Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.5

Tamilnadu State Board New Syllabus Samacheer Kalvi 6th Maths Guide Pdf Term 1 Chapter 1 எண்கள் Ex 1.5 Textbook Questions and Answers, Notes.

TN Board 6th Maths Solutions Term 1 Chapter 1 எண்கள் Ex 1.5

கேள்வி 1.
கோடிட்ட இடங்களை நிரப்புக.
(i) முழு எண்களின் பெருக்கல் சமனி பூச்சியம் முழு எண்ணிற்கும் இடையே உள்ள வித்தியாசம் ________
விடை:
1

(ii) 17 × _____ = 34 × 17
விடை:
34

(iii) ஓர் எண்ணுடன் ________ ஐக் கூட்டும் போது, அந்த எண் மாறாமல் இருக்கும்.
விடை:
பூஜ்ஜியம்

(iv) _________ ஆல் வகுப்பது என்பது வரையறுக்கப் படவில்லை.
விடை:
0

(v) ஓர் எண்ணை ______________ ஆல் பெருக்கும் போது அந்த எண் மாறாமல் இருக்கும்.
விடை:
1

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.5

கேள்வி 2.
சரியா? தவறா? எனக் கூறுக.
(i) மிகச் சிறிய இயல் எண்ணிற்கும் மிகச் சிறிய
ஆகும்.
விடை:
தவறு

(ii) இரு முழு எண்களின் கூடுதல் அதன் பெருக்குத்
தொகையை விடக் குறைவானதாக இருக்கும்.
விடை:
தவறு

(iii) முழு எண்களில் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகியவை சேர்ப்புப் பண்புடையவை.
விடை:
சரி

(iv) முழு எண்களில் கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகியவை பரிமாற்றுப் பண்புடையவை.
விடை:
சரி

(v) முழு எண்களில் கூட்டலின் மீதான பெருக்கல் பங்கீட்டுப் பண்புடையது.
விடை:
சரி

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.5

கேள்வி 3.
கீழ்க்காணும் வினாக்களில் பெறும் பண்பு யாது?
(i) 75 + 34 = 34 + 75
விடை:
கூட்டலின் பரிமாற்றுப் பண்பு

(ii) (12 × 4) × 8 = 12 × (4 × 8)
விடை:
பெருக்கலின் சேர்ப்புப் பண்பு

(iii) 50 + 0 = 50
விடை:
‘0’ கூட்டல் சமனி

(iv) 50 × 1 = 50
விடை:
‘1’பெருக்கல் சமனி

(v) 50 × 42 = 50 × 40 + 50 × 2
விடை:
கூட்டல் மீதான பெருக்கலின் பங்கீடு

கேள்வி 4.
முழு எண்களின் பண்புகளைப் பயன் படுத்திச் சுருக்குக.
(i) 50 × 102
விடை:
50 × 102 = 50 × (100 + 2)
= (50 × 100) + (50 × 2)
= 5000 + 100
= 5100

(ii) 500 × 689 – 500 × 89
விடை:
500 × 689 – 500 × 89
= 500 × (689 – 89)
= 344500 – 44500)
= 300000
500 × (689 – 89) = 500 × 600 = 3,00000

(iii) 4 × 132 × 25
விடை:
(4 × 132) × 25 = 4 x (132 × 25)
(4 × 132) × 25
= 528 × 25
= 13200
4 × (135 × 25)
= 4 × 3300 = 13200

(iv) 196 + 34 + 104
விடை:
(196 + 34) + 104 = 196 + (34 + 104)
(196 + 34) + 104 = 230 + 104 = 334
196 + (34 + 104) = 196 + 138 = 334

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.5

புறவய வினாக்கள்

கேள்வி 5.
(53 + 49 ) × 0 என்ப து
அ) 102
ஆ) 0
இ 1
ஈ) 53 + 49 × 0
விடை:
ஆ) 0

கேள்வி 6.
\(\frac{59}{1}\) என்பது
அ) 1
ஆ) 0
இ \(\frac{1}{59}\)
ஈ) 59
விடை:
ஈ) 59

கேள்வி 7.
ஒரு பூச்சியமற்ற முழு எண் மற்றும் அதனுடைய தொடரியின் பெருக்குத் தொகை எப்போதும்
அ) ஓர் இரட்டை எண்
ஆ) ஓர் ஒற்றை எண்
இ பூச்சியம்
ஈ) இவற்றுள் ஏதுமில்லை
விடை:
அ) ஒர் இரட்டை எண்

கேள்வி 8.
முன்னி இல்லாத ஒரு முழு எண்
அ) 10
ஆ 0
இ 1
ஈ) இவற்றுள் ஏதுமில்லை
விடை:
ஆ) 0

Samacheer Kalvi 6th Maths Guide Term 1 Chapter 1 எண்கள் Ex 1.5

கேள்வி 9.
பின்வரும் கோவைகளில் எது பூச்சியமல்ல? விடை :
அ) 0 × 0
ஆ) 0 + 0
இ 2/0
ஈ) 0/2
விடை:
ஈ) 0/2

கேள்வி 10.
பின்வருவனவற்றுள் எது உண்மை அல்ல ?
அ) (4237 + 5498 ) + 3439 = 4237 + (5498 + 3439 )
ஆ) (4237 × 5498 ) × 3439 = 4237 × (5498 × 3439)
இ 4237 + 5498 × 3439= (4237 + 5498) × 3439
ஈ) 4237 × (5498 + 3439)= (4237 × 5498) + (4237 × 3439)
விடை:
இ 4237 + 5498 × 3439 = (4237 + 5498) × 3439