகரமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இங்கு மென்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் அமைந்துள்ளது. மதுரை மருத்துவக் கல்லூரி, ஓமியோ மருத்துவக் கல்லூரி, மதுரை சட்டக் கல்லூரி, வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் போன்ற கல்வி நிலையங்கள் மதுரையில் நகரில் அமைந்துள்ளது.
முடிவுரை:
முச்சங்கம் வளர்த்த மதுரையில் அன்பும் அருளும் நிறைந்திருக்கும். அவை வரலாறும் வடிவழகும் கொண்டது. அந்நகரில் வாழ்வது சிறப்பு வாய்ந்தது.
(அல்லது)
Question 45.
(ஆ) நிருவாக மேலாண்மை குறித்து வெ. இறையன்பு கூறும் கருத்துகளைத் தொகுத்து
Answer:
- எழுதுக. உயர் பதவிகளில் இருப்பவர்கள் எல்லாவற்றிலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பது சாத்தியமில்லை.
- ஆனால் யார் திறமைசாலிகள் என்று அறிந்து அவர்களை அருகில் வைத்துக் கொண்டால் போதும்.
- தெரிந்திருப்பது ஒருவகை அறிவு என்றால். யாருக்குத் தெரியும் எனத் தெரிந்திருப்பது மற்றோர் அறிவு.
”நாலடியார் அதையே பக்குவமாகச் சொல்கிறது.
கல்லாரே யாயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளுந் தலைப்படுவர் – தொல் சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்ந்தலாற் புத்தோடு
தண்ணீர்க்குத் தான் பயந் தாங்கு”
- நிருவாகத்தில் வரவே செலவைத் தீர்மானிக்க வேண்டும். வரவைத் தாண்டி நிறையச் செலவு செய்பவன்.
- அடுத்தவரிடம் கையேந்த வேண்டிய அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.
- டைமன் என்பவன் ஏதென்ஸ் நகரில் இருந்தான். அவன் வரவு குறைந்தாலும் செலவு நீடித்தது.
- அவனது உதவியாளர் நிதி நிலைமையைப் பற்றிப் பேசவருகிற பொழுதெல்லாம் கேட்க மறுத்தான்.
- ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் கழுத்தை நெரிக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவன் வருந்தவில்லை.
- தான் அளித்த விருந்தை உண்டவர்கள், உதவுவார்கள் என்று பொய்க்கணக்குப் போடுகிறான்.
- அவனுடைய சேவகர்கள் நான்கு திசைகளுக்கும் சென்று வெறும் கையோடும். வெளிறிய முகத்தோடும் திரும்புகிறார்கள்.
- அவன் ஊருக்கு ஒதுக்குப்புறமாகச் செல்கிறான். மனித இனத்தையே வெறுக்கிறான்.
- ‘டைமன் பற்றிய ஷேக்ஸ்பியரின் நாடகம் நிதி மேலாண்மை பற்றிய மிகச் சிறந்த வாழ்வியல் விளக்கம், ஒளவையார் நல்வழியில்
“ஆன முதலில் அதிகம் செலவானால்
மானம் அழிந்து மதிகெட்டுப் – போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் ஏழ்பிறப்பும் தீயனாய்
நல்லார்க்கும் பொல்லானாம் நாடு’
என்று நிதியைக் கண்டபடி கையாள்பவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
Question 46.
(அ) ‘கிராமங்கள் தங்கள் முகவரியை இழந்து வருகின்றன’ – தலைக்குளம் கதையின்றி உங்கள் கருத்தை விவரிக்க.
Answer:
குளத்துக்கரை விநாயகரும், அரசமரமும், சுத்தமான காற்றும், காதிற்கினிய குயில் ஓசையும் கோடிக்கணக்கான பணம் கொடுத்தாலும் கிடைக்காத சந்தோசம் தரும் இடமாக கிராமங்கள் திகழ்கின்றன.
எந்தத் தொழில் முறை மாறினாலும் அழிந்தாலும் உலகம் இயங்குவது பாதிக்காது. ஆனால் உயிர் கொடுக்கும் உழவுத்தொழில் அழிந்தால் உலகம் இருக்கும். ஆனால் உயிர்கள் இருக்காது. அப்படிப்பட்ட உழவுத்தொழில் செய்யும் கிராமங்கள் நகரை நோக்கித் திரும்பிச் செல்வது காலத்தின் கட்டாயம் என்றாலும், கஷ்டகாலம் நம்மை நோக்கி வருகிறது என்பதும் நம் அறிய வேண்டியதும் கட்டாயம். நம் கிராமங்கள் அழிந்து வருவதை நாம் கண்கூடாகப் பார்த்து வருகின்றோம்.
நகரத்திற்கு வரும் கிராமத்தினர் பட்டியலில் இந்திய அளவில் தமிழகம் 3 வது இடத்தில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 14.5% பேர் கிராமங்களைக் காலி செய்துவிட்டு நகருக்குள் வந்துவிட்டனர். மொத்தமுள்ள மக்களின் 48.40% பேர் நகரங்களில் வசிப்பது உணவு உற்பத்திக்கு விடப்பட்ட அபாய எச்சரிக்கை. ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திராவிடம் தண்ணீருக்காகப் போராடி வரும் நாம், இனிவரும் காலங்களில் உணவுக்கு அண்டை மாநிலத்தை நம்பி இருக்க வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை.
கிராமங்களுக்கு என சில அடையாளங்கள் உண்டு. வயல்வெளி, திண்ணைவீடுகள், மரத்தடி, கோயில், குளம் இவற்றுடன் மண் மணக்கும் விளையாட்டுகள் – கபடி தமிழகக் கிராமங்களுக்கே உரிய அடையாளம். ஒரு காலத்தில் ஊருக்கு ஊர் கேட்ட சடு…. குடு சப்தங்களை இப்போது கேட்க முடியவில்லை. எங்கே செல்கிறோம் நாம் என்றே புரியவில்லை.
”ஆற்றங்கரை ஓரம் அமைந்த வீடுகள்
பச்சை கம்பளம் விரித்தாற் போல
பசுமை நிறைந்த வயல் வெளிகள்
குடும்பத்தோடு அகம் மகிழும்
திண்ணை அமர்வு”
என அனைத்தையும் தொலைத்துவிட்டு ஆன்ராய்ட் அலை பேசியின் தொடு திரையில் அழகிய படங்களைத் தேடுதலால் மட்டுமே தொலைந்த நம் கிராமத்தைத் திரும்பி விட முடியாது. இயன்ற வரை இயற்கையைப் போற்றி வாழ்வோம். கிராமத்தை அழிவிலிருந்து மீட்போம்!
(அல்லது)
Question 46.
(ஆ) உரிமைத்தாகம் ‘ கதையில் சகோதரர்கள் இருவரும் ஒன்றிணையாமல் இருந்திருந்தால்.கதையைத் தொடர்ந்து எழுதி முடிக்க.
Answer:
- மேலூர் பங்காருசாமியிடம் தன் நிலப்பத்திரத்தை கொடுத்துப் பணம் பெற்ற வெள்ளைச்சாமி அதை அவனால் மீட்டுக்கொள்ள முடியவில்லை. தேவையான பணத்தைத் தயார் செய்ய முடியவில்லை. மேலும் வட்டியும் அதிகமாகிக் கொண்டே போனது.
- இதை எப்படியோ தெரிந்து கொண்ட வெள்ளைச்சாமியின் அண்ணன் முத்தையா பங்காருசாமியிடம் சென்று பத்திரத்தை மீட்பதற்காகப் பேசினான்.
- ஆனால் அவன் தம்பி என் சொந்தப் பிரச்சனைகளில் தலையிட வேண்டாம் என்று சொல்லித் திட்டி அனுப்பிவிட்டான்.
- காலம் கடத்து கொண்டே இருந்தது வெள்ளைச்சாமிக்குப் போதிய பணம் கிடைக்கவே இல்லை. வட்டியும் கொடுக்கவில்லை.
- பிறகு இறுதியாக வெள்ளைச்சாமியின் புஞ்சை நிலம் ஏலத்திற்கு விடப்பட்டது. ஏலத்தில் அவனுடைய நிலம் கைமாறிப்போனது.
- வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாமல் நிலத்தையும், தன் உறவுகளையும் பறிகொடுத்துவிட்டோம் என எண்ணி வெள்ளைச்சாமி மனநிம்மதியில்லாமல் இருந்தான்.
- தன்னுடைய நிலத்தைப் பார்க்கும் போதெல்லாம் மனவேதனையில் துடித்தான். நாட்கள் பல கடந்தது. மழைக்காலம் தொடங்கியது. மழை பெய்யோ பெய்யெனப் பெய்தது.
- அதற்கு அடுத்த நாள் காட்டு மேட்டுப் பகுதியில் வெள்ளைச்சாமி செல்லும்போது அவனுடைய புன்செய் நிலத்தில் அவனுடைய அண்ணன் முத்தையா ஏர் உழுதுகொண்டு இருந்தான்.
- அதைப் பார்த்த பிறகுதான் விசாரித்தான் யார் அந்த நிலத்தை ஏலத்தில் வாங்கியது என்று அப்பொழுது தான்.
- அவனுக்குத் தெரிந்தது தன்னுடைய அண்ணன் நிலத்தை வாங்கியுள்ளான் என தன்கையிலிருந்து சென்றாலும் என்.
- அண்ணன் கையில் என் நிலம் உள்ளது என்ற சந்தோசத்தில் சென்றான் வெள்ளைச்சாமி.
- தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடுகிறது என்று சொல்லியதெல்லாம் உண்மைதான் என உரிமைத்தாகத்தால் உணர்ந்து கொண்டான்.
பகுதி – V |
அடிமாறாமல் செய்யுள் வடிவில் எழுதுக. [1 x 4 = 4]
Question 47.
(அ) ஓங்கிலிடை என்று துவங்கும் தண்டியலங்கார மேற்கோள் பாடலை எழுதுக.
Answer:
ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது
தன்னேர் இலாத தமிழ்! – தண்டி
(ஆ) படும் என முடியும் குறளை எழுதுக. [1 x 2 = 2]
Answer:
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும். – திருவள்ளுவர்